2016 ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெண்கலபதக்கம் வாங்கிய சாக்ஷி
மாலிக்குக்கும், இறகு பந்து விளையாட்டில் வெள்ளி பதக்கம்
வாங்கிய சிந்துவுக்கும் வாழ்த்துக்கள். இது அவர்களுக்கான
பதிவல்ல. பதக்கம் வாங்கினார்கள் என்றதும் கொண்டாடி தீர்க்கும்
இந்தியர்களுக்கான பதிவு.
2016 ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்ள 120 கோடி
இந்தியர்களின் சார்பில் மல்யுத்தம், இறகுபந்து ஒட்டப்பந்தயம், நீச்சல்,
ஜிம்னாஸ்டிக் போன்ற பல விளையாட்டுகளில் கலந்துக்கொள்ள 118 வீரர்கள் பிரேசில்
சென்றனர். ஆகஸ்ட் 5ந்தேதி தொடங்கிய போட்டியில் இந்தியா பதக்கம் வாங்கியதா
எனக்கேட்டால் கிரவுண்ட்க்கு போகும்போதே அவுட்டாகி வந்துவிடுகிறார்கள் நமது
வீரர்கள்.
விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் தான். விளையாடாமலே
தோல்வியை சந்திக்கும் நாடு எதுவென்றால் அது இந்தியா தான். ஒவ்வொரு ஆண்டும்
கோடிக்கணக்கான ரூபாய் விளையாட்டு துறைக்கு ஒதுக்குகிறது இந்தியா. அந்த தொகையில்
இருந்து ஒரு சதவிதத்தை ஒதுக்கி முருகேசன் பாத்திரகடையில் பதக்கங்களை
வாங்கியிருந்தால் கூட வீட்டுக்கு நாலு தங்க பதக்கங்களை தந்துயிருக்கலாம். அப்படி
தந்துயிருந்தால் வெள்ளி பதக்கம் வாங்கியதையும், வெண்கலப்பதக்கம் வாங்கியதை
நினைத்து நாடே கொண்டாடி கொண்டுயிருக்காது.
இரண்டு பதக்கம் வாங்கியதை நினைத்து ஆஹா, ஓஹோ என கொண்டாடி
தீர்க்கும் இந்தியர்கள், நம்மை விட
குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடான அமெரிக்கா 120க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி
சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளது. நம் அளவுக்கு மக்கள் தொகை கொண்ட சீனா கூட
பதக்க பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. நம்மை விட குறைந்த மக்கள் தொகை நாடும்
அதிக பதக்கம் வாங்குகிறது, நம்மை விட அதிக மக்கள் தொகை கொண்ட நாடும் அதிகமாக
பதக்கம் வாங்கிறது நாமே அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பதக்க
பட்டியலில் 64 இடத்தில் இருந்த்தை நினைத்து நாம் முதலில் நாம் வெட்கப்பட வேண்டும்.
இது ஏதோ இந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் மட்டும்மல்ல
ஒலிம்பிக் விளையாட்டு தொடங்கிய காலத்தில் இருந்தே இதுதான் நடக்கிறது. பதக்க
பட்டியலில் இந்தியாவின் பெயரை பூத கண்ணாடி வைத்து தேட வேண்டியதாக இருக்கிறது.
எங்கே இதன் வீழ்ச்சி என்றால், வீரர்கள் தேர்விலேயே தோல்வியை
சந்தித்து விடுகிறது. திறமையான வீரன் மேலே வரமுடிவதில்லை. காரணம், அவன்
மேல்சாதிக்காரனாக இருப்பதில்லை. திறமையானவனாக இருந்தாலும் கீழ்சாதிக்காரன் கீழே
கிடக்கவேண்டும், திறமையில்லாத மேல்சாதி தற்குறிகள் எல்லாம் மேலே வரவேண்டும் என
நினைத்து வீரர்களை தேர்வு செய்வதால் தொடக்கத்திலேயே தொடங்கிவிடுகிறது தோல்வி.
அதுமட்டும்மல்ல, இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு தரப்படும்
முக்கியத்துவம் வேறு எந்த விளையாட்டுக்கும் தரப்படுவதில்லை. இந்தியாவின் தேசிய
விளையாட்டு எதுவென கல்லூரியில் படிப்பவனிடம்மே கேட்டுப்பாருங்கள் கிரிக்கெட்
என்பான். இது அவர்கள் மீது மட்டும் குற்றம்மல்ல. ஊடகம், சமூகமும், அரசு மீது தான்
குற்றம்சாட்ட வேண்டும்.
கிரிக்கெட் விளையாட்டுக்கு பக்கம் பக்கமாய் செய்தி போடும்
செய்தித்தாள்கள், நேரடி ஒளிப்பரப்பு செய்யும் தொலைக்காட்சிகள் மற்ற
விளையாட்டுக்களை கண்டுக்கொள்வதில்லை. மக்கள் பார்க்கும் விளையாட்டுக்கு மட்டும்மே
நாங்கள் ஸ்பான்சர் செய்வோம் எனச்சொல்லும் கார்ப்பரேட் நிறுவனங்கள், கிரிக்கெட்
வீரர்களுக்கு வரி சலுகை, பொருள் சலுகை, இடச்சலுகை என வாரி வழங்கும் இந்திய ஒன்றிய
அரசுகளும் அவைகளை நோக்கும் சமூகமும் கிரிக்கெட் மீது பைத்தியமாய் திரிகிறார்கள்.
விளையாடும் போது தேசப்பற்று வேறு பொங்கி வழிகிறது. கிரிக்கெட்க்கு இந்த சமூகமும்,
அரசும், கார்ப்பரேட் நிறுவனங்கள் தரும் முக்கியத்தவத்தில் 10 சதவிதம் மற்ற
விளையாட்டுகளுக்கு தந்தால் போதும் கோப்பை வெல்லவில்லை என்றாலும் இத்தனை
விளையாட்டுகள் உள்ளது என்பதாவுது மக்களுக்கு தெரியும்.
இத்தனை விளையாட்டில் கலந்துக்கொண்ட நமது வீரர்கள் ஒரு தங்க
பதக்கம் கூட வாங்காமல் வருகிறார்களே, திறமையற்ற அவர்களை ஏன் அனுப்பினீர்கள் என மக்களாவுது
அரசை நோக்கி கேள்வி கேட்கிறார்களா என்றால் கிடையாது. நமக்கேன் வம்பு என ஒதுங்கி
செல்கிறார்கள். பதக்க பட்டியலில் உள்ள ஏதாவது ஒரு நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்
இந்த நாடு அடுத்த ஆண்டு பதக்க பட்டியலில் பெயர் வரவில்லை என்றால் அந்த நாட்டு
விளையாட்டு துறை அமைச்சரின் பதவி பறிக்கப்படும். அது சர்வாதிகார நாடாக
இருந்தாலும், ஜனநாயாக நாடாக இருந்தாலும் இதுதான் நடக்கும். ஏன் எனில்
அங்குயெல்லாம் ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்களை பார்த்து மக்கள் கேள்வி கேட்பார்கள்.
இங்கு மக்கள் மட்டும்மல்ல நாட்டின் நான்காவுது தூண் எனப்படும் பத்திரிக்கை,
மீடியாவும் நவ துவாரங்களை மூடிக்கொண்டு போய்க்கொண்டு இருக்கிறார்கள்.
பதக்கம் வாங்கியவர்களுக்கு அரசாங்கம் தரும் பண மதிப்பையும்,
பொருள் மதிப்பையும் பக்கம்பக்கம்மாய் எழுதியும், மணிக்கணக்கில் ஒளிப்பரப்பியும்
சந்தோஷப்படுத்துகிறார்கள். விளையாட்டு வீர்ர்களை ஊக்குவிக்கவே இப்படி பணமும்,
பொருளும், பதவியும் தருகிறோம் என்பார்கள் அதிகார வர்க்கத்தினர். உண்மை அதுவல்ல,
மக்களை திசை திருப்பவே அப்படி செய்கிறார்கள். தங்களை நோக்கி மக்கள் வெகுண்டெழுந்து
கேள்வி கேட்க்க்கூடாது என்பதற்காகவே திசை திருப்புகிறார்கள். இதற்கு மீடியா
உலகமும் துணை போகிறது.
இதுப்பற்றி ஆட்டு மந்தையான மக்களுக்கு எந்த அக்கறையும்
இருப்பதில்லை. விளையாடும் வீரர்களை பார்த்து முஷ்டியை மடக்கி, பல்லை
கடித்துக்கொண்டு ஜெயிக்கனும் ஜெய்ஹிந்த் என கத்திவிட்டு நகர்ந்துவிடுவதே வேலையாக
இருக்கிறது.
ஒலிம்பிக்கில் சாதனை புரிய வேண்டும் என்கிற வேட்கை
வீரர்களுக்கு மட்டும் இருந்தால் போதாது. நம்மை ஆளும் அதிகார வர்க்கத்துக்கும், நாட்டு
மக்களுக்கும் இருக்கவேண்டும். இல்லையேல் நாளை ஒலிம்பிக்கில் விளையாட போவதே
சாதனையாக பார்க்கப்படும்.
நெஞ்சு பொறுக்குதில்லையே ...
பதிலளிநீக்கு