புதன், நவம்பர் 30, 2011

செய்தியாளரை மிரட்டி ரவுடிஸம் செய்த பெண் மேயர்.



அட அந்தம்மாவுக்கு தப்பாமல் இருக்கிறார் இந்த மகளிரணி பிரமுகர். உள்ளாட்சி தேர்தலின் போது மேயர் வேட்பாளர்களை ஜெ அறிவித்த பட்டியலில் ஈரோடு மேயர் வேட்பாளர் மல்லிகா என இருந்ததை கண்டு ரரக்களே அதிர்ச்சியாகினர். காரணம், அவர் 1999ல் விபச்சார வழக்கில் காவல்துறையிடம் சிக்கி வழக்கை எதிர்கொண்டவர் என ஆதாரத்தோடு அவரது கட்சியினரே போஸ்டர் அடித்து ஒட்டினர். இது செய்தியாக அப்போதே சர்ச்சையானது. ஈரோடு மா.செம் அமைச்சராக இருந்த ராஜாவின் அராஜகத்தை விட இது பரவாயில்லை என விபாச்சார வழக்கில் சிக்கிய மல்லிகாவை மேயராக்கினார்கள் ஈரோடுவாசிகள். 

இப்போது அதே ஈரோடுவாசிகள் ராஜா பரவாயில்லை என பேச வைத்துவிடுவார் போல் உள்ளது. ஈரோடு மாநகர மேயர் மல்லிகாபரமசிவம். துணை மேயர் பழனிச்சாமி. இருவரும் அதிமுகவினர். இவர்களுக்குள் மாநகராட்சியில் அடிக்கடி தகராறு ஏற்படுவதை சம்பவத்தோடு காலைக்கதீர் நாளிதழ் தொடர்ந்து செய்தியாக வெளியிட்டு வந்துள்ளது. 

இதனால் கோபமான மேயர் மல்லிகா தன் பரிவாரங்களோடு 30ந்தேதி மதியம் ஈரோட்டில் உள்ள காலைக்கதிர் அலுவலகத்திற்க்கு சென்றவர். அலுவலகத்தில் புகுந்து யார்ரா அவன் என்னைப்பத்தி தொடர்ந்து செய்தி எழுதறது என தகராறு செய்ததோடு, என்னடா ஆபிஸ் நடத்தறிங்க, பெரிய இவனுங்களாடா நீங்க என எகிறியதோடு அங்கிருந்த டெலிபோன், கம்யூட்டரை கீழே தள்ளிவிட்டு இனிமே என்னைபத்தி எழுதன உங்களை ஒழிச்சிடுவன் என மிரட்டிவிட்டு நகர, உடன் வந்திருந்த மகளிரணிகள் அசிங்க அர்ச்சனை வேறு நடத்தியுள்ளனர்.  

இந்த மிரட்டலை உடனே ஈரோடு பத்திரிக்கையாளர்கள் கவனத்துக்கு செல்ல அவர்கள் எஸ்.பி பன்னீர்செல்வத்தை சந்தித்து புகார் வாசித்துள்ளனர். அவர் விசாரிக்கறன் போய்ட்டு வாங்க என்றுள்ளார். ஒரு அதிகாரி வந்து விசாரித்துவிட்டும் சென்றுள்ளார். 


இதற்க்கு மேல் காவல்துறையால் என்ன செய்ய முடியும். கை கட்டி வேடிக்கை பார்க்கலாம் இல்லையேல் மேயர் அல்லது உடன் போன மகளிரணி பிரமுகர்களிடம் செய்தி ஒன்றை தர அலுவலகம் சென்றோம். அங்கே அவர்கள் எங்கள் கையை பிடித்து இழுத்து ‘அதுக்கு’ கூப்பிட்டான் என புகார் வாங்கி காலைக்கதிர் ஊழியர்கள் மீது வழக்கு போடுவார்கள். ஏன் என்றால் மிரட்டியது ஆளும்கட்சி. அதுவும் ஜெவின் மகளிரணி, மேயர். அவர் மீது புகார் தந்தால் நடவடிக்கை எடுக்குமா அடிமை சேவகம் செய்யும் காவல்துறை.

இதே காரியத்தை கலைஞர் ஆட்சி காலத்தில் ஏதோ ஒரு முக்கிய பிரமுகர் செய்திருந்தால், ஜெ குதித்திருப்பார். அவரின் ஆதரவாளர்கள் வானத்துக்கும் பூமிக்கும் நடுநிலை என்ற பிம்பத்தை பூசிக்கிட்டு வாய்கிழிய கத்தியிருப்பார்கள். அறிக்கைகள் பறந்திருக்கும். இது ஜெ ஆட்சி காலம் என்பதால் அடக்கமோ அடக்கம். 

மேயர் மல்லிகாவுக்கு பத்திரிக்கை அலுவலகம் சென்று மிரட்டும் அளவுக்கு தெரியம் வரக்காரணம். அவருக்கு அமைச்சர் இராமலிங்கத்தின் அதீத ஆதரவு இருப்பது மட்டுமல்ல. கடந்த காலத்தில், ஆதாரங்களோடு எழுதியதற்க்கே அதிகார போதையில் பத்திரிக்கை ஆசிரியரை பொடா வில் உள்ளே தள்ளியவர் முதல்வர் நாற்காலியில் வீற்றிருக்கும் ஜெ. பத்திரிக்கை அலுவலககத்துக்குள் புகுந்து ஏவலர்களை விட்டு பத்திரிக்கையாளர்களை தாக்க உத்தரவிட்ட ஜெ வின் மகளிரணி பிரமுகர் எப்படியிருப்பார். அவரைப்போலத்தானே. 

ஒருவரைப்பற்றி தவறாக செய்தி வருகிறது என்றால், தவறான செய்தி என கூறி மன்னிப்பு கேட்க சொல்லியிருக்கலாம் அ மறுப்பு போட சொல்லியிருக்கலாம் அ வழக்கு தொடர்ந்துயிருக்கலாம் அ இந்திய பிரஸ் கவுன்சிலில் முறையிட்டுயிருக்கலாம். இவ்வளவு வழிகள் இருக்க ரவுடிப்போல அலுவலகத்துக்குள் புகுந்து மிரட்டுவது என்பது அதிகார போதை. ஒரு பத்திரிக்கை அலுவலகத்துக்குள் புகுந்து செய்தியாளர்களை மிரட்ட ஆண் அரசியல்வாதிகள் கூட தயங்குவார்கள். ஆனால் அதை இந்த பெண் மேயர் தைரியமாக செய்துள்ளார். இதற்காக வேண்டுமானால் பாராட்டலாம். 

செவ்வாய், நவம்பர் 29, 2011

திருந்தாத ‘காவல்’ நாய்கள்.




தமிழக காவல்துறைக்கு பலப்பல சலுகைகள் ஆட்சியமைத்த 6 மாதத்திலேயே முதல்வர் ஜெயலலிதா வாரி வழங்கியுள்ளார். ஆனால் எவ்வளவு சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் மாறமாட்டோம் என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கிறார்கள் காவல்துறையில் உள்ள சில ஓநாய்கள். 

அத்தியூர் விஜயா மானபங்கம், ரீட்டாமேரி கற்பழிப்பு, சிவகாசி ஜெயலட்சுமியிடம் விழுந்த காவல் அதிகாரிகள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் போலிஸாரின் முகத்திரை கிழிக்கப்படுகிறது. தற்போது, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த மண்டபம் கிராமத்தை சேர்ந்த இருளர் சமூகத்தை சேர்ந்த 4 இளம் பெண்கள் திருக்கோவிலூர் போலிஸார் மீது கற்பழிப்பு புகார் ஒன்றினை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் தந்து நீதி கேட்டுள்ளார்கள். 

பிரச்சனை பெருசாகி தலைவர்கள் அறிக்கைகள் விட்டதும், புகார் பதிவானது. தாங்கள் கற்பழிக்கப்பட்டது பற்றியும், அது யார் யார் என அப்பெண்கள் நீதிபதியிடம் வாக்குமூலமாக தந்துள்ளார்கள். உடனே காவல்துறை தலைமை, அந்த காவல்நிலைய ஆய்வாளர் உட்பட 5 காவலர்களை இடைக்கால பணி நீக்கம் செய்துள்ளது. 

அடுத்து…………..?

விசாரணை நடக்கும். நியாயமாக நடக்கும்மா என்பது பெரிய கேள்விக்குறி. காரணம், அரசு துறை ஊழியர்களிடத்தில் ஒரு நோய் உள்ளது. அதாவது நீதித்துறை-காவல்துறை-மருத்துவதுறை-வருவாய்துறை இடையே ஒரு இழை போன்ற நட்புயிருக்கும். இவர்களின் நேசம் கரைபுரண்டோடும். 

காவல்துறையை சார்ந்தவர்க்கு ஒரு பிரச்சனை என்றால் வருவாய்துறையும், மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்க்கு ஒரு சிக்கல் என்றால் காவல்துறையும் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக உதவுவார்கள். அரசு ஊழியர்கள் தங்களுக்குள் விட்டு தரமாட்டார்கள். நீதி வளையும். உண்மை மறைக்கப்படும். இதற்க்கு எத்தனையோ சம்பவங்கள் இங்கு உண்டு. இதை ர்Pட்டாமேரி, விஜயா வழக்கிலேயே காண முடிந்தது. அதையும் மீறித்தான் மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டத்தால் நீதி வென்றது. இருள சமுகத்தை சேர்ந்த பெண்களின் விவகாரத்திலும் வழக்கு, வாய்தா என போனாலும் இதை ஒன்னும்மில்லாமல் ஆக்கத்தான் அரசுதுறை முயலும். 

காவல்துறையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் அந்த காக்கி உடையை மாட்டும் போதே, மனசாட்சியை கழட்டி வீட்டு ஆணியில் தொங்கவிட்டுவிட்டு அதிகார போதை தலைக்கு ஏறிய பின்தான் பணிக்கு வருகிறார்கள். மேலதிகாரி மீதான வெறுப்பை, பணிச்சுமையை திருட்டு வழக்கில் மாட்டும் திருடர்களிடம் காட்டி கோபத்தை தீர்த்துக்கொள்கிறார்கள். இரவில் மனைவியுடன் படுக்கமுடியவில்லை என்பதற்க்காக இப்படி அப்பாவி பெண்களை வேட்டையாடுவது எந்த விதத்தில் நியாயம். 

செக்ஸ் என்பது ஒரு உன்னதமானது. மனிதனுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும், பறக்கும் பறவைகளுக்கும் அந்த மோகம் உண்டு. ஆனால் அது இருமனம் ஒத்து செய்யவேண்டியது. ஊடலின் போது இருவரில் ஒருவருக்கு விருப்பமில்லையென்றாலும் அந்த மோகம் வீணானது. காமத்தை அனுபவிக்கும் போது மனதில் ஒரு புத்துணர்ச்சியிருக்க வேண்டும். வெறி இருக்ககூடாது. காவல்துறையில் இருக்கும் சில கறுப்பாடுகளுக்கு இருப்பது மோகம்மல்ல. வெறி. 

இந்த வெறிநாய்களை விசாரணை என்ற பெயரில் உல்லாசமாக இருப்பதை அனுமதிப்பதை விட மோகம் வந்தால் அனுபவிக்க முடியாத வகையில் ‘அதை’ கட் செய்து விட வேண்டும். அப்போது தான் இதுபோன்ற வெறிநாய்கள் திருந்துவார்கள்.  

திங்கள், நவம்பர் 28, 2011

சினிமாக்காரர்களுக்கு நாவடக்கம் தேவை.




நடிகர் சிவக்குமார், புது இலக்கிய மேடை பேச்சாளர். கம்பன் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும், இலக்கிய நூல்களை பற்றியும் மேடைகளில் அடுக்கு மொழில் பேசும் இந்த நடிகர் தமிழ் பெண்களை மேடைகளில் கிண்டலடித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது தமிழகத்தில் தியாகராஜபாகதவர் என்ற சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்து கொண்ட நடிகர் இருந்தார். அவரின் நடிப்பும், அவரின் குரல் வளம், உடல் பலத்தை பார்த்த கேட்ட தமிழ் பெண்கள் தங்களது கணவன்மார்களிடம் உனக்கு பிள்ளைகளை பெற்றேன், ஆனால் இவர் போன்ற ஒரு ஆளிடம் சென்று பிள்ளைகள் பெற வேண்டும் எனச்சொல்லி அவருடன் படுக்க அனுமதி கேட்டார்களாம்.

அதேபோல், காதல் திருமணம் செய்துக்கொண்டு ஐதராபாத்தில் வாழும் ஒரு தம்பதி, அப்பெண் சுகத்துக்காக தனது கணவனின் நண்பரிடம் சுகம் கண்டால், கணவன் தன் மனைவியின் தோழியுடன் அதாவது தனது நண்பனின் மனைவியுடன் சுகம் கண்டான். இது இருவரும் தெரிந்தும் கண்டுக்கொள்ளமால் தங்களது போக்கில் வாழ்கிறார்கள் இதுதான் இன்றைய காதல் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளாராம்.

ரிட்டையர்டு நடிகரான சிவக்குமார், தனது மூத்த மகன் சூர்யாவுக்கு காதல் திருமணம் செய்து வைத்துள்ளார். அப்போ, அவரின் மகனும் மருமகளும் ஐதராபாத்தில் உள்ள ஜோடிகளைப்போல் தான் நடந்துக்கொள்கிறார்களா?,


அவரது இளைய மகன் நடிகர் கார்த்தியை விட அவரது பெரிய மகன் சிறப்பாக நடிக்கிறார் என்ற பேச்சு உள்ளது. அப்போ கார்த்தியின் மனைவி அவருக்கு பிள்ளை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறா?. என சிவக்குமாரிடம் கேள்வி கேட்கவேண்டும் என்ற எண்ணம் வருகிறது. ஆனால் கேட்க மனம் வரவில்லை. இவர் பேசியதற்க்கு அவர்கள் என்ன செய்வார்கள்.

சிவக்குமார் போன்ற சினிமாக்காரர்களுக்கு முதலில் நாவடக்கம் தேவை. சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் பெண்கள் கற்புடையவர்களாக இருப்பார்கள் என திருமணம் செய்துக்கொள்ளும் ஆண்கள் எதிர்பார்க்ககூடாது. அதாவது தமிழ் பெண்கள் கற்புடன் இல்லையென்றார். மலையாளத்தில் நடிகராக உள்ள ஜெயராமன், என் வீட்டில் வேலை செய்த தமிழ் பெண்மணி கறுத்த எறுமை போல் இருந்தார் என்றார். மைக் கிடைக்கிறது, பேட்டி கேட்கிறார்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் சொல்ல துணிகிறது இவர்களின் நாக்கு.

நீங்கள் நடிகர்கள், பணத்துக்காக பல வித வேடங்களில் வந்து திரையை ஆக்ரமிக்கும் நீங்கள் தமிழ் பெண்களைப்பற்றியும், தமிழ் கலாச்சாரத்தை பற்றியும் கருத்து தெரிவிக்கிறீர்கள். உங்களுக்கு என்ன தகுதியிருக்கிறது எம்மக்களை விமர்சனம் செய்ய. சினிமாக்காரர்கள் உலகம் எப்படிப்பட்டது என்பது உலகறியும். பெண்களை போகப்பொருளாக, உங்களின் காம வெறியை தீர்த்துக்கொள்ளும் இடமாகவும், உடலை பணத்துக்காக விற்க்கும் சினிமா விபச்சாரிகளாகவும் தான் இருக்கிறிர்கள். நீங்கள் எம்மக்களை விமர்சனம் செய்கிறிர்கள்.


தியாகராஜபாகவதர் இறந்தபோது, இதே சிவக்குமார் சினிமாவில் தான் இருந்தார். அந்த ஸ்டார் இறந்தபோது இவர் எங்கு போனார்?. அவர் இறப்புக்கு சினிமாக்காரர்கள் ஒரு கை விரல் அளவுக்கு தான் வந்திருந்தார்கள். அவர் கடைசி காலத்தில் அநாதையாக சாலையில் திரிந்து இறந்தார். இன்று அவரைப்பற்றி பேசும் நீங்கள் அவரது பிறந்த நாளோ, இறந்தநாளோ உங்களுக்கு தெரியுமா?. அவர் வந்து உங்களிடம் சொன்னாரா என்னிடம் வந்து பெண்கள் இப்படி கேட்டார்கள் என்று.

யாராவது ஏதாவது சொன்னால் உடனே வந்து மேடையில் ‘வாந்தி’ எடுப்பது என்பது முட்டாள்தனம். ஒருவர் ஒரு விவகாரத்தை கூறுகிறார்கள் என்றால் அது உண்மையா, பொய்யா என்பதை அறிந்தே பேச வேண்டும் என்பதை சிவக்குமார் இனிமேலாவது கற்றுக்கொண்டால் சரி.