செவ்வாய், ஜனவரி 18, 2011

நேதாஜி என்ற உன்னத தலைவனின் வரலாறு இரட்டடிப்பு.


 
பாரத தேசம் ஆங்கிலேயரின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த போது இந்தியாவின் உன்னத குடும்பம், தன்னிகறற்ற குடும்பம். இந்தியாவின் வளர்ச்சிக்காகவே பிரதமரான நேரு, இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி போன்றோர் வாழ்ந்தனர். வெள்ளையனை வெளியேற்ற நடந்த போராட்டத்தில் மானமிகு உலக தலைவர் ராஜிவ்காந்தி தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே மகாபாரதத்தில் தாயின் வயிற்றில் இருக்கும்போதே அபிமன்யூ போர் முறைகளை கற்றுக்கொண்டதை போல ராகுல்காந்தி தன் தாய் இந்திராகாந்தி வயிற்றில் உருவாகும்போதே வெள்ளையனை எதிர்க்க கற்றுக்கொண்டடார். சோனியாவும் அதே போல என 2050ல் நமது வருங்கால சந்ததிகள் வரலாற்றை படித்தால் ஆச்சர்யப்படுவதற்க்கில்லை.
 
காரணம் வரலாறுகள் அப்படித்தான் காங்கிரஸ்சாரால் எழுதப்பட்டுள்ளன. வருங்காலங்களில் அப்படித்தான் எழுதப்பட போகின்றன. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களில் ஒருவர். வெளிநாடுகளில் போய் பல நாட்டு தலைவர்களை சந்தித்து இந்தியாவுக்காக ஆதரவு திரட்டியவா.  சுதந்திர இந்தியாவுக்காக தன்னையே அர்பணித்துக்கொண்ட மாவீரன் என்றால் மிகையில்லை. அப்படிப்பட்டவரின் வரலாற்றை முழுமையாக அறிய விடாமல் காங்கிரஸ் பேரியக்கம் இரட்டிப்பு செய்துள்ளது.
 
நாட்டுக்கு சுதந்திரம் வேண்டி காங்கிரஸ் பேரியக்கத்தை போல பல இயக்கங்கள் போராடின. இந்துஸ்தான் சோசலிஸ்ட் சமதர்ம குடியரசு ராணுவம், நவ ஜீவன் பாரத் சபா, கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய ராணுவனம் உள்ளிட்ட அமைப்புகள் வௌ;வேறு காலகட்டங்களில் போராடின. பல தலைவர்கள் போராட்ட களத்தில் உயிர் விட்டார்கள். இவர்களின் வரலாறு சிலவை மட்டும் போகிற போக்கில் தான் வரலாற்று பாட திட்டத்தில் உள்ளது. ஆனால் 1910களுக்கு பின்பு  போராட்ட களத்திற்க்கு வந்த காந்தியின் வரலாறு, முதல் சுதந்திர இந்தியாவின் பிரதமர் நேரு, இந்திராகாந்தியின் வரலாறுகள் இன்று எங்கும் நிறைந்துள்ளன.
 
காங்கிரஸ் கட்சி என்பது வெள்ளையனிடம் அய்யா சாமி என கெஞ்சி காரியம் சாதித்த கட்சி. மற்ற தலைவர்களை விட காந்தி அந்த காரியத்தை சரியாக செய்தார். எதை செய்தாலும் ஒரு நேர்த்தி வேண்டுமென கூறும் காந்தி உண்ணாவிரதமா சாமீ சாப்பிடாம நாலு நாளைக்கு இருக்க போறோம் என தகவல் அனுப்பி வைப்பார். போராட்டமா, தெய்வமே போராட போறோம். எங்கள மட்டும் அடிக்காதிங்க என்பவராக இருந்தார். இந்த நல்ல உள்ளத்திற்காக காந்தி சொன்ன பலவற்றை ஆங்கிலேய அரசாங்கம் செய்து தந்தது.
இதற்காக பகத்சிங், சுகதேவ் போன்ற இளைஞர்கள் ஆங்கிலே காவல் அதிகாரியை சுட்டு கொன்றதற்க்காக தூக்கு தண்டனை தந்தது. இதற்க்கு பாரத தேசம் முழுவதும் எதிர்ப்பு வந்தது. அப்போது காங்கிரஸ் மாநாடு நடைபெறுவதாக இருந்தது. இதனால் காந்தி ஆங்கிலேய அரசிடம், தூக்கு தாண்டனையை முன் கூட்டியே நிறைவேற்றுங்கள் என கேட்டுக்கொண்டார். இதனால் குறிப்பிட்ட நாளுக்கு முன்பே ஒருநாள் தூக்குதண்டனையை நிறைவேற்றியது வெள்ளையர் அரசாங்கம்.

 
இதனை காங்கிரஸ் மாநட்டில் ஒப்புக்கு சப்பானியாக கண்டித்த காந்தியை எதிர்த்து குரல் கொடுத்தார் நேதாஜி சுபாஷ். இவர் காங்கிரஸ்சின் பெரிய தலைவர்களில் ஒருவரான சித்தரன்ஜன்;தாசின் சிஷ்யர். தன் குருவை போலவை தலைமை தப்பு செய்தாலும் தட்டி கேட்கும் துணிச்சல் கொண்டவர்.
 
சுபாஷ் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, இவர் தீவிர போக்கு உடையவர் (அதாவது தீவிரவாதி என சொல்லாமல் சொல்வது.) என கூறிய காந்தி இவரை எதிர்த்து தலைவர் தேர்தலில் பட்டாபி சீத்தாராமையா என்பவரை நிறுத்தினார். தேர்தலில் காந்தியின் வேட்பாளரையே தோற்கடித்தார் நேதாஜி. பதவிகளை துச்சம்மென தூக்கியெறிந்தவர்.

 
இரண்டாம் உலக போரின் போது, பாரத தேசத்தை ஆண்டுக்கொண்டுயிருந்த பிரிட்டிஷ் அரசு போரில் கலந்து கொண்டன. இதுதான் பிரிட்டிஷ் அரசை எதிர்க்க சரியான காலமென இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் படைகள் மீது போர் தொடுக்க ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளின் தலைவர்களிடம் போய் உதவி கேட்டார். கடைசியில் ஜப்பான் உதவி செய்ய முன் வந்து போர் வீரர்கள், போர் தளவாடங்களை தந்தது.
 
இந்திய-ஜப்பான் கூட்டு இராணுவத்திற்க்கு தலைமை யார் என்ற கேள்வி வந்தபோது, என் நாட்டு சுதந்திரத்திற்க்கு நாங்கள் தான் தலைமை தாங்குவோம், எங்களை ஆள நீங்கள் முயற்சிக்காதிர்கள் என சொல்லும் வலிமை வாய்ந்தவராகயிருந்தார்.
 
பாரத தேசத்திற்க்கு வெளியே ஒரு அரசை உருவாக்கி பிரதமராக பதவிறே;று ஜனகன மன பாடலை நாட்டுப்பண்ணாக கொண்டு வந்தார். இந்த அதிர்ச்சியே காங்கிரஸ் தலைவர்களை அவரை பலி கொடுக்க வைத்தது. அதாவது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தும், நேதாஜியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு மறைமுக நிபந்தனையை வைத்தது. அதனை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆக நேதாஜி என்ற மாபெரும் தலைவரின் உயிரை விலை பேசியே சுதந்திரத்தை வாங்கினார்கள் என்பது இன்றளவும் மறுக்க முடியாத மறைக்கப்பட்ட உண்மை.


நேதாஜி விமான விபத்தில் இறந்தார் என கதை சொன்னது ஜப்பான்.  ஆனால் அதை பெரும்பாலானோர் மறுத்தனர். இதுப்ப்ற்றி இந்தியாவிடம் சமுக ஆர்வலர் ஒருவர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி கேள்வி கேட்டபோது, அதைப்பற்றி தெரிவித்தால் நாடுகளுக்கிடையேயான உறவுகள் பாதிக்கப்படும் என்பதால் அதனை வழங்க முடியாது என தெரிவித்தது மத்தியரசு. நாடுகளுடனான உறவுகளுக்காக ஒரு உன்னத தலைவரின் வரலாற்றை மறைக்கிறது ‘ஜனநாயக’ அரசு. அதேபோல் நேதாஜியின் இறப்பு உண்மையா என கண்டறிய மத்தியரசே பல கமிட்டிகளை போட்டது அந்த கமிட்டிகளுக்கு அவையே ஒத்தைழைக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது. 
 
அரசாங்கமே மறைக்கும் அந்த மாபெரும் வரலாற்று நாயகனின் 118வது பிறந்தநாள் ஜனவரி 23 அதை கோலாகலமாக கொண்டாடுவோம். ஜெய்ஹிந்த்.

திங்கள், ஜனவரி 10, 2011

தேமுதிக கப்பலின் ‘ கேப்டன் ’ ஜெ.


சேலத்தில் 9ந்தேதி உரிமை மீட்பு மாநாட்டை பிரமாண்டமாக நடத்தியது தேமுதிக. கூட்டணி அறிவிப்பு செய்வார் என்ற நம்பிக்கையுடன் தமிழகம் முழுவதும்மிருந்து லட்ச கணக்கில் சேலத்தில் குவிந்தார்கள் விஜயகாந்த் ரசிகர்கள்.
அதை மாநாட்டு மேடை பொய்யாக்கவில்லை. கட்சியின் சார்பில் கொண்டுவரப்பட்ட மாநாட்டு தீர்மானங்கள் அனைத்தும் திமுகவை கடுமையாக தாக்கியே இருந்தது. சில தீர்மானங்களில் மத்தியரசையும் லோசாக டச் பண்ணியிருந்தார்கள். சேலம் மா.செ இளங்கோவன் முதல் மாநில மகளிரணி தலைவி பிரேமலதா வரை திமுக வை அட்டாக் செய்தார்கள்.
கட்சி ஆரம்பித்த 2005 முதல் என் கூட்டணி எப்போதும் மக்களுடன், கடவுளுடன் தான் என கர்ஜித்து வந்த கேப்டன் தற்போது தன் கட்சியின் துடுப்பை இரட்டை இலை தலைவியிடம் தர தயாராகிவிட்டார் என்பதை மாநாட்டின் பேச்சு மூலம் உணர முடிந்தது. வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவை கரைசேர்க்கும் பொறுப்பை ர.ரக்கள் ஏற்றுக்கொள்ள போகிறார்கள்.
காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியில் வரும், வரும் என காத்திருந்து காத்திருந்து நொந்துபோய் தலைவியிடம் சரண் அடைந்துள்ளார் விஜயகாந்த். இதற்க்கு விஜயகாந்தின் மச்சான்க்கும், மனைவிக்கும் விஜயகாந்த் ரசிகர்கள் நன்றி சொல்ல வேண்டும்.

2006ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ரசிகர்களை 234 தொகுதியிலும் முரசு சின்னத்தில் வேட்பாளர்களாக நிறுத்தி மக்களை சந்தித்து வாக்கு வாங்கினார்கள். அந்த தேர்தலில் பாமகவின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட விருத்தாசலத்தில் விஜயகாந்த் வென்றார். பாரம்பரியமான காங்கிரஸ் கட்சியை விட அதிகமான வாக்கு வங்கி தேமுதிகவிடம் இருப்பதை நிருப்பத்தார். தமிழக மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். இது விஜயகாந்த்க்கு பெருமைதான் ஆனால் தேமுதிகவின் வேட்பாளர்கள் கடன்காரர்களானார்கள்.
அதனால் அதன்பின் வந்த இடைத்தேர்தல், நாடாளமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம் என மன்றாடினார்கள். ஆனால் நான் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர், அதனால் மக்கள்-கடவுளுடன் தான் கூட்டணி என பிடிவாதம் பிடித்தார். இதனால் நடந்த பல தேர்தல்களில் பலர் கடன் காரர்களானார்கள்.
கட்சிக்கு செலவு செய்ய ரசிகர்கள் பயந்து போய் பின்வாங்கினர், கட்சியை விட்டே ஓடி பதுங்கினர். அது மட்டுமல்ல தேர்தல் ஆணையத்திடம் தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக்க வேண்டும் என்றால் எம்.எல்.ஏ, எம்.பி பலம், வாக்குபலத்தை காட்ட வேண்டிய கூ+ழ்நிலைகளின் நிஜத்தை உணர்ந்த விஜயகாந்த் கூட்டணி வைக்க இறங்கி வந்தார்.
இதற்காக நம்பிக்கையான கட்சி பிரமுகர்கள், உறவினர்களை களத்தில் இறக்கி விட்டார். காங்கிரஸ்சுடன் கூட்டணி வைப்பதற்க்கு தேமுதிகவின் அவை தலைவர் பன்ருட்டி ராமச்சந்திரன் டெல்லியில் முகாம் போட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மச்சான் சுதிஷ் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதில் உறவு வெற்றி பெற்று விட்டது.

அதை மேடையில் தேமுதிகா நிர்வாகிகள், விஜயகாந்த் பேசும்போது தெளிவாக உணர முடிந்தது. திமுக மீதான அட்டாக் தான் பேச்சில் அதிகம், காங்கிரஸ்சையும் லேசாக டச் செய்தார். ஜெயலலிதாவை ஒருயிடத்தில் கூட டச் செய்யாமல் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறது என்பதை தன் ரசிகர்களுக்கு நாசுக்காத உணர்த்தினார்.
அதிமுகவுடன் கூட்டணி வைப்பதாலோ என்னவோ, பூணுல் போட்ட அய்யர்களுக்காக அதிகம் சப்போட் செய்தார் மதுரை மைந்தர். கூடவே அடிக்கடி எனக்கும் கோபப்பட தெரியும் ஆனால் கோபப்பட்டால் ‘ நிதானமாக ’ பேச முடியாது அதனால் தான் பொறுமையாக பேசுகிறேன் என தடாலடித்தார்.

நிதானமாகயில்லை என்பதை அவரின் பேச்சு தெளிவுபடுத்தியது, பேச ஆரம்பிக்கும் போது, கூட்டத்திற்க்து வந்துள்ள எனது தொண்டர்கள் சாப்பாடடை வீட்டில் இருந்தே கட்டி எடுத்து வந்துள்ளார்கள், மற்ற கட்சியில் கூட்டம் கூட்டி சாப்பாடு போடுவார்கள் என பேசினார். 1.20 மணி நேர பேச்சுக்கு பின் பேச்சை முடிக்கும்போது, உங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதனால் கவலைப்படாமல் பொட்டலம் கட்டப்பட்டுள்ள சாப்பாடு பொட்டலத்தை வாங்கி செல்லுங்கள் என்றார். கூடவே கூட்டணி பற்றி கவலைப்படாதிங்கள் அதை நான் பார்த்துக்கொள்ளுகிறேன் என்றார்.

விஜயகாந்த் பேசி முடித்து நன்றி சொல்லும் போது கேப்டன் சேனலின் லோகோ மைக்கின் மேலிருந்து கீழே இறங்கியது. விஜயகாந்தின் எதிர்காலத்தை தடுமாறாமல் அந்த லோகோ தெளிவுபடுத்தியது.

வெள்ளி, டிசம்பர் 24, 2010

நாம் சுரணையற்ற தமிழர்கள்.


 
ஈழத்தில் நம் தொப்புள் கொடி உறவுகளை சிங்கள அரசு கொத்து குண்டுகளை போட்டு ஆயிரக்கணக்கில் அழித்தபோது வேடிக்கை மட்டுமே நம்மால் பார்க்க முடிந்தது. தெரிந்தும் தெரியாதமாதிரி நாம் கண் மூடிக்கொண்டிருந்தோம். கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் செய்த பின் தான் வரிசையாக பா.ம.க, மதிமுக, தமிழ் அமைப்புகள் கொடி பிடித்தன. முத்துக்குமார் தீக்கு அகுதியானபோது எழுந்த எழுச்சி அலையை அரசியல்வாதிகள் திட்டமிட்டு மழுங்கடித்தனர். அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஈழ போரை பெரிய பிரச்சாரமாக கொண்டும் சென்றார்கள். ஈழ மக்களின் எதிரியான ஜெயலலிதாவே ஈழத்துக்கு ஆதரவு அறிக்கை விட்டார்.
 
தொப்புள் கொடி உறவை அழித்த மத்திய காங்கிரஸ் அரசுக்கு திமுக துணை போனதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. திமுக செய்தது துரோகம் என எண்ணினர். ஆனால் அவர்களுக்கு மாற்று வழியில்லை. திமுகவை எதிர்த்து நின்றவர்கள் ஈழ பிரச்சனையை மக்கள் பிரச்சனையாக்காமல் அரசியல் பிரச்சனையாக்கியதை மக்கள் உணர்ந்தேயிருந்தார்கள் அதனால் வந்த விளைவு. திமுக கூட்டணி வென்றது. இதை யோசிக்காமல், திமுக நினைத்திருந்தால் இலங்கையில் நடந்த போரை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் அதை செய்யாமல் கருணாநிதி விட்டு விட்டார் தமிழர்களின் விரோதி கருணாநிதி என ஈழ உணர்வாளர்கள் குற்றச்சாட்டினர். இந்த குற்றச்சாட்டு அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் ஜெ மீது கூட வந்திருக்கும்.
 
திமுகயில்லை போரை நடத்திய காங்கிரஸ்சே நினைத்திருந்தாலும் ஈழத்தில் நடந்த போரை தடுத்து நிறுத்தியிருக்க முடியாது. காரணம், ஆசிய கண்டத்தில் நடக்கும் மறைமுக யுத்தம் அப்படி. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நடக்கும் பொருளாதார, பாதுகாப்பு விவகாரங்களில் நடக்கும் மறைமுக யுத்தத்தில் சீனா குதிரை பாய்ச்சலில் முன்னேறி போய்க்கொண்டிருக்கிறது. இந்தியா ஆமை வேகத்தில் நகர்கிறது. அதோடு பாதுகாப்பு ரீதியாக சீனா இந்தியாவை சுத்தி வலைத்துள்ளது. (சீனாவின் முத்துமாலை திட்டத்தை இணையத்தில் தேடி படியுங்கள் புரியும்) சீனா சொன்னால், பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா, வங்கதேசம், நேபாளம் போன்றவை கை கட்டி சீனாவுக்கு சேவகனாக நிற்க்கும். இந்தியா மிரட்டினால் கூட கேட்பதற்க்கு ஒரு நாடும் தயாரில்லை.
 
சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்தியா முழித்துக்கொண்டது. அது முழித்தபோது இந்தியாவுக்கு இலங்கை மட்டுமே பிரகாசமாக தெரிந்தது. அதேநேரம் சீனா இலங்கையை வலைக்க பேசிக்கொண்டுயிருந்தது. கடல், ஆகாயம் மார்க்கத்தில் மிக முக்கியமான நாடு இலங்கை அதை கோட்டை விட்டால் நம் கதி அதோகதி தான் என பயந்து சிங்கள தேசத்தை மிரட்ட தொடங்கியது இந்தியா.
 
இதை பயன்படுத்திக்கொண்ட இலங்கை, எனக்கு தேவை பணம், ஆயுதம், நான் செய்யறத மத்த நாடுகள் கண்டுக்கொள்ளாத அளவுக்கு நீ எனக்கு பாதுகாப்பு தந்தன்னா நான் சீனா பக்கம் போகல என சொல்லி இந்தியாவிடம்மிருந்து எல்லாவற்றையும் வாங்கி ஈழத்தமிழர்களை, விடுதலைப்புலிகளை அழிக்க அதை பயன்படுத்திக்கொண்டது. வாலை நமக்கு காட்டிவிட்டு தலையை சீனாவிடம் தந்து துரோகம் செய்தது இலங்கை. இதைக்கண்டு அதிர்ந்து தலையை மீட்க இலங்கை கேட்டதை விட அதிகமாகவே தந்தது. மேற்க்குலக நாடுகளுக்கு இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் தெரிந்து அவர்கள் பங்குக்கு கேட்காமலே உதவிகளை வாரி வழங்கினார்கள். போட்டி போட்டுக்கொன்டு உதவிகள் தேடி வந்ததால் விடுதலை புலிகளை அழிக்க தைரியமாக வறைமுறை, விதிகளை மீறி ராணுவத்தை ஏவியது. இதில் விடுதலை புலிகளுக்கு ஆதராவக தோள் கொடுத்து நின்ற மக்களையும் கொன்று குவித்தது சிங்கள ராணுவம்.
 
போர் உச்சகட்டத்தை நெருங்கிய போது தான் தமிழகத்தில் நாம் தெருவில் இறங்கி போராடினோம். அப்போது காலம் கடந்து போய்யிருந்தது. உணர்வாளர்கள் மத்தியரசுக்கு முட்டு தருவது திமுக தான். நாங்கள் ஆதரவை வாபஸ் வாங்கிவிடுவோம் என காங்கிரஸ்சை திமுக மிரட்டினால் காங்கிரஸ் பணிந்து போரை நிறுத்தியிருக்கும் என பேசினார்கள். இப்போதும் அதையே பேசி வருகிறார்கள். திமுக ஆதரவை வாபஸ் வாங்கியிருந்தாலும், மத்தியில் காங்கிரஸ்சின் ஆட்சி கவிழ்ந்துயிருந்தாலும் இலங்கையில் போர் நடந்திருக்கும். இந்தியாவின் ஆதரவு இல்லாமல் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, ஜப்பான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் ஆதரவோடு இலங்கை போரை நடத்தியிருக்கும்.
 
இதை அறிந்தே இலங்கையை நம் வசம்மில்லாவிட்டால் இந்தியாவின் கதி அதோகதி தான்  என பயந்து அப்போது பாதுகாப்பு துறை செயலாளராகயிருந்த நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர்மேனன், மத்தியமைச்சர் பிரணாப்முகர்ஜி அடிக்கடி தமிழகம் வந்து இந்தியாவின் இக்கட்டான நிலையை தெளிவுப்படுத்தி கருணாநிதியை கூல் செய்துவிட்டு போனார்கள். ஆனாலும் ஒட்டு வங்கியில் குறை வந்துவிடுமோ என பயந்து மனிதசங்கிலி, உண்ணாவிரதம் என நாடகம் நடத்தினார் முதல்வாரன கருணாநிதி.

 
பாராளமன்ற தேர்தலில் ஈழ பிரச்சனை மக்களிடம் எடுபடவில்லை என நினைத்து தேவையில்லாத விமர்சனங்களை புலிகள் மீது முதல்வர் கருணாநிதி வைக்க மக்கள் மனதில் அது காயத்தை ஏற்படுத்தியது. இதை அதிகமாக பிடித்துக்கொண்ட ஈழ ஆதரவாளர்கள், எதிர்கட்சிகள் போரை என்னவோ திமுகவே நடத்தியது போல தமிழகத்தில், இணைய தளங்களில் பிரச்சாரம் செய்து திமுகவை துரோகி என சொல்லி வருகிறார்கள்.
 
தமிழினம் என்றால் காங்கிரஸ்க்கு பிடிக்காது துரோகத்தின் வெளிப்பாடு என்கிறார்கள். காங்கிரஸ் மட்டுமல்ல பி.ஜே.பி உள்ளிட்ட தேசிய கட்சிகள், திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் தமிழனை ஏமாளியாக நடத்தி வருகிறது.
அதற்க்கு காரணம் யார்?
 
மனசாட்சியில் கை வைத்து யோசித்து பார்ப்போம். தெருவில் ஒருவனை யாராவது அடித்தால் கேள்வி கேட்க பயந்து ஓடிப்போய் பதுங்கி விடுகிறோம், நமக்கு வந்த பிரச்சனையில்ல இது என பாதுகாப்பாக மறைந்துக்கொண்டு போலிஸ் என்ன செய்கிறது ஒட்டு வாங்கிம் போனவர்கள் என்ன செய்கிறார்கள், நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என பேசுவது வாடிக்கையாகிவிட்டது. வடமாநிலங்களை பாருங்கள், அங்குள்ள மக்கள் தன் இனத்தை, சாதியை, மதத்தை சார்ந்தவர்களுக்கு எங்கே ஒரு பிரச்சனை என்றாலும் ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறை கவனித்துக்கொள்ளும் எனயில்லாமல் யாருக்கும் பயப்படாமல் தெருவில் இறங்கி மக்கள் போராடுகிறார்கள். வெற்றி கிட்டும் வரை ஓயாமல் போராடுகிறார்கள் வெற்றி பெருகிறார்கள். அந்த மக்களின் உறுதியை உணர்ந்தே அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் பயந்து மக்கள் பக்கம் நிற்க்கிறார்கள்.
 
இங்கு அவன் பாத்துக்குவான், இவன் பாத்துக்குவான் நமக்கு எதுக்கு வம்பு என ஒதுங்கி பயந்து ஒளிந்துக்கொள்கிறோம். இதனால் தான் நம்மை கிள்ளு கீறையாக நடத்துகிறார்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள். இது யார் தவறு?. நாம் செய்த தவறு. அரசியல்வாதியே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என எதிர் பார்த்தோம். ஆதை அறிந்துக்கொண்ட நம் முதுகில் சவாரி செய்கிறார்கள். நாம் மானம் கெட்டவர்கள், சொரணையற்றவர்கள் என அறிந்து நம் குணிய வைத்து குத்துகிறார்கள். தெரிந்தும் நாம் அவர்களை தண்டிப்பதில்லை. காரணம், தேர்தலில் 500, 1000த்திற்க்கு எப்படியும் ஓட்டு போடுபவர்களாக மாறிவிட்டதால் தான் இந்தநிலை. ஈழ பிரச்சனையின் போதும் அதை உணர்த்தி காட்டினார்கள்.

 
எல்லாவற்றையும் அரசியலாக்கினார்கள். உன் இனத்தை அழிக்கும் போது இங்கு நீ போராடியிருந்தால் அரசாங்கம் பயந்துயிருக்கும். போராட போகும் முன்பே கைது, சிறை என பயந்து பதுங்கினால் ஆள்பவர்களுக்கு தைரியம் வரத்தான் செய்யும். நீ எதிர்த்து நின்றிருந்தால் உன்னை நெருங்க அச்சப்பட்டிருப்பார்கள். ஒரு அரசாங்கம் மக்களை என்ன செய்துயிருக்க முடியும், கைது செய்யும். அவ்வளவு தானே இனத்திற்க்கா சிறையில் இருக்க கஷ்டம் என்றால் நீ உரிமையை பற்றி பேச தகுதியில்லாதவன். மக்களுக்காக, இனத்திற்காக உயிரை கொடுக்க விடுதலைப்புலிகள் பயந்திருந்தால் ஈழப்பிரச்சனை உலகம் பேசும் அளவுக்கு வந்திருக்காது.
 
நம் பிரச்சனைக்கு அரசியல்வாதிகள் தான் கேள்வி கேட்க வேண்டும் என எண்ணுவது நமக்கு வாடிக்கையாகிவிட்டது. நீ கேள்வி கேட்டால் தானே தப்பு செய்பவன், செய்ய துணிபவன் பயப்படுவான். கேள்வியே கேட்காத நாம் மற்றவர்களை குறை சொல்ல என்ன தகுதியிருக்கிறது. தவறுகளை நம் மீது வைத்துக்கொண்டு மற்றவர்களை குறை சொல்வது நியாயம்மில்லை.

அவன் துரோகி, இவன் துரோகி என குறைசொல்வதை விட்டுவிட்டு நாம் என்ன செய்தோம், என்ன செய்யலாம் என யோசிப்போம். அதன் பிறகு மற்றவர்களைபற்றியும், துரோகம் செய்தவர்கள், ஏமாற்றியவர்கள் பற்றியும் பேசுவோம்.