செவ்வாய், ஜனவரி 03, 2012

சோக்காளி ‘சோ’.


புத்திசாலி மாதிரியே காட்டிக்கிட்டு அடுத்தவனுக்கு ஐடியா சொல்லிக்கிட்டு அத வச்சி பொழப்ப நடத்தும் ஒரு கலையுண்டு. அதை நாடுகளின் தலைவர்கள் இராஜதந்தரம் என்பர். நாடு விட்டு நாடும், கண்டம் விட்டு கண்டம் போய் பஞ்சாயத்து செய்வது தான் இவர்களது பணி. பஞ்சாயத்தை வைத்தே பல ஆண்டுகள் காலம் ஒட்டுவார்கள். இதை திண்ணை பஞ்சாயத்தாக டீ கடையில் உட்கார்ந்து கொண்டும், ஊருக்குள் செய்துக்கொண்டு சுற்றுபவனை சோக்காளி என்பார்கள். காரணம் இப்படி ஐடியா சொல்றன் என்கிற பேரில் அவரின் ஒட்டுண்ணியாக இருந்து சம்பாதித்து காலத்தை ஓட்டுவார். இதற்க்கு தேவை நாட்டு நடப்பும், கொஞ்சம் வாய் நீளமும் தான். அவனை தான் சோக்காளி என்பார்கள். உழைக்காமலே பந்தாவாக வாழ்பவனை தான் அப்படி பெருசுகள் அழைப்பர்.

அந்த வரிசையில் வருபவர் தான் தற்போது தமிழகத்தை ஆளத்துடிக்கிறது ‘சோ’க்காளி. தமிழகத்தில் தன் குலத்தை சார்ந்த அவா ஆட்சி கட்டிலில் இருக்கும்போது அதை கொண்டு சோக்காளி வாழ்க்கை நடத்த துடிக்கிறார். இதற்க்கு தடையாக இருப்பது தோழி வட்டாரம் என்பதை உணர்ந்து தங்களுக்கு உரிய அவா கூட்டு சேர்ந்து கும்பினி யாகம் நடத்தியதில் ஆட்சியை பிடிக்க துடிக்கிறது தோழி வட்டாரம் என கிளப்பி விட்டது. அதற்க்கு ஏற்றாற்போல் காரியங்களும் நடக்க அவாளுக்கு சாதகமானது. கொள்ளையோ கொள்ளை என கிளப்பி விட தோழிகளுக்குள் பிரலயம். நினைத்தது நடந்தது என மகிழ்ச்சியில் தாண்டவமாடிய இந்த சோக்காளி. உடனே இமயமலைக்கு அடியில் உள்ள தன் அவா வட்டாரத்தை வைத்து மாமிக்கு சாம்பிராணி போட அது உருவாக்கிய புகையில் சோக்காளி சொல்வதே சரியென தலையாட்டுகிறார்.


இதனால் தற்போது சோக்காளியின் ஆட்டம் அதிகரித்துவிட்டது. தோட்டாம், அதிகார நாற்காலி வரையென தற்போது முழுமையும் அவாளின் அதிகாரத்துக்குள் போய்விட்டது. அதிகாரத்தில் உள்ள மாமியே நினைத்தாலும் வெளிவர முடியாத அளவுக்கு நூடுல்ஸ் வளையத்துக்குள் சிக்குண்டுள்ளார்.

மாமிக்கு உள்ள பயமே, வாரி குவித்ததை விசாரிப்பவர்களை கண்டுதான். இந்த அவா கூட்டம், அதை சரிசெய்கிறோம் என்றுள்ளதாம். சோக்காளி தான் தற்போது அதற்க்கு மூளையாக இருந்து செயல்படுகிறாறாம்.

மகிழ்ச்சியில் திக்குமுக்காடும் அவா கூட்டம். மாமியை கொண்டு இன்னும் மாநிலத்தில் என்னன்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை.

திங்கள், ஜனவரி 02, 2012

ஸாரி மேடம். ( பகுதி 7 )




மஞ்சு என்னை நோக்கி வீசியது என் தோள்பட்டை மேல் படீரென பட்டு கீழே விழுந்ததை பார்த்த போது நான் தந்த 5 ரூபாய் காயின் அது. 

அதை குனிந்து கையில் எடுத்தபடியே இப்ப எதுக்கு தூக்கி போடறாங்களாம் என தேவியை பார்த்து கேட்டேன். 

இருவருமே சைலண்டாக இருந்தனர். 

இப்ப உங்களுக்குள்ள என்ன பிரச்சனை என கேட்டாள் தேவி. 

உன் ப்ரண்ட்க்கிட்டயே கேளு எனச்சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டேன். 

மச்சான் என்ன பிரச்சனை. உன் ஆளு ஏன் கோபமாயிருக்கு என கேட்டு தொல்லை படுத்தினான் ஜான். 

இரண்டு நாள் நடந்ததை அப்படியே சொன்னேன். 

இவ்ளோ நாளா நீ லவ்வ சொல்லவேயில்லையா என கேட்ட ஜான். நானாயிருந்தா ரூம் போட்டு எல்லாத்தையும் முடிச்சியிருப்பன்.  

அவனை முறைத்துக்கொண்டு போடா மயிரு. உன் புத்தி உன்னவிட்டு போவூமா. நான் அவளை கல்யாணம் பண்ணிக்க நினைக்கறன். நீ கழட்டிவிட ஐடியா தர்ற. நீ தர்ற ஐடியாவ கேட்டா நான் உருப்பட்ட மாதிரி தான். 

அனுபவஸ்தன் ஐடியா தர்றன் கேளு மச்சான் என்றான் சிரித்தபடியே. 

நீ எல்லாத்தையும் மூடு. என் லவ் மேட்டரை நானே பாத்துக்கறன். 

தேவி மஞ்சுவிடம், என்னடீயாச்சீ. நேத்து ஹோட்டலுக்கு கூப்பிட்டும் போனானா? இல்லையா ?. 

ம். கூப்ட்டும்போனானான். 

அப்பறம் என்ன?. நீ லவ் பண்றன்னு சொல்ல வேண்டியதுதானே

வெளிய வந்து சொல்லலாம்ன்னு நினைச்சன். அதுக்குள்ள அவனே என்னை கை கழுவிடமாட்டீயேன்னு கேட்டான். எனக்கு கோபம் வந்துடுச்சி. 

முறைச்சிட்டு வெளிய வந்தன்னா. பின்னாடி வந்தவன் நான் உன்னை காதலிக்கறன்னு சொன்னான். 

ஐ அப்பறம் ஆர்வமானாள் தேவி.  

அவனே சொல்லுவான்னு நான் எதிர்பார்க்கல. நீ என்ன சொல்றன்னு கேட்டான். 

நீ ஓ.கே தானே சொன்ன ?.

இல்லடீ. ஆச்சர்யத்தல என்ன பேசறதுன்னு தெரியாம கம்முனு இருந்தன். என்னன்னு தெரியல எதுவும் அப்ப சொல்ல முடியாம திரும்பி நடந்தன். அவனும் பின்னாடியே வந்தான். என்னனு தெரியல அதுக்கப்பறம் எதுவுமே பேசல. பஸ் ஏறி ஊருக்கு வந்துட்டோம். காலையில பஸ்ல வரும்போதும் அவன்க்கிட்ட பேச முடியல. அவன்க்கிட்ட சில்லறையில்லன்னு டிக்கட் எடுத்தன். அந்த காச தான் கோபமா எடுத்துவந்து தந்துட்டு போறான். 

பின்ன உன் மேல கோபப்படாம கொஞ்சுவானா. 

இப்ப என்னடீ பண்றத்து. 

மணவாளனே நான் ஏங்குகிறேன்னு தூது அனுப்பு உங்காளு உருகிடுவான். 

ஏய் சும்மாயிருடீ

சரிவிடு மதியம் பாத்துக்கலாம் என்றாள். 

மீண்டும் வகுப்புகள் ஆரம்பமானது. லஞ்ச் பெல் அடித்ததும் ஜானும் நானும் சாப்பிட கிளம்பினோம். 

ஏய் ராஜா என கூப்பிட்டாள் தேவி. 

நானும் ஜானும் நின்று என்ன என்பதை போல பார்த்தோம். 

எனக்கு இன்னைக்கு பர்த்டே எனும் போதே. 

ஏய் சொல்லவேயில்ல. கங்கிராட்ஸ் என கை கொடுத்தேன். 

ஜானும் கங்கிராட்ஸ் சொன்னவன் டிரீட் எதுவும்மில்லயா என்றான். 

நீ கேட்கறதுயெல்லாம் என்னால வாங்கி தர்ற முடியாது என சிரித்தாள் தேவி. 

மூடிக்கிட்டுயிரூடா என ஜானை பார்த்து சொல்லிவிட்டு சரி சாப்ட்டுட்டு வந்துடறோம் அப்பறம் பேசிக்கலாம் என தேவியிடம் சொல்லிவிட்டு கிளம்பியபோது, நான் பர்த்டே ட்ரீட் தர்றன். இன்னைக்கு லஞ்ச் என் செலவு எல்லாரும் ஹோட்டலுக்கு போலாம் என்றாள். 

ஆஹா போலாமே என்றான் ஜான். 

இல்ல வேணாம் தேவி. 

இல்ல போறோம் என கட்டளையிட்டாள் தேவி. 

ஆவள் நினைத்தது நடக்க வேண்டும் என நினைப்பவள் என்பதால் சரி அப்படின்னா வெஜ்டேரியன் ஹோட்டலுக்குதான் போகனும். அப்படின்னா ஒ.கே.  

மச்சான். ட்;ரீட் தர்றது அவ நீ ஏண்டா. இதல மூக்க நுழைக்கற. 

உன்னபத்தி எனக்கு தெரியும். அடுத்தவங்க காசுன்னு காஸ்ட்லியா தான் ஆர்டர் பண்ணுவ அதனால தான் சொன்னன் மூடிக்கிட்டு வா.

ஏய்….. யாரைப்பத்தி என்ன சொன்ன. இன்னைக்கி செலவெல்லாம் என்னுது. தேவிக்கு என்னோட பர்த்டே கிப்ட். 

தேவி, அப்ப பெரிய ஹோட்டலுக்கா போலாம். 

போடா என்ன பெருசா செலவாயிட போகுது நானும் பாத்துக்கறன் என வீம்பு பேசியபடியே வந்தன். 

நான் தேவியிடமும், ஜான்னிடம் பேசினேனே தவிர மஞ்சுவிடம் பேசவேயில்லை. மஞ்சு யாரிடமும் பேசவில்லை. சைலண்டாகவே வந்தாள். 

நடுத்தரமான ஒரு ஹோட்டல்க்குள் நுழைந்து அமர்ந்தோம். சர்வர் வந்து ஒரு மாதிரியாக பார்த்தவனிடம் 4 மினி மீல்ஸ் என ஆர்டர் தந்தோம்.  

எங்களைப்பார்த்த தேவி, இன்னைக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமான நாள். என் வாழ்க்கையில மறக்க முடியாத ஒரு காதல் வாழ்க்கையோட தொடக்க நாள் என்றாள். 

என் காதருகே வந்த ஜான், என்ன மச்சான். காதல்ங்கறா, உண்மைய சொல்லு. நீ காதலிக்கறன்னு சொன்னது மஞ்சுக்கிட்டயா இல்ல தேவிக்கிட்டயா என கிசுகிசுத்தான். 

திரும்பி அவனை முறைத்தேன். 

தேவி என்னிடம் என்னடா சொன்னான். அவனுக்கு கொழுப்பு அதிகமாயிடுச்சி. அப்ப நான் அத குறைச்சி கூப்ட்டுக்கிட்டு வர்றன். நீங்க இருங்க என்றவள். 

வாடா வா என ஜானை அழைத்தாள். 

எங்க என கேட்டபடியே எழுந்தான் ஜான். 

வா சொல்றன் என நடந்தாள். பின்னாடியே ஜான் போவதை பார்த்துவிட்டு என்னை பார்த்தபடியே இருந்த மஞ்சுவை நானும் பார்த்தேன். 

ஸாரி என்றாள். 

எதுக்கு. 
நானும் உன்னை காதலிக்கறன் என்றவள். நான் சொல்லலாம்ன்னு பாத்தன். அதுக்குள்ள நீ சொல்லிட்டயா அதான் பதில் சொல்ல முடியல என்றான். 

சந்தோஷத்தில் திக்குமுக்காடி போய் உட்கார்ந்திருந்தேன். கண்களில் காதலோடு மஞ்சுவை பார்த்தபோது, அவள் தலையை புன்னகையோடு குனிந்துகொண்டாள். 

என்னப்பா ஓ.கேவா என தேவி மஞ்சுவை பார்த்து கேட்க, ஜான் சொல்லிட்ட படியே வந்து அமர்ந்தார்கள் ஆமாம் என தலையாட்டினேன். அவளும் சிரித்தாள். 

மச்சான் காதலிக்க ஆரம்பிச்சிட்ட பணம் தண்ணீயா செலவாகும் ஜாக்கிரதை என்றான். 

அதெல்லாம் கிடையாது என தேவி ஜானை முறைக்க. 

அனுபவஸ்தன் சொன்ன சரியா தான் இருக்கும் விடு தேவி என்றேன். 

இவன் யாரை காதலிக்கறான் என தேவியும், மஞ்சுவும் ஆச்சர்யமாக கேட்க. 

மீல்ஸ் வந்தது. சாதத்தை பிசைந்தபடியே சொல்லட்டாடா என ஜானை பார்த்து கேட்டேன். 

நீ வேற மச்சான். அதான் புட்டுக்கிச்சே என்றான் சோகமாக. 

என்னடா சொல்ற. 

அதையேன் கேட்கற. பின்னாடி வீட்டு பொண்ணு பாக்க அழகா இருந்தாளேன்னு பந்தாவா செலவு பண்ணி அவ கேட்கறதையெல்லாம் வாங்கி தந்தன். ஊர்லயிருந்து இரண்டு நாளைக்கு முன்னாடி அவுங்க அக்கா அதான் நம்ம கூட பத்தாவது படிச்சிட்டு எக்ஸாம் லீவுல கல்யாணம் பண்ணிக்கிட்டு போனாலே குண்டு பூசணி அவ வந்துயிருந்தா. அவ தங்கச்சிய நான் நோட்டம் விடறத பாத்துட்டு தன் தங்கச்சிக்கிட்ட என்னைப்பத்தி ஏதோதோ போட்டு கொடுத்துயிருக்கா. அப்பலயிருந்து பாக்கல. இன்னைக்கு காலையில ஸ்கூல் வந்துக்கிட்டுயிருக்கும் போது எதிர்ல வந்தவளை மடக்கி ஏன் என்க்கிட்ட பேசமாட்டேன்கிறன்னு கேட்டன். 

ச்சீ. பொறுக்கி நீ நல்லவன்யில்லன்னு எங்கக்கா சொன்னா. இனிமே எங்கிட்ட ஏதாவது பேசன எங்கப்பாக்கிட்டயே சொல்லுவன்னு சொல்லிட்டு போய்ட்டா மச்சான் என சாதாரணமாக சொல்லியபடி சாப்பிட்டான். 

என்னடா சாதாரணமா சொல்ற. கவலையா இல்லையா ?

விடு மச்சான். அவ இல்லன்னா இன்னோருத்தி என்றவன். போண்ணு அவளுக்கே அவ்வளவு இருக்கும் போது என் பர்சனாலிட்டிக்கு நிறைய பொண்ணுங்க கிடைக்கும் மச்சான் என்றவன். என் காதருகே வந்து வர்றப்ப நம்ம கூட படிச்சானே டேவிட் அவன் வீட்டுக்கு ஒரு சூப்பர் ஃபிகர் வந்திருக்கு அத ரூட் போட்டுடலாம்ன்னு இருக்கன் என்றான். 

என்னடா அதுக்குள்ள ரகசியம் பேசறிங்க என்றாள் தேவி. 

ஓன்னும்மில்ல என்றபடி கை கழுவ எழுந்தோம். ஜான் விடாப்பிடியாக பில் தந்தான். 

காதல் பெயிலியர்க்கு ட்டீட் தர்றவன் நீ ஒருத்தன் தான் மச்சான் என கலாய்த்தேன். 
ஏய் சும்மாயிருடா. 

தேவி திரும்பி. ஏன் பர்த்டே ட்ரீட்ன்னு சொன்னதெல்லாம் பொய்யாடா என கோபமாக கேட்டுவிட்டு நடக்க பின்னாடியே ஓடிய ஜான், சத்தியமா தேவி உன் பர்த்டேவுக்கு தான் ட்டீட். காதல் பெயிலியர்க்கு இவ்ளோ காஸ்ட்லியா ட்டீட் தர்ற மாட்டன் என சொல்லியபடி போனான்.  

சாலை என்றும் பாராமல் மஞ்சு என் அருகே வந்து என் விரல்களோடு விரல் கோர்த்து நடக்க தொடங்கினால். 


ஞாயிறு, ஜனவரி 01, 2012

ஸாரி மேடம் ( பகுதி – 6 )



என்னடீ உங்காளு. இங்கயே வந்துட்டான்.

ஏய் விளையாடாத அவன் இன்னேரம் கிரவுண்ட்ல இருப்பான்.

நீ நம்பமாட்டயே. இரு என்றவள் ஸ்கூட்டியை கொண்டும் போய் அவன் அருகே நிறுத்தினாள்.

அவனை கண்ட மஞ்சு ஆனந்த அதிர்ச்சியானாள்.

அவனே, கிரவுண்ட்க்கு போனன். சூ இல்லாம விளையாட முடியல. நீ நாளைக்கி   சூ  போட்டுக்கிட்டு வந்தே விளையாடுன்னிட்டாரு சாரு. அதான் வந்துட்டன். பஸ் ஸ்டான்டுக்கு போலாம்ன்னு பாத்தன். இவ தனியா வருவாளே எப்படி வருவாளோன்னு யோசிச்சி தான் அழைச்சிக்கிட்டே போகலாம்ன்னு இங்க வந்தன். மேல வந்தா அதுக்கே ஒரு மாசத்து பீஸ் தாடான்னு கேட்கும் அந்த பிசாசு. அதனால தான் வரல என்றவன். அது சரி டியூஷன் முடிய இன்னும் நேரம்மிருக்கே அதுக்குள்ள எப்படி வந்தீங்க.

அது வந்து, சாயந்தரத்தல பஸ்ல போறது முதல் நாள்யில்லையா பஸ் சீக்கிரம் போய்ட்டா. அதான் கரெக்ட் டைம் என்னன்னு பாத்துக்க முன்னாடியே போகனும்ன்னா அதான் பர்மிஷன்ல வந்துட்டோம் என்ற தேவி. மஞ்சு பக்கம் திரும்பி அப்பறம் என்னம்மா உங்க ஊர்க்காரன் அழைச்சிம்போக வந்துட்டான். நீ இறங்கி சார்க்கூட போ நான் கிளம்பறன் என்றாள் நக்கலாக.

சிரித்துக்கொண்டே பங்க் கடையில் வைத்திருந்த பேக் கை எடுக்க ராஜா திரும்பி போக

பெஸ்ட் ஆப் லக் டீ என கிசுகிசுப்பாக சொல்லியவள் மஞ்சுவை இறங்கியதும் ராஜா நாளைக்கு பாக்கலாம் என சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டால்.

வா போகலாம் என்ற ராஜா புறப்பட இருவரும் நடக்க தொடங்கினார்கள்.

இன்னைக்கி முழுக்க மேடம் அழுதுயிருப்பீங்க போல.

இல்லயே.

பொய் சொல்லாத.

உன் மூஞ்ச பாத்தாலே தெரியுதே.

அதிருக்கட்டும். நீ பேஸ்கட்பால் விளையாட்டுக்கு லட்டர் தந்தத சொல்லவேயில்ல.

டீம்ல சேர்ந்துட்டா, அடிக்கடி க்ளாஸ் கட்டடிக்கலாம்ன்னு ஸ்கூல் திறந்ததுமே லட்டர் தந்தன். உங்கிட்ட சொல்ல மறந்துட்டன். இப்ப வந்து ஓ.கே சொல்லி சேத்துக்கிட்டாங்க. அதான் காலையில உங்கிட்ட சொன்னன்.

சொன்ன சொறக்காய்க்கு உப்பில்லன்னு என மஞ்சு முனக..

என்னது ?

ஓன்னும்மில்ல என்றவளின் மனமோ, ஹோட்டல்க்கு அழைப்பானா, மாட்டானா என்ற எண்ணமே இதய துடிப்பை விட அதிகமாக ஓடியது.

கூப்பிடனும் சாமீ, கூப்பிடனும் சாமீ என மனதில் கெஞ்சியவள் உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சம் சத்தமாகவே கூப்பிடனும் சாமீ என்றாள்.

சடாரென திரும்பியவன் என்ன கூப்பிடனும் சாமீங்கற என்றான்.

அதிர்ந்து போய் ஓன்னும்மில்லயே என்றாள்.

அவளை ஒரு முறை சந்தேகமாக பார்த்தவன், சரி உள்ள வா போலாம் என்றான். அப்போது தான் கவனித்தாள் அவர்கள் ஒரு ரெஸ்டாரன்ட்டு முன் நிற்பதை.

ஏன் என கேட்டவளிடம்.

நீ மதியமே சாப்பிடல. வீட்டுக்கு போக 6:30 யாகிடும். அதுவரைக்கும் சாப்பிடாமயிருந்தா வயிறும், உடம்பும் என்னத்துக்கு ஆகறது. வா வந்து சாப்பிடு.

இல்ல வேணாம். வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கறன் என்றவளின் மனதில் ஒரே குதுகலம். நிச்சயமா இது காதல்தானா என யோசிக்கும் போதே

வான்னு சொல்றனில்ல என்ற குரலில் திடுக்கிட்டவள்

இல்ல பெரிய ஹோட்டலாயிருக்கு. பில் அதிகமா போடுவான். வேணாம் வா.

அதை நான் பாத்துக்கறன். என கையை பிடித்து உள்ளே இழுத்து சென்றான்.

இரண்டு பேர் அமரும் டேபிளில் அவளை உட்கார வைத்துவிட்டு எதிரில் அமர்ந்தவன். என்ன சாப்பிடற ?.

நீ ?

நான் தான் மதியம்மே சாப்ட்டனே.

நீயும் சாப்பிடறதா இருந்தா சாப்பிடறன்.

இல்ல எனக்கு வேணாம் என்றவன்.

உனக்கு வெஜிடபுள் ரைஸ் சொல்லட்டுமா?

உம்.

ஆர்டர் எடுக்க வந்த பேரரிடம் ஒரு வெஜிடபுள் ரைஸ் என்றான்.

டம்ளரில் தண்ணீர் ஊத்திவிட்டு சர்வர் நகர்ந்ததும்

நான் தேவிய காதலிக்கறன்னு நினைச்சி அழுதயில்ல என திடுதிப்பென்று மஞ்சுவை பார்த்து கேட்டான். தண்ணீர் டம்பளரை எடுத்து வாயில் வைத்தவள் அவன் அப்படி கேட்டதும் தொண்டைக்கு கீழ் குடித்த நீர் இறங்க மறுத்தது.

டம்பளரை கீழே வைத்தவள். சைலண்டாக இருந்தாள்.

கேட்டதுக்கு பதிலே காணோம்.

இல்ல அது வந்து……..

அப்படி கோபப்படற என கேட்கும்போதே சர்வர் வந்து வெஜிடபுள் ரைஸ்சை வைத்தான்.

சரி. சாப்பிடு என்றான். அவள் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருந்தவன் எதுவும் கேட்கவில்லை.

என்ன பதில் சொல்றது இதுக்கு என மனம் தவிக்க, நான் உன்னை காதலிக்கறன்னு சொல்லிடலாமா என அவள் மனம் குழம்ப ஆரம்பித்தது. தெளிவான முடிவுக்கு வரும்முன்பே ரைஸ் காலியாகியிருந்தது.

கை கழுவிவிட்டு வந்து பேக் கை எடுத்தாள்.

என்னயும் இப்படி கை கழுவிவிடமாட்டயில்ல என்றான் சோக குரலில்.

என்ன கேள்வி கேட்கறான் லூசு என எண்ணியவள் வா போகலாம் என்றாள் கோபமாக.

வெளியே வந்தவள் சைலண்டாக நடக்க.

நான் உன்னை காதலிக்கறன் மஞ்சு என்றான் தடாலடியாக.

திரும்பி அவனை உற்று பார்த்தாள்.

எதனால காதலிக்கறன்னு கேட்காத எனக்கு உன்னை புடிச்சியிருக்கு அதான் சொல்லுவன், உனக்கு ஒன்னுன்னா என்னால தாங்கிக்க முடியாது. நீ மதியம் சாப்பிடலன்னதும் எனக்கு எப்படியிருந்தது தெரியுமா என அவளை நேருக்கு நேராக பார்த்து பேசினான்.

அவளின் மனதில் ஏகாந்தமோ ஏகாந்தம். ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் திரும்பி பதில் சொல்லாமல் நடக்கதொடங்கினாள். அவள் பின்னாடி நடந்தவன் நான் சொன்னதுக்கு பதில் சொல்லு.

எதுவும் சொல்லாமலே நடந்தாள்.

புடிக்கலயோ, அவசரப்பட்டுட்டமோ என யோசித்தபடி அவள் பின்னால் நடக்க தொடங்கினான். பஸ் ஸ்டான்டில் காத்திருந்த போதும் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பஸ் வந்ததும் அவள் லேடிஸ் சீட்டில் அமர பின் சீட்டில் அமர்ந்தான். ஊர் அருகே வந்ததும் அவள் இறங்கி போய்க்கொண்டேயிருந்தாள். திரும்பி ஒரு பார்வை கூட பார்க்கவில்லை.

வீட்டுக்கு வந்த ராஜா, எதுவுமே சொல்லலயே. காதலிக்காமலயா தேவிக்கிட்ட கோபப்பட்ட என எண்ணியபடியே படுத்துவிட்டான். அந்த நினைப்பிலேயே தூங்கியும் போய்விட்டான்.

காலையில் எழுந்து கிளம்பியபோது பீ.டி சார் ஷீ வாங்க சொன்னது ஞாபகம் வர, ம்மா ஒரு 300 ரூபாய் தாம்மா.

ஏண்டா ?.

ஒரு சூ வாங்கனும்.
காசுயில்லடா.

இப்ப தர்றியா இல்லையா என கத்தியதும் பதில் பேசாமல் கடுகு டப்பாவில் இருந்து எடுத்து தர வாங்கி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கிளம்பினேன்.

நைட்டும் சாப்பிடல இப்பவும் சாப்பிடாம கிளம்பறேயடா என அம்மா கத்தும்;போதே படியை தாண்டீயிருந்தான்.

பஸ் ஸ்டாப்க்கு போனபோது நான் மட்டுமேயிருந்தேன். டீ கடையில் சிலர் அமர்ந்திருந்தனர். நிழல்குடையில் இருந்த சிமெண்ட் பெஞ்ச்சில் உட்கார்ந்தபோது தான் இன்னைக்கு எக்னாமிக்ஸ் டெஸ்ட்டாச்சே என்ற நினைப்பு வந்தது. இரண்டாவது பிரீயட்டே டெஸ்ட் வைப்பாரே அந்தாளு என யோசித்தபடி புக்கை எடுத்து வைத்து மேய தொடங்கினேன்.

மூளை படி என்றாளும் மனமோ மஞ்சுவை தேடி அடிக்கடி அவள் வருகிறாளா என பார்க்க தொடங்கினேன். தொலைவில் மஞ்சு வருவதை காண்டதும் மனதில் இன்னைக்காவது பதில் சொல்லுவால என்ற ஏக்கம். ஊருக்குள் பொண்ணுங்க்கிட்ட பேசவே மாட்டான், நல்லவன் என்ற இமேஜ் இருந்ததால் ஊருக்குள் மஞ்சுவிடமும் பேசுவதில்லை.

பஸ் ஸ்டாப்பிங்க்கு வந்தவள் நான் கவனிக்கறேனா என பார்த்தாள். பார்க்காதது போல் நான் தலையை குனிந்துக்கொண்டேயிருக்க க்கும் என்றாள் அடித்தொண்டையில்.

அந்த சத்தத்தை கேட்டு யாரது என பார்ப்பது போல் பார்த்தேன். அவள் திரும்பிக்கொண்டால்.

நான் பஸ் வருகிறதா என அடிக்கடி எழுந்து வந்து ரோட்டை பார்ப்பதும் திரும்ப போய் உட்காருவதுமாகயிருந்தேன். இந்தமுறை எழும் முன் அவளை பார்த்தேன். என்னை பார்த்துக்கொண்டிருந்தவள் காண்ணாலயே வரல என்றாள்.

அப்படியே உட்கார்ந்துவிட்டேன். 10 நிமிடம்மிருக்கும் லேசாக கணைத்தால் தலையை தூக்கி பார்த்தேன். கண்ணாலே பஸ் வருது என சைகை காட்டினால். புக்கை பையில் வைத்துபடி எழுந்தேன்.

பார்த்தால் தனியார் பஸ். 9 மணியாகிவிட்டதால் இதில் போனதால் தான் டைம்க்கு போகமுடியும் என்பதாலே சைகை காட்டியிருக்கிறாள் என புரிந்து பஸ் ஏறினேன். பஸ்க்குள் போனபின் தான் தெரிந்தது. டிக்கட் எடுக்க சில்லறை காசுயில்லை என்பது. சரியென 100 ரூபாய் தாளை எடுத்து நீட்டினேன்.

4 ரூபாய்க்கு 100 ரூபாய் தந்தா என்ன அர்த்தம். சில்லறை தா என்றார் கண்டக்டர்.

இல்லண்ணே. கவர்மண்ட் பஸ் வரும்ன்னு பாத்தன் வரல.

அதனால சில்லறை எடுத்து வரலன்னே.

சில்லறை தந்து டிக்கட் எடு இல்லன்னா அடுத்த ஸ்டாபிங்ல இறங்கு எனக்கூறிவிட்டு மற்றவர்களிடம் டிக்கட் வாங்க திரும்பினார்.

கண்டக்டரை முறைத்தேன்.

2 டிக்கட் தாங்க என 10 ரூபாயை நீட்டினாள் மஞ்சு.

இன்னோன்னு யாரும்மா?.

என்னை காட்டினாள்.

என்னை பார்த்த கண்டக்டரை முறைத்தபடியே இருந்தேன். சில்லறை எடுத்து வர துப்பில்ல. என்ன முறைக்கற என்றான்.

கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அவனையே பார்த்தேன்.

அதான் நான் டிக்கட் எடுத்துட்டன்யில்ல. அப்பறம் என்ன பேசறிங்க போங்க என்றாள் கண்டக்டரை பார்த்து.

எதுவும் பேசாமல் டிக்கட் டிக்கட் என முன்பக்கம் போனான்.

நான் இவள் பக்கம் திரும்ப அவள் திரும்பிக்கொண்டாள்.

பஸ்சை விட்டு இறங்கினேன். பின்னால் இறங்கியவள் எதுவும் பேசாமல் என்னை முந்தி நடக்க தொடங்கினால்.

10 நிமிடத்தில் பள்ளிவர பேக் கை வைத்துவிட்டு பிரேயரில் வந்து நின்றோம்.

பிரேயர் முடிந்து உள்ளே போனதும் ஜானிடம் மச்சான், ஒரு 5 ரூபா இருந்தா தா என்றேன்.

ஏண்டா ?

தாடா தர்றன்.

எடுத்து தந்தான். மஞ்சுவின் அருகே போய் ரொம்ப நன்றிங்க. டிக்கட் எடுத்ததுக்கு காசு என்றேன். சைலண்டாக இருக்க டேபிள் மேல் வைத்துவிட்டு திரும்பி வந்து என் இடத்தில் உட்கார்ந்தேன்.

அதுங்கிட்ட எதுக்குடா தர்ற ?

காலையில பஸ்ல வர்றப்ப டிக்;கட் எடுக்க சில்லறையில்ல. அவ தான் எடுத்தா. அதான் தந்துட்டு வந்தன் எனச்சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வாத்தியார் வந்துவிட முதல் வகுப்பே ஆங்கிலம் ஆரம்பமானது.

இரண்டாவது வகுப்பு எல்லோரும் டெஸ்ட்க்கு தயாரானோம். எப்போதும் சரியாக வந்துவிடும் அவர் அன்று வரவில்லை. எக்னாமிக்ஸ் சார் வரல. சத்தம் போடாம ஏதாவது படிங்க என்றார் மணி சார்.

அப்பாடா தப்பிச்சோம் என எல்லோருக்கும் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.

ராஜா என தேவி அழைக்க திரும்பி

இன்னா
எதுக்கு காசு தந்த

உன் ப்ரண்ட் காலையில பஸ்ல டிக்கட் எடுத்தாங்க. அதான் திருப்பி தந்தன்.

இதைக்கேட்ட மஞ்சு, கோபமாக என்னை நோக்கி எதையோ வீசினாள்.

தொடரும்……………….