வியாழன், மே 08, 2014

கொண்டையை மறைங்க வை.கோ...........
வையாபுரி கோபால்சாமி அவர்களே, உங்கள் “ஈழத்தாய்க்கு“ நீங்கள் சமரசம் வீசுங்கள், கால் பிடித்துவிடுங்கள். ஆனால் பொய்யை பரப்பாதிர்கள். முல்லை பெரியார் அணைக்காக நீங்கள் மட்டும் தான் ஏதோ குரல் கொடுத்தது போல் அறிக்கை விடாதீர்கள். ஓரு புல்லும் புடுங்காத மாவீரன் தான் நீங்கள். இந்தியன் படத்தில் வருவதை போல, அஞ்சல் நிலையத்துக்கு யாரோ குண்டு வைக்க தாமரை பட்டயம் சம்மந்தமேயில்லாத நபர் வாங்குவதைப்போன்றது உங்கள் அறிக்கை.

2006ல் உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு எதிராக கேரளா உச்சநீதிமன்றம் மேல் முறையீடு செய்தது. திமுக அரசாங்கம் சட்டப்படி அதை சந்திப்போம் என நீதிமன்றத்தில் கேரளா அரசாங்கத்தின் வாதத்துக்கு தமிழகம் சார்பாக எதிர்ப்புகள் வைத்தது. கேரளாவின் பொய்கள் அப்போது தமிழக அரசின் சார்பில் முறியடிக்கப்பட்டன. திமுக ஆட்சிக்கு பின் 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்தது. முல்லை பெரியார் அணை பிரச்சனை வெடித்தபோது தென்மாவட்ட மக்கள் எல்லைக்கு சென்று பெரும் போராட்டம் செய்தனர். உங்கள் ஈழத்தாய் கேரளா போலிஸ் உயர் அதிகாரி தலைமையில் காவலர்களை இறக்கி மக்களை துரத்தி துரத்தி அடித்து மண்டைகளை உடைத்தது, வழக்குகளை பாய்ச்சியது அது இன்னமும் கண் முன் உள்ளது.

திமுக அரசு நீதிமன்றம் வாயிலாக வழக்கை சட்டப்படி எதிர்க்கொண்டதால் தான் இன்று சரியான தீர்ப்பு வந்துள்ளது. திமுக அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது 33 வாய்தாக்கள் வாங்கினார்கள் என குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் வழக்கறிஞர். உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு போனால் உடனே விசாரித்து தீர்ப்பு வழங்கிவிடுவார்களா என்ன ?. வழக்கு ஆராயப்படும். இது இரண்டு தனி நபர்கள் சம்மந்தப்பட்டதல்ல. இரண்டு மாநிலங்கள் சம்மந்தப்பட்டது. இரண்டு மாநில மக்கள் பிரச்சனை. அதனை கவனத்தில் கொண்டு தான் விசாரணை நடத்துவார்கள். இது அரசியல் வழக்கு. அதனால் தான் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச்க்கு வழக்கை மாற்ற வேண்டும் என கேரளா கேட்டபோது அன்றைய திமுக அரசு ஒப்புக்கொண்டது. அதன்படியே வழக்கு மாற்றப்பட்டது. இது ஏதோ சதி என குதிக்கிறிர்கள். ஈழத்தாய்க்கு பாராட்டு பத்திரம் வாசித்துள்ளீர்கள் ?.

நீங்கள் ஈழத்தாயை எதிர்ப்பதை போல் ஒரு பந்தா பாவ்லா காட்டுகிறிர்கள். ஆனால் ஜெவின் மறைமுகமான நுணுக்கமான உள்ளடிகளை அறிந்தும் எதிர்க்காமல் அவரை பாராட்டுகிறிர்கள். திமுகவுக்கு எந்த நற்பெயரும் சென்று விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளீர்கள். இந்த விவகாரம் மட்டுமல்ல. பல விவகாரங்களில் அப்படித்தான் நடந்துக்கொள்கிறிர்கள். மூவர் தூக்கு விவகாரம் உட்பட எல்லாவற்றிலும்.

சமீபத்திய உதாரணம் எழுத்து வாயிலாகவே நீங்கள் பதிவிட்டுள்ளீர்கள். கடந்த 6ந்தேதி மதிமுக தொடங்கிய 21 ஆண்டு விழாவினை நடத்தியுள்ளீர்கள். அதற்காக உங்களது அதிகார பூர்வ நாளேடான சங்கொலியில் தொண்டர்களுக்கு நீங்கள் எழுதிய முன்னோக்கி செல்கிறோம் என்ற கடிதத்தை படிக்க நேர்ந்தது. நீண்ட கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுயிருந்தது, மகாபாரதத்தில் உங்களை சேனாதிபதியாக வர்ணித்துள்ளீர்கள். நிச்சயமாக மதிமுகவின் சேனாதிபதி தான். மகாபாரதம் போர் தந்திரம் போன்றது என் தந்திரம் என்கிறிர்கள். அந்த போர் தந்திரம் உங்களிடம் கிடையாது என்பதே என் கருத்து.

காங்கிரஸ்சை எதிர்ப்பதே என் வாழ்நாள் குறிக்கோள் என அறிஞர் அண்ணா சொன்னார். அதை கருணாநிதி மீறிவிட்டார் என்கிறிர்கள். காங்கிரஸ் தமிழகத்தில் வலிமையாக இருந்தவரை திமுக எதிர்த்தே அரசியல் செய்து வந்தது. அந்த கொள்கையை கடைபிடித்து வந்தது. காங்கிரஸ் வலிமை குன்றி நீங்கள் மறைமுகமாக வணங்கும் எம்.ஜீ.ஆர் என்ற நடிகர் திமுகவில் இருந்து பிரிந்துப்போய் அதிமுக என்ற கட்சியை உருவாக்கிய பின் தமிழகத்தில் திமுக – அதிமுக என்ற போட்டி உருவானது. வலிமையில்லாத காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணிக்கு வைத்தது.

காங்கிரஸ்சுடன் கூட்டணியில் இருந்தபோது நீங்கள் எந்த கட்சியில் இருந்தீர்கள். அண்ணா உருவாக்கிய கொள்கைக்கு எதிர்ப்பாக திமுக நடக்கிறது என்பதற்காக நீங்கள் கட்சியை விட்டு ஓடிவிட்டீர்களா?, இல்லை பதவி வேண்டாம் என பதுங்கிவிட்டீர்களா? இல்லையே.  1977 ஆண்டு முதன் முதலாக மாநிலங்கள் அவைக்கு திமுக தலைவர் கலைஞரால் அனுப்பிவைக்கப்பட்டீர்கள். மூன்று முறை மாநிலங்கள் அவை எம்.பியாக திமுக சார்பில் இருந்தீர்கள். திமுகவுன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தபோது நீங்கள் எம்.பியாக இருந்தீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். கொள்கைக்கு விரோதமாக கட்சி செயல்படுகிறது என ஓடிவிடவில்லை. 

இன்று தமிழ்நாட்டில் காங்கிரஸ்சை இல்லாமல் ஆக்கியதில் திமுகவுக்கு தான் பெரும்பங்கு. இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் திமுக – அதிமுகவுக்கு மாற்று என்பது கிடையாது என்பதே எதார்த்தம். கலைஞர் இறப்பார், ஜெ இறப்பார் அப்போது ஆட்சி கட்டிலில் ஏறுவோம் என கனவு காண்கிறீர்கள். உங்கள் கனவு எப்போதும் பகல் கனவு தான். திமுகவுக்கு ஸ்டாலின், அதிமுகவுக்கு சசிகலா என பட்டியல் உள்ளது. எம்.எல்.ஏ தேர்தலில் வெற்றி பெற முடியாத நீங்கள் முதல்வர் கனவு காண்கிறீர்கள் இது நியாயமா?.

எம்.பியானது முதல் 1993 வரை உங்களை திமுக கழகம் எப்படி கவுரவித்தது என்பதை சங்கொலியில் எழுத மறந்தீர்கள். அதை மட்டும் மறக்கவில்லை. மதிமுக என்ற கட்சி ஆரம்பித்தது முதல் 2014 மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தை அப்படியே கறுப்பு துண்டு போட்டு மூடி வைத்துவிட்டீர்களே நியாயமா?. அதை எழுதியிருந்தால் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை தமிழகம் உணர்ந்திருக்கும்.

அதுமட்டுமல்ல 1980ல் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்தேன் அது முதல் அவர் மீது எல்லையற்ற பாசமும், எல்லையற்ற மதிப்பும் கொண்டுள்ளேன் எனக்குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களை நம்பிய பாவத்துக்காக நீங்கள் அந்த இயக்கத்தையே சுடுகாட்டுக்கு அனுப்பிவிட்டீர்களே அது போதாதா?.

தற்போது 7 இடங்களில் தமிழக மக்கள் எனக்கு வெற்றி தருவார்கள் என இலக்கியம், இதிகாசம், திருத்தலங்கள், கடவுள்கள் என 7 வருவதை போல பட்டியலிட்டு 7 இடங்களில் நிற்கும் நாம் வெற்றி பெறுவோம் புதிய மறுமலர்ச்சி தருவோம் எனக்குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் தொகுதியில் நீங்கள் வெற்றி பெறுகிறீர்களா என யோசியுங்கள் வை.கோ.

ஈழ ஆதரவாளன், ஈழம் பெறாமல் ஓயமாட்டேன், இந்துத்துவாவுக்கு எதிரானவன், பதவி ஆசையில்லாதவன், ஜெவை எதிர்ப்பவன் என அறிக்கை விடுகிறிர்கள். ஆனால் தலையில் உள்ள கொண்டையை மறைக்காமல் விட்டுவிடுகிறிர்கள்.

4 கருத்துகள்:

 1. டேய் வெறும்பயலே,
  அரசியல் குப்பய கிளறுவது ஈசி..எங்கே ஒரு நல்ல இலக்கியத்தை, கவிதையை, உலக சினிமாவை பாத்து கருத்து சொல்லு பாப்போம்..ஒரு மயிரும் தெரியாது..சும்மா வைகோ அவர்களே, கலைஞர் அவர்களே, அம்மா அவர்களேன்னு நக்கீரன படிச்சிபிட்டு ஒளருறது ...முட்டாக் .......டி ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதிப்பிற்குரிய நாரப்பயல் ( நீங்க உங்க பெயரை அப்படித்தான் குறிப்பிட்டுயிருக்கிங்க ) அவர்களுக்கு, நல்ல இலக்கியம் என்றால் என்ன ?, கவிதை ?, உலக சினிமான்னா என்ன ?ன்னு உங்க கோட்பாட்டில் விளக்கமா சொல்லுங்க. அதன்பின் அதைப்பற்றி எழுதுகிறேன். நீங்கள் மஞ்சள் பத்திரிக்கை படிக்கும் நபர் என்பது கடைசி வரியை படிக்கும் போது அறிய முடிகிறது. பரவாயில்லை அது உங்கள் சுதந்திரம். என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

   நீக்கு
 2. ////திமுகவுக்கு ஸ்டாலின், அதிமுகவுக்கு சசிகலா என பட்டியல் உள்ளது.////

  …ஒரு சின்ன திருத்தம்.

  …திமுகவிற்கு குஷ்பு....அதிமுகவிற்கு சசிகலா என்றால் சரி.

  பதிலளிநீக்கு
 3. நல்ல பதிவு.
  வைகோ ஈழத்தாய்க்கு பாசத்துடன் ஏதோ கொடுக்கிராரே கண்கொள்ளாகாட்சி.

  பதிலளிநீக்கு