சனி, ஏப்ரல் 30, 2011

திமுகவை அழிக்க நினைக்கும் ராகுல் - காங்கிரஸ்.


ஸ்பெக்ட்ராமில் கூட்டு விளையாட்டு. திமுகவின் எதிர்காலம் ( http://anbanavargal.blogspot.com/2010/12/blog-post_20.html) என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 20ந்தேதி எழுதிய பதிவை மீண்டும் வாசித்துப்பாருங்கள் அன்று நான் சொன்னது இன்று அப்படியே நடந்து வருகிறது. 

திமுகவை அழிக்க காங்கிரஸ் செய்யும் சதியே ஸ்பெக்ட்ராம் விவகாரம் என்று தொிவித்திருந்தேன். அது படிப்படியாக வெளிப்படையாக நடை முறைக்கு வந்துக்கொண்டிருக்கிறது. சமீபமாக பத்திாிக்கைகளில் நம் எழுதியதை ஒட்டி கட்டுரை எழுதி வருகிறார்கள். 

காங்கிரஸ் ஏன் திமுகவை அழிக்க துடிக்க வேண்டும்?

தமிழகத்தில் காங்கிரஸ்சின் ஆட்சி கனவை முற்றிலும் கலைத்தது திமுக. தமிழகம் மட்டுமல்ல வேறு பல மாநிலங்களுக்கு திமுக ஆட்சி பிடித்தது தான் முன்னோடி. திமுகவை பார்த்து கட்சி தொடங்கிய பல பிற மாநிலத்தில் காங்கிரஸ்க்கு தண்ணீ காட்டி முடக்கினார்கள். காலப்போக்கில் காங்கிரஸ் அதை முறியடித்து கொஞ்சம் கொஞ்சம் மேலே வந்தது. இருந்தும் கட்டெறும்பு கதை தான் அதன் நிலை. 

மற்ற மாநிலங்களில் இழந்த ஆட்சியை பிடிக்க முடிந்த காங்கிரஸ்சால் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. அதற்க்கு காரணம் பொியார், அண்ணா ஊட்டிய வெறி, துரோக காங்கிரஸ்சை கருவறுக்க வேண்டும் என்ற கொள்கையை நாம் தொடர்ந்து  மனதில் இருப்பதால் தான். அதை திமுகவில் இருந்து கட்சி ஆரம்பித்த எம்.ஜீ.ஆரும் சாியாக புாிந்துக்கொண்டு காங்கிரஸ்சை டம்மியாக்கும் பணியில் ஈடுபட்டு ஒரளவு சாதித்தார். 

காலப்போக்கில் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சிபொறுப்புக்கு வர முடியாது என உணர்ந்து காங்கிரஸார் திராவிட கட்சிகளின் முதுகில் சவாாி செய்தனர். இந்தியாவில் அரை காலி டாப்பாகி போன காங்கிரஸ்சை   200ல் மத்தியில் காங்கிரஸ் கட்சி திமுகவின் ஆதரவுடன் ஆட்சி பொறுப்புக்கு வந்தது. காங்கிரஸ் தலைவரான சோனியாகாந்தி திமுக தலைவர்களை விழுந்து விழுந்து கவனித்தார். கூழை கும்பிடு போட்டார். நம்மவுர் அதிமுக பிரமுகர்களை விட அதிகமாக குழைந்தார்.

வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்த சீமான் வீட்டு சிட்டெறும்பு வாழையாடி வாழை வாாிசு பதவியை பெற இந்தியாவுக்கு வந்து காங்கிரஸ் எம்.பியானார். கட்சியின் பொது செயலாளர் ஆனார். ( அம்மா தலைவர், பையன் பொதுசெயலாளர். ). கட்சியை மாற்றி அமைக்க போகிறேன். இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தர போகிறேன் என மாநிலம் தோறும் இளைஞர் காங்கிரஸ்க்கு நிர்வாகிகளை நியமித்தார். 

புது செருப்பு கடிக்கும் என கிராமங்களில் ஒரு பழமொழியுண்டு. அதற்க்கேற்ப பொறுப்புக்கு வந்தவர்கள் அடுத்து நாங்கள் தான் ஆட்சியமைக்க போகிறோம் என கனவு கண்டார்கள் ராகுல் கால் வைத்த இடம்மெல்லாம் மண்ணை கவ்வினார்கள் காங்கிரஸார். கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலயே என தோல்வியை முடி மறைத்த ராசா வீட்டு கன்னுக்குட்டியின் பார்வை தமிழக தேர்தல் களத்தின் மீது திரும்பியது. 

அதற்க்கு முன்பே ராகுல் காங்கிரஸ் தமிழகத்தில் திமுகவை ஒழிக்கும் அசைண்மென்ட்டை தொடங்கியிருந்தது. இந்த டீமின் தலைவர் காங்கிரஸ் கட்சியின் ராகுல், உறுப்பினர்களாக அம்பானி சகோதரர்கள், மாறன் சகோதரர்கள் நியமிக்கப்பட்டார்கள். 

ஸ்பெக்ட்ராம் விவகாரம் ஊதப்பட்டு, கிளறப்பட்டது, ஸ்பெக்ட்ராம் விவகாரம் திமுகவை நோக்கியே தள்ளப்பட்டது. அதற்க்கு வட இந்திய, பர்ப்பன மீடியாக்கள் நிரம்ப உதவின, உதவி வருகின்ற. டாக்மெண்ட்ஸ், ஆடியோ போன்றவை காங்கிரஸ் அரசின் உயர்மட்ட ஆதரவுடன் படிப்படியாக லீக் செய்யப்பட்டன. ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் காங்கிரஸ்சின் 60 சதவித பங்குகள் முழுமையாக மூடி மறைக்கப்பட்டன. 

திமுக அமைச்சர், கனிமொழி எம்.பி போன்றவர்கள் அடைந்த லாபம் மட்டும் காட்டப்பட்டன. ஒட்டு மொத்த ஊழல்க்கும் ராசா மட்டுமே காரணம் என ஜோடிக்கப்பட்டது. அதற்க்கு மத்தியரசின் கையில் உள்ள புலனாய்வு துறைகள், மத்தியரசின் அரசு துறைகள் நிரம்ப பணி செய்தன. திமுக அமைச்சர் மற்றும் காங்கிரஸ்க்கு எதிர்ப்பாகயிருந்த சில தொழிலதிபர்கள் கைது செய்ய வைத்தனர். 

சி.பி.ஐயை குற்றப்பத்திாிக்கை தாக்கல் செய்ய கால தாமதம் செய்ய வைத்து குழந்தையை புச்சாண்டியை காட்டி மிரட்டுவதை போல திமுகவை சி.பி.ஐ என்ற புதத்தை காட்டி மிரட்டி தமிழக தேர்தல் களத்தில் வாக்கு வங்கியே இல்லாத காங்கிரஸ் கட்சி 63 சீட்களை பெற்றது. அடுத்து தாயாளுஅம்மாளை கைது செய்வோம் எனச்சொல்லி ஆட்சியில் பங்கு என்ற அஸ்திரத்தை ஏவுகிறது. 

காங்கிரஸ் நம்பிக்கை துரோக கட்சி. தான் வாழ யாரையும் அழிக்கும் குரோதமனம் கொண்டவர்கள் காங்கிரஸ்காரர்கள் என திமுக தலைவருக்கு பலர் பல வழியில் எடுத்து சொன்னார்கள் அதிகார, பண போதை திமுகவின் மேல் மட்டத்தை யோசிக்கவிடாமல் செய்துவிட்டது. சொக்க தங்கத்தை நம்பி ஏமாந்து போனார்கள். இன்று எங்கள் முன்னோர்க்கு நான் சளைத்தவளில்லை என்பதை சோனியா காட்டி விட்டார்.

ஸ்பெக்ட்ராம்மை கிளறி கிளறி தமிழகத்தில் ஆட்சி கனவில் உள்ளது ராகுல் காங்கிரஸ். அதுவும் ஆட்சி பொறுப்பை விட்டு அகற்றிய திமுக மூலமே ஆட்சியில் அமர காய் நகர்த்துக்கிறது. வரும் காலங்களில் திமுகவை ஒழித்து விட்டால் அதிமுகவை ஒழிப்பது சுலபம். அதன் பின் தனிக்காட்டு ராஜா நாம் தான் என ராகுல் நினைக்கிறார். 

அது எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம் தமிழகத்தில் ராகுல் மண்ணுக்குள் போனாலும் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது. திமுகவை மிரட்டி வேண்டுமானால் பின் கதவு வழியாக ஆட்சிக்கு வரலாம். ( நான் ராகுல் வாழ்க்கையை பத்தி இங்க சொல்லலைங்கோ.......) தனித்து நின்றோ, காங்கிரஸ் தலைமையில் மாபெரும் கூட்டணி அமைத்தேயொல்லாம் ஆட்சிக்கு வர முடியாது. திமுக, அதிமுக என்ற கட்சிகள் தமிழகத்தில் இருக்கும் வரை அந்த கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமே முதல்வர்களாக அமர முடியும்.

சனி, ஏப்ரல் 23, 2011

உலகின் முதல் நிர்வாண அலுவலகத்திற்க்கு ஆள் தேவையாம்.



காமத்திற்க்கு என தனியாக காமகூ+த்திரா என்ற புத்தகத்தை உருவாக்கிய இந்தியாவில் தான் பெண்களின் சேலை ஒரு பக்கம் ஒதுங்கியிருந்தாலும், டைட்டான ஜீன்ஸ், டிசர்ட் போட்டு போகும் இளம்பெண்ணை கண்டாலும் நம்மவூர் ஆண்களின் கண் ஒதுங்கி தெரியும் பாகத்தை வெரித்து வெரித்து பார்க்கும். நாம் இயற்றி தந்த காமசூத்ராவை படித்த வெளிநாட்டினர் ஜட்டி- பிராவுடன் தெருவில் நடப்பார்கள், வனவிலங்குகளை காக்க வேண்டும் என்ற பிரச்சாரமா? வெஜிடேரியன் மட்டுமே உண்ண வேண்டும் என்ற விளக்கமா? மக்களை ஈர்க்க நிர்வாண ஊர்வலம் நடத்துவார்கள் அங்குள்ள பொது நல அமைப்பினர். மக்கள் அதை வேடிக்கை பார்த்துவிட்டு போய்விடுவார்கள். அதெல்லாம் அங்கு சகஜம். 

அப்படிப்பட்ட நாட்டில் நிர்வாண அலுவலகம் திறந்து அதில் பணிபுரிய ஆள் வேண்டும் என கேட்டு விளம்பரம் தந்துள்ளார்கள். அது அவர்களுக்கு ஆச்சர்யம்மோ, அதிசயமோயில்லை. நமக்கு ஆச்சர்யம் மற்றும் அதிசம். இந்த மாதிரி மேட்டர்ன்னா நாம தான் ஜொள்விட்டுக்கிட்டே படிப்போமே. அதனால தான் என்னால முடிஞ்ச அளவுக்கு கொஞ்சமா தகவல்களை தேடி தந்துயிருக்கன். படிங்க, ரசிங்க.

பிரான்ஸ் நாட்டில் உள்ளது நியூடு ஹவுஸ் என்ற அலுவலம். சாப்ட்வேர்கள் உருவாக்குவதற்க்கு கோடிங் எழுதுவது, இணைய தளம் உருவாக்கி தருவது, அதை பராமரிப்பது போன்ற பணிகளை இந்த கம்பெனி செய்கிறது. இந்த கம்பெனி 3 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பிக்கப்பட்ட போதே எழுதப்பட்ட விதி, முதலாளி முதல் பணியாளர்கள், ஆபிஸ்பாய் உட்பட எல்லாருமே நிர்வாணமாக தான் இருக்க வேண்டும். அலுவலக வாசல் வரை உடை அணிந்து வரலாம். அலுவலகத்திற்க்குள் வலது காலை எடுத்து வைக்கும் முன் நிர்வாணமாகி விட வேண்டும். உடலில் பிட் அளவுக்கு கூட துணி இருக்க கூடாது. வேலை பார்க்கும் போது, டீ சாப்பிடும் போது, மதியம் உணவு உண்ணும் போது, குழு மீட்டிங் நடக்கும் போது என எல்லா நேரத்திலும் முழு நிர்வாணமாகவே அலுவலகத்திற்க்குள் உலா வர வேண்டும். வீட்டுக்கு போகும் போது உடை அணிந்து கொள்ளலாம். இதில் எந்த காரணத்தை கொண்டும் விதிவிலக்கில்லை.


இதற்க்கு ஒப்புக்கொள்பவர்கள் பணியில் சேரலாம் என்பதே விதி. இந்த விதிகளை ஒப்புக்கொண்டு அந்த அலுவலகத்திற்க்குள் தற்போது கொஞ்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அதில் ஆண்கள் அதிகம், பெண்களில் ஒரு சிலரே பணியாற்றுகின்றார்களாம். இதை கவனித்த கம்பெனி நிர்வாகம், கம்பெனியில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லையாம். அதனால் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் தர எண்ணி அலுவலகத்தில் பெண் ஊழியர்களை அதிகரிக்க நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நிர்வாணமாக பணியாற்ற விருப்பம் உள்ள 20 முதல் 32 வயது வரையுள்ள பெண்கள் விண்ணப்பம் அனுப்ப தகுதியானவர்கள் என விளம்பரம் செய்துள்ளார் நியூடு ஹவுஸ் நிர்வாகியான 63 வயதேயான கிறிஸ்டேலர். மாத சம்பளம் 24 ஆயிரம் பவுண்ட் என அறிவித்துள்ளார். இதுவரை 7 பெண்கள் விண்ணப்பம் அனுப்பியுள்ளார்களாம்.

நிர்வாணம் என்பது அவர்களின் பார்வையில் கலை. நம் பார்வையில் காமம். இந்தியர்களின் பார்வையில் கட்டுரையில் உள்ள புகைப்படத்தை காணாமல் பிரான்ஸ்காரன் பார்வையில் நியூடு ஹவுஸ் அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் படங்களை பாருங்கள்……………

புதன், ஏப்ரல் 20, 2011

குள்ளநாி கூட்டம் பார்த்தபின் வந்த ஆசை. ...............


சில ஆண்டுகளுக்கு முன் வடிவேல் நடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்திற்க்கு பின் திரையரங்கில் போய் படம் பார்ப்பது அரவே இல்லாமல் போனது. ஆனால் சமீபத்தில் குள்ளநாி கூட்டம் படம் பார்க்கும் ஆவல் ஏற்பட்டு அப்படத்தை காண நேர்ந்தது. 

என்ன திடீர் ஞானோதயம் என்கிறிர்களா? டிவியில் ஒளிப்பரப்பான பாடல்கள் கேட்டபோது சிறப்பாக இருந்தது ஒரு காரணம் என்றால் நாயகி ரம்யாநம்பீசன் மற்றொரு காரணம். உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகியாய் ஜொலித்ததால் படம் பார்க்க வேண்டிய ஆவல் என நினைக்கிறேன்.

ரம்யா நம்பீசனை ரசிக்க போனயிடத்தில் வயிறு குலுங்க, கண்ணீல் நிர் வரும் அளவுக்கு காமெடியில் கலக்கியிருந்தார்கள் படத்தில். லாஜிக் இல்லாமல் பார்த்தால் சிறப்பாக இருந்தது படம். சிலயிடங்களில் நடிப்பு என்பது அப்பட்டமாக தொிந்தது. 

அதிலும் அந்த நண்பர்களின் செல்போன் பேச்சு, காதலர்களின் செல்போன் பேச்சு, மாமியார்-மருமகளின் போன் பேச்சு ரகளை பெரும் ரகளை.


குடும்ப படமா எல்லோரும் பார்க்கற மாதிாி எடுத்துயிருக்காங்க. ஆனா என்னை போன்ற பசங்க காதலியோட உட்கார்ந்து பார்த்தா நல்லா தான் இருக்கும். பாருங்க ரசிங்க..........



நானும் படம் பார்த்துட்டு வந்ததுலயிருந்து என் மொபைல் நம்பர்க்கு அந்த மாதிாி யாராவது போன் பண்ணுவாங்களான்னு அடிக்கடி எடுத்துயெடுத்து பாக்கறன் யாரையும் பண்ண மாட்டேன்கிறாங்க. இதுக்கு யாராவது ஐடியா தாங்கப்பா  ..............