திங்கள், ஜூலை 11, 2011

நியூஸ் ஆப் தி வேல்ட் ஒரு பார்வை.


உலகின் பெரிய புலனாய்வு பத்திரிக்கை எதுவென்றால் அது பிரிட்டனில் இருந்து வெளிவரும் நியூஸ் ஆப் தி வேல்ட். 1.8.1843ல் தொடங்கப்பட்ட பத்திரிக்கை. தொடங்கிய சில ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய புலனாய்வு பத்திரிக்கையாக வளர்ந்தது. ஞாயிறு தோறும் நியூஸ் ஆப் தி வேல்ட் என்ற வார இதழ் வெளிவரும் போது உலக அரசியல் குறிப்பாக பிரிட்டனில் அரசியல் புள்ளிகள் அலறுவார்கள். அந்தளவுக்கு தகவல்களை துல்லியமாக தரும் ஒரு செய்தி புத்தகம். இந்த நிறுவனத்தில் இருந்து தி சன்டே டைம்ஸ், தி டைம்ஸ், தி சன் என பத்திரிக்கைகள் வெளிவருகின்றன. 168 ஆண்டுகள் அசைக்க முடியாத நிறுவனமாக இருந்து செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்த இந்த செய்தி நிறுவனம் கடந்த 10.7.2011ல் தன் நிறுவனத்தை மூடிவிட்டது.


ஏன் எதனால்?.1.8.1843ல் ஜான் பிரவுன் பெல் இச்செய்திதாளை தொடங்கினார். செக்ஸ், க்ரைம், அதிர்ச்சியான செய்திகளுக்கு தான் இதில் முக்கியத்துவம் தரப்படும் என ஆரம்பத்திலேயே முடிவு செய்யப்பட்டது. அதன்படியெ செய்திகள் வெளியிடப்பட்டன. 1920ல் 20 லட்சம் பிரிதிகள் விற்க்கும் செய்திதாளாக இது இருந்ததற்க்கு காரணம், அதிரடியாக வைக்கப்படும் இதன் தலைப்புகளும் அதற்கான செய்திகளும் தான். 1950களில் 80 லட்சம் காப்பிகள் உலகம் முழுவதும் இது விற்பனையானது.ஏதற்க்கும் அசாராத மேற்கத்திய சினிமா பிரபலங்கள் இந்நிறுவனம் வெளியிடும் செய்திகளால், எங்கள் புகழ்க்கு களங்கம் விலைவிக்கும் வகையில் உள்ளது என பலப் பல பிரபலங்கள் வழக்கு தொடந்துள்ளன. இதன்படி பல வழக்குகளை சந்தித்தது இந்நிறுவனம். உலகின் பல நாட்டு தலைவர்கள் குறிப்பாக அமெரிக்க அதிபர் முதல் பல நாட்டு பிரதமர்கள் வரை இந்த நிறுவனத்திற்க்கு வராதவர்கள்யில்லை. அந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்ற செய்தி நிறுவனம்மிது.2006ல் இந்நிறுவனத்தை சேர்ந்த செய்தியாளர்கள் சிலர் 7 ஆயிரம் முக்கிய நபர்களின் தொலைப்பேசி, வாய்ஸ் மெயில் போன்றவற்றை ஒட்டுக்கேட்டுள்ளனர் என தி கார்ட்டியன் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. இதில் 13 வயது சிறுமி தந்த புகார்க்கு முக்கியத்துவம் தரப்பட்டு இந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை பிரிட்டன் போலிஸார் மற்றும் புலனாய்வு நிறுவனங்கள் விசாரித்து தொடர் விசாரணையில் 3 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிறுவனம் ஒரு நபரை கொலையும் செய்துவிட்டது, முந்தி செய்தி தர காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்துள்ளது என குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அப்போதைய ஆசிரியர் ஆன்டி குல்சன் 2007ல் கைது செய்யப்பட்டார். இதனால் பல நெருக்கடிகளை இந்நிறுவனம் சந்தித்தது. பிரிட்டன் பிரதமர் வரை சந்தித்தும் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. இதனால் பாரம்பரியம்மிக்க இந்நிறுவனம் தனது பதிப்பை நிறுத்திக்கொண்டது. இதன் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த 168 ஆண்டில் மொத்தம் 23 பேர் இதில் ஆசிரியர்களாக இருந்துள்ளார்கள். தற்போது சேர்மன் பதவியில் இருந்துக்கொண்டு பத்திரிக்கையை மூடும் அறிவிப்பை வெளியிட்ட ராபர்ட் மூர்டோக் 1969ல் இதன் சேர்மனாக பதவியேற்றுக்கொண்டார். இந்த பத்திரிக்கையின் பலம் இவரை போர்ப்ஸ் பத்திரிக்கை உலகின் மிக முக்கியமானவர் என புகழ வைத்தது.இந்நிறுவனம் மூடப்படுவது பற்றி ராபர்ட் முர்டக், நான் நம்பியவர்கள் என்னை கைவிட்டுவிட்டார்கள். அதனால் நான் இப்பத்திரிக்கையை கை விடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன் என்றார். மூடும் அறிவிப்புக்கு பின் கடந்த ஜீலை 7ந்தேதி கடைசி இதழ் 48 பக்கம் கொண்டதாக தயாரானது. அதில் அந்நிறுவனத்தின் பற்றிய கடந்த கால தகவல்கள் வரலாற்று ஆவணங்களை கொண்டதாக வெளிவந்துள்ளது. புத்தக பக்கங்கள் தயாரானதும் அதன் ஆசிரியராக இருந்த கோலின்மைலர் கடைசியாக தன் ஊழியர்களிடம், நீங்கள் சிறப்பாக பணியாற்றினீர்கள். தொலைபேசி ஒட்டுக்கேட்பால் இந்த நிலைக்கு இந்நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. இதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தனது வறுத்தத்தை தெரிவித்துள்ளார். கடைசி இதழின் அட்டையில் நன்றி விடை பெறுகிறோம் என ஆங்கிலத்தில் தலைப்பிட்டு அட்டைப்படம் வெளியிட்டு பிரிந்துள்ளது பாரம்பரியமிக்க இந்நிறுவனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக