புதன், மார்ச் 02, 2011

நடிகர் விஜய்யின் பொய் முகம்.


இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு அரசியல்வாதியாக புதிய வேஷம் கட்டியுள்ள நடிகர் விஜய்யின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. சில மாதங்களுக்கு முன்னர், என்னை அழிக்க பார்க்கறாங்க, என் படத்தை ஒட விடமாட்டேன்கிறாங்க அதுக்கெல்லாம் முதல்வர் கருணாநிதி குடும்பம் தான் காரணம் என விஜய்யும், அவரின் அப்பா இயக்குநர் எஸ்.ஏ.சியும் கூப்பாடு போட்டார்கள்.

தன் தனிப்பட்ட கோபாதாபம், லாப-நட்டத்துக்கு தனது ரசிகர்கள் மூலம் திமுகவை பழிவாங்க முடிவு செய்த விஜய். அதில் மக்களையும் இணைத்துக்கொள்ள அரசியல் இயக்கம் தொடங்க முடிவு செய்தார். பணம் செலவு ஆக கூடாது ஆன கட்சி நடத்தனும் என ரசிகர்களிடம் சொல்ல பின்னங்கால் பிடறியில் ஓடி பின்வாங்கினார்கள் ரசிக சிகாமணிகள். இதனால் அசரவில்லை விஜய் அன் கோ. பெரியதாக ரியாக்ஷன் இல்லை என்றதும் ஜெயலலிதாவை போய் சந்தித்;தார் எஸ்.ஏ.சி. ஜெவோ, திமுகவுக்கு எதிரா பேசுங்க என கீ கொடுத்து அனுப்பியதன் விளைவு புறப்பட்டார்கள் அப்பாவும் மகனும்.

என் தனிப்பட்ட லாபத்துக்காக தான் இயக்கம் தொடங்கறன், திமுகவை எதிர்க்கறன், ஜெ வை ஆதரிக்கறன் என சொல்ல முடியாது என்பதால் தமிழக மீனவர்களை கொல்லும் இலங்கை இராணுவத்தை கண்டித்தும், அதற்க்கு ஒத்து ஊதும் மாநில அரசை கண்டித்து நாகையில் கூட்டம் நடத்தி இலங்கை இராணுவத்தை கண்டித்து, சினிமாவில் பேசுவதை போல வீரவேசமாக பேசிவிட்டு சென்னை வந்துவிட்டார். பின்னாலயே அறிக்கை வாயிலாக விஜய்யின் முகத்தை கிழித்துவிட்டது இலங்கை அரசாங்கம். தமிழர்கள் மேல் உண்மையில் விஜய்க்கு அக்கறையில்லை. அப்படியிருந்திருந்தால் தென்னிந்திய சினிமா உலகில், தமிழகத்தில் கேரளா நடிகையும், இலங்கைக்கு மிக வேண்டப்பட்டவருமான அசின்க்கு எதிர்ப்பு வந்தபோது எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது காவலன் படத்தில் நடிக்க வைத்தார். அவரின் தமிழ் பற்று இதுதான் அதனால் அவர் பேச்சை நாங்கள் பெருசாக எடுத்துக்கொள்ளவில்லை.

விஜய் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பானவர் என்பது பொய் என்பதை செவிட்டில் அறைவதை போல வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது அந்த அறிக்கை. இந்த அறிக்கைக்கு பின்னால் இருக்கும் அரசியல் நமக்கு தேவையில்லை. ஆனால், அறிக்கை சாராம்சம் உண்மை தானே. தமிழர்களை அழித்த இலங்கை சிங்கள அரசியல்வாதிகளுடன் கும்மாளம் போட்ட நடிகை அசின்க்கு தமிழகத்தில் பல இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது காவலன் படத்தில் அசின் தான் எனக்கு ஜோடியா வேணும் என பிடிவாதமாக இருந்து அவரை தன்னுடன் நடிக்க வைத்து போராடிய இயக்கங்கள் முகத்தில் கரியை பூசியவர் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கிறேன் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

தமிழகத்தை விட்டே துரத்த வேண்டும் என தமிழ் உணர்வாளர்களால் குறிப்பிடப்படும் கோல்மால் கட்சியான காங்கிரஸ்சுடன் இணைய பேச்சு வார்த்தை நடத்திய நடிகர் விஜய்யை அப்போதே புறம் தள்ளியிருக்க வேண்டும். செய்யாமல் விட்டதன் விளைவு இன்று தமிழர்களுக்காக போராடுகிறேன் என நாடகம் ஆடுகிறார்.

விஜய்யின் உண்மை முகத்தை சிங்கள அரசு புரிந்து வைத்துள்ளது. தமிழர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

6 கருத்துகள்:

  1. Then break-time fast karunanidhi and Election time stunner Jayalaitha are the true tamilian?

    பதிலளிநீக்கு
  2. அனைவரும் கள்வாணிகளே !!! விஜய் ஒரு ஊமைக்குசும்பு களவாணி !!! நடிகற் விஜயின் வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் சாலிகிராமம் ஏரியாவுல கேட்டால் தெரியும். அவரு கைவச்ச எத்தனைப் ''''கள் பாவம் அனைவரும். என்னவோ ! இவரால நடிக்கத்தான் தெரியவைல்லை என்றால் அரசியல் பண்ணத்தெரியவில்லை. அப்பா பின்னாடி ஓடிட்டே இருக்க வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
  3. ///விஜய்யின் உண்மை முகத்தை சிங்கள அரசு புரிந்து வைத்துள்ளது. தமிழர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ///

    விஜய் முகமூடி.... இல்லையில்லை நிஜ முகமே இதுதான்.

    வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்,
    மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  4. அண்ணே!தமிழ்மனத்தில் யாரு எதிர் ஓட்டு போட்டது?

    பதிலளிநீக்கு
  5. விஜய்க்கு பேசக்கூட ஒழுங்கா தெரியதாது.இவன மாதிரி ஆளுங்கள்ளாம் அரசியலுக்கு வந்தா நாடு உருப்படும்.

    பதிலளிநீக்கு