புதன், ஜூலை 13, 2011

ரஞ்சிதா புகழ் நித்திக்கு ஆதரவா ‘அம்மா’ ?

 
திருவண்ணாமலையில் பிறந்து கர்நாடகாவில் ஆசிரமம் வைத்த நித்தியானந்தா கதவை திற காற்று வரட்டும்மென குமுதம் இதழில் அவர் எழுதிய தொடர் பலப்பல வி.ஐ.பிகளை அவர் ஆசிரமத்துக்கு தள்ளிவிட்டது. உலகம் முழுக்க பக்தார்கள், ஆசிரமங்கள் என பிஸியானார். எப்போதும் இளம்பெண்கள் புடைச்சூழ வலம் வந்த இவர் உன் வீட்டுக்கு வர வேண்டுமா லட்சம், நேரில் சந்திக்க வேண்டுமா, ஆசி வேண்டுமா பல ஆயிரங்கள் என ரேட் பிக்ஸ் செய்து டோக்கன் போட்டு பணம் வசூல் செய்தார்கள். பத்திரிக்கையாளர்கள் படம் எடுத்தபோது கேமராக்கள் உடைப்பட்டன. கோடிகளில் புரண்டவர் நான் தான் கடவுள் என மக்களிடம் பிரச்சாரம் செய்துக்கொண்டிருந்தார்.

2010ம் ஆண்டு எதிர்பாராத விதமாக நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா கட்டில் வித்தை காட்டியது வீடியோவாக வெளியானது. அந்த வீடியோ பல நிறுவனங்களுக்கு சென்றது. யாரும் ஒளிப்பரப்ப முன்வராத நிலையில் சன் டிவி முதலில் ஒளிப்பரப்பியது. மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பியது என்றும் கூறலாம். இது தமிழகம் முழுவதும் பெரும் பரப்பபை ஏற்படுத்தியது. சிலயிடங்களில் நித்தி ஆஸ்ரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மற்ற சேனல்கள் கொஞ்சம் அடக்கி வாசித்தது. சன் குரூப் பெரியதாக செய்திகளை வெளியிட்டது. ஒரு விதத்தில் இது பத்திரிக்கை தர்மம் என்றும் கூறலாம். ஒரு சந்நியாசி, பிரமச்சாரி என அடையாளப்பத்திக்கொண்டவர் உலகம் முழுவதும் பக்தர்களை வைத்திருப்பவர், இளைஞர் ஒரு நடிகையுடன் சல்லாபம் செய்துக்கொண்டு இருப்பது அவரது பக்தர் ஒருவரே வீடியோ எடுத்து செய்தி நிறுவனங்களுக்கு தருகிறார். இது முக்கிய செய்தி தான். இதற்கான செய்தி அதற்க்கு பின் நடந்தவற்றை தொடர்ந்து செய்தியாக வெளியிடுவது என்பது வாடிக்கை தான்.

இதன்பின் வழக்குகள் தமிழகத்தில், கர்நாடகாவில் பதிவாகின. தலைமறைவான நித்தி கர்நாடகா காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பலப்பல வழக்குகள் பாய்ந்தன. அந்த வீடியோ போலியானது என நித்தியானந்தா பீடம் அறிவித்தது. இல்லை அது உண்மையான மார்பிங் செய்யப்படாத வீடியோ என அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தடய அறிவியல் துறை ஆராய்ந்து சான்று அளித்துள்ளது. அப்படியிருக்க அந்த வீடியோ போலியானது என திருவாய் மலர்ந்துள்ளார் முன்னால் நடிகையும், அடுத்தவரின் மனைவியும் நித்தியானந்தாவின் காமராணியுமான ரஞ்சிதா.

கடந்த 12ந்தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சிதா, கடந்த ஆட்சியில் என்னை பழிவாங்கினார்கள். சென்னைக்குள் வந்தாள் கைது செய்வேன் என்றார்கள். அதனால் தான் பெங்களுரில் தலைமறைவாக இருந்தேன். இந்த ஆட்சி நேர்மையாக நடந்துக்கொள்ளும் என்ற நிலையில் தான் வெளியே வந்துள்ளேன். நான் இருப்பது போன்று மார்பிங் செய்து உருவாக்கப்பட்ட வீடியோவை சன் டிவி ஒளிப்பரப்பி என் புகழை கெடுத்துவிட்டது. என்னை பணம் கேட்டு சன் நிர்வாகத்தினர் மிரட்டினார்கள் அது யார் யார் என கமிஷனரிடம் புகார் தந்துவிட்டு வந்துள்ளேன் என்றார்.

என்னம்மா நடிக்கிறார் இந்த நடிகை. நித்தி இந்த நடிகை மீது பாய்ந்த பாய்ச்சல், அவருடன் கொஞ்சி குலாவிய காட்சிகள் மறக்க முடியாதவை. இந்த காட்சிகள் பட்டி தொட்டி வரை பரப்பி சாமியார்கள் என்றால் இப்படித்தான் என்ற முகத்திரையை கிழிக்கப்பட்டது. இதை உலகமே கண்டது. ஆனால் இது எல்லாமே பொய் என்கிறார். எய்தவன் எங்கோ இருக்க அம்பை நொந்து என்ன பயன் என்பதை போல ரஞ்சிதாவை சொல்லி குற்றம்மில்லை. பணம் தந்தால் யார் சொன்னாலும் நடிப்பார். இப்போதும் நடிக்கிறார் இந்த நாடகத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் செக்ஸ் புகழ் நித்தி.

ஆட்சி மாற்றத்துக்கு பின் சன் நிர்வாகத்தால் பாதிக்கபட்டவர்கள் சினிமா உலகினர் காவல்துறை வழியாக பாய்ந்துள்ளனர். சன் நிர்வாகம் திமுக என்ற கட்சியின் பின்னணியை வைத்துக்கொண்டு சினிமா தொழிலை நசுக்கியது என்ற பல்லவி பல ஆண்டுகாலமாகவே கோடம்பாக்கத்தின் சந்து பொந்துக்களில் கேட்டது. அது உண்மையும் தான். திமுகவின் பின்னணியை வைத்துக்கொண்டு தமிழகத்தை வழி நடத்த ஆசைப்பட்டது. அதற்காக அவர்கள் செய்த அத்துமீறல்களுக்கு இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் வரவேற்க்கப்பட வேண்டியவை தான். அதில் மாற்றுக்கருத்துக்கு இடம்மில்லை.


ஆனால் நித்தியானந்தா வழக்கு என்பது அப்படியல்லவே?

சந்தியாசி என நாடகமாடிய காமச்சாமியார் பற்றி செய்தி ஒளிப்பரப்பினார்கள். இதில் சம்மந்தப்பட்ட நித்தி-ரஞ்சிதாவுக்கு கருத்து கூற உரிமையிருக்கிறது. சொல்லட்டும். பணம் கேட்டு மிரட்டியிருந்தால் வழக்கு பதிவு செய்யலாம். ஆனால் கர்நாடகா காவல்துறை வீடியோ உண்மை என ஆதாரத்துடன் வழக்கும் போட்டுள்ளது. அப்படியிருக்க தமிழக காவல்துறையிடம், போலியான வீடியோ நடவடிக்கை எடுங்கள் என கேட்பதை அதிகாரிகள் கேட்பது என்பது கேவலமானது. பொய்யான புகார் என தெரிந்தே வாங்குவது வேறு ஏதோ ஒரு திட்டம் உள்ளது என்பதை தான் காட்டுகிறது. முதல்வாரன ஜெயலலிதா இந்த வழக்கில் நடந்துக்கொள்வதை வைத்துதான் அடுத்த 5 ஆண்டுகளில் எப்படி ஆட்சி நடத்துவார் என்பதை அறிய முடியும். நித்திக்கு ஜெ ஆதரவு தெரிவிக்கிறார் என்றால் கொலை குற்றவாளி காஞ்சி சங்கராச்சாரியார் விடுதலையாவார். எப்போதும்மில்லாத அளவுக்கு பிராமண சக்திகளின் கை ஒங்கும், சாமியார் போர்வையில் என்ன தவறுகள் செய்தாலும் கண்டுக்கொள்ள மாட்டார்கள். பொய்யான வழக்குள் யார் மீதும் பாயலாம் என்ற நிலைதான்.

ஒரு நிறுவனத்தின் மீது ஆயிரம் கசப்புகள் இருக்கலாம். அந்த நிறுவனம் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும் மறுப்பதிற்க்கில்லை. ஆனால் செய்தி வெளியிட்டதற்க்கு தவறு செய்தவர்களுக்கு ஒரு அரசு ஆதரவு தெரிவிப்பது என்பது மோசமான செயல் இதை மீடியா உலகம் கண்டிக்க வேண்டிய சமயம். இல்லையேல் நாளை யாருக்கு வேண்டுமானாலும் இந்த நிலை வரலாம்.

6 கருத்துகள்:

 1. வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டை இணைக்க:
  http://www.valaiyakam.com/page.php?page=about

  பதிலளிநீக்கு
 2. << Flash Game Developers க்கு இது ரொம்ப உதவியா இருக்கும் ப்ளீஸ்>>
  Flash Game Developers அதுவும் சின்ன சின்ன games பண்றவங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு, நீங்க bug இல்லாம game செய்வீங்களா? உங்களுக்கு நிரந்தர வருமானம் வேணுமா? நீங்க உங்க game-ஐ விற்க கூட வேண்டாம். இன்னும் விவரமா தெரிஞ்சுக்க இதை Dollygals Developers (http://dollygals.com/developers) கிளிக் பண்ணுங்க.

  பதிலளிநீக்கு
 3. நித்தி மீது பாலியல் தொல்லை என்ற பிரிவில் வழக்குகள் ஏதுமில்லை நண்பரே. இதுவரை அவரால் பாதிக்கப் பட்டதாக எந்த பெண்ணும் புகார் தெரிவிக்க வில்லை/வழக்கு தொடரவில்லை. ரஞ்சிதாவுடன் கும்மாளமடித்த விடியோவை வைத்து என்ன வழக்கு போடுவீர்கள்? பெண்ணோட சந்தோஷமாக உடலுறவு கொண்டார் என்றா? இரண்டு பேர் சமதத்தோடு செக்ஸ் வைத்துக் கொள்வது சட்டப் படி குற்றமே இல்லையே? சாமியார் பெண்ணுடன் சந்தோஷமாக இருப்பது குற்றம் என்று எந்த சட்டமும் சொல்ல வில்லை. தற்போது சாமியார் மீது போடப் பட்டுள்ள வழக்குகள் எல்லாம், அவர் ஆசிரமத்தில் சந்தனக் கட்டை இருந்தது, மான் தோல் இருந்தது, ரே ஷன் கடையில் இருந்து வாங்கப் பட்ட மண்ணெண்ணெய் இருந்தது என்பது மாதிரியான உப்பு பெறாத வழக்குகளே. விடியோ உண்மை என்றாலும் அதனால் பாதிக்கப் பட்டதாக ரஞ்சிதா புகார் தெரிவித்தால் மட்டுமே நித்தி மேல் சட்டம் பாயும், இல்லாவிட்டால், இவர்கள் படுக்கையறைக்குள் அத்து மீறி கேமரா வைத்ததற்காக லெனின் கருப்பனைத்தான் உள்ளே தள்ளுவார்கள். ஹா..ஹா..ஹா...

  பதிலளிநீக்கு
 4. மம்மினு நினைக்கிறீங்கலா?
  இப்ப நிறைய பேருக்கு தைரியம் வந்திட்டு போல...

  முடிந்தால் என் வலைப்பக்கமும் வரவும்...

  பதிலளிநீக்கு
 5. நித்தி மீது பாலியல் தொல்லை என்ற பிரிவில் வழக்குகள் ஏதுமில்லை நண்பரே. இதுவரை அவரால் பாதிக்கப் பட்டதாக எந்த பெண்ணும் புகார் தெரிவிக்க வில்லை/வழக்கு தொடரவில்லை. ரஞ்சிதாவுடன் கும்மாளமடித்த விடியோவை வைத்து என்ன வழக்கு போடுவீர்கள்? பெண்ணோட சந்தோஷமாக உடலுறவு கொண்டார் என்றா? இரண்டு பேர் சமதத்தோடு செக்ஸ் வைத்துக் கொள்வது சட்டப் படி குற்றமே இல்லையே? சாமியார் பெண்ணுடன் சந்தோஷமாக இருப்பது குற்றம் என்று எந்த சட்டமும் சொல்ல வில்லை. தற்போது சாமியார் மீது போடப் பட்டுள்ள வழக்குகள் எல்லாம், அவர் ஆசிரமத்தில் சந்தனக் கட்டை இருந்தது, மான் தோல் இருந்தது, ரே ஷன் கடையில் இருந்து வாங்கப் பட்ட மண்ணெண்ணெய் இருந்தது என்பது மாதிரியான உப்பு பெறாத வழக்குகளே. விடியோ உண்மை என்றாலும் அதனால் பாதிக்கப் பட்டதாக ரஞ்சிதா புகார் தெரிவித்தால் மட்டுமே நித்தி மேல் சட்டம் பாயும், இல்லாவிட்டால், இவர்கள் படுக்கையறைக்குள் அத்து மீறி கேமரா வைத்ததற்காக லெனின் கருப்பனைத்தான் உள்ளே தள்ளுவார்கள். ஹா..ஹா..ஹா...

  பதிலளிநீக்கு