இந்த பதிவு எழுதிய நேரத்தில், தை பொங்கல் பொங்கிக்கொண்டு
இருந்தது. செய்தித்தாள்களில் பொங்கல் பற்றிய சிறப்பு கட்டுரைகள்,
தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள், திரையரங்களில் புதிய திரைப்படங்கள் என
களைக்கட்டியுள்ளது. இந்த ஆண்டு 5 நாள் பொங்கல் விடுமுறைக்காக விடுமுறை என்பதால்
சொந்தவூருக்கு தன் பிறந்த மண்ணை விட்டு பிழைப்புக்காக இடம் பெயர்ந்து வாழ்பவர்கள்
பிறந்த மண்ணை நோக்கி சென்றுக்கொண்டு இருந்தார்கள்.
விவசாயிகளின் பண்டிகை பொங்கல் என்கிறோம். நிச்சயமாக இது
விவசாயிகளின் பண்டிகை மட்டுமல்ல வயிற்றுக்கு சாப்பிடும் ஜீவராசிகளின் பண்டிகை.
எந்த ஜீவனும் சாப்பிடாமல் இருப்பதில்லை. உயிர் வாழ உண்டு தான் ஆக வேண்டும். ஆக
இந்த பண்டிகை அத்தனை ஜீவராசிகளின் பண்டிகை தான்.
விவசாயிகளின் பண்டிகை என குறிப்பிடுவதன் காரணம், நாம் உண்ணும்
உணவை உற்பத்தி செய்து தருபவன் உழவன். அதனால் அவன் பண்டிகை என்கிறோம். அந்த உழவன்
இந்த மண்ணில் வாழும் ஜீவராசிகள் பசியோடு இருக்ககூடாது என்பதற்காக உணவு பொருட்களை
உற்பத்தி செய்கிறான். அவன் அதில் தனக்கு உதவி செய்யும் இயற்கையான காற்று, சூரியன்,
மாடு போன்றவற்றை வணங்க பொங்கல் கொண்டாட்டமாக கொண்டாடுகிறான். மற்றவர்களை விட
அவனுக்கு தான் சிறப்பு. இந்த உலகத்தில் அவன் தான் போற்றக்கூடியவன்.
ஆனால் நாம் போற்றுகிறோம்மா ?. என கேட்டால் நிச்சயமாக இல்லை..........
இல்லை....... இல்லவேயில்லை.
தீபாவளிக்கு கடைகளில் விற்கப்படும் பட்டாசுகளை விலை
கேட்காமல் வாங்கி தருகிறீர்கள்.............
குழந்தைகளுக்கு வேட்டி கட்ட ஆசைப்பட்டு 200 ரூபா மதிப்பு
கூட பெறமுடியாத குழந்தைகளுக்கான வேட்டியை 5 ஆயிரம் வரை விலை வைத்து விற்கிறார்கள்
ஏன் இவ்வளவு விலை என கேட்காமல் வாங்கி தருகிறீர்கள்........
மால்களுக்கு செல்லும் அழகு பதுமைகள் அங்கு விற்கும் மேக்கப்
சாதனங்களை சொன்ன விலைக்கு வாங்கி பூசிக்கொள்கிறீர்கள்...........
கே.எப்.சி சிக்கன் ஷாப்கள், பீட்சா கடைகள், கோக், பெப்சி
குளிர்பான கடைகளில் சொன்ன விலைக்கு பேரம் பேசாமல் வாங்கும் கோமகன்கள்...........
பத்து பைசாவுக்கு புரியோஜனம்மில்லாத திரைப்படங்களுக்கு
ஐநூறு, ஆயிரம் என தந்து டிக்கட் வாங்கி படம் பார்க்கும் பரதேசிகள்
விவசாயி பொங்கலுக்காக விற்கும் கரும்பு, மஞ்சல் கொம்பு,
பழங்களுக்கு போன்றவற்றுக்கு இன்னா இவ்வளவு
விலை என பேரம் பேசினார்கள் இந்த நகரவாசிகள்.
அவன் என்ன அம்பானி போல் வாழவா பொருட்களை விற்கிறான். தன்
வயித்து பசியை போக்கவே தான் உற்பத்தி செய்த பொருட்களை அவன் விற்கிறான். அவன் அவன்
உற்பத்தி செய்த பொருளுக்கு அந்த முதலாளியே விலை வைக்கும் போது உழவன் உற்பத்தி
செய்த பொருள் விற்பனைக்கு வரும்போது மட்டும் எவன் எவனோ விலை வைக்கிறான்.
விவசாயி உழவை நிறுத்திவிட்டால் பேரம் பேசும் நீங்கள் உங்கள்
வயிற்று பசிக்கு என்ன செய்வீர்கள் என கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். இன்னா இவ்வளவு
ரேட் சொல்றிங்க என பேரம் பேசி உழவன் மனசை காயப்படுத்தாதீர்கள். அவன் கொள்ளை விலை
வைக்கவில்லை என புரிந்துக்கொள்ளுங்கள்.
ஆயிரங்களில் அசால்டாக செலவு செய்யும் நீங்கள் உங்களுக்கு
சோறு போடும் விவசாயத்தை பெருமைப்படுத்த பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறிர்கள்.
அதற்கு செலவு செய்ய பேரம் பேசுபவர்கள் எதற்காக பொங்கல் கொண்டாட வேண்டும். நீங்கள்
கொண்டாட வேண்டாம். அதுவே உழவனுக்கு நீங்கள் செய்யும் மரியாதையாக இருக்கும்.
உணர வேண்டிய கருத்துக்கள்...
பதிலளிநீக்குஇனிய தமிழர் தின வாழ்த்துக்கள்...
யோசிக்க வேண்டிய பதிவு. நாம் எல்லோருமே திருந்த வேண்டியது அவசியம்.
பதிலளிநீக்கு