புதன், செப்டம்பர் 28, 2011

2ஜி விவகாரத்தின் மறுபக்கம் வெளிவரும் நேரம்.



மீண்டும் தேசிய அளவில் சூடு பிடித்துள்ளது 2ஜி விவகாரம். இந்த விவகாரம் முன்பு திமுகவை மையமிட்டே சுற்றி வந்தது. இதில் காங்கிரஸ்க்கும் பங்குண்டு, இந்த விவகாரம் வெடிக்க காரணம் காங்கிரஸ் தான் என பலமுறை நமது கட்டுரைகளில் அலசியிருந்தோம்.

தற்போது ஆடிட்டர் அறிக்கை ஒன்று லீக் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் 2645 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதனை தலைமை கணக்கு அதிகாரிதான் 1 லட்சத்து 74 ஆயிரம் கோடி இழப்பு என்றார். அது ஊழல் செய்யப்பட்டதாக வெளியாகி பரபரப்பானது.

இதில் ஊழல் நடந்திருக்கும். ஆனால் இவர்கள் குறிப்பிடும் அளவுக்கு நடந்திருக்க வாய்ப்பில்லை. அதோடு, திமுகவை அழிக்க காங்கிரஸ், அதன் சார்பு தொழிலதிபர்கள், மாறன் பிரதர்ஸ் கூட்டு சேர்ந்து நடத்தும் சூழ்ச்சி என்பதை குறிப்பிட்டுயிருந்தோம். தயாநிதிமாறன், ப.சி, மன்மோகன் ஆகியோரை நீதிமன்றத்தில் ராசா இழுத்து விட்டதும் துடித்து போன லாபி வட்டாரங்கள் முதலில் தயாநிதிமாறனை காப்பாற்ற நடடிவக்கையில் இறங்கின. காங்கிரஸ் தனது ஆட்களை காப்பாற்ற முயற்சிக்கிறது.

இதற்கிடையே 2ஜி விவகாரம், அரசியல் விவகாரங்களால் பிரதமர் பதவியில் இருந்து விலக மன்மோகன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. அப்படி அவர் போனால் சோனியாவின் சாய்ஸ் சிதம்பரம். இதனை நீண்ட நெடுங்காலமாக பிரதமர் கனவில் உள்ள நிதித்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி உணர்ந்தார். இதனை தடுக்க உள்துறை அமைச்சராகவுள்ள சிதம்பரத்தின் இமேஜ்ஜை தேசிய அளவில் டேமேஜ் செய்ய எண்ணிய பிரணாப், சு.சாமியை கொண்டு காய் நகர்த்தினார். 2ஜி விவகாரத்தில் சிதம்பரத்திற்க்கு பங்குள்ளது என உச்சநீதிமன்றம் போகவைத்தார். அவர் நீதிமன்றத்தில் சில கடித ஆதாரங்களை எடுத்து காட்டினார். இதனை கொண்டு நட்டத்தை தடுக்க தவறிய சிதம்பரத்துக்கும் 2ஜியில் பங்குள்ளதாக தெரிகிறது என்றார். இதனை காங்கிரஸ்க்கு எதிரான தரப்புகள் கையில் எடுத்துக்கொண்டன. தலைக்கு மேல் வெள்ளம் போகும் நிலை.


திமுகவை அழிக்க வேண்டும் என கிளப்பப்பட்ட 2ஜி விவகாரத்தில் உள்துறை அமைச்சராகவுள்ள சிதம்பரம், பிரதமராகவுள்ள மன்மோகன்சிங், காங்கிரஸ் லகானை வைத்துள்ள சோனியாவுக்கு நெருக்கடி ஆரம்பமாகிவிட்டது. பூமாராங் போல் அது கிளப்பிய ஊழல் பிரச்சனை தற்போது அதன் காளையும் சுற்ற தொடங்கியதை காங்கிரஸ் உணர்ந்து விட்டது. அதனால் உண்மையை வெளியிடும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்துவிட்டது.

ஊழல் நடந்துள்ளது. மீடியாக்கள், அரசியல் கட்சியினர் கூறும் அளவள்ள என்பதை நன்கறிந்த மன்மோகன், தனது அரசு இயந்திரங்கள் 2ஜியை கிளப்பி திமுக இமேஜ்ஜை டேமேஜ் செய்தது என்பதும் நன்கறிந்தவர். அதோடு, சிதம்பரத்தை காலி செய்து பிரதமர் பதவியை பிடிக்க ஆசைப்படும் பிரணாப் தான் இதன் பின்னால் இருந்து சிதம்பரத்துக்கும் பங்குண்டு என கிளப்பி சிக்கலாக்குகிறார் என்பதை அறிந்தே சிதம்பரம் மீது எனக்கு முழு நம்பிக்கையுள்ளது. அதனால் அவர் பதவி விலக வேண்டியதில்லை என்றார்.


இந்நிலையில் தான் உண்மையான இழப்பு இதுதான் என்ற தகவலை காங்கிரஸ்சே லீக் செய்துள்ளது. 2ஜியில் ஊழல் நிச்சயம் நடந்தது. இதில் திமுக மட்டுமல்ல காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள், தலைவர்களுக்கும் முக்கிய பங்குண்டு. ஆனால் வெளியில் குறிப்பிடும் அளவுக்கான தொகையல்ல என்பதே நமது வாதம். அதோடு தவறு செய்தவர்களில் திமுகவினர் மட்டும் உள்ளேயிருக்க, ஊழலில் அதிக பங்கு வாங்கிய காங்கிரஸ் அமைச்சர்கள், தலைவர்கள், தொழிலதிபர்கள், திமுகவை அழிக்க துணை போனவர்கள் வெளியே இருப்பது அநியாயம்.

இப்போது, பசி-பிரணாப் சண்டையில் 2ஜி விவகாரத்தின் மறுப்பக்கம் வெளி வரும் காலம் நெருங்கிவருகிறது. வெளி வந்தால் திமுக தலைமை உணர்ந்து கொண்டு காங்கிரஸ்க்கு பாடம் கற்பித்தால் நல்லது.

1 கருத்து:

  1. இப்போது, பசி-பிரணாப் சண்டையில் 2ஜி விவகாரத்தின் மறுப்பக்கம் வெளி வரும் காலம் நெருங்கிவருகிறது. வெளி வந்தால் மீடியாக்கள் உணர்ந்து கொண்டு காங்கிரஸ்க்கு பாடம் கற்பித்தால் நல்லது.

    ஊழலில் அதிக பங்கு வாங்கிய காங்கிரஸ் அமைச்சர்கள்(P.C),(Sonia) தலைவர்கள், தொழிலதிபர்கள் Tata, Ambaani, வெளியே இருப்பது அநியாயம்.

    பதிலளிநீக்கு