செவ்வாய், செப்டம்பர் 23, 2014

நிறம் மாற துடிக்கும் திமுக நிர்வாகிகள்.

புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது என்பது பழமொழி. ஆனால் திமுக என்கிற புலி பூனையாக மாற நினைக்கிறது.

திமுகவை பார்த்து தாமும் உருவாக வேண்டும் என்பது தமிழகத்தில் உருவாகும் ஒவ்வொரு இயக்கம், அரசியல் கட்சிகளின் எண்ணம். ஆனால் அவை புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாக தான் வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. ஆனால், இப்போது அந்த பூனைகளைப்போல கட்சியை நடத்த வேண்டும் என திமுக நிர்வாகிகள் நினைக்கிறார்கள்.

கடந்த நாடாளமன்ற தேர்தலின்போது பாமகவுக்கு சாதகமாக வன்னியர்கள் சப்போட்டாக இருந்தார்கள் என்பதற்காக திமுக வன்னியர்களுக்கு சாதகமாக மாற வேண்டும் அப்போது தான் திமுகவுக்கு அவர்கள் ஓட்டு கிடைக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கட்சியான விடுதலை சிறுத்தைகளை கூட்டணியில் இருந்து ஒதுக்க வேண்டும், தென்மாநிலத்தில் தேவர்களின் ஓட்டு வேண்டுமாயின் கிருஷ்ணசாமியின் புதியதமிழகத்தை கூட்டணியில் இருந்து துரத்த வேண்டும் என சாதி பார்க்க தொடங்கிவிட்டார்கள் சாதி பார்க்கும் திமுக தொண்டர்கள்.

சாதி மட்டுமல்ல மதத்தையும் பார்க்க தொடங்கிவிட்டார்கள்.

துலுக்கன் பிரியாணிக்கு ஓடும் திமுககாரன் அம்மாவசைக்கு வாழ்த்து சொல்வதில்லை என அலங்காய்ப்பார்கள் ஆரிய அடிவருடிகள். இதனை இப்போது திமுகவில் உருவாகும் இந்துமத வெறியர்களும் உலற தொடங்கிவிட்டார்கள். வரலாறு தெரியாத இந்த பிண்டங்களை வைத்துக்கொண்டு தான் 2016 தேர்தலில் ஆட்சியை பிடிக்க போகிறோம் என குதிக்கிறார்கள். அவர்களுக்கு கட்சியின் அடுத்த தலைவராக வரவுள்ள ஸ்டாலினும் ஆதரவு தருகிறார். விநாயகர் சதுர்த்திக்கு தன் அதிகாரபூர்வ இணைய தளத்தில் வாழ்த்து தெரிவிக்கிறார். ( தலைமை பின்பு மறுத்தது வேறு விஷயம் ).

திமுக தலைமை தன் தொண்டர்களுக்கு வரலாறு கற்று தரவில்லை என்பது புலனாகிறது. இந்தியை எதிர்ப்பது எதனால்?, இந்து மத பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்து சொல்வதில்லை, கிருஸ்த்துவ, இஸ்லாமிய பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது எதனால் என்பது திமுக தொண்டர்கள், இணையத்தில் புழங்கும் இளைஞரணியினக்கு கூட தெரியவில்லை.

வரலாறு முக்கியம்


வரலாறு தெரியாத எந்த தொண்டனும் இப்போது அரசியல் பேச முடியாது என்பதே எதார்த்தம். இன்றைய இணைய பயன்பாடு காலத்தில் தப்பும் தவறான வரலாறு இணையத்தில் பரப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை உண்மை என்று நம்பி இன்று திமுகவில் உள்ள இளைஞர்களே அதன்படி நடக்க முயல்கிறார்கள். திமுகவில் வரலாறு அறிந்த இளைய சமுதாயத்தினரின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. கழகத்துக்காக எழுதும் சிலரையும் கரையான்கள் போல் உள்ளிருந்தே எதிர்க்கும் பதவி மோகம் கொண்டவர்கள் அதிகமாக உள்ளார்கள். இந்த நிலை மாறவேண்டும்.

சிந்தாந்த ரீதியில் இயங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளை போல் கொள்கை ரீதியில் இந்தியாவில் ஒரு கட்சி செயல்படுகிறது என்றால் அது திமுகதான். கொள்கைகளை திமுக இழக்கிறது என்றால் கட்சியை இழப்பதாக தான் அர்த்தம்.

சாதிமோகம், இனவெறி, மொழிவெறி, ஆரியஅடிவருடியாக உள்ளவர்கள் அதிகரிக்கிறார்கள் திமுகவில். இது உள்ளிருந்தே அழிக்கும். இன்று இவர்களை ஊக்குவித்தால் நாளை கொள்கை மட்டுமல்ல கட்சியே காணாமல் போகும்.

அதனால் அந்த நிலைமாற கழகம் தான் கட்சியின் கொள்கை பேசுவர்களை, எழுதுபவர்களை ஊக்குவிக்க வேண்டும். இளைய சமுதாயத்தினருக்கு வரலாற்றை அறிந்துக்கொள்ள வைக்க வேண்டும்.

பொய்கள் பட்டங்களை போல் மேலே மேலே பறக்கும் ஆனால் அவை எத்தனை வேகமாக பறக்கிறதோ அத்தனை வேகமாக கிழிந்து போய்விடும். உண்மை என்று அழிவதில்லை. நிலைத்து நிற்கும் என்பதை உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி.

2 கருத்துகள்:

  1. மிசாவில் இந்திராவால் உள்ள போயிட்டு வந்து கொஞ்சமும் சூடு சொரணை இல்லாமா நேரூவின் புதல்வியே வருக நிலையான ஆட்சி தருகனு இந்திரா கால்ல விழுந்த மாதிரி இந்தியால எந்த கட்சிக்காரனும் விழுந்ததில்லன்ங்கிற பெருமையும் திமுகவுக்கு உண்டு

    பதிலளிநீக்கு