இந்த தளத்தில் கட்டுரைகள் எழுதி சுமார் 3 மாதங்களை கடந்துவிட்டது. பணி பளு காரணமாக எந்த கட்டுரையும் எழுத முடியவில்லை. பல கட்டுரைகள் எழுத நினைத்தும் முடியவில்லை.
இனி தொடர்ந்து தினம் ஒரு கட்டுரை என எழுதலாம் என முடிவு செய்துள்ளேன். அதாவது தினம் ஒரு வரலாறு.
நக்கீரன் இணையதளத்தில் எழுதப்படும் அந்த வரலாற்றை ஒரு நாள் தாமதமாக இங்கு பதிவிடலாம் என முடிவு செய்துள்ளேன். படியுங்கள்........... கருத்து கூறுங்கள்............. தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.
முதல் கட்டுரை கடந்த ஏப்ரல் 1ந்தேதி எழுதிய முட்டாள்கள் தினம் உருவானது எப்ப ?????????
ஏப்ரல் 1.
ஆண்டின் 91வது நாள்.
அமெரிக்காவை
சேர்ந்த செவிலியர் புளோரன்ஸ் பிளான்ஞ்பீல்ட் தான் அமெரிக்க ராணுவத்தின்
அதிகாரபூர்வ செவிலியா அதிகாரியாக 1884 ஏப்ரல் 1ந்தேதி நியமிக்கப்பட்டார்.
இதே
நாளில், 1878ல் ஈழத்து தமிழறிஞர் கணேசய்யர் பிறந்தார். 1935ல் இந்திய
ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது. 1957ல் நம் கொள்ளு தாத்தா காலத்து
நாணயமான நயாபைசா அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போதும், எப்போதும் மேற்கண்ட
இவைகள் நம் நினைவில் இருக்காது. ஏப்ரல் 1ந்தேதி என்றால் அது முட்டாள் தினம்
என்பது நமது பொது புத்தியில் திணிக்கப்பட்டுள்ளது.
அதுயென்ன முட்டாள் தினம்?.
1466
ஆம் ஆண்டு பிரான்ஸ் மன்னன் பிலிப்பை அவரது அரசவை கவிஞர் ஏமாற்றி மன்னனை
முட்டாளாக்கிய தினம் ஏப்ரல் 1 ந்தேதி என்பதால் அந்த நாளை முட்டாள்கள்
தினமாக குறிப்பிடப்படுகிறது என்கிறது ஒரு ஆய்வு.
மற்றொரு
ஆய்வோ, ஐரோப்பிய நாடுகள் ஏப்ரல் 1ந்தேதியை புத்தாண்டு தினமாக
கொண்டாடிவந்தது. 1562ல் 13வது போப் கரகரி, ரோமானிய ஆண்டு கணிப்பு முறையை
ஒதுக்கி, இப்போது உலகம் முழுவதும் பயன்படுத்தும் கிரோகரியன் ஆண்டு கணிப்பு
முறையை புகுத்தினார். அதன்படி ஜனவரி 1ந்தேதி ஆண்டின் தொடக்க நாளாக
மாற்றப்பட்டது. இதனை ஐரோப்பிய நாட்டு மக்கள் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஜீலியன் ஆண்டுப்படி ஏப்ரல் 1ந்தேதி புத்தாண்டு கொண்டாடி வந்தனர்.
பிரான்ஸ்
ஆளுகைக்கு உட்பட்டு இருந்த நாடுகளில் ஏப்ரல் 1ந்தேதி புத்தாண்டு
கொண்டாடுபவர்களுக்கு பரிசு பொருட்கள் தருகிறேன் என ஜனவரி 1ந்தேதியை
ஏற்றுக்கொண்டவர்கள் வெறும் காகிதம் சுற்றிய காலி பெட்டிகளை தந்து
ஏமாற்றினார்கள். ஏமாந்தவர்களை முட்டாள்கள் என கிண்டல் செய்ய தொடங்கி அந்த
நாளையே முட்டாள்கள் தினமாக்கிவிட்டார்கள் என்கிறது மேற்கத்திய ஆய்வுகள்.
அந்த பழக்கம் பின்பு அமெரிக்கா, ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பரவி நமது
இந்தியாவுக்கும் வந்தது முட்டாள் தினம்.
சுருங்கச்சொன்னால்
நம் ஊரில், தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் தமிழ்
உணர்வாளர்களை தீண்ட தகாதவர்களை போல் சித்திரை 1ந்தேதியை தமிழ் புத்தாண்டாக
கொண்டாடும் ஆரிய வகையறாக்கள் பார்ப்பதை போல் அங்கு பார்த்தார்கள்.
வலிந்தவன் எழுதியதே வரலாறு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதே கட்டுரை நக்கீரன் இணையத்தில் படிக்க கிளிக் செய்யுங்கள்........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக