எபோலா வைரஸ் உலகத்தை இப்போது இந்த வைரஸ் தான்
அச்சுறுத்த தொடங்கியுள்ளது.
மேற்குலக நாடுகள் தங்கள்
நாட்டுக்குள் இந்த நோய் பரவாமல் தடுக்க மருத்துவ ஆராய்ச்சி மைய அதிகாரிகளை
களத்தில் இறக்கிவிட்டுள்ளது. விமானம், கப்பல் வழியாக வரும் மேற்கு ஆப்பிரிக்கர்கள்
மற்றும் அங்கு போய் வரும் சுற்றுலா பயணிகள் உட்பட அனைவரையும் பரிசோதனை செய்தபின்பே
அனுமதிக்கிறது.
இதுப்பற்றி அமெரிக்க அதிபர்
ஒபாமா, “உலகில்
எங்கு புதிதாக நோய் தோன்றினாலும் அதைப் பற்றிய விவரங்களை அறிய
அமெரிக்காவில் உள்ள நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், உலக சுகாதார நிறுவனம்
உள்ளிட்ட முக்கியமான சர்வதேச அமைப்புகளை தொடர்பு கொள்ளும். இந்தப் புதிய வைரஸ்
மிக வேகமாகப் பரவி வருகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் மூன்று நாடுகளில்
இந்த வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. வாஷிங்டனில்
நடைபெறும் மாநாட்டுக்கு 50 நாடுகளில்
இருந்து பிரதிநிதிகள் வரவிருக்கிறார்கள்.
எனவே ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பிரதிநிதிகளை பரிசோதனைக்கு உட்டுபத்த
உத்தரவிடப்பட்டுள்ளது. வருபவர்களில் யாருக்கேனும் இந்த
வைரஸ் நோய்த்தொற்று இருந்தால் அவர்கள்
அமெரிக்காவை விட்டு உடனே திருப்பியனுப்ப படுவார்கள். நோய்த்தொற்று இல்லாதவர்களை மாநாடு
முடியும் வரை அவ்வப் போது பரிசோதனைக்கு உட்படுத் துவோம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட
நாடுகளுக்கு அதை கட்டுப்படுத்த உதவிகள் செய்வோம் எனக்கூறியுள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, லைபீரியா, சியேரா லியோனி ஆகிய
நாடுகளில் அடுத்த சில மாதங்களில் எபோலா
வைரஸ் தாக்குதலில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உயிரிழப்பார்கள் என உலக
சுகாதார நிறுவம் எச்சரித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க
பகுதியில் இதுவரை 700 பேர்க்கு
மேல் இந்த வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர் என்பது
குறிப்பிடதக்கது. 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு
சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
எபோலா வைரஸ் மனித உடலுக்கு எப்படி
வருகிறது ?.
எபோலா வைரஸ்சில் 5 வகைகள் உள்ளன.
இந்த வைரஸ்கள் நோய் தாக்கப்பட்டு இறந்த விலங்கின் ரத்தம் மூலமாக பரவுகிறது. அதோடு
வவ்வால், மான், குரங்குகள் திண்ற பழங்களை நாம் உண்ணும்போது அதில் அதன் ரத்தம்
கலந்திருந்தால் அதன் வழியாக இந்நோய் பரவுகிறது.
நோய் தாக்கி இறந்த விலங்குகளை
அறுக்கும்போது, அதை அப்புறப்படுத்தும் போது பாதுகாப்பு உடைகளை அணிந்து அதன்பின்பே
அப்பணியை செய்ய வேண்டும். இல்லையேல் அதன் உடலில் உள்ள திசுக்கள் வழியாகவும்
இந்நோய் பரவும் அபாயம் உள்ளது.
இந்த நோய் தாக்கிய ஆண்கள் தன்
பெண் துணையோடு உடல் உறவு வைத்துக்கொண்டால் உடலில் கலக்கும் விந்து அணு வழியாகவும்
இந்த நோய் பரவுகிறது.
காற்றின் வழியாக பரவுவது
கிடையாது.
இந்த நோயை கண்டறிவது எப்படி ?.
எபோலா வைரஸ்
தொற்று ஏற்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் வரும். பின்னர் தொண்டை வலி, தலைவலி, உடல் வலி, ரத்தத்துடன் கூடிய
வாந்தி,
வயிற்றுப் போக்கு ஏற்படும்.
நோய் தாக்கம் அதிகரிக்கும் போது கல்லீரல், சிறுநீரகம்
பாதிக்கப்படும். உச்சகட்டமாக காது, மூக்கு, வாய் உள்ளிட்ட உடல்
உறுப்புகளில் இருந்தும், மற்ற
துவாரங்கள் வழியாக கடுமையான ரத்தப் போக்கு ஏற்பட்டு
உயிரிழப்பு ஏற்படும்.
இந்த வைரஸ்சை அழிப்பதற்கான
மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரஸ்சால் பாதிக்கப்பட்டவர்கள்
உடனடியாக குணப்படுத்த முடியாது. நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிப்பதன் மூலமாக
மட்டுமே இதனை தடுக்க முடியும். இந்த வைரஸ் உடலில்
இருந்து எப்போது முழுமையாக நீங்கும் என்பதை கணித்துக் கூற
முடியாது. ஒரு சில மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை நீடிக்கும்.
1967-ல்
காங்கோவில் முதல்முறையாக இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. அப்போது 1,587 பேர் உயிரிழந்தனர்.
வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் மூன்றில் ஒருவர் மட்டுமே
தப்பிப் பிழைத்தனர்.
மனிதர்களுக்கு நோய் தாக்கினால்
அவர்களை தனிமையில் பாதுகாப்பான மருத்துவ அறையில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டும்.
( நான் ஈ படத்தில் நானி ஒரு சின்ன கொசு கூட அறைக்குள் வர முடியாதபடி பாதுகாப்பு
சாதனம் அமைத்திருப்பாரே அப்படி ). மருத்துவர்களும் பாதுகாப்பு உடை அணிந்து தான்
மருத்துவம் செய்வார்கள்.
ஆப்பிரிக்கா நாடுகளில் தான் இந்த
நோய் அதிகமாக பரவுகிறது. இது கண்டுபிடிக்கப்பட்ட 1977 முதல் இன்றுவரை ஐந்தாயிரத்துக்கும்
அதிகமானவர்கள் இறந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கிறது. இதைவிட அதிகமாக
இருக்கும் என்பதே எதார்த்தம்.
எபோலா பற்றி படங்களுடன் தமிழில் நல்ல பதிவு. தொலைகாட்சி செய்திகள் பார்த்தா பயமாவேயிருக்கு.
பதிலளிநீக்கு//1967-ல் காங்கோவில் முதல்முறையாக இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது//
1976 ல் முதல் வந்ததாக பிபிசி யில் சொன்னாங்க.எப்படியோ பல வருடங்களுக்கு முன்பு எப்போதோ வந்த எபோலா நோய் அமைதியா இருந்துவிட்டு 2014 ல் புதிதாக வந்த நோய் மாதிரி வந்து பயமுறத்துகிறதே!