ஞாயிறு, செப்டம்பர் 28, 2014

இப்போதும் ஜெவை தூக்கி சுமக்கிறார்கள்.வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கில். 4 ஆண்டு சிறை, 100 கோடி அபராதம் என பெங்களுரூ தனி நீதிமன்ற நீதிபதி மைக்கல் டீ குன்ஹா தீர்ப்பு தந்து ஜெ, சசிகலா, பாஸ்கரன், இளவரசியை பெங்களுரூ சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

தீர்ப்புக்கு பின்பும் ஜெவை தூக்கி சுமக்க நினைப்பவர்களை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. ஊழலை ஓழிக்க வேண்டும் என கூப்பாடு போடுகிறார்கள். ஆனால் ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஜெவுக்கு பரிதாபம் காட்டுகிறார்கள். அப்படிப்பட்டவர்களின் நோக்கம் ஜெ புனிதமானவர் என நிர்மாணிக்க முயல்வதுதான்.

தீர்ப்புக்கு பின் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடுகிறார்கள். பேருந்துகள் எரிப்பு, கடைகள் அடித்து நொருக்குதல், தீ வைத்து எரித்தல், எதிர் கட்சிகளில் அலுவலகங்களை துவம்சம் செய்தல், கேபிள் டிவி கட், மின்சாரம் கட், செய்தி சேனல்கள் கட் என அரசின் அதிகார கரங்கள் இப்போதும் நீள்கின்றன.

எங்கள் அம்மா புனிதமானவர் அவருக்கு சிறை தண்டனை கிடைக்க கருணாநிதி தான் காரணம் என அதிமுக குண்டர்கள் கருணாநிதி வீட்டை தாக்க செல்கிறார்கள். இப்படி ஏதாவது நடக்கும் என தெரிந்தே காவல்துறையை நம்பாமல் கட்சியினரை பாதுகாப்புக்கு நிறுத்துகிறார்கள். ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி வீட்டின் மீது காவல்துறையின் ஆசியோடு கற்களை வீசுகிறார்கள். அப்படி வீசிவிட்டு சென்றவர்களை சலாம் போட்டு அனுப்பிய காவல்துறை ராயப்பேட்டை காவல்நிலையத்தில், திமுகவினர் அதிமுகவினரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்துள்ளது. கருணாநிதி, ஸ்டாலின் மீது வழக்கு பதிவு என ஜெயா டிவி கூவுகிறது. அப்பட்டமான அதிகார அத்துமீறல், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என பிரச்சனைகள் தலைவிரித்தாடுவது.

கவர்னர் அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்துகிறார் இதுப்பற்றி ஒரு சிறு எதிர்ப்பு கூட காட்ட முடியாதவர்கள் தங்களை நடுநிலைவாதிகள் என பிதற்றிக்கொள்பவர்கள் 2ஜீக்கு எவ்வளவு கால தண்டனை என இணையத்தில் கேட்க தொடங்கிவிட்டார்கள்.

தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெ, சசி அன்கோ பற்றி, அதிகார துஷ்பிரயோகம், மக்கள் துன்பம் பற்றி விமர்சிக்க தயங்கும் இவர்களுக்கு 2ஜீ பற்றி பேச என்ன தகுதியிருக்கிறது. 2ஜீ பற்றி மட்டுமல்ல தாசில்தார் அலுவலகத்தில் கிளர்க் வாங்கும் பத்து ரூபாய் லஞ்சத்தை பற்றி பொங்ககூட தார்மீக உரிமையில்லை.

2ஜீ பற்றி கேட்பதால் ஒரு விளக்கம், முதல்வர் பதவியில் இருந்தபோது ஜெ மீது 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. வலுவான ஆதாரங்கள் இருந்ததால் தான் 18 ஆண்டு காலமாக ஜெ மற்றும் சசிகலா குரூப் இந்த வழக்கை இழுத்தடித்தது. தீர்ப்பு தேதிக்கு முன்நாள் வரை இழுத்தடிக்க உச்சநீதிமன்றத்தில் பெட்டிஷன் போட்டது. 2ஜீ வழக்கு சொத்து சேர்த்த வழக்கல்ல. அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்திய வழக்கு. அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்திவிட்டு லாபம் பார்த்தார்கள் என்பது குற்றச்சாட்டு. ஊதி பெரிதாக்கப்பட்ட விவாகரத்தை உச்சநீதிமன்ற வழிகாட்டலில் சி.பி.ஐ விசாரணை செய்தது. சி.பி.ஐ தனி நீதிமன்றத்தில் 1.76 கோடியெல்லாம் இழப்பீடு அல்ல. 22 ஆயிரம் கோடி அளவுக்கு தான் இழப்பீடு இதுவும் உத்தேச மதிப்பு தான். இழப்பீடு ஏற்படுத்தி லாபம் சம்பாதித்ததாக எந்த ஆதரமும்யில்லை. சொத்து, பண பறிமுதல் கிடையாது. ஆனால், 2ஜீ அலைவரிசை கிடைக்க அத்துறையின் அமைச்சராக இருந்த திமுகவை சேர்ந்த ஆ.ராசா ஒரு தனியார் நிறுவனத்துக்கு உதவியதற்காக 200 கோடி கலைஞர் டிவிக்கு தரப்பட்டுள்ளது என சி.பி.ஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ரிசர்வ் பேங்க் நடைமுறைப்படி கடன் பெற்றோம். அதை திருப்பி தந்துவிட்டோம் என்கிறது கனிமொழி தரப்பு. வழக்கு விசாரணை நடக்கிறது.

இதில் இன்னொன்று தெரியும்மா ?. வழக்கை சீக்கிரம் முடியுங்கள் என ராசா கோரிக்கை விடுத்து வழக்கை சந்தித்து வருகிறார். ஜெவை போல ஓடி ஒளியவில்லை. 2ஜீ வழக்கு சில மாதங்களில் தீர்ப்பு வரவுள்ளது.

இப்படியுள்ள நிலையில் 1.76 லட்சம் கோடி ஊழலில் எத்தனை ஆண்டுகள் சிறை, எவ்வளவு அபராதம் என கேட்கிறார்கள். ஜெ அன் கோ மீதான தண்டனை பற்றியும், அரசின் அலட்சிய நிலை பற்றியும், ஆளும் அதிமுகவினரால் மக்கள் படும் துயரம் பற்றியும் பேச துணிவில்லாத முதுகெலும்பு இல்லாதவர்கள் கருணாநிதி குடும்பத்தை விமர்சிக்கிறார்கள்.

ஊழல் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க போகிறார்கள் ஜெ, சசிகலா அன்கோ வை போல. அது யாராக இருந்தாலும். ஆனால் ஒரு தரப்பின் ஊழலை பற்றி பேச துணிவிருப்பவர்களுக்கு, தண்டனை கிடைத்த ஜெ, சசிகலா அன் கோ பற்றி பேச ஏன் தயாராகயில்லை.

யார் தான் தப்பு செய்யல. அவுங்க யோக்கியம்மா, இவுங்க யோக்கியம்மா என ஊழலை நியாயப்படுத்தி பேச தொடங்கிவிடுகிறீர்கள். நாங்கள் ஊழலை ஆதரிக்கிறோம் என ஒப்புக்கொண்டால் இதுப்பற்றி உங்களிடம் கேட்க போவதேயில்லை. ஊழலை எதிர்க்கிறேன் என வேடம் போடுவதால் தான் இந்த கேள்விகள்.

3 கருத்துகள்:

 1. சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
  http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
  படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

  பதிலளிநீக்கு
 2. மிக சரியான பதிவு.
  ஊழல் பண்ணி கோடிக்கணக்கானசொத்து சேர்க்கதிற்காக ஜெயலலிதா தண்டிக்க பட இதுக்குப் பின்னால் பெரிய அரசியல் சூழ்ச்சி இருக்கிறது என்கிறார்கள்,கருணாநிதிக்கு எப்போ தண்டணை என்கிறார்கள் இவர்கள் ஊழலை ஓழிக்க வேண்டும் என விரும்புவர்களா!

  பதிலளிநீக்கு
 3. இதை தினமணியில் மதி என்பவர் கார்ட்டூன் போட்டு அவர்கள் மனதுக்கு ஆறுதல் தேடி உள்ளார்.
  என் சங்கரச்சாரி இது பற்றி இன்னும் வாய் திறக்கவில்லை.

  பதிலளிநீக்கு