புதன், செப்டம்பர் 11, 2013

ஆயிரம் ஆயிரம் கோடி. விநாயகர் கேட்டாரா ?.பெரும் தொழிற்சாலைகளோ, அதிகம் நகர மயமாத மாவட்டங்களில் ஒன்று திருவண்ணாமலை. இந்த மாவட்டத்தில் காவல்துறை கணக்குப்படி நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 1150 பிள்ளையார் சிலைகள் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் வைக்கப்பட்ட சிலைகள் இந்த கணக்கில் வராது. 

10 அடி உயர சிலையை 15 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியதாக சொன்னார்கள் விநாயகர் சிலையை கரைக்க கொண்டு சென்ற இளைஞர்கள். 1150 சிலை வேண்டாம் 1000 சிலையை கணக்கில் எடுத்துக்கொள்வோம். ஒரு சிலை பத்தாயிரம் என கணக்கிட்டாலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு விநாயகர் சிலை வாங்கப்பட்டுள்ளது. ( வீடுகள், கிராமங்கள் நீங்களாக ).

தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் உள்ளன. 32 மாவட்டத்தில் 32 கோடிக்கு விநாயகர் சிலை வாங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 30 மாநிலங்கள் உள்ளன. தென்மாநிலங்களை விட வடமாநிலங்கள் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடுவார்கள். இந்தியா முழுமைக்கும் விநாயகர் சிலை வாங்கியதற்கான செலவை கணக்கிட்டால் மலைப்பாக இருக்கிறது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு கணக்கு வருகிறது. ஆக இந்த விநாயகர் சதுர்த்துக்கு மட்டும் சுமார் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கோடி வரை செலவாகியிருக்கும் என்பது உறுதி.

மற்ற செலவுகள் ஒருபுறம்மிருந்தாலும் விநாயகர் சிலைகள் வாங்கிய ஆயிரம் கோடி ரூபாய் கடலில், குளங்களில் கரைக்கப்பட்டுள்ளது என்பதே நிதர்சனம். ஆயிரம் கோடி கடலில் கரைவதை கூட ஏற்றுக்கொள்ளலாம் விநாயகர் பெயரில் நடத்தப்படும் மதவாத அரசியல் தான் பயங்கரமாக இருக்கிறது. 


சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவை, கன்னியாகுமரி, நெல்லை, வேலூர், முத்துப்பேட்டை பகுதிகளில் மட்டும் இருந்த மத டென்ஷன் தற்போது தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கடந்த சில ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் காவல்துறைக்கும் டென்ஷன். 3 நாள் கண்விழித்து ஒவ்வொரு விநாயகர் சிலைக்கும் பாதுகாப்பு தந்துக்கொண்டு இருந்தார்கள். 

இது எதனால் வந்தது. விநாயகர் சதுர்த்தி, ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை மீட்க மக்களை திரட்ட விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. மதத்தின் பெயரை சொல்லி மக்களை திரட்டி அங்கு தங்களது கருத்துக்களை எடுத்து வைத்து சுதந்திர போராட்டத்துக்கு அழைத்தார்கள். 

இது மெல்ல உருமாற்றம் செய்யப்பட்டு இந்துக்களையும் - இஸ்லாமியர்களையும் பிரித்தது. தேச பிரிவினைக்கு பின்னர் அதுவே பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. இதன் பின்னால் இருந்த நுண்ணிய அரசியல் இன்று மக்களை பிரித்து வைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ், வீ.எச்.பி, சங் பரிவார் அமைப்புகள் நுட்பமாக இதில் விளையாட தொடங்கினர். சுதந்திரத்துக்காக தூக்கி பிடிக்கப்பட்ட இப்படிப்பட்ட விழாக்கள் இன்று கட்சிகளில் பதவிகளை பிடிக்கவும், ஆட்சியை பிடிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

இது சமூகத்தை மட்டும் அழிவுப்பாதையில் கொண்டு செல்லவில்லை. இயற்கையையும் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கின்றன. விநாயகர் சிலைகள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் கடல்களிலும், குளங்களிலும் கரைக்கும் போது அந்த களிமண் அதனை துருக்கின்றன. விநாயகர் சிலைகளில் பூசப்பட்ட இரசாயனங்கள் தண்ணிரீல் கலப்பதால் குடிநீர் மாசடைகின்றன. இவர்கள் வெடிக்கும் வெடிகளும், வெடி மருந்து புகையும் காற்றை மாசடைய வைக்கின்றன. இது உயிர்களை தான் மெல்ல மெல்ல கொல்கின்றன. 

ஆன்மீக நாட்டம் உள்ளவர்களே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள். இயற்கையை, சமூகத்தை மாசுப்படுத்தாமல் கொண்டாடுங்கள். ஏன் இனில் கடவுள்கள் சக மனிதனை துன்பப்படுத்தி கொண்டாடப்படும் எதையும் யாரும் விரும்புவதில்லை. கடவுளிடம் சென்று கேட்டுப்பாருங்கள் உண்மை என்பார். 

2 கருத்துகள்:

  1. வீண் பகட்டுக்காகவும், விளம்பரங்களுக்காகவும் மத அரசியல் அடையாள அரசியல் போன்றவைக்காகவும், மக்களின் பணங்களையும், நேரங்களையும் வீணடிக்கும் மதவாத கூட்டங்களும், அதே நாட்டில் ஒரு வேளை உணவுக்கும், ஒதுங்க ஒரு கூரையும் இன்றி மிருகங்களை விட கேவலமாய் வாழ்வதை மறந்துவிடுகின்றனர். அநாவசியங்களுக்கு வீணடிக்கும் பணங்களை சக மக்களின் துயர் நீக்க கிள்ளிக் கூடப் போட மனமற்று இருப்பவர்கள் தான், விநாயகர் சிலை ஊர்வலங்கள், கும்பாபிசேடங்கள், கோயில்கள், என பற்பல செலவீனங்களைச் செய்கின்றனர். ஜீவகாருண்யமற்ற சுயநல விரும்பிகளே அன்பையும், இறைவனையும் பற்றி எல்லாம் பிரசங்கித்து திரிகின்றன.

    பதிலளிநீக்கு
  2. ஹிந்து மதம் உலகுக்கே ஞானமார்க்கம் காட்டியது.
    இன்று அதன் வளர்ச்சி பக்தனாகிய எனக்கே வெறுப்பு வருகிறது. காரணம் இறைவனை அலங்கரித்து கடலில் வீசுவது.சென்னையில் ஒன்பது லக்ஷத்தில் வெள்ளி விக்ரகம் கடலில் கரைக்க. ஏன் சுனாமி வராது.ஆயிரக்ணக்கனவர்களுக்கு /காவலர்களுக்கு /அரசுக்கு /பொதுமக்களுக்கு /எங்கே மதக்கலவரமோ என்ற பயம்.சுயநல அரசியல் /ஆன்மிகம். என் ப்ளாக்
    ananthako.blogspot.com; matinanth .blogspot; anandgomu.blogspot.com

    பதிலளிநீக்கு