வெள்ளி, மார்ச் 18, 2011

தெரியாது தெரியாது தெரியாது. -

இந்தியாவின் பிரதமராக 2004 முதல் அந்த நாற்காலியில் உட்கார்ந்துயிருப்பவர் முன்னால் உலக வங்கி தலைவரான பொருளாதார நிபுணர் என வர்ணிக்கப்படும் காங்கிரஸ் கட்;சியை சேர்ந்த நேர்மையானவர் என அடையாளப்படுத்தப்பட்ட மன்மோகன்சிங். மன்மோகன் சிங் அந்த நாற்காலியில் அமர வைக்கப்பட்டபோதே அவர் அமெரிக்காவின் அடிவருடி. இனி இந்தியா அமெரிக்காவின் ஒரு மாகாணம் போல் செயல்பட போகிறது என்ற குரல்கள் கேட்டன. காலப்போக்கில் அப்படியே நடந்து வருகிறது. அதை செயல்படுத்தி வருகிறார் சிங்.

முதலாவது, 2ஜி ஸ்பெக்ட்ராம் பிரச்சனை 2008ல் கிளம்பியது 2010ல் விசாரணை 2011ல் முன்னால் அமைச்சரவை சகா கைதானபோது செய்தியாளர்கள் பிரதமரிடம் கேள்வி கேட்டபோது, ஸ்பெக்ட்ராம் விவகாரம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்றார்.

இரண்டாவது, காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் விளையாடோ விளையாடு என விளையாடிவிட்டார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி கல்மாடி. இதுப்பற்றி மீடியா, அரசியல் கட்சிகள், உள்கட்சியினர் என பல தரப்பில் இருந்தும் கேள்வி எழுப்பியபோது எனக்கு எதுவும் தெரியாது என்றார் பிரதமர் சிங்.

மூன்றாவது, ஆதர்ஷ் வீடு கட்டும் திட்டத்தில் நடந்த முறைகேடு பற்றியும் தெரியாது என்றார். பிரதமரின் நேரடி கண்காணிப்பில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் 4ஜி ஸ்பெக்ட்ராம்மில் நடந்த ஊழல் பற்றியும் தெரியாது என அறிவித்தார். நான்காவது, கேரளாவில் பணியாற்றும் போது பாமாயில் இறக்குமதி செய்ததில் ஊழல் செய்து சிக்கிய தாமஸ் என்பவரை மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் பதவியில் பிரதமர் சிபாரிசில் ஜனாதிபதி நியமித்ததை பிரச்சனையாக்கி நாடாளமன்றத்தில் பெரிய களோபரமே நடந்தது. உச்சநீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்ய சொன்னதும் அவர் மீது இருந்த வழக்குப்பற்றி எதுவும் தெரியாது எனச்சொல்லிவிட்டார்.

இன்று உலக நாடுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் விக்கிலீக்ஸ், 2008ல் இந்தியாவில் பிரதமர் மன்மோகன்சிங் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது எம்.பிக்களுக்கு பணம் தந்து தீர்மானத்தை தோற்கடித்தார்கள் என்ற தகவலை வெளியிட்டது. அப்படி நடந்தது எனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார் சிங்.

நாளை…………….

உங்க தலைவி சோனியாகாந்தியப்பத்தி சொல்லுங்க ? எனக்கு தெரியாது.

இந்தியா எப்படி இருக்கு? எனக்கு தெரியாது.

சாப்பிட்டிங்களா? தெரியாது.

உங்க செயலாளர் யார்? தெரியாது என சொல்லப்போகிறார் இந்தியாவின் பிரதமர் நாற்காலியில் உள்ள சிங்.

அவர்க்கு என்னதான் தெரியும் ?. ஊழலை ஒழிப்போம் என பேச தெரியும், சோனியாகாந்தி சொல்லி தந்ததை அப்படியே ஒப்பிக்க தெரியும், இலங்கையில் தமிழர்களை கொல்ல ஆயுதம் தர தெரியும், அதுப்பற்றி கேட்டால் அப்படி எதுவும்மே தரவில்லை என பொய் சொல்ல தெரியும். கேள்வி கேட்டால் தெரியாது என சொல்ல தெரியும்.

இந்தியாவில் இருப்பவன் முட்டால்கள் என்பது காங்கிரஸ்காரனுக்கு தெரியும். இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வைத்துக்கொண்டு வாழ்க, வளர்க்க சோனியாகாந்தி குடும்பம். ஓத்து ஊதும் சிங் குடும்பமும், கவடி தூக்கும் கூட்டணி கட்சிகளும் வாழ்க, வளர்க்க.

செவ்வாய், மார்ச் 08, 2011

காங்கிரஸ்சிடம் தோற்ற கருணாநிதி.


தமிழக மக்கள் விடிய விடிய பல நாடகங்களை பார்த்தவர்கள் தான். பார்க்கும் போதே க்ளைமேக்ஸ் என்னவென்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அரசியல் களத்தில் தற்போது திமுக நடத்திய நாடகத்தில் க்ளைமேக்ஸ் என்னவென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டு இருந்தார்கள். நாடக ஆசிரியரான திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி இருந்தார் என்பதால் க்ளைமேக்ஸ் தெரியாமல் இருந்தார்கள். க்ளைமேக்ஸ் வெளியே தெரிந்தபோது ஒட்டுமொத்த மரியாதையும் இழந்து போய்வுள்ளார் கருணாநிதி.

சில வாரங்களாக திமுக-காங்கிரஸ் இடையே சீட் தகராறு நடந்துவந்தது. காங்கிரஸ் அதிகமான சீட்க்கு ஆசைப்படுகிறது. 63 சீட் கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, அதோடு தமிழகத்திற்க்கு ஒத்துவராத பல கண்டிஷன்களை போடுகின்றனர். இதனால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்;. மத்திய அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியில் இருந்து ஆதரிக்கிறோம் என நள்ளிரவு அறிக்கை விட்டார்.

7ந்தேதி காலை டெல்லிக்கு பிளைட் ஏறினார்கள் திமுக அமைச்சர்கள் 9 மணிக்கெல்லாம் ராஜினாமா கடிதத்தை தந்துவிடுவார்கள் என தகவல் பரப்பினார்கள். 9…….10…..11 என மணியானதே தவிர அமைச்சர்கள் யாரும் பிரதமரை சந்திக்கவில்லை. பிரதமர் பாத்ரூம் போனார் வரவில்லை. மாலை 6 மணிக்கு தான் வருவார் என்று காரணம் சொன்னார்கள். மாலை 6ம் வந்தது 7……8………என மணியானதே தவிர பிரதமரை இவர்கள் சந்திக்கவேயில்லை.

என்ன ஆனாது இவர்களுக்கு பசி எடுத்து ராஜினாமா கடிதத்தை தின்று விட்டார்களா என மக்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் காங்கிரஸ் ஒரு நாள் டைம் கேட்டுள்ளது என்றார் துணை முதல்வாரன ஸ்டாலின்.

8ந்தேதி இரவு மத்திய அமைச்சர்களான திமுகவை சேர்ந்த அழகரி, தயாநிதிமாறன்னுடன் காங்கிரஸ் கட்சியின் மத்தியமைச்சர்கள் பிரணாப்முகர்ஜி, குலாம்நபிஆசாத் பேச்சு வார்த்தை நடத்தியதன் விளைவாக 63 சீட்க்கு திமுக ஒத்துக்கொண்டதாக குலாம் செய்தியாளர்களிடம் அறிவித்தார். உடன் அழகரி, தயாநிதிமாறன். அடுத்து கருணாநிதி ஒரு அறிக்கை விட்டார், பாமக ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து 1 தொகுதியை வாங்கி 63 தொகுதி காங்கிரஸ்க்கு தந்து 121 இடங்களில் திமுக போட்டியிடும் என அறிவித்து நாடகத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார்.

63 இடம் கேட்கிறார்கள் என அறிக்கை விட்ட கருணாநிதி ஒரு நாடகத்திற்க்கு பின் அதேயிடத்தை தந்துள்ளார். இது மக்கள் எதிர்பார்க்காத முடிவு தான் பள்ளத்தை தோண்டி திமுக அதில் போய் விழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை கழட்டி விட்டபோது மக்கள் மிகப்பெரிய அளவில் தமிழகம் முழுவதும் சந்தோஷப்பட்டார்கள். இலங்கை பிரச்சனையில் காங்கிரஸ்சை பழிவாங்க சரியான சந்தர்ப்பம் என கொண்டாடி மற்றவர்களுடன் சந்தோஷத்தை பறிமாறிக்கொண்டார்கள். அதோடு ஊருக்கு இரண்டு பேர் இல்லாத கட்சி திமுகவை மிரட்டுவதா என மற்ற கட்சியினரும் பேசினார்கள். திமுகவின் முடிவை வரவேற்றார்கள்.


அந்த சந்தோஷம் மறைவதற்க்குள் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை தந்துவிட்டார் கருணாநிதி. எந்த பிரச்சனை எப்படியிருந்தாலும் எடுத்த முடிவில் திமுக உறுதியாக இருந்திருந்தால் தனித்து வெல்லும் அளவுக்கு தொண்டர்களும் பணியாற்றியிருப்பார்கள், மக்களும் ஆதரித்துயிருப்பார்கள். அது எல்லாவற்றையும் கெடுத்துக்கொண்டது திமுக.

63 சீட் தந்த முடிவு, சாணக்கியதனம் என வெளியே சொன்னாலும் இந்த முடிவு எதிர் கூட்டணியான அதிமுகவுக்கு சாதகமாக தான் முடியும். 65 ஆண்டுகாலம் அரசியல் வாழ்வில் பல ஏற்ற தாழ்வுகளை திமுகவும், கருணாநிதியும் சந்தித்துள்ளார்கள். அப்போதுயெல்லாம் எடுக்கப்பட்ட முடிவு மக்களிடம் வரவேற்ப்பு பெற்றது. தற்போது எடுத்துள்ள முடிவு வியாபார முடிவு, கொள்கையை கட்சியை அடகு வைக்கப்பட்ட முடிவு என மக்கள் விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள். அதுமட்டுமல்ல இந்த நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கருணாநிதி தனது அரசியல் சாணக்கிய தனத்தில் தோற்றுள்ளார் என்பது எனது கருத்து.

மக்கள் கருத்து முடிவு தேர்தல் களத்தில் தெரியும்.

புதன், மார்ச் 02, 2011

நடிகர் விஜய்யின் பொய் முகம்.


இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு அரசியல்வாதியாக புதிய வேஷம் கட்டியுள்ள நடிகர் விஜய்யின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. சில மாதங்களுக்கு முன்னர், என்னை அழிக்க பார்க்கறாங்க, என் படத்தை ஒட விடமாட்டேன்கிறாங்க அதுக்கெல்லாம் முதல்வர் கருணாநிதி குடும்பம் தான் காரணம் என விஜய்யும், அவரின் அப்பா இயக்குநர் எஸ்.ஏ.சியும் கூப்பாடு போட்டார்கள்.

தன் தனிப்பட்ட கோபாதாபம், லாப-நட்டத்துக்கு தனது ரசிகர்கள் மூலம் திமுகவை பழிவாங்க முடிவு செய்த விஜய். அதில் மக்களையும் இணைத்துக்கொள்ள அரசியல் இயக்கம் தொடங்க முடிவு செய்தார். பணம் செலவு ஆக கூடாது ஆன கட்சி நடத்தனும் என ரசிகர்களிடம் சொல்ல பின்னங்கால் பிடறியில் ஓடி பின்வாங்கினார்கள் ரசிக சிகாமணிகள். இதனால் அசரவில்லை விஜய் அன் கோ. பெரியதாக ரியாக்ஷன் இல்லை என்றதும் ஜெயலலிதாவை போய் சந்தித்;தார் எஸ்.ஏ.சி. ஜெவோ, திமுகவுக்கு எதிரா பேசுங்க என கீ கொடுத்து அனுப்பியதன் விளைவு புறப்பட்டார்கள் அப்பாவும் மகனும்.

என் தனிப்பட்ட லாபத்துக்காக தான் இயக்கம் தொடங்கறன், திமுகவை எதிர்க்கறன், ஜெ வை ஆதரிக்கறன் என சொல்ல முடியாது என்பதால் தமிழக மீனவர்களை கொல்லும் இலங்கை இராணுவத்தை கண்டித்தும், அதற்க்கு ஒத்து ஊதும் மாநில அரசை கண்டித்து நாகையில் கூட்டம் நடத்தி இலங்கை இராணுவத்தை கண்டித்து, சினிமாவில் பேசுவதை போல வீரவேசமாக பேசிவிட்டு சென்னை வந்துவிட்டார். பின்னாலயே அறிக்கை வாயிலாக விஜய்யின் முகத்தை கிழித்துவிட்டது இலங்கை அரசாங்கம். தமிழர்கள் மேல் உண்மையில் விஜய்க்கு அக்கறையில்லை. அப்படியிருந்திருந்தால் தென்னிந்திய சினிமா உலகில், தமிழகத்தில் கேரளா நடிகையும், இலங்கைக்கு மிக வேண்டப்பட்டவருமான அசின்க்கு எதிர்ப்பு வந்தபோது எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது காவலன் படத்தில் நடிக்க வைத்தார். அவரின் தமிழ் பற்று இதுதான் அதனால் அவர் பேச்சை நாங்கள் பெருசாக எடுத்துக்கொள்ளவில்லை.

விஜய் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பானவர் என்பது பொய் என்பதை செவிட்டில் அறைவதை போல வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது அந்த அறிக்கை. இந்த அறிக்கைக்கு பின்னால் இருக்கும் அரசியல் நமக்கு தேவையில்லை. ஆனால், அறிக்கை சாராம்சம் உண்மை தானே. தமிழர்களை அழித்த இலங்கை சிங்கள அரசியல்வாதிகளுடன் கும்மாளம் போட்ட நடிகை அசின்க்கு தமிழகத்தில் பல இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது காவலன் படத்தில் அசின் தான் எனக்கு ஜோடியா வேணும் என பிடிவாதமாக இருந்து அவரை தன்னுடன் நடிக்க வைத்து போராடிய இயக்கங்கள் முகத்தில் கரியை பூசியவர் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கிறேன் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

தமிழகத்தை விட்டே துரத்த வேண்டும் என தமிழ் உணர்வாளர்களால் குறிப்பிடப்படும் கோல்மால் கட்சியான காங்கிரஸ்சுடன் இணைய பேச்சு வார்த்தை நடத்திய நடிகர் விஜய்யை அப்போதே புறம் தள்ளியிருக்க வேண்டும். செய்யாமல் விட்டதன் விளைவு இன்று தமிழர்களுக்காக போராடுகிறேன் என நாடகம் ஆடுகிறார்.

விஜய்யின் உண்மை முகத்தை சிங்கள அரசு புரிந்து வைத்துள்ளது. தமிழர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.