செவ்வாய், டிசம்பர் 23, 2014

தனியார் மயமாகும் மின்வாரியம். ஆகட்டும்....... ஆகட்டும்......




அரசு நிறுவனங்கள் தனியார் மயமாவதை என் வலைப்பக்கத்தில் நானே சிலமுறை கண்டித்து கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஆனால் மின்வாரியத்தை தனியார் மயமாக்க மத்தியரசு சட்டம் கொண்டு வருகிறது என அறிவித்ததை அறிந்ததும் எனக்கு பெரும் சந்தோஷம். ஆச்சர்யமாக இருக்கலாம் ஆனால் நிச்சயமாக பெரும் சந்தேஷமடைகிறேன். என்நிலைப்பாடு மாறுவதற்க்கு காரணம் மின்வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தான் இதற்கு காரணம்.

1990க்கு முன்புவரை அதாவது நரசிம்மராவ் பிரதமராவதற்க்கு முன்பு வரை இந்தியாவில் 90 சதவித மின் உற்பத்தியை மத்திய, மாநில அரசு நிறுவனங்களே செய்தன. உலக மயமாக்களுக்கு பின் இந்திய அரசு தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க தொடங்கின.

மின்சாரதுறையை இரண்டாக மத்திய அரசின் திட்டப்படி மாநில அரசுகள் பிரித்தின. ஒவ்வொரு மாநிலமும் மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தை தனித்தனியாக்கியது. மின்சார விற்பனை பிரிவை அரசு தன்னகத்தே வைத்துக்கொண்டன. மின் உற்பத்தியில் மட்டும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டன. தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்தியில் ஈடுபட்டன. அந்த மின்சாரத்தை அவர்கள் குறிப்பிடும் விலைக்கு மின்சார விநியோகப்பிரிவு வாங்கியது.

மின்சாரத்தை வாங்கும் விலையை வைத்து மின் கட்டணத்தை நிர்ணயிக்க மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப்பட்டது. இது தன்னிச்சையான அமைப்பு என்றாலும் இது அரசின் காலுக்கு கீழ் தான். அதிகாரத்தில் இருப்பவர்கள் என்ன உத்தரவிடுகிறார்களோ அதை தான் இந்த ஆணையம் கேட்கும். மக்களிடம் கருத்து கேட்பது என்பது சும்மா கண்துடைப்புக்காக.

அரசு நிறுவனங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் விலையை விட 800 மடங்கு அதிக விலை வைத்து தனியார் நிறுவனங்கள் மின்சாரத்தை விற்பனை செய்கின்றன. அதைதான் நமது மின்சார விற்பனை பிரிவு வாங்கி மின்விநியோகத்தை செய்து வருகிறது. இதில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் கொள்ளையடிக்கிறார்கள்……. மக்கள் தலையில் வரி சுமை, மின் கட்டணம் உயர்வு என சுமை கூடுகிறது. இது ஒருபுறம்மிருக்கட்டும். விவகாரத்துக்கு வருவோம்.

மின் தடை, மின் கட்டணம் உயர்வு என மக்கள் வெதும்பும் வேலையிலும் மின்சார வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள், தொழிலாளர்கள் மக்களிடம் பணம் பறிப்பதிலேயே குறியாக உள்ளார்கள்.


சரியாக இரண்டு ஆண்டுக்கு முன்பு நகரத்தில் உள்ள மின்வாரிய உதவி பொறியாளரை சந்தித்த நண்பர், சார் என்னோட வீட்டு மனையின் குறுக்கே மின்சார கம்பி செல்கிறது. அதை மாற்ற வேண்டும் அப்போது தான் வீடு கட்ட முடியும் என கோரிக்கை மனு தருகிறார். அதை வாங்காமலே அதெல்லாம் மாத்தவே முடியாது என்கிறார். மாத்தவே முடியாதா விதிமுறையென்ன என அந்த பகுதி மின்விநியோக ஊழியர் உட்பட மின்வாரியத்தில் சாதாரண நிலையில் இருந்து உயர்நிலையில் இருப்பவர் வரை இதில் பொதுவுடமை இயக்கத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலரும் அடக்கம் உதவுங்க. வீடு கட்ட முடியாம கஸ்டப்படறன் என தன் நிலையை சொன்னபோது, 70 ஆயிரம் தாங்க, ஒரு லட்சம் தந்துடுங்க மாத்திடலாம் என அசால்டாக சொல்ல அதிர்ச்சியானார். அரசுக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்டிடறன். உங்களுக்கு என்னவோ அதை செய்யறன் என பேசி பார்த்தும் பணத்த என்கிட்ட தாங்க நான் அரசுக்கு கட்டிக்கறன் ஒவ்வொருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விதிமுறைகள் என்ன என்பது பற்றி வாய் திறக்கவில்லை.

அவ்வளவு செலவாகும்மா?, யாரை நம்பி இவ்வளவு பணம் தருவது? அரசுக்கு கட்டினால் நாளை பணி முடியவில்லை என்றாலும் போராடி பணத்தை பெறலாம் இவர்களிடம் தந்தால் என யோசிக்க மின்வாரியத்தை சேர்ந்தவர்கள் சிலர் சிண்டிகேட் அமைத்து எங்கே வேண்ணாலும் போ அதை மாற்றவே முடியாது என மறைமுகமாக மிரட்டினர். சோர்ந்து போகாமல் ஒரு வருடாமாக அலைந்தார்.

ஒருவருடத்துக்கு பின் நட்பு அடிப்படையில் அதிகார வர்க்கத்தில் அதி முக்கியமானவரை பிடித்தார் அதிகாரிகள் கொஞ்சம் இறங்கி வந்து இழுத்தடித்தார்கள்……….. அதற்குள் 8 மாதங்கள் ஓடியது……….. நீண்ட போராட்டத்துக்கு பின் 1.86 லட்ச ரூபாய் அரசுக்கு கட்ட வேண்டும். கட்டினால் மாற்றலாம் என நோட்டீஸ் தந்தனர் அதிகாரிகள். அதை வாங்கி பார்த்து அதிர்ச்சியின் உச்சத்துக்கே போன நண்பர் அதையும் தயார் செய்து கட்டினார். பணம் கட்டியபின்பும் 3 மாதம் இழுத்தடித்தார்கள். கடைசியாக அந்த லைனை மாற்றிவிட்டு குறிப்பிட்ட அதிகாரி உட்பட அனைவரும் வெட்கம்மே இல்லாமல் தலையை சொறிந்து வாங்கிக்கொண்டு போனார்கள் நண்பரிடம்.

அந்த லைனை மாற்றும்போது நண்பர் அவர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது, ஒரு கம்பம் நடுரோட்டில் அமைந்துயிருந்த்து. அந்த ஏரியா முழுக்க முழுக்க நடுத்தர மக்கள் (ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிகம்) வசிக்கும் பகுதி. இருசக்கர வாகனங்கள் அதிகம் செல்லும் ரோட்டின் நடுவே மின் கம்பம் இருப்பதால் ஆட்டோ போவதில் கூட பெரும் சிக்கலாக இருந்தது. என் லைனை மாற்றும் போது இந்த கம்பத்தலயிருந்து தான் மாத்தறிங்க அதனால இந்த கம்பத்தை புடுங்கி சாலையோரம்மா தள்ளி நடுங்க என கோரிக்கை வைத்தார். இத்தனைக்கும் அந்த ரோட்டுக்கும் அவரது மனை உள்ள பகுதிக்கும் எந்த சம்மந்தமும்மில்லை.

அதற்கு அங்கிருந்த அதிகாரி உட்பட பணியாளர்கள் (8 பேர்) சொன்னது, சார் உங்க மனை மேல போற லைனை மாத்திட்டோம். அதோட விடுங்க நீங்க எதுக்கு இதப்பத்தி பேசறிங்க. இத மாத்தனம்ன்னு வருவாங்க அப்பா நாங்க கொஞ்சம் (பணம்) பார்ப்போம்மில்ல என்றார்கள் சிரித்துக்கொண்டே. இது 100 சதவிதம் உண்மை. அது மட்டுமல்ல லைனை மாற்றியபோது ஒரு வீட்டுக்கள் இருந்த கம்பம் டம்மியாக்கப்பட்டது. அதை மின்வாரியம் பிடுங்கி எடுத்துச்செல்ல வேண்டும். அந்த வீட்டுக்காரரிடம் 10 ஆயிரம் தந்தா தான் புடுங்கிம்போவோம் என்றார்கள் நண்பர்கள் கண் முன்னாலே இது நடந்தது. எத்தனை அக்கிரமம். இவர்கள் சம்பளம் வாங்குகிறார்கள். இவர்கள் என்ன தானதர்மத்துக்காகவா வேலை செய்கிறார்கள்.

இதுமட்டுமல்ல, இன்னோரு சம்பவம், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியின் போது மின்கம்பங்ளை சாலை ஓரத்தில் தள்ளி நடுங்கள் எனச்சொல்ல அதன்படி காலியாக தனியார் இடத்தில் மாற்றி நட்டுவிட்டு போய்விட்டார்கள். அதிலும் ஒழுக்கம் கிடையாது. காலி இடங்கள் வீடுகளாக, நிறுவன கட்டிடங்களாக மாறியது. ஒருவர் தான் கட்டிய கட்டிடத்துக்கு மின் இணைப்புக்காக போனபோது, லைன் பில்டிங்க ஒட்டி வருது ரூல்ஸ்படி அது தப்பு. அதனால கனெக்ஷன் தர முடியாது எனச்சொல்ல சார் பட்டா இடத்தல நீங்க கம்பத்த நட்டுட்டு இப்படி பேசனா என்ன அர்த்தம் என கேட்க பதிலுக்கு அவமானமான பதில் தான் வந்துள்ளது.  

நண்பரிடம் மின்வாரிய இடைநிலை ஊழியர் ஒருவர் நான் மாற்றி தருகிறேன் என அதிகாரிகளுக்கு தர வேண்டும் என சுளையாக ஒரு தொகையை வாங்கி சென்றுள்ளார். அரசுக்கு நீங்கள் 20 ஆயிரம் கட்ட வேண்டும் அதுக்கு தயார் பண்ணிடுங்க எனச்சொல்லிவிட்டு சென்றுள்ளார். இப்படி அந்த பகுதியில் உள்ள அனைவரிடமும் பணம் பார்க்கிறார்கள் அதே ஊழியர்கள். (இப்படி பல சம்பவங்கள் உள்ளன. எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம். அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டுக்கூட எழுதலாம் அந்தளவுக்கு தகவல்கள் உள்ளன.)


இதுதான் மின்வாரியத்தில் மேலிருந்து, கீழ்வரை உள்ள நிலை. ஒருகாலத்தில் ஏனோதானோவென மின்கம்பத்தை நட்டுவிட்டு சென்றனர் மின் ஊழியர்கள். அது மின்சாரம் பார்க்காத கால கட்டம் என ஏற்றுக்கொள்ளலாம். இப்போதும் ஒழுக்கம்மில்லாமல் மின்கம்பம் நடுவது எந்த விதத்தில் நியாயம்?, ஒரு பிரச்சனையை உருவாக்கி அதை தீர்க்க தம்மிடம் வரும்போது பணத்தை வாங்குவது தான் மின்சார வாரியத்தில் பணியாற்றுபவர்களின் தற்போதைய நடைமுறையாக உள்ளது. மின்சார பிரச்சனை என்பதால் மக்களால் எதுவும் செய்ய முடிவதில்லை. மக்கள் மின்சார அலுவலகத்தை தேடி செல்கிறார்கள். அதில் சிலர் நேர்மையாக இருக்கலாம். சிலர் மனசாட்சிக்கு பயந்து பணம் வாங்கிக்கொண்டு வேலையை முடித்து தருகிறார்கள். அவர்கள் வெகு குறைவாக உள்ளார்கள். மீதியுள்ள 90 சதவித ஊழியர்கள் அப்படியல்ல என்பதே எதார்த்தம்.

மின்வாரிய ஊழியர்கள் மட்டுமல்ல வருவாய்துறை, காவல்துறை போன்றவை மக்களை பணம் காய்க்கும் மரமாக தான் பார்க்கிறார்கள். மக்கள் என்ன ஒவ்வொரு வீட்டிலும் பணம் அச்சடிக்கும் இயந்திரமா வைத்துள்ளார்கள். அச்சடித்து கொண்டு வந்து பிச்சை போட?

மின்வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகளே, ஊழியர்களே, தொழிலாளர்களே நிகழ்கால சாட்சியாக நம் கண் முன்னால் நடந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறேன்  கேட்டுக்கொள்ளுங்கள். பி.எஸ்.என்.எல் என்ற ஒரு நிறுவனம் உள்ளது. நீங்கள் அறியாததல்ல. தொலைபேசி வசதி பரவலாக வந்தபோது அங்கு பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள் செய்த அலம்பல் கொஞ்ச நஞ்சமல்ல. தீபாவளி, பொங்கல் வந்தால் இவர்களுக்கு “பிச்சை“போட வேண்டும். லைன்ல க்ராஸ் டாக் வருது, ஓர்க் ஆகல என புகார் சொல்ல சென்றால் கலெக்டரை சந்தித்து விடலாம் இவர்களை சந்திக்க முடியாது. வாரக்கணக்கில் காக்கவைத்து பின் வந்து சரி செய்துவிட்டு 500 தா, 1000ம் தா என பிடுங்கி செல்வார்கள். பணம் வாங்க வேண்டும் என்பதற்காகவே தொலைபேசி லைனில் கோளாறை உருவாக்குவார்கள். எதிர்த்து கேட்டால் நாங்கள் அரசு ஊழியனாக்கும் என்பார்கள்.

2002க்கு பின் நிலவரம் அப்படியே தலைகீழ். தொலைதொடர்பு துறை தனியார் மயமானதை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள், மக்கள் ஆதரவு கேட்டார்கள் ஒரு சதவிதம் கூட கிடைக்கவில்லை. தனியார் மயமானதை தடுக்க முடியவில்லை. இன்று உயர்அதிகாரிகள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை தெருவில் இறங்கி வெய்யிலில் சார் எங்க நிறுவன சிம்கார்டு வாங்குங்க, டேட்டா கார்டு வாங்குங்க என சிம்கார்டு விற்கிறார்கள், விளம்பர  நோட்டீஸ் தருகிறார்கள். இவர்களை பார்த்து பொதுமக்கள் எந்த விதத்திலும் பரிதாபம் கொள்ளவில்லை.


உங்கள் நிலையும் அதுதான். 

வெள்ளி, டிசம்பர் 19, 2014

அமெரிக்காவிடம் சிக்குகிறதா க்யூபா ?


அமெரிக்காவின் காலுக்கு கீழ் இருக்கும் குட்டியுண்டு நாடு என்றாலும் க்யூபா அமெரிக்காவின் கண்ணில் விழுந்து அகற்ற முடியாத தூசு. அமெரிக்காவின் கண்ணை உருத்திக்கொண்டே இருந்தது………… இருக்கிறது………. இனிமேல் இருக்கும்மா என்பது தான் இப்போது பெரும் கேள்வி.

காரணம், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் – க்யூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுக்கும் இடையே 18 மாதங்கள் நடந்த ரகசிய பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்து பல வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

1959 ஜனவரி 1க்கு முன்பு வரை க்யூபா காலணி ஆதிக்க நாடாக அமெரிக்காவில் பிடிக்கப்பட்டு பின் அமெரிக்க ஏகாதியபத்திய கம்பெனிகளால் பொம்மை ஆட்சி க்யூபாவில் நடந்தது. க்யூபாவில் 90 சதவிதம் கரும்பு பயிர். கரும்பு தோட்டங்கள் அனைத்தும் அமெரிக்காவின் கம்பெனிகள் வசம். க்யூபாவின் தொலைதொடர்பு, போக்குவரத்து துறை, பாதுகாப்பு, மின்துறை என அனைத்தும் அமெரிக்க கம்பெனிகள் வசம்மிருந்த்து. அவர்கள் சொல்வது தான் சட்டம். அதிபராக, அமைச்சராக இருந்த்து என்னவோ க்யூபாவை சார்ந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் குசு விடக்கூட அமெரிக்காவின் கம்பெனிகளை கேட்க வேண்டும். இதனை எதிர்த்து போராடி க்யூபாவை சுதந்திர நாடாக்கியவர்கள் பிடல் காஸ்ட்ரோ, சேகுவேராவும்.

அமெரிக்காவின் பொம்மை ஆட்சிக்கும், அமெரிக்காவுக்கு எதிராக பிடல் காஸ்ட்ரோவை விட அவரது தம்பி ரவுல் காஸ்ட்ரோ தான் தீவிரமாக எதிர்த்தார். அந்த ரவுல் காஸ்ட்ரோ தான் இப்போது க்யூபாவின் அதிபர். அவர் தான் அமெரிக்காவுடன் கை குலுக்கியுள்ளார்.

க்யூபாவை சுதந்திர நாடாக பிடல் அறிவித்தபின் க்யூபாவில் இருந்த அமெரிக்க கம்பெனிகளின் சொத்துக்களை நாட்டுடமையாக்கினார். நஷ்டயீடு வழங்கினார். மக்களுக்கு நிலங்களை பிரித்து தந்தார். கம்யூனிசத்தை நோக்கி க்யூபா நடைபோட்டதும் அமெரிக்கா அலறியது. முதலாளித்துவ நாடுகளுக்கு முதலாளியான தனக்கு கீழ் ஒரு சின்ன நாடு கம்யூனிசத்தை நோக்கி நடைபோடுவது அதற்கு பிடிக்கவில்லை. மறைமுகமாக அல்ல நேரடியாகவே க்யூபாவை மிரட்டியது முதலாளித்துவ அமெரிக்கா அரசாங்கம்.

பிடல் அமெரிக்காவுக்கு நேர் எதிரான கம்யூனிச நாடான ரஷ்யாவின் தலைமையை ஏற்றார். க்யூபாவுக்கு பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா. ரஷ்யாவின் உதவியுடன் தடைகளில் இருந்து தன்னை காத்துக்கொண்ட க்யூபாவின் நிலை 19990க்கு பின் தலைகீழாக மாறியது.

முதலாளித்துவ நாடுகள் அமெரிக்கா தலைமையில் கூடி ரஷ்யாவை சிதைத்தபின் இந்தியா போன்ற பல நாடுகள் அமெரிக்காவின் தலைமையை ஏற்றுக்கொண்டன. ஆனால் சிறிய நாடான க்யூபா அதை செய்யவில்லை. அமெரிக்காவின் தலைமையை ஏற்காமல் இயங்க முடிவு செய்தது.

இன்றைய காலக்கட்டத்தில் விவசாயம், மருத்துவம், கல்வியறிவு, பிறப்பு-இறப்பு விகிதாச்சாரம் போன்றவற்றில் முன்னிலை வகிப்பது க்யூபாதான். இதில் என்ன பெரிய ஆச்சர்யம் என கேட்கலாம். க்யூபா மீது பொருளாதார தடைகள் உள்ளது. அமெரிக்காவை பகைத்துக்கொண்டு எந்த நாடாவது க்யூபாவுக்கு உதவும்மா ? யோசித்து பாருங்கள்.

அந்த நிலையிலும் முன்னிலை வகிக்கிறது க்யூபா.

இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ க்யூபா அதிபராக இருந்த இப்போதும் நாட்டை கண் போல் பாதுகாக்கும் பிடலை கொலை செய்ய எடுத்துக்கொண்ட முயற்சிகள் தான். அதிகாரபூர்வமாக 70க்கும் மேற்பட்ட முறை அவரை கொல்ல முயன்று தோற்றுள்ளது சி.ஐ.ஏ. அதன் சரித்திரத்தில் மிகப்பெரிய தோல்வி இது.

இன்றும் கம்யூனிசத்துக்கு ஆதரவாக க்யூபாவின் அதிகாரபூர்வ ஏட்டில் கட்டுரைகள் எழுதி வருகிறார் பிடல்காஸ்ட்ரோ. ஆனால் அவரது தம்பி ரவுல் காஸ்ட்ரோ முதலாளிகளின் பாதுகாவலரான அமெரிக்காவுடன் கைகோர்த்துள்ளார். இத்தனை ஆண்டுகள் யாரை எதிர்த்ததோ அந்த நாட்டுடன் கை கோர்த்துள்ளது க்யூபா.

இதுவரை போராடியதல்ல போராட்டம். இனி க்யூபா போராட போவதுதான் உண்மையான போராட்டம். இதில் தாக்கு பிடிக்குமா இல்லை முதலாளிகளுக்கு சாதகமான நாடுகளின் பட்டியலில் இணைக்கப்படும்மா என்பது போகபோக தெரிந்துவிடும்.

திங்கள், நவம்பர் 10, 2014

பாதை மாறும் இளையோர்கள். - தவிக்கும் முன்(னோ)ஏர்கள்.


பிடித்தால் சேர்ந்து வாழ்வோம் பிடிக்காவிட்டால் வெட்டிக்கொண்டு போய்க்கொண்டே இருப்போம் என்பது இன்றைய நவயுக இளையோர்களின் வாழ்க்கை முறையாக இருக்கிறது. மேற்கத்திய நாடுகளிலேயே வெட்டிக்கொண்டு போவது வேலைக்காகாது என பிரச்சனையை பேசி தீர்த்துக்கொண்டு, விட்டுக்கொடுத்துக்கொண்டு ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் முறையை பின்பற்ற தொடங்கியுள்ள நிலையில் உலகத்துக்கே முன்மாதிரியாய் தாய் – தந்தை – சகோதரன் – சகோதரிகள் என வாழ்ந்த நம் சமூகம் இப்போது மனைவியையே யூஸ் அன்ட் த்ரோவாக பார்க்கிறது. இதனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியிருக்கிறது என்கிறார்கள் குடும்பநல நீதிமன்றங்களில் பணியாற்றுபவர்கள்.

விருப்பப்பட்டால் சேர்ந்து வாழ்கிறோம் இல்லையேல் பிரிந்து போகிறோம் இது எங்கள் சுதந்திரம். விருப்பம் இல்லாத துணையோடு எத்தனை காலம் சேர்ந்து வாழ்வது என தங்கள் தவறுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள். ( படிப்பு புத்தியை தரும் என்றார்கள். ஆனால் இந்தியாவில் படிப்பு புத்தி பேதலிப்பை தான் தந்துள்ளது. ) ஒரு பொருளை வாங்கிய பின் மற்றொரு பொருளை காணும் போது பெஸ்ட்டாக தான் தோணும். அதை வாங்கினால் அதற்கடுத்த பொருள் பெஸ்டாக தோணும். அதற்காக பெஸ்டாக இருப்பதை வாங்கிக்கொண்டே இருந்தால் பொருள், பண விரயம் தான் ஏற்படும்.

பிடிக்கவில்லையென துணையை மாற்றிக்கொண்டே எத்தனை காலத்துக்கு இருப்பீர்கள்?. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின் மாற்ற ஆள் இருக்கமாட்டார்கள் என்பது புரியும் போது வாழ்க்கை விரக்திக்கு தள்ளிவிடும். காலம் மாறுகிறது அதனால் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்கிறார்கள். உண்மை தான். அந்த காலத்தல நான் அப்படியிருந்தன், நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என நிர்பந்தப்படுத்துவது அபதத்தின் உச்சம். இன்றைய காலக்கட்டத்தில் இளையோர்களிடம் மறைக்க எதுவும்மேயில்லை என்பதே உண்மை. நமக்கு தெரியாத பலவும் அவர்களுக்கு இந்த சிறிய வயதில் டெக்னாலஜி வாயிலாக அத்துப்படி.

90க்கு முன்பு பிறந்தவர்களின் காலக்கட்டம் என்பது வேறு. அதற்கு பிறகு பிறந்தவர்களின் காலக்கட்டம் என்பது வேறு. இனி பிறக்க போகிறவர்களின் காலக்கட்டம் வேறு மாதிரியாக தான் இருக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இளைய சமுதாயம் சரியாக வாழ்ந்தது என்றால் எதுவும் அவரை தேடி வரவில்லை. அதை தேடி செல்ல வேண்டிய கட்டாயம். உதாரணத்துக்கு ஒரு செக்ஸ் கதை படிக்க வேண்டும், நிர்வாண புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்றால் அதை வெளியிடும் புத்தகத்தை தேடி போய் வாங்க வேண்டும், ஜெயமாலினி, சில்க் போன்றவர்களின் கவர்ச்சி நடனங்களை காண தியேட்டருக்கு சென்றால் தான் முடியும்.

இன்று அப்படியல்ல, செக்ஸ் கதை படிக்க வேண்டுமா எந்த மொழி, எந்த நாட்டுடையது வேண்டும். மொழி மாற்றம் செய்து தரட்டுமா ?, எந்த நாட்டு பெண்ணின் நிர்வாணத்தை பார்க்க வேண்டும் என பட்டியல் போட்டு தருகிறது இணையம். இன்று தமிழ் சினிமாவில் மட்டுமல்ல டோலிவுட், பாலிவுட் என கலந்துக்கட்டி வீட்டின் வரவேற்பரையில் உள்ள டிவி பெட்டியில் கவர்ச்சியான பாடல்கள் ஒளிப்பாகின்றன. தம் அடிக்க, பீர் குடிக்க வேண்டும் என்றால் பிறர் பார்த்தால் என்ன சொல்வார்களோ என்ற பயம்மிருந்தது, சின்ன பசங்க வந்தால் தராமல் துரத்திய மனித நேயமிக்கவர்கள் இருந்தார்கள். இன்று அப்படியல்ல நேர் எதிர்.

பொய் ஊர் சுற்றி வரும்போது தான் உண்மை எழுந்து நிற்கும் என கிராமத்தில் கதை சொல்வார்கள். அதேபோல் தான் இன்றைய நவயுக கால இளையோர்களுக்கு டெக்னாலஜியில் தவறுகள் வேகமாக கண் முன் வந்து நிற்கின்றன. அறிந்துக்கொள்ள வேண்டியவை தாமதமாக வருகின்றன. இது தவறு இதை பார்க்காதே, படிக்காதே, சேராதே என்றால் எனக்கு சுதந்தி்ரம் உள்ளது என்கிறார்கள். சுதந்திரம் என்பதை தவறாக புரிந்கொள்கிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் மட்டுமல்ல எப்போதும்மே காதல், காமம், வாழ்க்கை ஒரு தடுமாற்றம் இருக்கத்தான் செய்கிறது. அதை இளையோர்கள் மட்டும்மல்ல பெரியவர்களும் புரிந்துக்கொள்வதுயில்லை என்பதே உண்மை. 


சாலையில் முன்பின் அறிமுகம்மில்லாத ஒரு பாலினத்தை காணும்போது எதிர்பாலினத்துக்கு ஒரு ஈர்ப்பு உருவாகும். அது இயல்பே. அதை இன்னும் டீப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு பெண் எதிரே செல்லும் போது அவளின் அங்கங்களை பார்ப்பது ஆண்களின் இயல்பு. அதேபோல் ஒரு ஆண்  அட்ராக்டிவ்வாக செல்லும் போது பெண்கள் பார்ப்பது இயல்பே. சிம்பளாக சொல்ல வேண்டும் என்றால் சைட் அடிப்பது இருபாலருக்கும்மே ஓ.கே தான்.

இந்த சைட் அடிப்பது மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட வயது அதாவது 13 அ 14 வயது தொடங்கும் போதே தொடங்கிவிடும். அதே காலக்கட்டத்தில் செக்ஸ் நினைவுகள் மனதில் தோன்ற தொடங்கிவிடும் என்கிறது உடலியல் மருத்துவம் மற்றும் காமசூத்ரா. நம் உடலில் உணர்ச்சிகளை தூண்டும் செக்ஸ் அணுக்கள் உருவாகும் காலம். அந்த அணுக்கள் உருவானபின் அதன் வீரியத்தை இழக்கும்மே தவிர மற்றப்படி அவை ஒருவர் இறக்கும் வரை அவரது உடலில் இருக்கும்.

இதுப்பற்றி செக்ஸ்யாலஜிஸ்ட்டுகள் கூறும்போது, மனிதனிடம் தோன்றும் செக்ஸ் நினைவுகள் என்பது தடுக்க முடியாதது. செக்ஸ் குறித்த சிந்தனை எல்லோருக்கும் தினமும் வரும், இதற்கு வயது வித்தியாசமே கிடையாது என்று சொல்லலாம். ஆணோ பெண்ணோ 13 வயதுக்கு மேல் செக்ஸ் சுரப்பிகள் சுரக்க தொடங்கிவிடும். அந்த எண்ணம் மனதில் தோன்ற தொடங்கிவிடும். உடல் பாகங்களில் இது என்ன?, இது எதற்காக என்ற தேடல் தொடங்கிவிடும். வழிகாட்டுதல் சரியாக இருந்தால் கற்றுக்கொள்வார்கள். இல்லையேல் தவறாக அர்த்தப்படுத்திக்கொள்வார்கள். செக்ஸ் சிந்தனை என்பது பலருக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும் என்கிறார்கள்.

செக்ஸ் சிந்தனை என்பது சாதாரணமானது என்பதை புரிந்துக்கொள்ள மறுக்கிறது சமூகம். புரிந்துக்கொண்டால் பிரச்சனை என்பது வராது என்பதே உண்மை. செக்ஸ் சிந்தனை பற்றி அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் சராசரியாக ஆண்கள் தினமும் 19 முறை செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்குகின்றனர், பெண்களோ ஒரு நாளைக்கு சராசரியாக 10 முறை செக்ஸ் குறித்து சிந்திக்கின்றனர் என்று தெரியவந்தது. அதாவது பெண்களை விட ஆண்களே செக்ஸ் குறித்து அதிகம் சிந்திக்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.

அந்த ஆய்வில் தூக்கம், உணவு, செக்ஸ் ஆகிய மூன்றில்  எது குறித்து அதிகம் தினமும் சிந்திக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு  பெரும்பாலான ஆண்களின் சிந்தனை செக்ஸ் குறித்தே இருந்துள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது 1 முதல் 388 முறை வரை  செக்ஸ் குறித்த சிந்தித்திக்கின்றார்கள். சராசரியாக ஒவ்வொரு ஆணும் குறைந்தது 19 முறையாவது செக்ஸ் குறித்து நினைக்கிறார்கள். பெண்கள்  ஒரு நாளைக்கு 1 முதல் 140 தடவை செக்ஸ் குறித்து நினைக்கிறார்களாம். சராசரியாக ஒவ்வொரு பெண்ணும் 10 முறை செக்ஸ் குறித்த சிந்திக்கின்றார்கள். இந்த சிந்தனையை யாரால் எப்படி தடுக்க முடியும். நம் மனம் காணும் கற்பனையை, கனவை யாராலும் தடுக்க முடியாது.

இதோடு, குடும்ப வாழ்வை போட்டு குழப்பிக்கொள்ளகூடாது. மனித வாழ்க்கைக்கான தேவைகள் போல் அவனை இயக்கும் உடலுக்கான தேவைகள் என்பது சாதாரணமானது. அதையும் செய்ய வேண்டும். அவ்வளவே. உடல் தேவையே முக்கியம் என நினைத்தால் வாழ்க்கை போய்விடும், வாழ்க்கை முக்கியம் என நினைத்தால் உடல் போய்விடும். இரண்டையும் பேலன்ஸ் செய்ய வேண்டும். இதைத்தான் யாரும் செய்வதில்லை. இந்த குழப்பம் பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை எல்லோரிடமும் உள்ளது.

சிறியவர்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும் அதற்கு முன் நாம் தெளிவாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் இரு தரப்புக்கும்மே பிரச்சனையில்லை.