புதன், ஜூலை 03, 2013

தலாக் என்கிற முத்தலாக்........



இஸ்லாம் மார்கத்தில் மிக மோசமான ஒரு பழக்கம் தலாக். குணவன் - மனைவிக்குள் விவகாரத்து செய்ய வேண்டும் என்றால் முத்தலாக் சொல்லிவிட்டு பிரிந்துவிடலாம். முத்தலாக் சொல்வதற்கான நடைமுறை அதிகம். ஆனால் தற்போது பெண் பித்து, பண பித்து பிடித்த சிலர் செல்போன் வழியாக, எஸ்.எம்.எஸ் வழியாக, கடிதம் மூலமாக தலாக் சொல்லிவிடுகின்றனர். இதுப்பற்றி அவ்வப்போது தகவல்கள் வெளிவந்தள்ளன.

தலாக் சொல்வதற்க்கு வழி முறைகள் உள்ளது. ஜமாத்தில் பெரியவர்கள் முன்பு கூடி கணவன் - மனைவி இருவரிடமும் பிரிவுக்கான அவர்களது கருத்தையும் கேட்பார்கள். அவர்களுக்கு நல் புத்தி கூறி சேர்ந்து வாழ வைக்க முயற்சிப்பார்கள். அப்படியும் அவர்கள் சேர்ந்து வாழ முடியவில்லை என்றால் கடைசி வாய்ப்பாக ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று மனைவியை பார்த்து கணவன் தலாக் சொல்ல வேண்டும். இப்படி மூன்று மாதங்கள் தலாக் சொன்னால் அவர்களுக்குள் திருமண பந்தம் முறிவு ஏற்பட்டுவிடும். இதனை முத்தலாக் என்கிறார்கள். இதனைத்தான் சில இஸ்லாமிய ஆண்கள் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லி திருமண உறவை முறித்துக்கொள்கின்றனர். மார்க்கப்படி இது செல்லாது என்றாலும் ஜமாத்தில் பிற்போக்கு ஆண்களின் ஆதிக்கம் இருப்பதாலும், பணம் விளையாடுவதால் வெளிநாட்டில் உட்கார்ந்துக்கொண்டு இமெயில் மூலமாக சொல்லப்படும் தலாக்கள் ஏற்;றுக்கொள்ளப்படுகிறது என்கிறார்கள்.

தலாக் சொல்லிவிட்டால் அந்த பெண்ணுக்கும் - கணவனுக்குமான பந்தம் அந்த நிமிடத்தில் இருந்து முற்றிலும் அறுந்தது. இனி அவர்கள் சேர முடியாது. ஒரு வேளை சேர நினைத்தால் அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு பின் அவன் தலாக் சொன்னப்பின்னால் முதல் கணவன் மீண்டும் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்கிறது. தலாக் செய்யப்பட்ட பெண்ணுக்கு ஜுவனாம்சம் கிடையாது. திருமணத்தின் போது பெண் வீட்டார் தரும் மெஹார் என்ற பணம் மட்டும் திருப்பி தரப்படும். மெஹார் பணம் என்பது குறைவானது. ஜீவனாம்சம் தரமாட்டார்கள் என்பது அயோக்கியத்தனம். தலாக் முறையை பாகிஸ்தான், இந்தோனிசியா போன்ற நாடுகளில் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதால் இந்த இஸ்லாமிய நாடுகள் தடை செய்துள்ளன என்கிறார்கள்.

இந்தியா போன்ற நாடுகள் அதை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கின்றன. காரணம், சிறுபான்மை நலம் என்கிறார்கள் எந்த அரசியல் கட்சியினர் வந்தாலும். மோசமான ஒரு சட்டத்துக்கு எதற்காக அரசாங்கம் வாக்கலாத்து வாங்க வேண்டும்.

அதுமட்டுமல்ல இஸ்லாமிய சட்டப்படி பெண்களுக்கும் தலாக் சொல்லும் உரிமை தரப்பட்டள்ளது. ஆனால் பிற்போக்கு இஸ்லாமியர்கள் அந்த உரிமையை தருவதில்லை. அதேபோல் முதல் மனைவி சம்மந்தம் இல்லாமல், கணவன் பலதார மணம் புரிந்துக்கொள்ளலாம் என்பது இஸ்லாமிய நடைமுறை. இதை மனைவியானவர் எதிர்க்ககூடாது.

இந்திய நாடு என்பது மதசார்ப்பற்ற நாடு என்கிறார்கள். அப்போது சட்டங்கள் அனைவருக்கும் ஒரேமாதிரியாக தானே இருக்க வேண்டும். அதுயென்ன இஸ்லாமிய ஆண்களுக்கு மட்டும் சட்டங்கள் வேறு மாதிரி இருப்பது. இந்து சமூகத்திலோ, கிருத்துவ சமூகத்திலோ முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டுவது திருமணம் செய்துக்கொண்டால் முதல் மனைவி நினைத்தால் கம்பி என்னவைக்கப்படுவான். இதை முஸ்லிம் சமூக ஆண்களும் இந்த சட்டத்துக்குள் வர வேண்டும்மல்லவா ஏன் வருவதில்லை. அதுமட்டுமல்ல, விவாகரத்து செய்தால் சட்டப்படி கணவன் ஜீவனாம்சம் தர வேண்டும். இஸ்லாமிய சட்டம் இதை மறுக்கிறது.

இந்த தலாக் முறையை முதல்வர் ஜெவின் தோழியும், முன்னால் வாக்ப் போர்டு தலைவியுமான பதர் சையித் கடுமையாக எதிர்த்து பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். வரவேற்க வேண்டியவிஷயம். இதற்காக எந்த பெண்கள் இயக்கமும் அவருக்கு துணை நின்றதாக தெரியவில்லை.

முஸ்லிம் தனி நபர் சட்டவாரியமும், பிற்போக்கு தன கருத்துக்களை கொண்டவர்கள் பெண்களுக்கு எதிராக செய்யும் இது போன்ற மனித உரிமை மீறல்களை தடுக்க வேண்டும். இஸ்லாத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கிடைக்க வேண்டும்.

2 கருத்துகள்:

  1. பவுர்ணமியில் 3 தலாக் சொல்லுதல், SMS வழி தலாக் சொல்லுதல் இதெல்லாம் எந்த ஊரில் நடக்கிறது? மலத்தை தின்ற பன்றி மல்லிகையை முகர்ந்தாலும் அங்கே மல வாடை தான் வீசும். அதுபோலத்தான் உங்களைப் போன்ற இஸ்லாமிய எதிர்வெறியர்களும் மலம்தின்ற பன்றிக்கு ஒப்பானவர்கள். இஸ்லாமிய வெறி அதிகமானால் ரயில் முன் பாயவும்.

    பதிலளிநீக்கு
  2. மஹர் மணமகன் வீட்டார் இடமிருந்து வாங்குவது. அதுவே உங்களுக்கு தெரியலை . ஏன் தேவையில்லாம விமர்சிக்கிரீங்க. இஸ்லாத்த முதல்ல பிடுங்க

    பதிலளிநீக்கு