மச்சான் இவன் காலேஜ் படிக்கறப்ப கூட படிச்ச நண்பன்டா என தனது நெருங்கிய பள்ளிகால நண்பனிடம் அறிமுகப்படுத்தினால் ஹலோ என கைகொடுத்து அவனும் நண்பனாகிவிடுவான். இதுவே தோழியிடம், இவளும் என் தோழி தான் என அறிமுகப்படுத்திபாருங்கள் இரண்டு தோழிகளுக்கும்மே நாம் எதிரியாகிவிடுவோம்.
அது தோழிகள் மட்டுமல்ல சகோதரிகள் கூட அப்படியே. குடும்பத்தில் மாமியார்
– மருமகள் இடையே ஆரம்பம் முதலே முறுக்கல் வர காரணம், தன் மகன் என்கிற ஆண் மற்றொரு பெண்ணுக்கு கணவன் என்கிற
அந்தஸ்துடன் அவளுக்கு உரிமையாகிறான். நம்மை விட இனி அவனே அவளுக்கு அதிக உரிமையானவன்
என நினைப்பதாலே மாமியார்களுக்கு மருமகளை கண்டால் பிடிப்பதில்லை.
பெண்களை பொறுத்தவரை தனக்கு ஒருவன் நண்பராக இருக்கிறான் என்றால்
அவன் தன்னிடம் தான் அதிக நெருக்கமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறாள். அப்பாவாக
இருந்தாலும் தன் மீதே அதிகம் பாசம் வைக்க வேண்டும் என என்னுகிறாள். தன் சகோதரன் தன் மீது மட்டுமே அதிக பாசம் செலுத்துபவனாக இருக்க வேண்டும்.
உடன் பிறந்த பிற சகோதரிகள் இருந்தாலும் பாசம் குறைவாக தான் வைக்க வேண்டும் என நினைக்கிறாள்.
கணவனாக இருந்தால் தன்னை தவிர அவன் வேறு எந்த பெண்ணையும் பார்க்க கூடாது என நினைக்கிறாள்.
காதலியும் அப்படியே.
இப்படி தனக்கு உரிமையானவன் அவன் அப்பாவாக, சகோதரனாக, தோழனாக, கணவராக,
மகனாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவனை வேறு ஒரு பெண் உரிமை கொண்டாடுவதை பெண்களின் மனம் ஏற்றுக்கொள்வதேயில்லை.
இரு பெண்களுக்கு
பொதுவான ஒருவனை காட்டி இவன், என்னிடம் அதிகம் பாசம் செலுத்துபவன் என ஒரு பெண் சொன்னால் மற்றொரு பெண்ணுக்கு அது பொறாமை புகைச்சலை தான்
உருவாக்கும். இது எல்லா வகை பெண்களிடமும் உண்டு. மேல்தட்டு, கீழ்தட்டு, நடுத்தர வர்க்கம் என்ற பாகுபாடுயெல்லாம் கிடையாது.
இப்படி பெண்கள் இருப்பதற்க்கு காரணம், சுயபாதுகாப்பு என்றும் வைத்துக்கொள்ளலாம்.
அல்லது தனக்கு எப்போதும் ஒரு ஆண் துணை என் மீது அதீத பாசம் வைக்க இருக்கிறது என வெளிப்படுத்தவும் இருக்கலாம்.
ஆண் இனத்தை விட பெண் இனம் தான், தன் மீது பாசம் காட்ட, அக்கறை செலுத்த,
அன்பு காட்ட ஒரு ஆண் துணை வேண்டும் என என்னுகிறது, ஏங்குகிறது. அதை என்றும்மே ஆண் இனம்
புரிந்துக்கொள்வதில்லை என்பதே எதார்த்தம்.
ஆண் இனம், தாய், சகோதரிகள், தோழிகள், மனைவி, மகள் என தாண்டி சென்றுக்கொண்டே
இருக்கிறான். பெண்களுக்கு அந்த உறவு
முறைகள் இருந்தாலும் ஏதோ ஒரு இடத்தில் அது தடைப்பட்டு நின்றுவிடுகிறது. அதனால்
தான் பெண்கள் எப்போதும் நிரந்தரமாக ஒரு ஆணின் பாதுகாப்பு, பாசம், அன்பு தேவையாக
கருதுகிறாள். அதை வேறு ஒருவர் பங்கீடு செய்யும் போது அது வெறுப்பாக மாறுகிறது.
இதை ஆண் இனம்
உணர்ந்துக்கொள்வதேயில்லை. உன்னை விட எங்கம்மா நல்லா சமைப்பாங்க என மனைவியிடம்
பேசும் போது ஒரு வித வெறுப்புக்கு ஆளாகிறார்.
நீ தான் கோயிலுக்கு
வான்னு கூப்பிட்டதுக்கு வர்றமாட்டேன்னு சொல்லிட்ட. அவ என்னோட சினிமாவுக்கு வந்தா
என ஒரு தோழியை மட்டம் தட்டி மற்றொரு தோழிக்கு முக்கியத்துவம் தரும் போது
வெறுப்பாகிறாள்.
நான் உன் பேர்
சொல்லி கூப்பிமாட்டன் மகளே. ஏன்னா உனக்கு வச்சியிருக்கற பேர் என்னோட பாட்டி பேர்
என சொல்லும் போது அப்பாவுக்கு பாட்டி மீது தான் பாசம் அதிகம் என எண்ணும் போது இந்த
வாக்கியங்களை பயன்படுத்தும் ஆண்கள் சம்மந்தப்பட்ட பெண்களின் வெறுப்புக்கு
ஆளாகிறார்கள்.
இதை ஆண்கள் குறைத்துக்கொள்ள
வேண்டும். அல்லது ஒரு பெண்ணிடம் மற்றொரு பெண் பற்றி பெருமையாக பேசுவதை தவிர்க்க
வேண்டும். உலகத்தில் நீ மட்டும்மே எனக்கு முக்கியம் என்பது போல் நடிக்கவாவுது
செய்யுங்கள். ( இப்பவே நடிச்சிக்கிட்டு
தான்யா இருக்கோம் எனச்சொல்பவர்கள் கூடுதலாக நடியுங்கள் ) உங்கள்
வாழ்க்கை நன்றாக இருக்கும்.
நன்றாக அலசி உள்ளீர்கள்
பதிலளிநீக்குதொடருங்கள்