வெள்ளி, ஆகஸ்ட் 01, 2014

மோடிக்கு ஜெ எழுதும் காதல் கடிதம். - இலங்கை சீண்டல்மீனவர்களை காப்பாற்றுங்கள் என தமிழக முதல்வர் ஜெ, இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதை குறிப்பிட்டு ஜெயல்லிதா நரேந்திரமோடிக்கு அடிக்கடி கடிதம் எழுதுகிறாறே அதுயென்ன காதல் கடிதம்மா என அநாகரிகமான முறையில் ஒரு மாநில முதல்வரையும், ஒரு நாட்டின் பிரதமரையும் இணைத்து கொச்சைப்படுத்தி கட்டுரை எழுதி அதை அரசின் பாதுகாப்புதுறை இணைய தளத்தில் வெளியிட்டு தங்களது அரிப்பை தீர்த்துக்கொண்டுள்ளது இலங்கையின் ராஜபக்சே அரசாங்கம்.

இது முதல்முறையல்ல, ஏற்கனவே இதே முதல்வரை சேலையை தூக்குவது போல கொச்சையான முறையில் கார்டூன் வரைந்து தன் கோபத்தை காட்டியது. அதற்கு முன்பு, தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என நேரடியாகவே தாக்கியது. இப்படி பலமுறை தங்களது பாதுகாப்பு துறை இணையதளத்திலும், அரசின் ஆதரவுடன் வரும் செய்தித்தாள்களிலும் கட்டுரைகள் எழுதி தமிழக அரசியல்வாதிகளை, ஆட்சியாளர்களை கிண்டலடித்துக்கொண்டு தான் இருக்கின்றன.

இப்படிப்பட்ட செயல்களுக்கு தமிழகத்தில் இருந்து ஒரு வலிமையான எதிர்ப்போ, கண்டனம்மோ தெரிவிப்பதேயில்லை. இதுதான் இலங்கை ஆட்சியாளர்களுக்கு தைரியத்தை தருகிறது.

சமீபத்திய கட்டுரையில், கடந்த கால காங்கிரஸ் அரசை மிரட்டியது போல இப்போது மோடி அரசை மிரட்ட முடியாது. மோடி அரசு இலங்கைக்கு சாதகமாகயிருக்கும் என சுப்பிரமணியசாமி நம்பிக்கையான உறுதி தந்துள்ளார் என்கிறது அந்தக்கட்டுரை.


இந்தியா சார்பில் உறுதிமொழி தர இந்த சுப்பிரமணியசாமி க்கு யார் அதிகாரம் தந்த்து. யாரிந்த சு.சாமி ?.

அரசியலில் உள்ள காட்டிக்கொடுக்கும் பரம்பரயை சேர்ந்த புரோக்கர் சு.சாமி. தமிழகத்தில் கோமாளியாக பார்க்கப்படும் சு.சாமி, இந்தியாவின் அதிகாரவர்க்கத்தின் புரோக்கர். இப்போது நாடுகள் இடையேயான புரோக்கராகவும் செயல்படுகிறார். அமெரிக்காவின் ஏஜென்டாகவும் செயல்படுகிறார் என்பது பலரின் குற்றச்சாட்டு. இவர்தான் இப்போது இந்திய – இலங்கை இடையேயான வெளியுறவுக்கொள்கை, வர்த்தக்கொள்கை, இராணுவ கொள்கையை தீர்மானிக்கிறார். அதனால் தான் சு.சாமியே சொல்லிவிட்டார் எங்களுக்கு கவலையில்லை என்கிறது இலங்கை அரசாங்கம்.

நூற்றுக்கணக்கான மீனவர்களை சுட்டுக்கொன்ற இலங்கை சிங்கள இராணுவத்தை கண்டிக்கச்சொல்லியும், இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தமிழக மக்களின் எண்ணம். அதைத்தான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு மாநில முதல்வர் கேட்கிறார். பிரதமர் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு பக்கத்தில் உள்ள ஒரு நாடு, அதுவும் தமிழகத்தின் பரப்பளவு கூட இல்லாத ஒரு நாடு இந்தியாவின் பிரதமரையும், முதல்வரையும் மிரட்டுவது, கொச்சைப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம். அரசியல் கடந்து இந்த போக்குக்கு நம் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் இலங்கையை கடுமையாக கண்டிக்க வேண்டும். கடுமை காட்டினால் மட்டும்மே இலங்கையின் அதிகார வர்க்கம் திருந்தும்.

ஆனால் இதை செய்யத்தான் தயங்குகிறார்கள் நமது அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள். 


காரணம் பணம் பணம் பணம்

நடிகர் விஜய் நடித்த கத்தி என்ற திரைப்படம், இலங்கையின் “சிங்கள“ அதிபர் ராஜபக்சேவின் நண்பர் தயாரிக்கிறார். ராஜபக்சேவின் பணமும் அதில் உள்ளது. ஆனால் சிறு எதிர்ப்பு வந்ததும்மே, இயக்குநர் முருகதாஸ், நெடுமாறனை சந்தித்துவிட்டேன், சீமானை சந்தித்துவிட்டேன், வை.கோவை சந்திக்கபோகிறேன். சந்தித்தபின் படம் வெளியாகிவிடும் என தைரியமாக அறிவிக்கிறார். சந்திப்பில் பேசப்பட்டது பற்றி ஒரு வார்த்தையும் வெளிவரவில்லை. ராஜபக்சேவின் பணத்தில் சென்னையில் உருவாகியுள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு தேவையான வசதிகளை ஜெ அரசாங்கம் செய்து தந்துள்ளது. கடந்த காலத்தில் இதுபோன்ற உதவிகளை திமுக அரசாங்கமும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு செய்து தந்துள்ளது.

பதிலுக்கு நம்மவூர் அரசியல்வாதிகளும், இலங்கை ஆட்சியாளர்கள் ஆதரவுடன் கொழும்பில், யாழப்பாணத்தில் தொழில் தொடங்கி சக்கபோடு போடுகிறார்கள். இந்த பணம் தான் இவர்களை வாய் மூடி மவுனியாக வைத்திருக்கிறது.

தமிழகத்தில் இந்தநிலையென்றால் இந்திய ஆட்சியாளர்கள் முந்தைய காங்கிரஸ் அரசாங்கமாகட்டும், இப்போதைய மோடி அரசாங்கமாகட்டும் ராஜபக்சே பெயரை கேட்டாலே மண்டியிட்டு மரியாதை செய்கிறார்கள். ஆனால் வெளியே நாங்க வல்லரசாக போகிறோம் என பீற்றிக்கொள்கிறார்கள்.

அவன் இவனை திட்டுவதும், இவன் அவனை திட்டுவதும் சகஜமாகிக்கொண்டுயிருக்கிறது.

உலக அரங்கில் இந்தியாவின், தமிழர்களின் மானம் தான் வான்வெளியில் பறக்கிறது.

வாழ்க உங்கள் அரசியல்…….

3 கருத்துகள்:

 1. தமிழக முதல்வர் இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதத்தை தரக்குறைவாக விமர்சித்து இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ள செயலை வன்மையாக கண்டிக்கிறோம், இதுபோன்ற செயல்கள் இனிமேல் இலங்கை செய்யகூடாது என்பதை உறுதிசெய்ய இலங்கை தூதரகத்திற்கு அழுத்தம் கொடுக்கும்படி நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் - திருச்சி சிவா (ராஜ்ய சபா திமுக எம் பி) //

  அங்க பாராளுமன்றத்தில் இருக்கும் 37 புண்ணாக்கு தின்னும் மாடுகள் "அம்மே அம்மே"ன்னு கத்துவதை காட்டிலும் திமுகவில் இருக்கும் அண்ணன் திருச்சி சிவா அவர்கள் ராஜ்யசபாவில் இருக்கும் அவர் "தமிழக முதல்வர்" என்னும் பதவியில் இருக்கும்... அது யாராக வேண்டுமாகின் இருந்து தொலையட்டும்... குரல் கொடுக்கின்றார் பாருங்கள்... இது தான் திமுக... இது தான் திமுக.... தமிழன் மானம் காக்க போராடும் திருச்சி சிவா அண்ணன் அவர்களுக்கு நன்றிகள் கோடி!

  பதிலளிநீக்கு
 2. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  படியுங்கள் இணையுங்கள்
  தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
  http://eluththugal.blogspot.com/2014/08/2014.html

  பதிலளிநீக்கு
 3. இந்திய பிரதமர், இந்திய ஒரு மாநில முதல்வர் இவர்களை இலங்கை நாட்டின் அரசின் பாதுகாப்புதுறை இணைய தளத்தில் அவமானபடுத்தும் விதமாக வெளியிட்டதே பிரச்சனை.
  இலங்கை அரசின் பாதுகாப்புதுறை இணைய தளத்தில் இருந்து அந்த செய்தி அகற்றப்பட்டதுடன், இந்த கட்டுரையை வெளியிட்டமைக்காக இந்திய பிரதமரிடமும், தமிழக முதலமைச்சரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம் என்று இலங்கை அரசின் பாதுகாப்புதுறை தனது இணைய தளத்தில் தெரிவித்திருக்கிறது.

  உங்க குற்றசாட்டுகள்படி படி தமிழக அரசியல்வாதிகளை கிண்டலடிக்க இலங்கை பத்திரிக்கையாளர்களுக் உரிமை கிடையாதா? தமிழக அரசியல்வாதிகள் தமிழக ஆட்சியாளர்கள் அப்படி புனிதமானவங்களா?அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் அரசியல்வாதிகளை தமிழக பத்திரிக்கை யாளர்கள் எப்படி எல்லாம் கிண்டலடித்து அவமானபடுத்துகிறார்கள். அப்போ அவர்கள் மீது எல்லாம் பிற நாடுகள் போர் தெடுக்க வேண்டுமா?
  வைகோ சீமான் பாணியிலான ஒரு அறிக்கை உங்க ஒரு பதிவாக வந்தது ஏமாற்றம் :(

  பதிலளிநீக்கு