இப்போது, இணையத்தில் பரபரப்பாக எழுதப்படும்
விவகாரமாக இருப்பது, பணம் கொடுத்து எழுத வைப்பது என்கிற விவகாரம் தான். இந்தியன்
எக்ஸ்பிரஸ் என்கிற ஆங்கில நாளேட்டில் முதலில் வெளியாகி பின்னர் அதை காப்பி பேஸ்ட்
செய்து தமிழ் செய்தித்தாள்கள் சிலவற்றில் வந்துள்ள அந்த செய்தியில் அந்த தனியார்
நிறுவனம் ஒரு கட்டுரை தருமாம். அந்த கட்டுரையை ஒருவர் காப்பி செய்து தனது
பக்கத்தில் வெளியிட்டால் 200 ரூபாய் பணம் தருவோம், இதை திமுகவுக்காக செய்வதாக அந்த
நிறுவன பிரதிநிதி பதிவரிடம் சொன்னதாக சொல்கிறது செய்தி. ஒரு நாளைக்கு 3 கட்டுரைகள்
தருவார்களாம். எத்தனை பேர் பதிவிடுகிறார்களோ அத்தனை பேருக்கும் பணமாம். இதை கேட்டு
சிரிப்பாய் இருக்கிறது.
இன்று ஒரு தகவல் போட்டால் அது பிடித்திருந்தால்
ஷேரிங் ஆகிறது. இப்படி ஒரு கட்டுரை சில நேரங்களில் 100, 200 ஷேரிங் ஆகிறது.
அப்படியாயின் எவ்வளவு தருவார்கள். ஒரே கட்டுரையை 100 பிரபல பதிவர்கள் ஷேரிங்
செய்தால் படிப்பவன் காப்பி பேஸ்ட் என தெரிந்து சிரிக்கமாட்டானா ?. அதோடு, ஒரு
நிறுவனம் மூன்று விதமாக தினமும் 3 கட்டுரை?. அந்த மூன்று கட்டுரைகளையும் அரசியல்
சாராத பிரபல பதிவர்கள் பதிவிட்டால், அதை மற்ற பிரபல பதிவர்கள் காப்பி பேஸ்ட்
செய்தால் அது தெரிந்துவிடாதா ?. தொடர்ந்து பதிவிட்டால் அவர்கள் மீது இரண்டாவது
நாளே கட்சி முத்திரை குத்தப்படும் பின் எப்படி அவன் பதிவை ஏற்றுக்கொள்வார்கள் ?.
அதோடு, நிறுவனங்கள் கட்டுரை எழுதும் லட்சணம் தெரியாதா?.
திமுகவில் பேச, எழுத ஆட்களாயில்லை. திமுகவை
விடுங்கள் திமுகவை ஆதரித்து எழுதுபவர்களின் கட்டுரைகளை தொகுத்து 100 பக்கம் கொண்ட
புத்தகமாக தினமும் ஒரு புத்தகம் என வெளியிட தொடங்கினால் தேர்தல் முடிந்து ரிசல்ட்
வரும் வரை வெளியிடலாம். அத்தனை கட்டுரைகள் உள்ளன. அவையெல்லாம்மே ஆதாரத்தோடு
எழுதப்பட்டவை. இந்த லட்சணத்தில் அந்த கட்சி ஒரு நிறுவனத்திடம் பணம் தந்து
பதிவர்களிடம் கட்டுரையை தந்து பிரச்சுரிக்க சொல்கிறதாம்.
அந்த தனியார் நிறுவனம் பேசியதாக ஒரு ஆடியோவை
முதலில் வெளியிட்டார்கள், பின்னர் அதே நிறுவனம் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டதாக
இப்போது செய்தி எழுதுகிறது. இன்னும் எத்தனை புளுகு வேண்டுமானாலும் சொல்லட்டும்.
எட்டு நாளைக்கு கூட அந்த புளுகு தாங்காது.
அந்த செய்தியில் குறிப்பிடுவது போல அப்படி ஒரு
விவகாரத்தை திமுக தலைமை கையில் எடுப்பதற்கான அவசியம் அந்த கட்சிக்கு
இன்றுவரையில்லை. அதற்கான காரணங்களை கீழே பார்க்கலாம். அதற்கு முன் இந்த கட்டுரை
அதிமுகவை சார்ந்தவர்களுக்கோ, பிற கட்சியை சார்ந்தவர்களுக்கோ, பொதுமக்களுக்கானதல்ல.
நடுநிலை வேடம் தரித்த அதிமுகவினருக்காக. யார் நடுநிலை அதிமுகவினர் என்கிறிர்களா?.
எழுத்தாளர் மாலன், ஞானி, கோயல், பத்ரி, வெங்கட்ராமன் போன்று தமிழகம் முழுவதும் மனதுக்குள்
ஜெ விசுவாசிகளாகவும், வெளியே ஜெவையும், கருணாநிதியையும் எதிர்ப்பது போல் நடுநிலை
வேடம் போடுபவர்களுக்காக எழுதப்படும் கட்டுரை.
இதை படிக்கும்போதே எவ்வளவு வாங்கினாய் என
கேட்கலாம், இனி இணையத்தில் யாரைப்பற்றி எழுதினாலும் காசுக்காக எழுதியிருப்பான் என
நீங்கள் பேசினால் அதுதான் இந்த விவகாரத்தை கிளப்பி விட்டவர்களின் வெற்றி. சரி
விவகாரத்துக்கு வருவோம்.
2008 காலக்கட்டம், முகநூல் பிரபலமாகாத காலத்தில்
ஆர்குட், ஹாய்5 போன்ற சில சமூக தளங்கள் இருந்தபோதிலிருந்தே இணையத்தின்
வளர்ச்சியை நன்கு பயன்படுத்திக்கொண்டவர்கள் திமுகவின் ஆதரவாளர்கள் மற்றும் மதிமுக
ஆதரவாளர்கள். கொள்கை ரீதியானவர்கள் திமுக பற்றி
எழுதிக்கொண்டு இருந்தார்கள். மதிமுகவினருக்கு வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழரும்,
அதன் ஆதரவாளர்கள் ஆதரவு தந்து எழுதிக்கொண்டு இருந்தார்கள்.
காலப்போக்கில் பிளாக், வோல்ட்பிரஸ், முகநூல்
வளர்ச்சி பெற்ற பின், பலரும் அதில் இணைந்தார்கள். 2009ல் ஈழப்போராட்டமும், 2ஜி
விவகாரம் உச்சத்தில் இருந்தபோது, 2ஜியில் கொள்ளையடித்துவிட்டார்கள், அதனால்
ஈழவிவகாரத்தில் திமுக தலையிடவில்லை என கோயாபல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் உலகத்தை
நம்ப வைத்தார்கள். அப்போது, திமுகவில் உறுப்பினராகயில்லாத கொள்கை ரீதியிலான
ஆதரவாளர்கள், ஈழப்பிரச்சனையில் திமுக எந்தளவுக்கு இறங்கி உதவ முடியும் என்பதையும்,
அதேபோல் 2ஜி விவகாரத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி கொள்ளையடிக்க முடியாது,
இழப்பு ஏற்படுத்தவும் முடியாது என்பதை ஆதாரபூர்வமாக விளக்கினார்கள். 2009ல் திமுக
ஆதரவாளர்கள் எழுதி விளக்கியதை தான், பிற்காலத்தில் இந்த பிரச்சனையை பற்ற வைத்த
ட்ராய் தலைவரும், சிபிஐயும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு அவ்வளவு நஷ்டம் கிடையாது
எனச்சொன்னார்கள். இப்படி திமுக மீது இந்த நிமிடம் வரை வாரி
இறைக்கப்படும் சேற்றை, வீசியவர்களே துடைப்பவர்களாக மாற்றுவது
திமுகவுக்காக இணையத்தில் செயல்படும் அந்த கட்சியின் கட்சி உறுப்பினர் அல்லாத
ஆதரவாளர்கள் தான்.
தமிழகத்தில் தற்போது ஆளும்கட்சியாக
உள்ள ஜெயலலிதாவின் ஊழல்களை, தவறுகளை, நிர்வாக திறமையில்லாதவற்றை எழுத
பத்திரிக்கைகள், செய்தியாக ஒளிப்பரப்ப தொலைகட்சிகள் மறுக்கின்றபோதிலும்
படித்தவர்கள் மத்தியில் கொண்டும் போய் சேர்ப்பவர்களாக இருப்பவர்கள் திமுகவின் இந்த
இணைய ஆதரவாளர்கள் தான். இதுதான் ஜெவை காக்கும் கரங்களுக்கு அதிர்ச்சியாக
இருக்கிறது. அதிகாரம் இருந்தால், சாதியுணர்வு இருந்தால் எதை வேண்டுமானாலும் தடுக்கலாம்
என நினைத்தார்கள் அதன்படியே ஜெவுக்கு ஒரு பிம்பத்தை உருவாக்கி அவரை காக்கிறவர்கள் பதறுகிறார்கள். அது பொய்யான கட்டப்பட்ட பிம்பம் என்பதை இணையத்தில்
இயங்குபவர்கள் சுட்டிக்காட்டும் போது அவர்களால் அதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
கடந்த 2014 பாராளமன்ற தேர்தல் முடிவுக்கு பின், நாடாளமன்ற தேர்தலில் தமிழகத்தில் 50 லட்சம் போலி வாக்காளர்கள் நுழைத்தது, அந்த 50 லட்சம் வாக்குகளை அதிமுகவுக்கு ஓட்டாக மாற்ற தேர்தல் ஆணையம் செய்த சிறப்பு ஏற்பாடுகள் பற்றி தேர்தல் முடிந்தபின், திமுகவுக்காக செயல்படும் கட்சி சாராத வழக்கறிஞர் ஒருவர், தேர்தல் ஆணைய ஆவணங்களின் அடிப்படையில் ஆதாரத்துடன் புட்டு புட்டு வைத்தார். அதை தேர்தல் ஆணையத்துக்கும் புகாராக அனுப்பினார். அது தாமதமாக தான் திமுக தலைவரின் பார்வைக்கு சென்று சில மாதங்களுக்கு முன்பு மாவட்டந்தோறும் போலியாக உள்ள வாக்காளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு திமுகவினர் ஆணையத்திடம் புகார் சொல்ல அதன்பின்பே ஆணையம் அவர்களை நீக்கியது. அப்படி அவர்கள் இதுவரை நீக்கியுள்ளது மட்டும் 20 லட்சம் சொச்சம். இன்னமும் இருப்பது 30 லட்சம். இதுவரை இதுப்பற்றி கேள்வி கேட்க நடுநிலை வேடம் போடும் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், மாற்று அணி எனச்சொல்லும் கட்சிகள் உட்பட யாருக்கும் துப்பில்லை. அதை வெட்ட வெளிச்சமாக்கியது திமுக ஆதரவாளர் என இணையத்தின் இயங்கும் செயல்பாட்டாளர் தான்.
கடந்த வாரத்தில் அதிமுக வெற்றி என்கிற
கருத்துகணிப்பு மோசடியை துகிலுறுத்தியது இணையத்தில் இயங்குபவர்கள் தான். கடந்த
காலங்களில் இந்தியா டுடே, டைம்ஸ் நவ் தொலைக்காட்சி உட்பட பல பிரபல நிறுவனங்கள் சி வேட்டர் என்ற கருத்து கணிப்பு
நிறுவனத்துடன் இணைந்து பல கருத்து கணிப்புகளை நடத்தியது. கடந்த பாராளமன்ற
தேர்தலில் ஒரு இந்தி தொலைக்காட்சி, ஒரு அரசியல் கட்சி பிரதிநிதிபோல் கருத்து
கணிப்பு நடத்தும் 11 நிறுவனங்களிடம் பேசியபோது, பணம் தந்தால் இரண்டு விதமான
கருத்து கணிப்பு தருவோம். ஒன்று ஜெயிக்கும் என இருக்கும், மற்றொன்றில் தோல்வி என
இருக்கும் என்றது. இந்த மோசடியை வீடியோ பதிவோடு வெளியிட்டது அந்த நிறுவனம். இதனால்
பல பிரபல செய்தி நிறுவனங்களுக்கு கருத்து கணிப்பு எடுத்து தந்த அந்த நிறுவனத்தோடு
இனி தொடர்பில்லை என இந்தியா டுடே, டைம்ஸ் நவ் உட்பட பல செய்தி நிறுவனங்கள்
அறிவித்தன. இதோ இப்போது, 2016 தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என அதே சி வோட்டர்
என்ற நிறுவனத்தின் கருத்து கணிப்பை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதுப்பற்றி
இங்கு பேச எந்த நடுநிலை வேடதாரிகளுக்கும் துணிவில்லை. இதை அம்பலப்படுத்தியது
இணையத்தில் இயங்கும் செயல்பாட்டாளர்கள் தான்.
இப்படி அதிமுக தலைவி ஜெ வின் மோசடியை முகமுடியை
கிழிப்பதால் தான் கருத்தை கருத்தால் எதிர்க்கொள்ள முடியாமல் குறுக்கு வழி தேடுகிறார்கள்.
குறுக்கு வழி தேடுபவன் பிராமணன் என்பது காலம் காலமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. பொய்யை
உண்மை போன்று கூறி மக்களை நம்ப வைக்க வேண்டும் என்கிற வித்தையை கற்று வைத்திருக்கும்
அவர்கள் தான் இப்போது ஜெவை காக்க பணம் வாங்கிக்கொண்டு ஜெயலலிதா
பற்றி தவறாக எழுதுகிறார்கள் என்கிற விஷத்தை தூவுகிறார்கள். தவறாக
எழுதினால், உண்மை இதுதான் என ஆதாரபூர்வமாக எழுத வேண்டாம்மா. எழுதமாட்டார்கள். ஏன்
எனில் அவர்களால் எழுத முடியாத அளவுக்கு சொல்லப்படுவதெல்லாம் உண்மை. அதனால் தான் எழுதுபவர்களை
தடுக்க பணம் வாங்கிக்கொண்டு எழுதுகிறார்கள் என புது யுக்தியை
கையாள்கிறார்கள்.
குரு படத்தில் இயக்குநர் மணிரத்தினம் ஒரு வசனம்
வைத்திருப்பார், ஏஜென்ட் என்கிற வார்த்தை நாட்ல கெட்ட வார்த்தையா மாறனும், என்ன
வேண்ணா செய்ங்க, எவ்வளவு வேணும்ன்னாலும் செலவு செய்ங்க என்பார். அதேபோல் தான்
இன்று, இணையத்தில் எழுதுபவர்கள் பணம் வாங்கிக்கொண்டு எழுதுகிறார்கள் என்பது.
திமுகவுக்காக இன்று அந்த கட்சியை சேர்ந்த பலர் இணையத்தில்
எழுதுகிறார்கள். அவர்கள் மீது இவர்கள் குற்றம்சாட்டவில்லை. ஏன் எனில்
திமுககாரர்கள் எழுதுவது பற்றி கவலையில்ல, கட்சிக்காரர்கள்
அப்படித்தான் செயல்படுவர்கள் அதனால் மக்களிடத்தில் மாற்றம் ஏற்படாது.
ஆனால், கட்சியில் எந்த பிரிதிபலனும் இல்லாமல் இன்றளவும் தர்க்க
ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் எழுத திமுக ஆதரவார்கள் என்கிற வெளிப்படை
பிம்பத்தில் நூற்றுக்கணக்கில் உள்ளனர். அவர்களின் பெயரை என்னால் நிச்சயம்
பட்டியலிட முடியும். அவர்கள் மீது தான் இவர்கள் தாக்குதல் தொடுக்க
தொடங்கியுள்ளார்கள். ஏன் எனில் அவர்களின் கருத்துகள் படித்தவர்கள் மத்தியில்
பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதால் தான். பணம் தந்து எழுத
வைக்கிறார்கள் என்கிற தாக்குதல் இதனால் அவர்கள் பயந்து ஓடிவிடுவார்கள் என்கிற நப்பாசை.
ஒன்றை தெரிந்துக்கொள்ளுங்கள்...........
திமுக பணம் தரும் அளவுக்கு
வளர்ந்திருக்கலாம்................ பணம் வாங்கிக்கொண்டு எழுதும் அளவுக்கு
தன்மானமும், கொள்கையும் இல்லாதவர்கள்யில்லை அதை ஆதரிப்பவர்கள் என்பதை
புரிந்துக்கொள்ளுங்கள்.
மைந்தர்கள் சிலர் காசு வாங்கி கொண்டு தொடர்ந்து ஜெ செய்து வந்துள்ள எந்த அநீதி பற்றியும் ஒரு வார்த்தை எழுதுவதில்லை. பார்பனியம் அந்த அளவிற்கு விசமாய் வேலை செய்கிறது. ஜெவை விமர்சிக்காமல் இவர் நேர்மை பற்றி எழுதுவாராம். இதற்கு சொம்பு தூக்க சில அற்பர்கள். சென்ற ஐந்து வருடத்தில் ஜெ ஆட்சி நடத்திய லட்சணத்தை எழுத வக்கற்றவர்கள். எல்லாம் பணமும் பூணூல் பாசமும் செய்யும் வேலை. திமுக பிடிக்கவில்லை என்றால் நல்லகண்ணு வரட்டுமே.. எதற்காக எந்த திறமையும் இல்லாமல் கொடநாட்டில் தூங்கி மக்கள் வாழ்வை பாழ் செய்து அவல அரசு நடத்தும் ஜெ.
பதிலளிநீக்குதிமுக பிடிக்கவில்லை என்றால் நல்லகண்ணு வரட்டுமே...
நீக்குசரியான முடிவு! கருணாநிதிக்கு, ஜெயலலிதாவிற்கு பதிலா அவருக்கும் ஒரு சந்தர்பம் கொடுப்பமே.
சில குடுமி மைந்தர்கள் அதிமுக வுக்கு அடிக்கும் ஜல்ரா தாங்க முடியவில்லை.முக வை விமசரிக்கும் அளவுக்கு ஏன் அம்மு வை விமசரிக்கவில்லை என்றால் கேட்டால் இது என் தளம் என் இஷ்டம் என்று சொல்லுவார்.இதில் நடுநிலை வேசம் வேர எல்லாம் குடுமி இன பாசம் வேரஎன்ன! அன்புடன் செய்யது துபை
பதிலளிநீக்குநல்ல பின்னூட்டம் செய்யது!
நீக்குநல்ல பதிவு!
பதிலளிநீக்குஇது மாதிரி கஷ்டப்பட்டு உண்மையை ஆராய்ச்சி செய்து எழுதும் பதிவுகள் எல்லோரோரையும் சென்று அடைய வேண்டும். சிலர் மாதிரி நீங்களும் fake-Id வைத்து பின்னூட்டம் போட வேண்டியது தானே!
உங்க ஆட்களுக்கு உங்களுக்கு பின்னூட்டம் போடவே மாட்டார்கள்; அவன் தான் சூத்திரன்! பயம்! எங்க அவர்களுடைய அவா நண்பர்கள் கோவித்து கொள்வார்களோ என்று! என்ன சொல்வாளோ என்று !
தமிழ்மணம் +1