புதன், ஏப்ரல் 06, 2016

சாதி வெறி பிடித்த வை.கோ.



சாதி வெறியாளராக பலமுறை அம்மணமாக தன்னை காட்டிக்கொண்ட வை.கோவுக்கு இப்போது முட்டுகொடுப்பவர்கள் சாதி மறுப்பாளர்கள் என தங்களை பிரகடனப்படுத்திக்கொண்ட திருமாவளவன், இடதுசாரி தலைவர்கள் மேடையில் அமர்ந்திருந்தார்கள். அதை பார்த்தபடியே.

வை.கோ திமுகவில் இருந்தபோதிலிருந்தே அவரது மனதின் அடி ஆழத்தில், சாதி வெறி என்பது ஊறிப்போய் இருந்தது. சாதி வெறி மட்டும்மல்ல, மதவெறியும் அவர் மனதில் உண்டு. திராவிட இயக்கத்தில் வளர்ந்ததால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தன்னை சாதி மறுப்பாளனாக காட்டிக்கொண்டார். தனி கட்சி கண்டபின்பும், தன்னை சாதி மறுப்பாளனாக காட்டிக்கொண்ட வை.கோவால் அதை நீண்ட நாட்களுக்கு தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. அவர் வெகு சுலபத்தில் உணர்ச்சி வசப்படுபவர் மட்டும்மல்ல. வெகு சீக்கிரம்மே தான் சாதி வெறியை காட்டுபவரும் கூட.

இப்போது வை.கோ உணர்ச்சி கொந்தளிப்பில் உள்ளார். திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்க அதிமுக போட்டு தந்த பாதையில் தனியாக ஒரு அணி அமைத்து பயணிக்கும் வை.கோ வாங்கிய காசுக்கு மேல் கூவ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தனது பேச்சின் மூலம்மே மக்கள் மத்தியில் தான் அம்பலப்பட்டு போனதும், அதை மறைக்க என்ன என்னவோ பேசுகிறார்.

தேமுதிகவில் இருந்து பலர் மாற்று கட்சிக்கு போவது என்பது அவர்களது உட்கட்சி பிரச்சனை. தேமுதிக சந்திரகுமார் அணி, அவரது கட்சி தலைவரிடம் நியாயம் கேட்கிறது. அதற்கு பதில் சொல்ல வேண்டியது விஜயகாந்தின் கடமை. ஆனால் அவர் பதில் சொல்லாமல் கட்சியை விட்டு நீக்குகிறார். இதில் பிற கட்சிகள் கருத்து தெரிவிக்கும் போது நாசுக்காக கூற வேண்டும். ஏன் எனில் இது அவர்கள் வீட்டு பிரச்சனை. கூட்டணியில் இருந்தாலும் அதற்காக ஒரு கட்சியின் கொபசெ வாக மாறி பேசக்கூடாது. அந்த இங்கிதம் வை.கோவுக்கு தெரிந்திருந்தால், அவர் கட்சி காலி டப்பாவாக மாறியிருக்காது. தேமுதிகவின் உட்கட்சி பிரச்சனைக்குள் புகுந்து கருத்து சொல்கிறேன் என்கிற பெயரில் கருத்து கந்தசாமியாக வை.கோ மாறி பொங்கி தீர்த்துவிட்டார். தேமுதிக தலைமையோ அல்லது தலைமை உத்தரவு பெற்று பேசிய மூன்றாம் கட்ட தலைவர்கள் கூட அப்படி பொங்கவில்லை. ஆனால் அதற்கு மேல் வை.கோ கூவி முடித்தார்.

அவர் 6ந்தேதி தாயகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அருகில் திருமா, ஜீ.ரா, முத்தரசனை வைத்துக்கொண்டு பேசியபோது, வை.கோ பேச்சை நேரலையில் ஒளிப்பரப்பிய கேப்டன் தொலைக்காட்சி, ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுகளை வீசும்போது, கட் செய்து விளம்பரம் போட்டார்கள். தேமுதிக சந்திரகுமார் தேமுதிகவில் இருந்து பிரிந்துக்கொண்டு பலரை அழைத்துக்கொண்டு போனதுக்கு பதில் ஆதித்தொழிலை ( பாலியல் தொழில் ) செய்ய போகலாம் என வார்த்தைகளால் விளாசினார். தேமுதிகாவை உடைப்பதற்கு பதில், கலைஞரும் அந்த தொழிலை செய்ய போகலாம் என்றவர், நான் நாதஸ்வரம் ஊதற தொழிலை சொன்னன் அதுவும் ஆதித்தொழில் தான், அவருக்கு அந்த தொழில் தெரியும் என சாதி வன்மத்தை வார்த்தைகளால் கொட்டினார். இதனை நாங்க சாதிக்கு எதிரானவங்க, ஓடுக்கப்படும் சாதிக்கு ஆதரவானங்க என அரசியல் செய்யும் தலைவர்கள் அருகில் அமர்ந்து அதை வேடிக்கை மட்டும்மே பார்த்துக்கொண்டு இருந்தார்கள். வை.கோ இதை விட கேவலமாக கலைஞர் குடும்பத்தை வசைமாரி பொழிந்துள்ளார். ஆனால், இப்போது அவர் கக்கியது சாதி என்கிற விஷம்.

கருணாநிதியின் அப்பா நாதஸ்வர கலைஞர். அவர் சின்ன மேளக்காரர் என்கிற மக்கள் தொகையில் பிராமணர்களை விட குறைவான மக்கள் தொகை கொண்ட சாதியை சேர்ந்தவர் என்பது உலகறிந்தது. இது மறைக்கப்பட்டதல்ல. நாதஸ்வரம் ஊதும் தொழில் ஒன்றும் இழி தொழிலும் அல்ல. நாதஸ்வரம் ஊதும் தொழிலை அல்லது சாதியை இழிவாக பார்க்கும் வை.கோ தான் இழிவானவர். 


நாங்கள் ஆண்ட சாதி என கொக்கறிக்கும் தேவர், வன்னியர், கொங்கு கவுண்ட தலைவர்களுக்கு நான் சலைத்தவனில்லை என அப்பட்டமாக காட்டிவிட்டார் வை.கோ. இதற்கு முன்பு, மதுவுக்கு எதிராக வை.கோவின் சொந்தவூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அதற்கு ஆதரவு தெரிவிக்கபோன, திருமாவை நீயெல்லாம் என் ஊரில் பேசக்கூடாது, போ அப்படி என தன் சாதி வெறியை காட்டியவர் தான் வை.கோ. அதே வை.கோவாகட்டும், இடதுசாரி தலைவர்களான ஜீ.ரா, முத்தரசனாகட்டும். மநகூவில், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தபோது, நல்லக்கண்ணு, திருமா பெயரை முன் வைத்து அவரது தரப்பினர் கோரிக்கை விடுத்தபோது, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தேர்தலுக்கு முன்பே அறிவிப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என கூவினார்கள். அவர்களே, தேமுதிக அலுவலகம் போய், கேப்டன் நலக்கூட்டணி, கேப்டன் முதலமைச்சர் வேட்பாளர் என அறிவித்தபோது, தமிழ்தேசியம் பேசியவர்கள் ஒரு கேள்வி கேட்டார்கள். ஆதித்தமிழர் சாதியை சேர்ந்த திருமா, நல்லக்கண்ணுவை முதலமைச்சராக முன் நிறுத்துங்கள் என்றபோது கோபமாக மறுத்து கத்திய வை.கோ, இப்போது விஜயகாந்த்தை ஏற்றுக்கொண்டது, இருவரும் நாயுடு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் தானே என கேட்டார்கள். இன்று வரை அதற்கு வை.கோவிடம் பதில்யில்லை.

அவர்களுக்கு அன்று அவர் பதில் சொல்லவில்லை. ஆனால் அதே வை.கோ இன்று சொல்லாமல் சொல்லிவிட்டார். ஆம் என் மனதில் உள்ள சாதிவெறி தான் திருமாவை, நல்லக்கண்ணுவை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளாமல் போனது என்று.

சாதியை முன்னிறுத்தி அரசியல் செய்பவர்களை நம்பிவிடலாம், முற்போக்கு முகமுடி போட்ட இந்த சாதிவெறியனை தான் முதலில் அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

4 கருத்துகள்:

  1. மிகவும் சரியாக சொன்னீர்கள். திருமாவளவனோ ஜாதி கட்சி வைத்திருப்பவர். கம்யூனிஸ்ட்டுக்களும் வைகோவின் ஜாதி வெறி பேச்சை அருகில் இருந்து வேடிக்கை மட்டுமே பார்த்தது ஏமாற்றம்.

    பதிலளிநீக்கு
  2. வைகோ இப்படி கேவலமாக பேச காரணம்
    அவர் சில காலம் திமுக வில் இருந்து கற்றுக்கொண்ட நாகரீகம் தான்
    கருணாநிதி காமராஜர் மீது பாடாத வசையா ?
    வைகோ மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார் கருணா எப்போது மன்னிப்பு கேட்பார்

    பதிலளிநீக்கு