செவ்வாய், ஏப்ரல் 29, 2014

தமிழக தேர்தல்களும் - வாக்கு பதிவு புள்ளி விபரங்களும்.





ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்கு பதிவு உயர்ந்து வருகிறது என்கிறது மீடியா, பத்திரிக்கைகள், தேர்தல் ஆணையம் போன்றவை. வாக்குப்பதிவு உயர்கிறதா எனக்கேட்டால் நிச்சயமாக கிடையாது. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு பதிவு குறைந்து வருகிறது என்பதே உண்மை. மேம்போக்காக சதவித அடிப்படையில் வேண்டுமானால் உயர்ந்தது எனக்குறிப்பிடலாம். மற்றப்படி நுணுக்கமாக ஆராய்ந்தால் வாக்காளர் எண்ணிக்கை உயர்கிறது. அதே நேரத்தில் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதை காணலாம்.

1967 முதல் 2011 வரையிலான சட்டமன்ற தேர்தல்கள் பட்டில் தந்துள்ளேன். அதில் வாக்காளர்கள் எண்ணிக்கை, வாக்களித்தோர் எண்ணிக்கையை பாருங்கள்.

தமிழகம் சந்தித்த சட்டமன்ற தேர்தல்கள்....

ஆண்டு
தேர்தல்
வாக்காளர்கள்
வாக்களித்தோர்
சதவிதம்.
1967
சட்டமன்ற தேர்தல்
2,07,99,362
1,59,25,796
76.57
1971
சட்டமன்ற தேர்தல்
2,30,64,983
1,65,65,649
72.10
1977
சட்டமன்ற தேர்தல்
2,81,61,418
1,73,42,799
61.58
1980
சட்டமன்ற தேர்தல்
2,91,97,882
1,91,01,113
65.42
1984
சட்டமன்ற தேர்தல்
3,09,47,873
2,27,35,869
73.47
1989
சட்டமன்ற தேர்தல்
3,52,94,451
2,45,95,016
69.69
1991
சட்டமன்ற தேர்தல்
3,99,08,787
2,54,78,644
63.84
1996
சட்டமன்ற தேர்தல்
4,24,78,965
2,84,39,249
66.95
2001
சட்டமன்ற தேர்தல்
4,74,79,000
2,80,48,077
59.07
2006
சட்டமன்ற தேர்தல்
4,66,03,352
3,28,85,649
70.82
2011
சட்டமன்ற தேர்தல்
4,71,16,687
3,67,53,114
70.82

1998ல் இருந்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தனியாகவும் நாடாளுமன்ற தேர்தல் தனியாகவும் நடைபெறுகின்றன.

நாடாளுமன்ற தேர்தல் விபரம்…….

1998
நாடாளுமன்ற தேர்தல்
4,55,77,788
2,64,10,702
57.95
1999
நாடாளுமன்ற தேர்தல்
4,77,33,644
2,76,76,543
57.98
2004
நாடாளுமன்ற தேர்தல்
4,72,52,271
2,87,32,954
60.81
2009
நாடாளுமன்ற தேர்தல்
4,16,20,460
3,03,83,034
73.03
2014
நாடாளுமன்ற தேர்தல்
5,50,42,876
4,05,54,957
73.68

1967ல் தமிழகத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,07,99,362 கோடி. அந்த தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 1,59,25,796 கோடி. அதாவது சுமார் 48 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. அதாவது நான்கு பேரில் ஒருவர் வாக்களிக்கவில்லை.

அதற்கடுத்து வந்த 1971 சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் எண்ணிக்கை 2,30,64,983 கோடி. 1967விட இந்த தேர்தலில் சுமார் 22.5 லட்சம் வாக்காளர்கள் புதிய வாக்காளர்களாக சேர்ந்துள்ளார்கள். ஆனால் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 1,65,65,649 கோடி. 1967 தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது 6.5 லட்சம் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்துள்ளார்கள். புதிய வாக்காளர்கள் எண்ணிக்கையோ 22.5 லட்சம். புதியதாக இணைக்கப்பட்ட வாக்காளர்களில் 16 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை.

இப்படி ஒவ்வொரு தேர்தல் பற்றியும் நீங்களே மேலே கண்டுள்ள அட்டவணைப்படி கணக்கிட்டு பாருங்கள்.

35 வருடங்களுக்கு முன்பு தேர்தல் விழிப்புணர்வுயில்லை, படிப்பறிவற்றவர்கள் அதிகமாக இருந்தார்கள் வாக்களிப்பது நமது கடமை என்பது தெரியாது என்கிறிர்களா சரி ஒப்புக்கொள்கிறேன். தற்போது இன்டர்நெட், இமெயில், சமூக வலைத்தளம், டிவி, செய்தித்தாள், மொபைல், எப்.எம், துண்டு பிரச்சுரங்கள் வழியாக வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்யப்படுகிறது. படித்தவர்கள் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவின் அளவு அதிகரித்துள்ளதா?.

2001 சட்டமன்ற தேர்தலின் போது தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 4,74,79,000 கோடி. அந்த தேர்தலில் வாக்களித்தோரின் எண்ணிக்கை 2,76,76,543 கோடி. அதாவது சுமார் 2 கோடிப்பேர் வாக்களிக்கவில்லை. 2006 சட்டமன்ற தேர்தலின் போது 1.30 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. ( இந்த தேர்தலில் 2001 சட்டமன்ற தேர்தல் வாக்காளர் எண்ணிக்கையை விட குறைவு.)


சட்டமன்ற தேர்தல்கள் மட்டுமல்ல நாடாளுமன்ற தேர்தல்களிலும் இதே நிலை தான்.

2009 நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 4,16,20,460 கோடி. வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 3,03,83,034 கோடி. வாக்களிக்காதவர்கள் சுமார் 1 கோடியே 13 லட்சம்.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது வாக்காளர்கள் எண்ணிக்கை 4,71,16,687 கோடி. வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 3,67,53,114 கோடி. வாக்களிக்காதவர்கள் 1 கோடியே 3 லட்சம்.

2014 நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை 5,37,52,682 கோடி. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலுக்கு பின் 3 ஆண்டிற்குள் சுமார் 66 லட்சம் பேர் புதிய வாக்காளராக இணைந்துள்ளார்கள். ஆனால் 2014 நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 32 லட்சம் பேர்.

2009 நாடாளுமன்ற தேர்தலில் இருந்த வாக்காளர்க்கும் 2014ல் உள்ள வாக்காளர்க்கும் உள்ள வித்தியாசம் 1 கோடியே 20 லட்சம். அதாவது வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2009ல் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சம். 2014ல் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 32 லட்சம். வித்தியாசம் 19 லட்சம். அதாவது புதியதாக இணைந்த வாக்காளர்களில் 6 பேர்க்கு ஓருவர் வாக்களிக்க வரவில்லை.

மேற்கண்ட புள்ளிவிபர கணக்குப்படி சட்டமன்ற தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ எதுவாகயிருந்தாலும் வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதேபோல் வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இந்த குறைபாட்டுக்கு காரணம், அரசியல்வாதிகளை பிடிக்கவில்லை அதனால் ஓட்டுப்போட விரும்பவில்லை எனச்சொல்வது ஒருபுறம்மிருந்தாலும் நடுத்தர வர்க்கத்துக்கு மேலிருப்பவர்கள் வாக்களிக்க வருவதில்லை. அதற்கு காரணம் சோம்பேறித்தனம், நான் ஒருத்தன்/ஒருத்தி ஓட்டு போடலன்னா தேர்தல் நின்னுடும்மா என குதர்க்கமாக கேட்பது, தேர்தல் நாளன்று ஊர் சுற்ற சுற்றுலா கிளம்பிடுவது, பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வளைத்தளங்களில் உட்கார்ந்துக்கொண்டு வாய்கிழிய பேசும் அரசியல் பேசும் 'அறிவு கொழுந்துகள்',  ஐ.டி கம்பெனிகளில் வேலை பார்க்கும் 'அதிமேதாவிகள்' வாக்களிக்க வருவதில்லை. இதனால் தான் வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதை மாற்ற வேண்டும். வாக்களித்தே தீர வேண்டும் என சட்டம் கொண்டு வர வேண்டும் அப்போது தான் வாக்குபதிவு உயரும். 


நோட்டா……….

தேர்தல் தோறும் நோட்டாவின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. வேட்பாளர்கள் யாரையும் பிடிக்கவில்லை என்பதே நோட்டா. காங்கிரஸ் ஊழல் கட்சி, பி.ஜே.பி மதவாதகட்சி, கம்யூனிஸ்ட் காலிடாப்பா, திமுக வாரிசு கட்சி, அதிமுக அல்ப கட்சி, மதிமுக மலராத கட்சி, பாமக சாதிக்கட்சி, விசி வில்லங்கமான கட்சி அதனால் அவர்களின் வேட்பாளர்களை பிடிக்கவில்லை எனச்சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். சுயேட்சைகள் தேர்தலில் நிற்கிறார்களே அவர்களுக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள். ஏன் செலுத்துவதில்லை. எதனால் உங்களுக்கு சுயேட்சைகளை பிடிக்காமல் போனது ? சுயேட்சை வேட்பாளர்கள் என்ன தவறு செய்தார்கள் அவர்களை பிடிக்காமல் போவதன் காரணம்மென்ன ?. நோட்டா பட்டனை அழுத்துபவர்களால் பதில் சொல்ல முடியாது.

முடியாது என்பதை நாம் அழுத்தி சொல்லகாரணம், முன்பு 49ஓ, தற்போது நோட்டா இதற்கு வாக்களிப்பது வீண் பந்தாவுக்காக தவிர வேறு ஒன்றுக்கும்மில்லை.

இனி வரும் தேர்தல்களில் பந்தாவை விட்டுவிட்டு வாக்களிக்க வாருங்கள். உங்கள் வாக்கை செல்லாத வாக்காக போடுவதற்கு பதில் தரமான வாக்காக பதிவிடுங்கள்…………

2 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பர்களே

    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    பதிலளிநீக்கு
  2. ஓட்டு சதவீதம் அதிகமாக இருந்தால் ஆளும்கட்சியே வெற்றி பெறும். இந்த முறை திமுகவிற்கு ஆப்புதான்.

    பதிலளிநீக்கு