வெள்ளி, செப்டம்பர் 02, 2011

ஸ்பெக்ட்ராம் வழக்கை ஊத்தி மூட துடிக்கும் காங்கிரஸ். பின்னணி என்ன?



ஆரம்பம் முதலே இங்கு எழுதப்பட்ட ஸ்பெக்ட்ராம் பற்றிய கட்டுரைகளில் சுட்டிக்காட்டப்பட்டது, ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது. ஆனால் எதிர்கட்சிகள், ஊடகங்கள் குறிப்பிடுவது போல் ஒரு லட்சத்து எழபதாயிரம் கோடி என குறிப்பிடப்படுவது தவறு. இங்கு குறிப்பிடும் தொகையை விட குறைவாகத்தான் இருக்க வாய்ப்பு. அதோடு ஸ்பெக்ட்ராம் விவகாரத்தை கிளப்யிதற்க்கு பின்னால் காங்கிரஸ் உள்ளது. அவர்கள் திட்டமிட்டே திமுகவை அழிக்க இதனை மறைமுகமாக கிளறி விடுகிறார்கள், மத்திய காங்கிரஸ் அரசுக்கு தெரியாமல் ஸ்பெக்ட்ராம்மில் ஊழல் நடக்கவோ, அவர்களுக்கு பங்கு இல்லாமல் போகவோ வாய்ப்பேயில்லை, அதேபோல் திமுகவை அழிக்க காங்கிரஸ்சுடன் பெரும் பணக்காரர்கள், தமிழகத்தில் மாறன் பிரதர்ஸ் மற்றும் தமிழக பிராமண சக்திகள் ஒன்றிணைந்துள்ளது எனக்குறிப்பிட்டோம்.

ஏர்செல் விவகாரத்தில் அடுக்கடுக்கான ஆதாரங்கள் தயாநிதிமாறனுக்கு எதிராக வெளிவந்தது. அவரது பதவியை பலி கொடுக்க வைத்தது. அவரை சி.பி.ஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தது. விசாரணை நடந்தது. அதிலிருந்து காத்துக்கொள்ள தனது பெரும் தொழிலதிபர் மூளையை பயன்படுத்துகிறார், அதேபோல் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட பெரும் தொழிலதிபர்கள், காங்கிரஸ்காரர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள் எனக்குறிப்பிட்டுயிருந்தோம். இந்த வழக்கின் பின்னணியில் உள்ளது காங்கிரஸ் தான் என்பதை பலமுறை அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுயிருந்தோம். அவர்கள் நினைத்தால் மட்டுமே ஸ்பெக்ட்ராம் விவகாரம் அடங்கும் என்றிருந்தோம். அதேபோல் சி.பி.ஐ மத்திய காங்கிரஸ் அரசால் ஆட்டி வைக்கப்படுகிறது எனக்குறிப்பிட்டுயிருந்தோம்.


நாம் குறிப்பிட்டது இப்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. பட்டியாலியா நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு வரும் ஆ.ராசா, 2ஜியில் தவறே நடக்கவில்லை. இது பிரதமர்க்கும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்திற்க்கும் தெரிந்தே நடந்தது. அவர்கள் அலோசனை படியே நடந்தது. அதனால் அவர்களை சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்கிறார். கனிமொழியின் வழக்கறிஞர், கலைஞர் டிவி பணம் வந்த விவகாரத்திற்க்கும் ஸ்பெக்ட்ராம்க்கும் சம்மந்தம்மில்லை. அவருக்கும் நிர்வாகத்திற்க்கும் எந்த சம்மந்தமும்மில்லை என்றார். இப்படி காங்கிரஸ் தரப்புக்கு எதிராக குறிப்பாக பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சராகவுள்ள சிதம்பரம், மாறன் குரூப்பை இதற்க்குள் இழுத்ததும் ஸ்பெக்ட்ராம் வழக்கு நடக்கிறதா இல்லையா என்பதே இப்போது சந்தேகமாக உள்ளது.

பிரதமர் மற்றும் அவரது கட்சி அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் நீதிமன்றத்துக்கு வந்தால் ராசா எழுப்பும் கேள்விக்கு அவர்களாலோ, சி.பி.ஐயாலோ பதில் சொல்ல முடியாது. இதனால் குட்டு வெளிப்படும் என்பதோடு பூமாராங் போல் கிளறி விட்ட அந்த புதைக்குழிக்குள் தாங்களே சிக்க நேரிடும் என அரண்டு போன காங்கிரஸ் அவசர அவசரமாக இவ்விவகாரத்தை முடித்து வைக்க துடிக்கிறது. இவ்விவகாரத்தில் காங்கிரஸ்க்கு துணை நின்ற பெரும் நிறுவனங்கள், மாறன் பிரதர்ஸ் காங்கிரஸ்க்கு நெருக்கடி தர வழக்கு ஊத்தி  மூட வைக்கும் பணியை காங்கிரஸ் அரசாங்கம் செய்ய தொடங்கிவிட்டது.


அதற்கான முன்னோட்டம் தான், தொலை தொடர்பு ஆணையமான ட்ராய், ஸ்பெக்ட்ராம் ஏலத்தில் நட்டம்மே ஏற்படவேயில்லை எனக்கூறியது. அதேபோல் சி.பி.ஐ, தயாநிதிமாறன் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை. அவர் நல்லவர் என சர்டிப்கெட் தந்தது. அதோடு இதை மேலும் பி.ஜே.பி கிளாறாமல்யிருக்க அவர்களது ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் தவறு செய்துள்ளார்கள் அதை விசாரிக்க வேண்டும் எனக்கூறி கடிவாளம் போட்டுள்ளது.

ஆக காங்கிரஸ்க்கு, பெரும் தொழிலதிபர்களுக்கு, திமுகவை அழிக்க நினைக்கும் மற்ற சக்திகளுக்கு எதிராக ஸ்பெக்ட்ராம் விவகாரம் திரும்ப நினைத்ததும் இவ்வழக்கு சைலண்ட்டாக்கி வருகிறது காங்கிரஸ் அரசு. முடிவும் அவர்களுக்கு சாதகமாக தான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துயில்லை. இவ்விவகாரத்தில் இழப்பு என்னவோ திமுகவுக்கு தான். அது ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் இழந்த இமேஜ்ஜை சரி செய்துக்கொள்ள நீண்ட பல மாதங்களாகும்............ சரி....... கொள்ளையடிச்சதுக்காக அதையும் தாங்கிக்கதான் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக