வியாழன், டிசம்பர் 27, 2012

ஜெவின் ‘நயவஞ்சக நாடகங்கள்’.




கல்யாண வீட்டுக்கு போனா நீ மாப்பிள்ளையா இரு. சாவு வீட்டுக்கு போனா நீ பிணம்மாயிரு என்பார்கள். அதற்கு காரணம் அந்தயிடங்களுக்கு செல்லும்போது மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றி உன் மீது கவனத்தை திருப்ப வேண்டும் என்பதற்காக கிராமத்தில் அப்படி சொல்லுவார்கள். 

தற்போது தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் பிரதமர் தலைமையில் டெல்லியில் நடக்கிறது. இதில் கலந்துக்கொள்ள தனி விமானத்தில் டெல்லி சென்றார் தமிழக முதல்வாரன ஜெ. இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்களும் இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ளனர். 

ஒவ்வொரு மாநில முதல்வரும் தங்கள் மாநில கோரிக்கை பற்றி பத்து நிமிடம் பேச வேண்டும் எனச்சொல்லப்பட்டது. அதன்படி தமிழகத்தின் கோரிக்கையை முதல்வர் வாசிக்கும் போது பத்து நிமிடம் முடிந்ததும் மணி அடிக்கப்பட்டுள்ளது. உடனே கோபமாக கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த முதல்வர் ஜெ, என்னை அவமதித்து விட்டார்கள் என செய்தியாளர்களிடம் கூறிவிட்டு வந்துவிட்டார். நாட்டின் தலைநகரில் இருந்தப்படி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார். அவர் திட்டம் நிறைவேறிவிட்டது. மாநிலத்தின் கோரிக்கை, நலன் கேள்விக்குறியாக நிற்கிறது. 

அரசாங்கத்தின் நிர்வாகத்தை நன்கறிந்தார். எம்.பியாக ஒருமுறை, தமிழகத்தின் முதல்வராக மூன்றாவது முறை உள்ளார். அதற்கு முன்பு எம்.பியாக இருந்தவர்க்கு அரசாங்கத்தின் நடைமுறை தெரியாததல்ல. அதோடு, மாநாடு பற்றிய டைம் டூ டைம் ரிப்போர்ட்டில் யார் முதலில் பேசுவது, டீ டைம், லஞ்ச் டைம் வரை முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். சமீபத்தில் முதல்வர் ஜெ தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள் கூட்டத்திலும் இந்த நடைமுறை தான் பின்பற்றப்பட்டது. 

புரோட்டாக்கால் என்ற நடைமுறை இருக்க அதை அறிந்தும், அரசாங்க அலுவல்களின் நேர பயன்பாடு அறிந்தும் ஜெ மரியாதை கிடைக்கவில்லை, ஃபெல் அடித்துவிட்டார்கள் என சொல்வது அப்படியிருக்க ஜெயலலிதா எந்த கூட்டத்துக்கு போனாலும் வெளிநடப்பு செய்வதை பொழுது போக்காக வைத்துள்ளார். 

உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் பிரச்சனையில் இரண்டு மாநில முதல்வர்களை சந்தித்து பேசச்சொன்னது. அதன்படி பெங்களுரூவுக்கு சென்றார். ஷெட்டருடன் பேச்சு வார்த்தை தொடங்கிய சிறிது நேரத்தில் வெளிநடப்பு செய்துவிட்டேன் என வெளியே வந்து அறிவித்தார். (ஷெட்டர் நாங்கள் மரியாதையாக அனுப்பிவைத்தோம் என்றார்). இதே இப்போது தேசிய வளர்சி கவுன்சில் கூட்டத்தில் இருந்தும் வெளிநடப்பு செய்துள்ளார். இதற்கு முன்பும் இப்படி செய்துள்ளார். 

கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் அனைவரின் கவனமும் தன் பக்கம் இருக்க வேண்டும் என எண்ணுகிறார். அதோடு, தான் இருக்கும் இடங்களில் தன்னை அனைவரும் புகழ்ந்து பேச வேண்டும் என்ற மனோபாவத்தில் உள்ளார். தான் பேசுவதை அப்படியே கேட்கவேண்டும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அதற்காக எடுத்துக்கொள்ள தனக்கு உரிமை என எண்ணுகிறார். அதன் வெளிப்பாடு தான் இப்படி. இந்த நாடகத்தை தான் அவரது வீரமாக பிரகஸ்கரிக்கிறார்கள். 

அவரின் செயல்பாட்டை நியாயப்படுத்தி மற்றவர்களை குறை சொல்கிறார்கள். முதலில் அவர் சரியாக செயல்படுகிறாறா என மனசாட்சியிடம் கேட்டுவிட்டு பின் மற்றவர்களை குறை சொல்ல வேண்டும். 

3 கருத்துகள்:

  1. http://news.vikatan.com/?nid=11799 பக்கத்தில் உங்கள் கருத்து இடவும்.

    பதிலளிநீக்கு
  2. அய்யா 32 மாநில முதல்வர்கள் இருக்கும் பொது ஏன் ஒரு நாள் கூட்டம் போடுறாங்க 3 நாள் போட்ட எதுவும் தப்பா. தமிழனோட தப்பே தமிழன ஆதரிக்காதது தான். 32 மாநிலங்களோட பிரச்சனைய ஒரு நாள்ல பேச முடியுமா

    பதிலளிநீக்கு
  3. கல்யாண வீட்டுக்கு போனா நீ மாப்பிள்ளையா இரு. சாவு வீட்டுக்கு போனா நீ பிணம்மாயிரு என்ற பழமொழிக்கான அர்த்தத்தை புரிந்து கொள்ளாததன் விளைவு இது. அதற்கான அர்த்தத்தை கூறி சாயம் வெளுக்க வைத்த தங்களின் பதிவு அருமை..

    பதிலளிநீக்கு