ஞாயிறு, ஜூலை 07, 2013

வன்னியர்கள் சாதி வெறியர்களா ?.


தலைப்பை படித்துவிட்டு படிக்க வந்துள்ள தோழர்களே கீழே இருப்பதை நீங்கள் படித்து முடித்தப்பின் நீங்கள் என்னை சாதி வெறியன் என பட்டம் சூட்டலாம். சூட்டுங்கள்……. சில விஷயங்களை பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் போனால் அதுவே குற்றம் தான்.

வடமாவட்டங்களில் வன்னியர்கள் - தாழ்த்தப்பட்ட மக்கள் தான் மெஜாரிட்டி. கடந்த 25 ஆண்டுகாலமாக பெரும் கலவரங்கள் இல்லாமல் ஒற்றுமையாக இருந்து வருகிறது இந்த இரு சமூகமும். மற்ற மாவட்டங்களை விட காஞ்சிபுரம், திருவள்ளுவர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் சாதி பிரச்சனைகள் குறைவு. இரட்டை டம்பளர் என்பதோ, ஊர் பகுதியில் செருப்பு போட்டு நடக்ககூடாது என்ற கட்டுப்பாடு விதிப்பது என்பதோ இங்கு குறைவு. வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக்கு பின் படித்து தங்களை பொருளாதார, கல்வி ரீதியில் மேம்படுத்திக்கொண்டு வாழ பழகிவிட்டார்கள். அப்படி வாழ்பவர்கள் காதல்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு சில ஆண்டுகளாகவே வந்து விட்டார்கள் என்பதே நிகழ்கால உண்மை.

தருமபுரி நாயக்கன்கொட்டாயை சேர்ந்த வன்னிய சமூக பெண்ணான திவ்யாவை தாழ்த்தப்பட்ட சமூகமாக குறிப்பிடப்படும் தலித் இளைஞன் இளவரசன் காதல் திருமணம் செய்துக்கொண்டதால் கலவரம் வந்தது என்ற செய்தி பரப்பப்படுகிறது. உண்மை அதுவல்ல. திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்தே பிரச்சனை வருகிறது. எதனால் பிரச்சனை வந்தது என்பதை எல்லோரும் மூடி மறைக்கிறார்கள். இளவரசன் - திவ்யா இருவரும் ஓடிப்போய் காதல் திருமணம் செய்துக்கொள்கின்றனர். அதை அரசு துறையில் பதிவு செய்ய முடியாத நிலை. காரணம் பையனுக்கு 18 வயது, பெண்ணுக்கு 20 வயதாகிறது. சாதி கௌரவம் இருவரையும் பிரிக்க வேண்டும்மென பிரச்சனையை பெண் தரப்பு காவல்நிலையத்துக்கு கொண்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி, பெண்ணின் தந்தையை சாதியை குறிப்பிட்டு மோசமாக திட்டியதால் அந்த பெண்ணின் தந்தை தற்கொலை செய்துக்கொள்கிறார்.

அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி தான் அந்த மக்கள் சாலை மறியல் செய்கிறார்கள். காவல்துறை அந்த பக்கம்மே வரவில்லை என்பதால் மக்களின் கோபம் அந்த பையனின் உறவினர்கள் மீது திரும்புகிறது. அந்த பையனின் உறவினர்கள் வீடுகள் அடித்து நொறுக்கி கொளுத்தப்படுகின்றன. காலணியே அடித்து நொறுக்கிவிட்டார்கள், 500 குடிசைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன என திசை திருப்பப்பட்டு வன்னியர்கள் கலவரக்காரர்களாக சித்திரிக்கும் போக்கு தொடங்கியது. இளவரசன் - திவ்யா விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றன………..

வன்னியர் சங்கம் நடத்திய விழாவுக்கு சென்றபோது மரக்காணம் அருகே பாமகவினருக்கும் - விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கு காரணம் பாமக தான் என அரசாங்கம், கருத்தாளர்கள் விவகாரத்தை திசை திருப்பினர். ராமதாஸ் போராட்டம் நடத்தியதன் விளைவாக ராமதாஸ் உட்பட பாமகவினர் கைது செய்யப்பட்டனர். பல கடுமையான சட்டப்பிரிவுகளில் பாமகவினர் அடைக்கப்பட்டனர். ஜாமினில் வெளியே வந்தவர்களை மீண்டும் சட்டத்துக்கு புறம்பாக சிறையில் அடைக்கும் நிலையை ஜெ அரசாங்கம் கடைபிடித்து வருகிறது.

இந்நிலையில் தான் பாமக மீதான தாக்குதலோடு மறைமுகமாக வன்னியர்களை கலவரக்காரர்களாக சித்தரிக்கும் போக்கு அதிகரிக்க தொடங்கியது.


4ந்தேதி இளவரசன் மரணம்? நிகழ்ந்ததும் வன்னியர்கள் கொலைகாரர்கள் என மக்கள் மத்தியில் நிறுவும் முயற்சி வேகமாக நடத்தி வருகிறார்கள். பாமகவின் சாதி வெறி, கலவர பேச்சை எதிர்ப்பது என்பது வேறு ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்குவது என்பது வேறு. இன்று சாதியை எதிர்ப்பதாக காட்டிக்கொள்பவர்களும், கருத்தாளர்களும், மீடியா துறையினரும் வன்னிய சாதியினரை குற்றவாளியாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

வன்னியர்கள் ஏதோ காலம் காலமாக தங்கள் சாதியில் மட்டும் பெண் எடுத்து, பெண் கொடுத்து வந்தவர்கள் போலவும், தங்கள் சாதி பெண்களை தாழ்த்தப்பட்ட மற்றும் பிற சமூகத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக்கொண்டால் கொலை செய்கிறார்கள் என்பது போல கருத்தாளர்கள் ஒரு கருத்தை இணைய தளம், தொலைக்காட்சி, செய்தி ஏடுகள் மூலம் பரப்பி வருகிறார்கள். ஒரு சமூகத்தை குற்றவாளியாக்குவது நியாயம்மா ?. பல தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் வன்னிய பெண்களையும், சில வன்னிய இளைஞர்கள் தாழ்த்தப்பட்ட யுவாதிகளை திருமணம் செய்துக்கொண்டு பிள்ளை குட்டிகளோடு ‘சில பிரச்சனைகளை’ எதிர்கொண்டு நிம்மதியாக வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் என்ன கொல்லப்பட்டா விட்டார்கள்.

இன்னொன்று தெரியுமா? தலித் சாதியினர் அடிமையாக நடத்தும் சக்கிலி இனத்தில் திருமண உறவு வைத்துக்கொள்ளமாட்டார்கள். வன்னியர்கள் சிலர் அந்த சக்கிலி சமூக பெண்களை காதலித்து திருமணம் செய்க்கொண்டு பிள்ளைகளோடு வாழ்கிறார்கள்.

சாதியை எதிர்க்கிறோம் என்பவர்கள் தலித் சமூகத்தால் நசுக்கப்படும், அடிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள சக்கிலி சாதிக்காக ஏன் உங்கள் குரல் ஒலிப்பதில்லை?, சக்கிலியை ஒதுக்கி வைக்கும் தலித் சாதியினரை ஏன் நீங்கள் கண்டிப்பதில்லை?. தென் தமிழகத்தில் தேவர் சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களை எப்படி நடத்துக்கிறார்கள் என்பது கண்கூடு. அந்த தேவர் சாதி தலைவர்களை கண்டிக்க ஏன் உங்கள் குரல் எழுவதில்லை?, தென் தமிழகத்தில் மறைந்த சாதி தலைவர்களுக்கு மலை மரியாதை செய்யும் போது எதனால் வாய் மூடி மவுனியாக இருக்கிறிர்கள்?, சாதியை எதிர்ப்பவர்கள் எல்லா சாதியையும் தானே எதிர்க்க வேண்டும்? ஏன் நீங்கள் அதை செய்வதில்லை ?.

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பதை போல வன்னியர்களை பிள்ளையார் கோயில் ஆண்டியாக பார்க்கிறிர்கள். அதனால் தான் அவர்கள் மீது மட்டும் குற்றம்சாட்டுகிறிர்கள். மற்றவர்கள் மீது குற்றம் சாட்டாததற்க்கு காரணம் உங்கள் மனங்களில் புரயோடி போயிருக்கும் சாதி வெறி தான்.

ஒரு விவகாரம் நடந்துவிட்டப்பின் அதில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை எப்படி காப்பாற்ற வேண்டும், பாதிப்பு மேலும் பரவாமல் தடுக்க வேண்டும் என்பதில் தான் நமது கருத்து இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இரு சாதிகளுக்குள் தீராத பகையை ஏற்படுத்துவது போல் நடந்துக்கொள்வது எந்த விதத்தில் நியாயம். 


வன்னிய - தாழ்த்தப்பட்ட சமூகத்தை குறிப்பாக தலித் மக்களோடு மோதவிடும் சூழ்ச்சி நடக்கிறது. இது திட்டமிட்டு செய்யப்படுகிறது. அரசியலுக்கு பாமக செய்வதாக குற்றம்சாட்டப்படுகிறது. இருக்கலாம் மறுப்பதற்கில்லை. ஆனால் அதையேத்தானே தலித் இயக்கங்களும் செய்கின்றன?. பாமகவின் சாதி வெறியை கண்டிக்க துணிந்த வாய்களுக்கு, எழுத தெரிந்த பேனாக்களுக்கு ஏன் இதனை கண்டிக்க முன் வருவதில்லை ?.நேர்மையாக பதில் சொல்லுங்கள்……….. விவாதிப்போம்……………

தவறு யார் செய்தாலும் கண்டிக்க வேண்டும். அப்போது தான் பிரச்சனை தீரும். ஒரு சாராருக்கு சார்பாக நடந்துக்கொண்டால் நிச்சயம் நம்மை காலம் மன்னிக்காது.

13 கருத்துகள்:

  1. தலைப்பின் படி பார்த்தால் எந்த இடத்தில் சாதி, மத வெறி இல்லை ? இன்னொரு விஷயம் தோழா காதல், காமம் என்பவற்றுக்கும் சாதி, மத வேறுபாடுகளுக்கும் எவ்வித தொடர்புமில்லை. காதலிக்கும் போது பெண்ணும் சரி, ஆணும் சரி, ஒதுக்குப்புறமாக உள்ள விடுதிகளில் விபசாரத்துக்கு செல்லும் எவனும் சரி சாதி, மதம் கேட்டு சென்றதாக நோ ஹிஸ்டரி, நோ ஜியாகரபி. திருமணம் எனும்போது மட்டும் இதெல்லாம் எழுவதற்கு காரணமே பொருளாதார, அதிகார சித்தாந்தம். கையாலாகாத இந்த சமூகத்தின் கேடு கெட்ட நிலைமை. நேர்மையான எண்ணத்தோடு இதை எல்லாம் எழுதி உன்னையும் ( பிற சாதி மக்களின் பார்வையில் )சாதி சிறைக்குள் அடைத்துக் கொள்ளாதே. ஆனால் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் சாதிய அடிப்படையிலான கொள்கை, கோட்பாடுகள், முன்னெடுப்புகளை எல்லாம் கண்டு ஏமாந்து விட மாட்டாய் என நம்புகிறேன். அவரொன்றும் மக்களுக்கான சேவையில் சாதியை முன்னிறுத்தவில்லை. தனக்கு ஆள்பலம், பணபலம், அதிகார பலம் தேவை என்பதால் வன்னியர்களை பகடை காய் ஆக்குகிறார். ஏற்கனவே முதலியார் கட்சி தொடங்கியவர், கோனார் கட்சி தொடங்கியவர்களின் லாப நோக்கம் போலவே இவருடையதும்.

    பதிலளிநீக்கு
  2. உங்களுடைய நியாயமான கேள்விக்கு எந்த புரட்சி அறிவு ஜீவியும் பதில் சொல்லமாட்டார்கள் அவணுங்க
    கொளைச்சா பொழுது விடியப்போவுது

    பதிலளிநீக்கு
  3. நாங்கள் தமிழர்கள். உலகில் எந்த மூலையில் தமிழர்களுக்கு அநியாயம் நடந்தாலும் நாங்கள் போராட்டம் நடத்துவோம். பஸ் எரிப்போம். மரம் வெட்டுவோம். ஆனால் உள்ளூரில் சாதி வாரியாக அடித்துக் கொள்வோம். அது எங்கள் பிறப்புரிமை. அதை எங்களிடம் இருந்து பிரிக்க எந்த சக்தியாலும் முடியாது.

    பதிலளிநீக்கு
  4. வன்னியர் சமூகத்தை யார் குற்றம் சாட்டினார்கள் என்று சொல்லுங்களேன். பாமகவினரை மட்டும்தானே குற்றம் சாட்டினார்கள். ஒட்டுமொத்த வன்னியர் என்றால் திவ்யாவுமல்லவா அதில் வருகிறார் ?!! இங்கு ஒட்டும் மொத்த வன்னியரைக் குறை சொல்கிறார்கள் என்று கூறுவதன் மூலம் ஜாதி வெறியர்களையும் நீங்கள் சொன்ன சக்கிலி, தலித் களுடன் குழந்தை குட்டி பெற்று வாழும் ஜாதிய வெறியரல்லாத வன்னியர்களையும் பொதுமைப்படுத்த வேண்டாம்.

    பாமக விசி இரண்டுமே ஜாதிக்கட்சி என்ற போதும் அடக்கப்பட்ட ஜாதிக் கட்சியும், ஆதிக்க ஜாதிக் கட்சியும் ஒன்றல்லவே ! இங்கு யாரும் தலித் கட்சிகளை ஆதரிக்க வில்லையே

    தலித் ஜாதி காவலர் வன்னிய ஜாதிப்பெயர் சொல்லித் திட்டியதால்தான் திவ்யாவின் தந்தை இறந்து விட்டாரா ? இல்லை சொந்தக்காரர்கள் தாழ்த்தப்பட்டவனுடன் ஓடிவிட்ட மகள் குறித்து அவரை அவமானப்படுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்றல்லவா கேள்விப்பட்டேன் ?

    பதிலளிநீக்கு
  5. தாழ்த்தப்பட்ட சக்கிலி மக்கள் இடையே பெரிய அளவில் மோதல் இல்லை . எனக்கு தெரிந்த பலர் கலப்பு மணம் புரிந்து உள்ளனர். உங்கள் கருத்து முற்றிலும் சரி என்று சொல்ல முடியாது . தாழ்த்தப்பட்டவர்கள் மீது வன்னிய சமுதாய மக்கள் கொண்ட வெறுப்பு அதீதமானது .

    பதிலளிநீக்கு
  6. //வன்னியர்கள் சாதி வெறியர்களா ?.//

    வன்னியர்கள் என்று மொத்தமாக பேசுவது கண்டிக்க தக்கது. எவ்வாறு தமிழ் ,தமிழ் என்று பேசி ஆட்சியை பிடித்தார்களோ அதுபோல அரசியலில் தனிமை படுத்தப்பட்ட சில அரசியல் கழிசடைகள் ஜாதி வெறியை தூண்டி விட்டு தாம் சுகமாக இருக்கலாம் என்று நினைக்கின்றனர்..அதனால் இந்த இடத்தில " பா.ம க ஜாதி வெறியர்களா ? " என்று போடலாம் .அவ்வாறு போட்டால் பதில் நிச்சயம் " ஆம் " என்றே வரும்...தவிர அதைவிட இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டும் என்றால் " பா.ம க அரசியல் வெறியர்கள் " " பா.ம.க பதவி வெறியர்கள் "

    உணர்ந்தவர்கள் ஆமோதியுங்கள் ,உணர முடியாதவர்கள் போய் சுட்டி டிவி பாருங்கள் !

    பின் குறிப்பு : அரசியல்ல எல்லா கழிசடைகளும் ஒண்ணுதான். தற்போது பா.ம.க அநியாயம் செய்வதால் அவர்கள் குறிப்பிடபடுகின்றனர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாமகவுக்கு எந்த இடத்திலும் நான் ஆதரவு தெரிவிக்கவில்லை. பாமக செய்த தவறுக்கு வன்னிய சமூகத்தை குற்றவாளியாக்காதீர்கள் என்று தான் கூறுகிறேன்.

      நீக்கு
  7. நீங்க என்ன சொல்ல வர்ரீங்க? வன்னியர்கள் எல்லாம் அப்பாவிகள். சாதி பேதம் பார்க்கத் தெரியாதவர்கள். தலித்களுடன் கட்டித் தழுவி உறவாடுபவர்கள்! தமிழர்கள் அனைவரையும் சமாமாகக் கருதுபவர்கள் அப்பாவியான அவர்களை வைத்து வன்னியரல்லாத அரசியல்வாதிகள் அரசியல் செய்துவிட்டார்கள், அப்படினுதானே?

    நீங்க பண்ணுறதும் அரசியல்தான். அரசியல்வாதிகளை கைகாட்டி வன்னியர்களுக்கு சாதிவெறி இல்லை என்பதுபோல் ஜோடிச்சுப் பதிவெழுவதும் கேவல்மான அரசியல்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழர் வருண்க்கு, வன்னியர்கள் அனைவரும் அப்பாவிகள் என நான் எங்கும் குறிப்பிடவில்லை. குறிப்பிட்ட சிலர் செய்யும் தவறுக்கு ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்காதீர்கள் என்று தான் கூறுகிறேன். வன்னிய சமூகத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை வேறு. தற்போதைய நிலை வேறு என்கிறேன். கல்வி மாற்றம் செய்ய வைத்து வருகிறது என்று தான் கூறுகிறேன். இளவரன் - திவ்யா விவகாரத்தில் வன்னியர்கள் சாதி வெறியர்கள் என சிலர் குறிப்பிடுவது தவறு செய்யாதவனையும் தண்டிப்பது போல் உள்ளது அதைத்தான் தவறு என்கிறேன்.

      நீக்கு
  8. மனசாட்சி,

    //தலித் சாதியினர் அடிமையாக நடத்தும் சக்கிலி இனத்தில் திருமண உறவு வைத்துக்கொள்ளமாட்டார்கள். வன்னியர்கள் சிலர் அந்த சக்கிலி சமூக பெண்களை காதலித்து திருமணம் செய்க்கொண்டு பிள்ளைகளோடு வாழ்கிறார்கள்.//

    அப்படியா? அருமையானக்கண்டுப்பிடிப்பு,இதுக்கு ஆஸ்கார் அவார்டே தரலாம் :-))

    # அவர்கள் அனைவரும் ஒரே குடியிருப்பு பகுதியில் வசிக்கிறார்கள், தண்ணீர் எடுக்கவோ, செருப்பு போட்டு நடக்கவோ தடையில்லை.

    # ஒருவர் வீட்டுக்குள் மற்றவர்கள் சகஜமாக சென்று பழகவும் ,பேசவும் தடையில்லை.

    # அவர்களுக்கிடையே எல்லாவகையிலும் ஒன்றாக சேர்ந்தே சமூகத்திற்கு பொதுவான விழாக்களை கொண்டாடுகிறார்கள்.

    இது தான் தமிழக கிராமங்களில் உள்ள நிலை.

    அப்படி இருக்கும் போது அடிமையாக வைத்திருக்கிறார்கள் என எப்படி சொல்கிறீர்கள்? கிராமம் பக்கம் போனதேயில்லையோ?

    # திருமண உறவு பொறுத்தவரையில் "பேசி சம்பந்தம்" செய்வதில்லை,ஆனால் காதல் மணம் செய்துக்கொண்டால், அடிதடியும் நடப்பதில்லை, அதே ஊரில் அதே இடத்தில் வசிக்கலாம். பின்னர் என்னமோ வன்னியர்கள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார்கள்,ஆனால் அவர்களுக்குள்ளே எவ்வகையிலும் திருமணமே நடக்கவே நடக்காது எப்படி சொல்கிறீர்கள்?

    அப்படி காதலித்து திருமணம் செய்து "நாயக்கன் கொட்டாய்" போல கிராமங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் இருந்தால் ஆதாரமாக கொடுக்கவும்.

    மேலும் மரம்வெட்டி தலைவர் போல 'நாடகக்காதல்" என பரப்புரை செய்துள்ளார்களா? அதற்கும் ஆதாரம் தரவும், கற்பனையாக கதை சொல்ல வேண்டாம் :-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வவ்வால்க்கு,

      நிஜங்களை எழுதும் போது ஆதாரம்மில்லாமல் எழுதக்கூடாது என்பது என் நிலைப்பாடு. என்னிடம் மூன்று நபர்களின் முகவரியோடு தகவல்கள் உள்ளன. வேறு சிலயிடங்கள் பற்றிய தகவல்களும் உள்ளன. நான் முழு கிராமத்தான்.அதோடு, நான் கிராமம் கிராமமாக சுற்றுபவன். கிராம வாழ்க்கை எனக்கு நன்றாக தெரியும்.

      தலித் - சக்கிலி இனத்தில் காதல் திருமணம் நடந்ததால் கொலை கூட நடந்துள்ளன. செய்தித்தாளை படியுங்கள் தோழமையே. அருந்ததி சமூகத்தினர் தலித் சமூகத்தை எதிர்த்து போராட்டம் கூட நடத்தியுள்ளார்கள் வாலாஜா பகுதியில்.

      நீக்கு
  9. இந்தக் கோரிக்கைகள் அரசிடம் கேட்கிறார்களே தவிர ,யாருக்கும் எதிரானது அல்ல. இந்துக்களுக்கு எதிரானது என் இந்துத்வ சகோக்கள் சொல்வார்கள் என்பதனை நாம் அறிவோம்.

    சரி ஆதிக்க சாதிக் கட்சி ஏன் போராட்டம் நடத்துகிறது.

    1. சாதி மறுப்பு திருமணம் குறிபாக தலித்+ஆதிக்க சாதி திருமண எதிர்ப்பு.

    2.வன்கொடுமை சட்ட எதிர்ப்பு.

    இவை இரண்டும் நமது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானவை.

    பதிலளிநீக்கு