செவ்வாய், மார்ச் 06, 2018

டிஜிட்டல் யுகத்தில் வளருமா பிரிண்ட் மீடியா ???


பிரிண்ட் மீடியா அவ்வளவு தான். இன்னும் கொஞ்ச காலத்தில் நியூஸ் பேப்பர், வார, மாதாந்திர பத்திரிக்கைகள் எல்லாம் எதுவும் வராது, எல்லாம்மே எலக்ட்ரானிக் மீடியா ஆதிக்கம் தான். டிவி, இணையதளம், மொபைல் பத்திரிக்கைகள் தான் ஆதிக்கம் செலுத்தும் என்கிற தகவல் தமிழ் பத்திரிக்கையுலகில் வேகவேகமாக பரவி வரும் நிலையில் தி இந்து குழுமத்தில் இருந்து காமதேனு என்கிற வாராரந்தர பத்திரிக்கை வெளிவர துவங்கியுள்ளது.

இதுப்பற்றிய விளம்பரங்களை பார்த்துவிட்டு தான் அறிவு சார்ந்த நண்பர்கள் வட்டாரம் என்ன தோழா பத்திரிக்கைகள் விற்பனை படுபாதாளத்தில் உள்ள நிலையில் புதுசா புத்தகம் வெளியிடறாங்க எனக்கேட்டார்கள். அது ஒரு கலந்துரையாடலாக மாறியது. அவர்கள் மத்தியில் நான் கூறியது இதுதான்.

பிரிண்ட் மீடியாவை எந்த டெக்னாலஜி மீடியாவும் அழிக்க முடியாது. மேம்போக்காக காணும்போது பிரிண்ட் மீடியாவை விட விஷ்வல் மீடியா, இணையதள மீடியாக்கள் பாப்புலராக தெரியும். ஆனால் தெளிவான செய்திகளை, கட்டுரைகளை பிரிண்ட் மீடியாவால் மட்டும்மே தரமுடியும்.

இன்றைய நேரத்தை கைபேசிகளும், சமூகவளைத்தளங்கள் நம்மை ஆக்ரமித்துக்கொண்டதால் அதில் வரும் செய்திகளை பார்த்துவிட்டு அவ்வளவு தான் என கடந்து போகிறோம். அந்த நிலை மாறும் அப்படி மாறும்போது பிரிண்ட் மீடியாக்கள் மீண்டும் ராஜ்ஜியம் செய்வார்கள்.

இல்லை என்பவர்களுக்கு ஒருத்தகவல். நம் நாட்டை விட தொழில்நுட்பத்தில் வளர்ந்தவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரிட்டன் போன்றவை. அங்கும் இந்த பிரச்சனை கடந்த காலங்களில் எழுந்தது. அங்கும் பிரிண்ட் மீடியா, விஷ்வல் மீடியா, இணையதள மீடியாக்கள் மோதல் உண்டு. ஆனால் அங்கு தொய்வில் இருந்த பிரிண்ட் மீடியா மீண்டும் வளர்ச்சிக்கு வந்தது, பிரிண்ட் மீடியாவை அழிக்க முடியவில்லை. அதற்கு காரணம் அவர்கள் தங்களது செய்தி வழங்கும் தன்மையில் மாற்றத்தை கொண்டு வந்தார்கள். வழக்கமான செய்திகளோடு செய்தியின் பின்னணிகளை தந்தார்கள்.

பிரிண்ட் மீடியா தொய்வில் இருந்து தங்களை காத்துக்கொள்ள தங்கள் செய்தி வழங்கும் நிலையை கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். தினசரி செய்தித்தாள்களை விட வாரம் இருமுறை, வாரம், மாதம்மிருமுறை, பருவ இதழ்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஒரு திரைப்படம் என்றால் பாடல், நகைச்சுவை, கவர்ச்சி, பாடல் அதை விட அதிகமாக ஹீரோ, ஹீரோயின் எப்படி முக்கியம்மோ அதே அளவுக்கு இதழ்களுக்கு செய்திகளின் வகைகள் முக்கியம். அந்த வகையை ஜனரஞ்சக இதழ்கள் கடைப்பிடித்தாலும், அதில் மாற்றத்தை கொண்டு வந்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அரசியல் கட்சிகளின் பேச்சுக்களை, விபத்துக்களில் இரண்டு பேர் இறந்தான், மூன்று பேர் அடிப்பட்டான் என்கிற செய்தியை தாண்டி அது எப்படி நடந்தது, யார் மீது தவறு என எதிர்பார்க்கிறான் வாசகன். ஒரு சார்பாக எதுவும் எழுத முடியாது, தற்போது வாசகனை ஏமாற்ற முடியாது. ஏன் எனில் வாட்ஸ்அப் முகநூலில் பல தகவல்கள் வந்துவிடுகின்றன. அதனால் பிரிண்ட் மீடியாக்கள் ஒரு செய்தியில் அரசியல் பின்புலம், அரசியல் ரகசியங்கள், அரசியல் மோதல்கள், ரவுடி ராஜ்ஜியம், அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்கள், மக்களை பாதிக்கும் சமூக கட்டுரைகள், மனதை உருக்கும் கட்டுரைகள், மனதை ஆர்ப்பரிக்கும் அதிரடியான கட்டுரைகள், தெரியாத தகவல்களை விரும்புகிறார்கள் இளைஞர்கள், நிகழ்கால செய்தியோடு – கடந்த கால வரலாறுகளை தெளிவான கட்டுரைகளை தான் அதிகம் விரும்புகிறார்கள் தமிழகத்தில்.

நான் தருவது தான் செய்தி என பிரிண்ட் மீடியா நினைத்தால் அதற்கு அழிவு காலம்.

ஏன் எனில் செய்திகளை உடனுக்குடனே அறிந்துக்கொள்ள தொலைக்காட்சிகளும், இணையதளங்களும் உள்ளன. ஒரு தொலைக்காட்சியால் நேரலை செய்தியை மட்டும்மே வழங்க முடியும், இணையதளங்களில் எது வேண்டுமானாலும் எழுதலாம், நம்பகத்தன்மை என்பது கிடையாது.

பிரிண்ட் மீடியாவில் வரும் செய்தி மீது பெரும் நம்பிக்கையுள்ளது. அதற்கு தேவையான செய்திகளை வழங்கவில்லையெனில் டெக்னாஜி உலகத்தில் பிரிண்ட் மீடியா தாக்கு பிடிக்க முடியாது.

இந்த வளர்ச்சியால் நன்மையும் உள்ளது, தீமையும் உள்ளது. பிரிண்ட் மீடியாவில் தேவையற்ற செய்திதாள்கள், இதழ்கள் காணாமல் போய் மறையும், விஷிவல் மற்றும் இணையதளத்தில் புற்றீசல் போல் வளரும். அது வளரும்போது மீண்டும் பிரிண்ட் மீடியா ஆதிக்கம் செலுத்தும்.



2 கருத்துகள்: