நிதின்கட்காரி. மத்திய அமைச்சரவையில்
உள்ள மிக முக்கிய மூத்த அமைச்சர். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்.
இதுமட்டும் தானா என்றால் இல்லை. பி.ஜே.பியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்க்கு நம்பகமான
விசுவாசி. முன்னால் பி.ஜே.பி தலைவர். இந்தியாவில் உள்ள பெரும் தொழிலதிபர்களில் ஒருவர்.
கார்ப்பரேட் லாபி இவருடையது.
இவரது படுக்கை அறையில் இருந்து
தான் ஓட்டு கேட்பு கருவியை கண்டறிந்துள்ளார்கள். இவரோ வதந்தி என்கிறார். வெளியுறவுத்துறை
அமைச்சர் சுஷ்மாசுவராஜ்யும், இது சும்மா லுலுல்லாய்யீ என்றார். பிரதமர் மோடியோ மவுனசாமியாராக
இருக்கிறார்.
கட்காரி வீட்டில் உளவு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட
மறுநாள், சுஷ்மாசுவராஜ், நிதியமைச்சர் அருண்ஜெட்லி வீட்டிலும் கண்காணிப்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டது
என்ற தகவல் வெளியாக இப்போது ஓட்டமொத்த மத்திய அமைச்சர்களும், இந்தியாவை ஆளும் பி.ஜே.பியும்
மவுன விரதம் இருக்க தொடங்கிவிட்டார்கள்.
ஆல் இன் ஆல் அழகுராஜா சு.சாமி
மட்டும், இது காங்கிரஸ் கட்சியின் சதி என்றார். காங்கிரஸ்சும், பிற எதிர்கட்சிகள்
பாராளமன்றத்தில், ஓட்டு கேட்பது என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதை யார் செய்தது
என்பதை தீர விசாரிக்க வேண்டும் என குரல் எழுப்புகிறது. கடந்த காலத்தில் இதே காங்கிரஸ் ஆட்சியின் போது, இன்று ஜனாதிபதியாக உள்ள பிரணாப்முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது அலுவலகத்தில் இருந்து ஒட்டு கேட்பு கருவி
கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. அப்போது காங்கிரஸ் இல்லை என மழுப்பியது.
கடந்த கால விவகாரமும் சரி,
இப்போதைய விவகாரமும் சரி இரண்டு நாட்கள் அதிகபட்சமாக மூன்று நாளில் அப்படி ஒரு சம்பவம்மே
நடக்கவில்லை என்பது போல் அமுக்கப்பட்டுவிடுகிறது. எதனால் அமுக்கப்படுகிறது ?.
ஒட்டு கேட்பு என்பது என்ன புதுசாவாக
செய்கிறார்கள். காலம் காலம்மாக நடப்பது தான். அந்த காலத்தில் ஒற்றர்கள் வழியாக தகவலை
பெற்றார்கள். இப்போது டெக்னாலஜி வளர்ச்சி அடைந்தபின் அதன் வழியாக உளவு பார்க்கிறார்கள்.
பார்க்கிறார்கள் என்றால் யார்
என கேட்கலாம் ?.
ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக்கொண்டு
பிற நாடுகளை உளவு பார்க்கின்றன. நாடுகள் என்றால் இராணுவம், அதிபர்கள், அரசியல்வாதிகள்,
ஆட்சியாளர்கள், உயர் அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள், பெரும் தொழிலதிபர்கள், பிரபல
பத்திரிக்கையாளர்கள் வரை உளவு பார்க்கிறார்கள். அவர்கள் மூலமாக மறைமுகமாக தங்களுக்கு தேவையான தகவல்களை திரட்டுகிறார்கள். அந்த தகவல் மூலம் தன் நாட்டுக்கு யார் மூலமாவுது ஆபத்து உள்ளதா ?, பொருளாதார
கணக்கீடுகள், இராணுவ ரகசியங்கள், தீவிரவாத அச்சுறுத்தல்கள் போன்றவற்றை அறிந்து தன்னை தற்காத்துக்கொள்ளவே எல்லா
நாடுகளும் உளவில் ஈடுபடுகின்றன.
இன்று உலகத்தில் உளவில் கொடிகட்டி
பறப்பது அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, இங்கிலாந்து. இந்த நாடுகளுக்கு அடுத்தபடியாக தான்
பிற நாடுகள்.
ஒவ்வொரு நாட்டின்
ஆட்சியாளர்களும் பிறநாடுகளை மட்டுமல்ல
உள்நாட்டிலும் உளவு வேலை பார்க்க உத்தரவிடுகிறார்கள். உள்நாட்டில்
உள்ள எதிர்கட்சிகள், பிரிவினைவாத இயக்கங்கள், ஜனநாயக இயக்கங்களை கண்காணிக்க
உளவு பார்க்கப்படுகின்றன. சொந்த கட்சியில் உள்ள போட்டியாளர்களை
கண்காணிக்கவும் உளவு பார்க்கப்படுவதும் நடக்கிறது.
அதிலும் குறிப்பாக உலகம் முழுவதும் முன்பு முக்கியமானவர்கள்
மட்டும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டனர். இன்று சாதாரண பொதுமக்கள் வரை கண்காணிப்பு
வளையத்துகள் இருக்கிறார்கள். நாம் அனுப்பும் மின்னஞ்சல்,
நாம் பேசும் செல்பேச்சு, எஸ்.எம்.எஸ், பேஸ்புக், டுவிட்டர், அதி
முக்கிய பாதுகாப்பு நிறைந்த வங்கி கணக்குகள் உட்பட எதுவும்மே ரகசியம் கிடையாது. அது உலகத்தின்
ஏதோ ஒரு மூளையில் நமது தகவல்கள் திருடப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. இதை தடுக்க முடியாது. தற்காத்துக்கொள்ள மட்டும்மே முடியும்.
ஒரு நாட்டின் அமைச்சர்கள்,
முக்கிய அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் டெக்னாலஜி வாயிலாக தாங்கள்
பேசுவதை, அனுப்புவதை பிற நாட்டு உளவுத்துறைகள் இடை மறிக்க முடியாதபடி டெக்னாலஜி வழியாக தடுக்கிறார்கள். ஆனாலும் இன்றைய டெக்னாலஜி புலிகள்
அதை உடைத்து விஷயத்தை அறிந்துக்கொள்கிறார்கள். இப்படி எல்லா
நாடுகளும்மே செய்கின்றன.
டெக்னாலஜி
மட்டுமல்ல நேரடியாக பிற நாடுகளுக்குள் உளவாளிகளை அனுப்பி தகவல் சேகரிக்கின்றன
எல்லா நாட்டு உளவு நிறுவனங்களும். பல உளவாளிகள் எதிரிகளிடம் சிக்கி உயிர் இழந்த சம்பவங்களும்
உண்டு. பல உளவாளிகள் டபுள் ஏஜென்டாக பணியாற்றி செட்டிலானவர்கள் அல்லது கொலை
செய்யப்பட்டவர்களும் உண்டு. ஆட்சியை பிடித்த உளவாளிகளும் உண்டு, ஆட்சியை,
ஆட்சியாளர்களை காலி பண்ணிய உளவாளிகளும் உண்டு. இது ஆட்சியாளர்கள், அதிகார
வர்க்கத்தினர் அறிந்த ரகசியம்.
இந்த ரகசியத்தை
தான் உலக நாடுகளை அமெரிக்காவின்
தேசிய புலனாய்வுத்துறை உளவு பார்ப்பதாக ஆதாரங்களுடன் விக்கிலீக்ஸ்,
ஸ்டென்னோவன் இருவரும் அம்பலப்படுத்தி அமெரிக்காவை மக்கள் மத்தியில் நாறடித்துவிட்டார்கள். பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு
வந்தததால் உளவு பார்ப்பதை அமெரிக்கா நிறுத்திவிட்டது என நினைத்தால் அப்படி நினைப்பவர்கள்
மட சாம்பிராணி என தங்களுக்கு தாங்களே பட்டம் சூட்டிக்கொள்ளலாம். ஏன் எனில் எந்த காலத்திலும்
எந்த அரசும் அப்படி ஒரு முடிவு எடுக்காது. அப்படி எடுத்தால் அது சிக்கலில் தான் போய்
முடியும். அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்களை பொறுத்தவரை ஓட்டு
கேட்பது என்பது பெரிய விஷயம்மே கிடையாது.
போன் பேச்சு, நேரடி பேச்சு ஒட்டு கேட்கப்படுகிறது என்பது மைய,
மாநில, உலகளாவிய இன்றைய, முந்தைய ஆட்சியாளர்களுக்கும், புரட்சியாளர்கள், தீவிரவாதிகள்
உட்பட அனைவருக்கும் தெரியும். இது அநியாயம் என சவுண்ட் விடுவததால்
மாறிவிடாது என்பது அவர்களுக்கு புரியும். இருந்தும் அநியாயம், அக்கிரமம் என சவுண்ட்
உடுவதுயெல்லாம் சும்மா லுல்லாய்க்கு. அரசியல் செய்ய வேண்டும்மே
அதற்காக சவுண்ட் விடுகிறார்கள். அதனால் தான் இரண்டு, மூன்று நாளில் விவகாரம் நமுநமுத்து போகிறது.
ஒட்டு கேட்பால்
ஆட்சி கவிழ்ந்ததுயெல்லாம் அந்த காலம்..... இப்போது ஓட்டு கேட்கவில்லையென்றால் தான்
ஆட்சி கவிழும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக