செவ்வாய், ஜூன் 07, 2011

அரை நிர்வாணம் வேண்டி………. முழு நிர்வாண போராட்டம்………


லண்டனில் உள்ளது வெர்செஸ்டர் கல்லூரி. இக்கல்லூரி உலகின் பிரபலமான ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இக்கல்லூரியில் ரெட் க்ராஸ், புளு க்ராஸ், என்.எஸ்.எஸ் போல பிரேக் க்ளப் என ஒரு குழு உள்ளது. இக்குழுவில் ஆண்-பெண் இருபாலரும் அடக்கம். இக்குழு கடந்த 3 ஆண்டுகளாக புதன்கிழமை தோறும் மதியம் 3 டூ 4 மணியளவில் கல்லூரியில் உள்ள லைப்ரரியில் கூடுகிறார்கள். படிக்கறதுக்காக இருக்கும் என நினைத்தால் உங்களைப்போல் ஒரு முட்டால் வேறுயாரும்மில்லை. பின்ன……… படிப்பவர்களின் மன உளைச்சலை, மன சஞ்சலத்தை குறைப்பதற்காக.

எப்பூடி………

குழுவில் உள்ள ஆண்-பெண் இருபாலரும். லைப்ரரிக்குள் வந்ததும் ஒவ்வொருவரும் சத்தமில்லாமல் தங்களது மேலாடைகளை கழட்டி அரை நிர்வாணமாகுவார்கள். ஆப்படியே நூலகம் முழுவதும் சுற்றி சுற்றி வருவார்கள். யாருக்கும் எந்த தொந்தரவும் தர மாட்டார்கள். 4 மணிக்கு உடைகளை அணிந்துக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். ஆரம்பத்தில் இக்குழுவில் ஒரு சிலரே இருந்துள்ளனர். இப்போது இக்குழுவில் 50க்கும் அதிகமானனோர் உள்ளானர்.

பெல் அடித்தபின் மெல்ல மெல்ல பிக்கப்பாகும் ஏ படங்களை போல நூலகத்தில் நடக்கும் ஷோவை பற்றிய தகவல் கல்லூரி வளாகத்தில் பரவியது. இதை காண ஜொல் விட்டுக்கொண்டு மாணவ - மாணவிகள் க்யூ கட்டி நின்று சக மாணவ-மாணவிகளின் அரை குறை அந்தரங்கங்களை ரசிக்கின்றனர். இதனால் வாரந்தோறும் புதன்கிழமையானால் லைப்ரரியில் மூச்சு விட முடியாத அளவுக்கு முண்டியக்கிறது கூட்டம். 

புள்ளைகளுக்கு என்னமா படிப்பு ஆர்வம் என மகிழ்ந்த பேராசிரியர்கள் குரூப்க்கு இது தெரியவர கையை பிடித்து இழுத்தும் பாடம் படிக்க வர மறுத்துள்ளார்கள். சில வயதான பேராசிரியர்களும் பசங்களோடு சேர்ந்துக்கொண்டு ரசித்துக்கொண்டுள்ளனர். எட்டி எட்டி பார்த்தும் சரியாக பார்க்க முடியாத யாரோ ஒரு பெருசு பசங்க கெட்டுப்போறாங்க என நிர்வாகத்திடம் போட்டு தர ஸ்டூடன்ஸ் படிப்பு பாதிக்கப்படுகிறது அதனால் அரை நிர்வாண போஸ் கூடாது என மெயில் மூலம் எச்சரித்து தடை செய்துவிட்டது. இதை கேட்டு கொதித்து எழுந்த பிரேக் பாஸ்ட் டீம். இது எங்கள் உரிமையில் தலையிடும் செயல். எங்களின் இந்த சேவையால் மாணவ-மாணவிகளின் மனம் அலை பாய்வது(!) தடைபட்டுள்ளது, மன அழுத்தம் குறைந்துள்ளது. இப்போது மாணவ-மாணவிகள் நன்றாக படிக்கிறார்கள்(!), எங்களால் அவர்களுக்கு எந்த தொந்தரவும்மில்லை அதனால் தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தடை தொடர்ந்தால் அரை நிர்வாண சேவை வேண்டி முழு நிர்வாண போராட்டம் நடத்த வேண்டி வரும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்கள்.…………


தயாநிதியின் தள்ளாட்டம். கரையும் சன் மதிப்பு.


திமுகவின் இளம் தலைவர் என ஆங்கில, வட இந்திய ஊடகங்கள் சன் டிவியின் இரண்டாவது உரிமையாளர் தயாநிதிமாறனை வர்ணித்தது. திமுகவை புதிய பாதையில் கொண்டு செல்கிறார் என தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அந்த தயாநிதிமாறன் ஆந்திராவில் உடன் இருந்தே கூ+ழ்ச்சி செய்து மாமனாரிடமிருந்த முதல்வர் பதவியை பறித்து தனதாக்கி கொண்டது போல……… தாத்தாவிடம் உள்ள முதல்வர் பதவியை பறித்து தான் அந்த நாற்காலியில் அமர ஆசைப்பட்டார். கருத்து கணிப்புகளை வெளியிட்டார். அழகிரியை டம்மியாக்கினார். அதை சகித்துக்கொள்ள முடியாத அழகிரி அன் கோ. மதுரை தினகரன் அலுவலத்தை நொறுக்கி 3 பேரை உயிரோடு எரித்தார். உடனே இதற்க்கு பழி வாங்க தான் சார்ந்த கட்சியின் ஆட்சியவே கலைக்க முற்பட்டார் தயாநிதிமாறன். அரசியல் களத்தில் கத்து குட்டி தயாநிதியைப்போல் 100 தயாநிதிமாறனை கண்டவர் கருணாநிதி.

எரிவதை புடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்பதை உணர்ந்து மாறனிடமிருந்த மத்திய அமைச்சர் பதவியை பறித்தார். செத்தப்பாம்பாகி சீண்டுவார்யில்லாமல் கிடந்தார். சன் க்கு போட்டியாக கலைஞர் மீடியா உதயமானது. மோதல் தீவிரமானது. திமுகவை மறைமுகமாக பழிவாங்க முடிவு செய்தார்கள் மாறன் பிரதர்ஸ். காங்கிரஸ் கொம்பு சீவி விட்டது. 2ஜி ஊழல் விவகாரத்தில் மாற்று கட்சி முகாம்களுக்கே போய் டாக்மெண்டுகளை தந்தார்கள். தங்களது ஊடக நண்பர்கள், பாட்னர்கள் மூலம் விவகாரத்தை ஊதினார்கள். விவகாரம் பெரிதாகி, சிக்கலானது.

திடீர் திருப்பமாக இதயம் கனிந்தது, கண்கள் பனிந்தன. குடும்பங்கள் ஒன்றாகின. ஆனால் நீரில் ஒட்டாத எண்ணெய்யானார்கள் மாறன் சகோதரர்கள். போட்டியாகவுள்ள கலைஞர் தொலைக்காட்சி கூடாரத்தை காலி செய்ய முடிவு செய்தார்கள் மாறன் அன் கோ. அதற்கான காய் நகர்த்தல் வடநாட்டில் நடந்தது. அவர்கள் நினைத்ததை போலவே, ரெய்டு, ராஜினாமா, ராசா, கனிமொழி கைது என வரிசை கட்டியது. தேர்தலில் திமுக தோற்றது.

சந்தோஷமாக தான் இருந்தார்கள் மாறன் அன் கோ வினர். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை புரிந்து கொள்ள தவறிய மாறன் பிரதர்ஸ்சை புரிய வைத்து விட்டார் சட்ட நிபுணர் பிரசாந்த்பூஷன். 2ஜி ஊழல் விவகாரத்தில் தயாநிதிமாறன்க்கு பங்கு உள்ளது என நீதிமன்றம் சென்றார். பாஜகவை சேர்ந்த நாடாளமன்ற பொது கணக்கு குழு தலைவர் முரளிமனோகர்ஜோஷி, மாறன் காலத்தில் தான் 2ஜி ஊழல் ஆரம்பமானது என குற்றம் சாட்டினார். அதற்க்கு சாட்சியாக தொழிலதிபரான முன்னால் ஏர்செல் ஓனர் சிவசங்கரன் வந்து நிற்க்கிறார்.

அடுத்ததாக 2005ல் தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி அதி உயர் அழுத்தம் கொண்ட 320க்கும் அதிகமான இணைப்பு கொண்ட ஐ.எஸ்.டி வசதிகொண்ட தொலைபேசி எக்ஸ்சேஞ்ச் தயாநிதிமாறனின் போட்கிளப் வீடு டூ சன் டிவி அலுவலகத்துக்கு இடையே செயல்பட்டது. இதனால் அரசுக்கு 440 கோடி வருவாய் இழப்பு என்ற பூதம் கிளம்பியது. அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லை என்றது அமுல்பேபி. இதோ ஆதாரம் என பக்கம் பக்கமாக காட்டினார்கள். இல்லையே என் பெயரில் ஒரே ஒரு இணைப்பு மட்டும் தான் உள்ளது என சான்று காட்டினார். அது பொய் என முகத்திரையை கிழிக்கப்பட்டது.

திமுகவை நோக்கி வீசிய ஆயுதம் பூமராங் போல இப்போது அவர்களை நோக்கி அதி வேகமாக வருகிறது. அதை தவிர்க்க சோனியா, பிரதமர் மன்மோகன் என பலரை போய் பார்த்தார். மாறனால் முடிய வேண்டிய காரியம் முடிந்ததால் அவரை கழட்டி விட்டுவிட்டார்கள். திமுக தலைமை மவுனத்தை கடைபிடிக்கிறது. தப்பிக்க தங்களது தொழிலதிபர் திறமையை பயன்படுத்துகிறார்கள் மாறன் பிரதர்ஸ்.


இந்த பிரச்சனைகள் முடிவதற்க்குள் சன் டிவி மதிப்பு காலி பெருங்காய டப்பாவாகிவிடும் போல்யிருக்கிறது. மாறன்க்கு எதிராக பிரச்சனை கிளம்பாத போது சன் குரூப்பில் 1 ஷேர் மதிப்பு 540 ரூபாய். பிரச்சனை தொடங்கியபின் ஒரேநாளில் 310 ரூபாய்க்கு வந்துவிட்டது. வரும் நாட்களில் அது இன்னும் குறைய வாய்ப்புள்ளது. ஆக தற்போதைய நிலையில் மாறன்களுக்கு இழப்பு சுமார் 2500 முதல் 3000 ஆயிரம் கோடி என்கிறார்கள் பங்கு வர்த்தகர்கள். பங்கு மையமான செபியிடம் இந்த பிரச்சனை தீர்ந்து விடும், தொழில் பாதிப்பு அடையாது, முடங்காது என விளக்கம் தந்து அறிக்கை வெளியிட்டவர்கள். இது அரசியல் பழிவாங்கல் என காரணம் கற்பிக்கிறது மாறன் சார்பான ஊடக வட்டாரம். ராசா, கனி சிக்கியபோது அது ஊழல். மாறன் சிக்கினால் அது அரசியல் பழிவாங்கலாம். எப்புடீ………

கர்ப்பவதி என்னதான் வயித்தை மறைத்தாலும் ஒருநாள் பிள்ளை பிறந்தே தீரும். அதேபோல் மாறன் தன் ஊழலை என்னதான் மறைத்தாலும் வெளியே வந்தே தீரும். சோற்றில் மறைக்கப்பட்ட பூசணியை போல காங்கிரஸ் கட்சியின் ஊழல் வெளிவந்தால் சிறப்பாகயிருக்கும். வெளிவருமா?.

வியாழன், ஜூன் 02, 2011

விசாரணை வலையத்தில் சன் டிவியும் மாறன்களும்.


திமுகவை அழிக்க காங்கிரஸ்சுடன் ரகியமாக பணி செய்த மாறன் குரூப் தற்போது பழைய மோசடிக்காக நீதிமன்றம், விசாரணை என செல்ல போகிறார்கள். இதிலிருந்து தப்பிக்க தங்களது அரசியல், பண, தொழிலதிபர் செல்வாக்கை பயன்படுத்த தொடங்கியுள்ளது. 
மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் செய்த ஒரு மெகா மோசடி பற்றி தினசாி நாளிதாழ் வெளியிட்டு செய்தியை பாருங்கள்.

டெல்லி: ஏர் செல் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தற்போது மேலும் ஒரு மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ளார். தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல்தொடர்புக்காக 323 இணைப்புகளைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, பிரத்யேக எக்ஸ்சேஞ்சையே அமைத்துள்ளார். இதில் ஒரு இணைப்பிலிருந்து மட்டும் மாதம் ஒன்றுக்கு 48 லட்சம் தொலைபேசி அழைப்புகள் பேசப்பட்டுள்ளன. இந்த வகையில் மொத்தமாக ரூ. 400 கோடி அளவுக்கு பிஎஸ்என்எல்லுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ கணக்கிட்டுள்ளது.
இப்படி ஒரு தனிப்பட்ட சட்டவிரோதமான எக்ஸ்சேஞ்ச் தயாநிதி மாறன் வீட்டில் இயங்கி வருவதாக முன்பே கூறப்பட்டது. ஆனால் அதை அப்போது தயாநிதி மாறன் மறுத்து விட்டார். அந்த சமயத்தில் அவருக்கும், திமுகவுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் நல்லுறவு இருந்தது. அதேபோல காங்கிரஸ் கட்சியும், திமுகவுடன் ஒட்டி உறவாடி வந்தது.இதனால் அந்தப் புகார் குறித்து விசாரிக்கப்படாமலேயே அமுக்கப்பட்டு விட்டது.
இந்த 323 இணைப்புகளையும் தனது பெயரில் இல்லாமல், பிஎஸ்என்எல் பொது மேலாளர் பெயரில் வைத்துள்ளார் தயாநிதி மாறன். தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையிலான தகவல் தொடர்புக்காகக இப்படி ஒரு குட்டி எக்ஸ்சேஞ்சையே தனது வீட்டில் நடத்தி வந்துள்ளார் தயாநிதி மாறன்.
இந்த இணைப்புகளை தயாநிதி மாறன் குடும்பத்தினர் வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த ரகசிய இணைப்புக்காக 3.4 கிலோமீட்டர் தூரத்திற்கு, அதாவது மாறன் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகத்திற்கு ரகசியமாக கேபிள்களையும் பதித்துள்ளனர். பொதுச் சாலையில் இந்த கேபிள் போகிறது. இதுவும் சட்டவிரோதமான வேலையாகும்.
ராசாவுக்கு முன்பு தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் சத்தம் போடாமல் அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனது குடும்பச் சொத்து போல பாவித்து இப்படி விளையாடியிருக்கிறார் தயாநிதி மாறன் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு. இதுகுறித்து விசாரித்த சிபிஐ இதுதொடர்பாக மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு 2007ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி கடிதம் எழுதியுள்ளது. அதில் தயாநிதி மாறனின் மோசடிகளை விரிவாக விளக்கியுள்ளது சிபிஐ.
என்ன கொடுமை என்றால் தயாநிதி மாறனின் வீடு உள்ள போட் கிளப் பகுதியிலிருந்து, அண்ணா சாலை வழியாக, இந்த ரகசிய இணைப்ப கேபிள்கள் போய் முடிந்த இடம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில். அங்குதான் அப்போது சன் டிவியின் தலைமையகம் இருந்துள்ளது. எனவே இந்த மெகா மோசடி குறித்து திமுக தலைமைக்கும் தெரிந்திருக்கும் என்றே கருதப்படுகிறது.
தனது சொந்த பயன்பாட்டுக்கு என்று கூறி வாங்கிய இந்த 323 இணைப்புகளையும், அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த சன் டிவியின் நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்காக, பயன்படுத்தியுள்ளார் தயாநிதி மாறன். இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.
இவை அனைத்தும் சாதாரண தொலைபேசி இணைப்புகள் கிடையாது. ஐஎஸ்டிஎன் இணைப்புகளாகும். அதாவது படு விரைவாக தகவல்களைக் கொண்டு செல்லக் கூடியவை. செயற்கைக் கோள்களை விட மின்னல் வேகத்தில் தகவல்களை செலுத்தக் கூடியவை. உலகின் எந்தப் பகுதிக்கும் தகவல்களை அனுப்பினால் அவை அதி வேகமாக போய்ச்சேரக் கூடிய வகையிலான அதி நவீன இணைப்புகள்.
டிஜிடல் தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் வீடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவன சானல்கள் அனைத்தும் படு பளிச்செனவும், துல்லியமான சத்தத்துடனும் செயல்பட இந்த இணைப்புகள்தான் காரணம். இப்படிப்பட்ட இணைப்புகள் தமிழில் வேறு எந்த சானலுக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தயாநிதி மாறன் புண்ணியத்தால் இப்படி ஒரு அசாத்தியமான வசதியை சன் டிவி நிறுவனம் பெற முடிந்துள்ளது.
இந்த வசதியைப் பெற வேண்டுமானால் பல கோடி ரூபாய் பணத்தை வாடகையாக சன் டிவி நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் ஒரு பைசா கூட செலவில்லாமல் ஓசியிலேயே எடுத்து விளையாடியிருக்கிறார்கள் சன் டிவி குடும்பத்தார், தயாநிதி மாறன் மூலமாக.
வழக்கமாக யாராவது சிலர் தொலைபேசி இணைப்புகளை தவறாகப் பயன்படுத்தினாலே பெரிய அளவில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள். ரகசிய தொலைபேசி இணைப்பகத்தை நடத்தி வந்தவர் கைது என்று செய்திகளில் படித்திருக்கிறோம். ஆனால் தயாநிதி மாறன் நடத்தி வந்த இந்த ரகசிய இணைப்பகம் எப்படி யாராலும் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. சிபிஐ இதுகுறித்து புகார் கூறியும் கூட அதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்துள்ளது பெரும் ஆச்சரியமாக உள்ளது. நியாயஸ்தனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் மன்மோகன் சிங்குக்கு கூடவா இது தெரியாமல் போயிற்று என்பதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.
இந்த 323 இணைப்புகளில், 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக 2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.. சன் டிவிக்கு மட்டுமல்லாமல் மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகத்திற்கும் கூட இந்த இணைப்புகளை மோசடியாக பயன்படுத்தியுள்ளனர் மாறன் சகோதரர்கள். அதுகுறித்து தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
தயாநிதி மாறன் செய்ததாக கூறப்படும் இந்த பகிரங்க மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து நிச்சயமாக பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் தெரிந்திருக்கும் என்றே நம்பப்படுகிறது. அப்படி உள்ள நிலையில், ராசாவுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து அவரை பதவியை விட்டே ஓட வைத்த காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு தயாநிதி மாறன் விவகாரத்தில் மட்டும் பெருத்த மெளனம் காத்தது, காப்பது ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

தன்னை காபபாற்றிக்கொள்ள இப்போது தாத்தாவிடம் ஒடிவருகிறார். திமுகவை காலி செய்ய தயாநிதிமாறனை காங்கிரஸ் மேலிடம் பயன்படுத்தி்க்கொண்டது. மாறன் குரூப்பும் கட்சியை கலகலக்கவைத்தது. இப்போது தயாநிதியை காலி செய்ய சி.பி.ஐயை பயன்படுத்துகிறது. இதுதான் காங்கிரஸ் துரோக தனம்.