தமிழகம் கொலை கலமாக
மாறியுள்ளது. அதுவும் தலைநகரான சென்னையே தினம் ஒரு கொலை என சர்வசாதாரணமாக
நடந்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில்
முதல்வராகவுள்ள ஜெ இருக்கிறார். எல்லாத்துக்கும் முதல்வர் பதில் சொல்ல வேண்டும்மா
என கேட்கலாம். தேவையில்லை தான். இந்த விஷயத்தில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில்
இருக்கிறார் ஏன் எனில் அவர் காவல்துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் முதல்வரே
வைத்துள்ளார். அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் அவர் பதில் சொல்ல வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறார். எங்கேயோ நடந்த தனிமனித கொலைக்கு முதல்வர் முக்கியத்துவம்
தர வேண்டும்மா என கேட்கலாம் ?.
எங்கோ ஒருயிடத்தில் உட்கார்ந்து
யாரோ ஒருவரை திட்டமிட்டு கொலை செய்துவிட்டு போவதை காவல்துறையால் தடுக்க முடியாது
என்பதை ஒப்புக்கொள்கிறேன். கொலை நடந்தபின் கொலை செய்தவர்களை பிடிக்க
வேண்டும்மல்லவா. அதை செய்யவில்லையே அதனால் தான் கேள்வி கேட்கப்படுகிறது.
இந்த கொலை மட்டும்மல்ல 90 சதவித
கொலைகள் திட்டமிட்டு செய்யப்பட்டவை. அதிலும் 99 சதவித கொலைகள் கூலிப்படைகள்
செய்தவை. அப்படியாயின் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தானே அர்த்தம். இதற்கு முதல்வர்
பதில் சொல்ல வேண்டும். இதைத்தான் ஸ்டாலின், ராமதாஸ், திருமாவளவன், ராமகிருஷ்ணன்
போன்றவர்கள் கேட்கிறார்கள். இதற்கு எந்த எதிர்வினையும் ஆள்வோர் தரப்பில் இருந்து
இந்த நிமிடம் வரை வரவில்லை.
ஆனால், பிலால்மாலிக் என்ற
இஸ்லாமியன் செய்தான், இதை எந்த திராவிட பொறுக்கிகளும் கேட்கவில்லை, இந்த பெண்
தலித் என்றால் குதித்துயிருப்பார்கள் என யாரோ எழுதி முகநூலில் பதவிட்டதை இந்த
கருத்து எனக்கு உகந்தது அதனால் பதிவிடுகிறேன் என பழைய நகைச்சுவை நாடக நடிகர்
ஒய்.ஜி.மகேந்திரன் அதை மறுபதிவிட அப்படியே விவகாரம் திசை மாறிவிட்டது. விவகாரம்
இப்போது ஒய்.ஜி.மகேந்திரனோடு சுருங்கிவிட்டது.
தமிழகத்தில் என் உயிருக்கு என்ன
பாதுகாப்பு உள்ளது?, உங்கள் நிர்வாக லட்சணம் இதுதானா?, இதற்காகவா பதிவிக்கு
வந்தீர்கள், பாதுகாப்பற்ற நாட்டில் வாழ்கிறோம்மோ, எங்கள் பாதுகாப்புக்கு யார்
பொறுப்பு என ஆள்வோரை கேள்வி கேட்டு பதிலோ, நடவடிக்கையோ எடுக்க வைக்க வேண்டிய
நேரத்தில் ரிட்டயர்டு கழுதை பின்னால் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் இணைய போராளிகள்.
தமிழகத்தில் ஜெயலலிதாவின்
நிர்வாக புலி என்கிற பிம்பத்தையும், தைரியலட்சுமி என்கிற ஜிகினா பேப்பரை
கிழிக்காமல் பார்த்துக்கொள்ள பெரும் படையே இங்கு வேலை செய்கிறது. ஜெயலலிதா மீதோ,
அவர் தரப்பு மீதோ ஏதாவது குற்றம் குறையென பேச தொடங்கினால் அதை அழகாக திசை திருப்புகிறார்கள்.
கடந்த காலங்களில், இரண்டு
ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 100 கோடி அபராதம், 7
ஆண்டு சிறை தண்டனை தரப்பெற்று சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு விதிமுறைகளை மீறி
உச்சநீதிமன்றம் பிணை தந்தபோது, பெரும் சர்ச்சை உருவானபோது அதை திசை மாற்றியது
ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்ற 20 அப்பாவி தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட
நிகழ்வு. அப்படியே விவகாரம் திசை மாறியது.
ஜெவின் தோழி சசிகலா குடும்பம்,
1000 கோடி ரூபாய் முதலீட்டில் ஜாஸ் சினிமாஸ் தமிழக திரையரங்கை வாங்கியுள்ளது என
பரபரப்பானபோது, சிம்பு வீன் பீப் சாங்க் விவகாரத்தை திசை திருப்பியது.
தேர்தல் நேரத்தில் 750 கோடி
கண்டெய்னரில் சிக்கியபோது, அது ஜெயலலிதாவின் பணம் என தமிழகம் முதல் டெல்லி வரை
பரபரத்தபோது, இரண்டு தொகுதிகளின் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு விவகாரம் திசை
திருப்பப்பட்டது. சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, கச்சத்தீவு பிரச்சனை
கிளப்பி குழாயடி சண்டையாக்கப்பட்டு மறைக்கப்பட்டது.
மேலே குறிப்பிட்டதை போல அதிமுக
அரசு மீது குறிப்பாக முதல்வராக ஜெ வாய் திறந்து பதில் சொல்லியே ஆக வேண்டும் என்கிற
இக்கட்டான நிலை வரும்போதுயெல்லாம் திசை திருப்புவது என்பது வாடிக்கையே.
இப்படி தலைநகரம்மோ கொலை நகரமாய்
மாறிவிட்டது என அனைத்து தரப்பினரும் அலற அதற்கு பதில் சொல்ல வேண்டிய நெருக்கடியை முதல்வராகவுள்ள
ஜெயலலிதாவுக்கு உருவாக அதிலிருந்து அனைவரையும் ஒய்.ஜி.மகேந்திரன் திசை
திருப்பியிருக்கிறார்.
இப்படி ஒரு விவகாரத்தை திசை
திருப்ப மற்றொரு ஒன்னுக்கும் ஒதவாத சப்பை மேட்டரை பூதாகரமாக்குவது ஆள்வோர்க்கும்,
ஆள்வோர் காலை நக்கி பிழைப்போர்க்கு கை வந்த கலை. அது சுபமாக செய்து
முடிக்கப்பட்டுள்ளது.
வாழ்க வளமுடன்............
அருமையான பதிவு
பதிலளிநீக்குகாலம் பதில் சொல்லும்
கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html