தலைமை மாலுமி இல்லாத கப்பலை போல் தடுமாறுகிறது திமுக. திமுகவின் தலைவராக இருப்பவர் கலைஞர். இந்தியாவில் திமுகவிற்க்கு பின் ஆரம்பிக்கப்பட்ட பல மாநில கட்சிகள் காணாமல் போய்விட்டன. பல கட்சிகள் கடலில் கரைந்த பெருங்காயமாக்கி விட்டது மத்தியில் ஆளும் காங்கிரஸ்.
தமிழகத்தில் திமுகவை அழிக்க ஆளாணப்பட்ட இந்திராகாந்தி, எம்.ஜீ,ஆர் போன்றவர்களே முயன்று தோற்று போனார்கள். அதற்க்கு காரணம், திமுக என்ற ஆலமரத்தை தாங்கும் வேராக கலைஞர் இருக்கிறார் என கூறினால் அது மிகையில்லை.
திமுகவை நேரு அழிக்க முயன்றார். அதிலிருந்து கழகத்தை காப்பாற்றியவர் அண்ணா. மிசா காலத்தில் திமுகவை அழிக்க இந்திராகாந்தி எண்ணிய போது அதை தடுத்தவர் கலைஞர். அதன்பின் எம்.ஜீ.ஆர், ஜெ என பலர் முயன்றும் தோற்றனர். அதற்கு காரணம் திமுக அரசியல் பாடம் படித்தது கறுஞ்சட்டை முதியவனிடம்.
ஆளானப்பட்ட அந்த தலைவர்களால் செய்ய முடியாததை இன்று கலைஞாின் பிள்ளையான அழகிாி சுலமாக செய்கிறார். வை.கோ கட்சியை விட்டு வெளியேரும் போது கலைஞர் கழகத்தில் தனக்கு பின் தன் மகனை கழகத்தின் தலைவராக்க முயல்கிறார் என குறைப்பட்டுக்கொண்டார்.
ஸ்டாலினை கலைஞாின் மகனாக மட்டும் பார்க்க முடியாது. அரசியலில் நெருப்பாற்றில் நீந்தியவர். பிறந்து, வளர்ந்து, படித்துவிட்டு செய்ய வேறு வேலையில்லாமல் கழகத்திற்க்குள் வரவில்லை. சிறு வயது முதலே கட்சிக்காக நாடகங்கள் நடத்தி, சிறை சென்று, அடி உதை பட்டு அதன் பின்பே பதவிகளுக்கு வந்தார். கருணாநிதியின் மகனாக இருப்பதால் தான் அவர்க்கு வரவேண்டிய அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவிகள் தாமதமாக வந்தன. அப்படிப்பட்டவர் திமுகவின் தலைவர் பதவிக்கு ஆசைப்படுவதில் தவறில்லை. தலைவராக்கலாம்.
ஆனால் இதற்க்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பவர் கட்சிக்காக குறிப்பிட்டு சொல்லும்படி எந்த தியாகத்தையும் செய்யாதவர் கருணாநிதியின் இரண்டாவது மகன் அழகிாி. மதுரைக்கு முரசொலி பதிப்பை கவனிக்க அனுப்பி வைக்கப்பட்டார். தலைவர் மகன் என்பதால் அவாிடம் கட்சியினர் வந்தனர். அப்படியே தனக்கென ஆதரவு வட்டங்களை உருவாக்கி கொண்டார். திருச்சியை தாண்டி கன்னியாகுமாி வரை நான் சொல்லும் நபர்கள் தான் கட்சி பொறுப்பாளராக்க வேண்டும் என்ற அளவுக்கு உயர்ந்தார். 96 தேர்தலில் கட்சியை எதிர்த்து போட்டி வேட்பாளர்களை நிறுத்தி கழகம் தோல்விக்கு வழி வகுத்தார். கட்சி அவரை கட்டம் கட்டியது. பின் சில ஆண்டுகள் பொறுத்து சேர்த்துக்கொண்டது. கட்சியின் தென்மாவட்ட முக்கியஸ்தரான தா.கியை கொன்றார்.
இப்படி கட்சிக்கு துரோகியாகவே இருந்தவர்க்கு 2006 சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டத்தில் நான் தான் அதிக நபர்களை வெற்றி பெற வைத்தேன் என பந்தா செய்தார். தனக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என வந்த கருத்து கணிப்பை அடுத்து தினகரன் அலுவலத்தை அவரது அடிப்பொடிகள் தாக்கி 2 பேரை உயிரோடு எறித்தார்கள். பின் கட்சி தலைமையை மிரட்டி தென் மண்டல செயலாளர் என்ற பதவியை உருவாக்கி அதில் உட்கார்ந்துகொண்டார். 2009 தேர்தலில் எம்.பி சீட் பெற்று வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார்.
வாாிசு அரசியல் என சொன்னாலும் தமிழக மக்கள் ஸ்டாலினை ஏற்றுக்கொண்டார்கள். கட்சியினரும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அழகிாி உள் நுழைக்கும் போது தான் மக்கள் மத்தியில் முக சுளிப்பும், கட்சியினர் மத்தியில் வெறுப்பும் ஏற்பட்டது. ( பதவி ஆசை பிடித்தவர்கள் அவர் பின்னால் போனார்கள் என்பது தனி). தொடர்ந்தார் போல் கனிமொழிக்கு எம்.பி பதவி தர வேண்டிய கட்டாயம் அதுவும் சர்ச்சையானது.
இப்போது வாாிசு அரசியலால் ஆட்சியை இழந்தார். ஆட்சி போன பின் கட்சியை சீரமைப்பதை விட்டுவிட்டு அழகிாி மிரட்டுகிறார் என சீரமைப்பு செய்வதை தள்ளி போடுகிறார். கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்தவரும் மக்கள் ஏற்றுக்கொண்டவருமான ஸ்டாலினை மறந்து விடவேண்டும்.
அதோடு அவர் பல தலைவர்களை சமாளித்து காப்பாற்றிய கட்சியை தனது பிள்ளைக்காக அவர் கண் முன்னாலே அழியும் சோகத்தை காண வேண்டி வரும்.
திமுக வெற்றி படியில் ஏறவும், துடிப்பாகவும் இருக்க வேண்டும்மென்றால் ஒரே தலைவர், ஒரே அதிகார மையம், கட்சி ஒரு குடையின் கீழ் வர வேண்டும். அது ஸ்டாலினாக இருக்க வேண்டும். அது தான் இப்போதைக்கு நல்லது. இல்லையேல் சகோதர மோதலில் திமுகவின் தேய்மானத்தை தன் வாழ்நாளிலேயே கலைஞர் காண வேண்டி வரும்.
நல்ல கட்டுரை...வாழ்த்துக்கள் நண்பரே...
பதிலளிநீக்கு