புதன், மே 25, 2011

தில்லாலங்கடி தயாநிதியை தோலுரித்த விக்கிலீக்ஸ்.


பல முறை நமது பல கட்டுரைகளில் சுட்டி காட்டியது இப்போது விக்கிலீக்ஸ்சும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. கடந்த 2008 நவம்பர் மாதம் ஈழத்தில் சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையே உச்சகட்ட போர் நடைபெற்றபோது, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, போரை நிறுத்த இந்தியா முயற்சிக்கவில்லையெனில் திமுகவின் எம்.பிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிடுவார்கள் என எச்சரித்தார். உடனே கனிமொழி தனது ராஜினாமா கடிதத்தை கொண்டும் போய் கருணாநிதியிடம் தந்தார். மற்ற எம்.பி, மத்திய அமைச்சர்களும் தந்தனர். உடனே பிரணாப்முகர்ஜி சென்னை வந்தார் போர் நின்றுவிட்டது என அறிவித்தார்கள்.

இதுப்பற்றி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரிகள் தயாநிதிமாறனை சந்தித்து பேசியுள்ளார்கள். அவர்களிடம், கூட்டணியில் இருந்து கருணாநிதி  விலக மாட்டார். இது அவர் நடத்தும் நாடகம் என கூறியுள்ளார்.

இதேபோல் 2008 பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிகாரிகளிடம், பதவிக்கு வந்ததும் எல்லோரும் மாறிவிடுகிறார்கள். திமுகவினர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளார்கள். திமுக தந்த இலவச கலர் டிவியை மக்கள் மறந்துவிட்டனர். இதனால் 2009 நாடாளமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சரிபாதியிடங்களில் வென்றால் பெரிய விஷயம் என்றுள்ளார். இதுயெல்லாம் அமெரிக்காவின் வெளியுறவுத்துறைக்கு கேபிள் வழியாக சென்றுள்ளது. அதைத்தான் விக்கிலீக்ஸ் லீக் செய்துள்ளது. விக்கிலீக்ஸ்சுடன் ஓப்பந்தம் போட்டுள்ள இந்தியாவின் பிரபல ஆங்கில செய்திதாளான தி இந்து அதை முதல் பக்கத்தில் வெளியிட்டு தயாநிதிமாறனின் துரோக தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

ஆனால் தயாநிதிமாறன், என் புகழை கெடுக்க, தங்களது சர்க்குலேஷனை உயர்த்திக்கொள்ள என்மீது வீண் பழி சுமத்துகிறது தி இந்து. உடனே இதற்க்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் வழக்கு தொடருவேன் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

விக்கிலீக்ஸ் நிர்வாகத்துக்கும் தயாநிதிமாறன்க்கும் மாமன் மச்சான் சண்டையா என்ன தயாநிதிமாறனை பழிவாங்க பொய்களை சொல்ல வேண்டும் என்பதற்க்கு. தயாநிதிமாறனை அசஞ்க்கு தெரிவதற்க்கான வாய்ப்பு நிரம்ப குறைவு.

தி இந்து பத்திரிக்கை பொய் சொல்லியிருக்கலாமே என கேட்கலாம். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என முதல் பக்க செய்தி வெளியிட்ட நிறுவனம் தான் அது. ஆனால், தயாநிதிமாறன் விவகாரத்தில் பொய் சொல்வதற்கான வாய்ப்பு குறைவு. காரணம், விக்கிலீக்ஸ் தரும் தகவல்களை மட்டுமே அவர்கள் பெயர் போட்டு வெளியிட முடியும். வெளியிடும் தகவல்களை அந்நிறுவனம் கண்காணிக்கிறது. போட்டி நிறுவனங்களும் அதே கண்கொத்தி பாம்பாக பார்க்கிறார்கள். அதோடு தயாநிதிமாறன் இந்து குடும்பத்தில் தான் பெண் எடுத்துள்ளார். அவர்களே வெளியிடுகிறார்கள் என்றால் நிச்சயம் தகவலை சரிபார்த்தே வெளியிட்டுயிருப்பார்கள். ஆக இது உண்மை செய்தி தான் என நம்பலாம்.


இனி விவகாரத்துக்கு வருவோம் :
ஏதே தயாநிதிமாறன் யோக்கிய சிகாமணி போல் திமுககாரர்கள் பதவிக்கு வந்தபின் மாறிவிடுகிறார்கள் என சொல்லியுள்ளார். திமுகவின் டெல்லி முகமான முரசொலிமாறன் இறந்ததும் வியாபாரியான அவரது மகனை எம்.பியாக்கி அமைச்சராக்கி, டெல்லியில் திமுகவின் முகமாக்கினார். (இன்றுவரை அவர் அரசியல்வாதியாகவில்லை. பெரு முதலாளியாகவே உள்ளார்). திமுக தலைமையின் பிச்சையால் அமைச்சரானதும், அதிகாரத்தின் மூலம், அம்பானி சகோதரர்களுக்கு டெலிகாம் அனுமதி தர 1000 கோடி வாங்கினார். அம்பானிகளுக்காக டாடாவை மிரட்டினார். அமெரிக்காவுக்கு அரசு செலவில் சென்று ஹாலிவுட் படங்களை தமிழாக்கம் செய்து சன் நிறுவனம் மூலம் வெளியிடும் ஒப்பந்தங்கள் செய்தார், எப்.எம் ரேடியோ ஸ்டேஷன்களை நாட்டின் பல மாநகரங்களில் திறந்தார். தனது சன் நிறுவனத்திற்க்கு லேட்டஸ்ட் டெக்னாலஜி இயந்திரங்களை இறக்குமதி செய்தார், உச்சமாக தமிழகத்தில் தாத்தாவை கீழே இறக்கிவிட்டு தான் அந்த நாற்காலியில் அமர காங்கிரஸ்சோடு சேர்ந்து காய் நகர்த்தியவர் தான் தயாநிதிமாறன்.

அப்படிப்பட்டவர் சொல்கிறார் பதவிக்கு வந்ததும் திமுககாரர்கள் மாறிவிடுகிறார்கள் என்று. திமுக நம்பி வந்தவர்களுக்கு துரோகம் செய்ததில்லை என்பது வரலாறு. திமுக தலைமை போட்ட பதவி பிச்சையில் அரியணையில் இன்றும் அமர்ந்துக்கொண்டு காங்கிரஸ்சோடு மறைமுகமாக கை கோர்த்துக்கொண்டு அவரது குடும்பத்தை வளர்த்த இயக்கத்தை அழிக்க துடிக்கும் மாறன் சொல்கிறார் இத்தகவல் பொய் என்று.

இந்த தயாநிதிமாறன்க்காக 2009ல் இரண்டாவது முறையாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைத்தபோது, திமுகவின் முகமாக விளங்கிய டி.ஆர்.பாலுவை அமைச்சராக்க கூடாது. ஆனால் தயாநிதிமாறனை நிச்சயம் அமைச்சராக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமையே முரண்டு பிடித்தது. அதனாலே அவருக்கு ஐவுளித்துறை கிடைத்தது. சீட் கூட அவருக்கு காங்கிரஸ் கட்சியே தர வேண்டும் என சொன்னதாக கூட தகவல்கள் உண்டு.

மதுரை தினகரன் நிறுவனம் தீ வைத்து எரிக்கப்பட்ட அன்று உடைத்து வெளியே அனுப்பப்பட்ட மாறன் சகோதரர்களை மீண்டும் இணைத்துக்கொண்டு கொஞ்சி குலாவியது தவறு என்பது இப்போது திமுக தலைவர் கருணாநிதிக்கு புரிந்திருக்கும். இன்னும் புரியவில்லை எனில் காலம் நிச்சயம் இதை விட அதிகமாக கருணாநிதிக்கு புரியவைக்கும். திமுக தொண்டர்களுக்கும் புரியவைக்கும். 

4 கருத்துகள்:

  1. திமுக நம்பி வந்தவர்களுக்கு துரோகம் செய்ததில்லை என்பது வரலாறு

    ... இத இத இதான், நம்ப முடியல ..நீங்க தூங்கிகிட்டே எழுதனது போல தெரியுது.
    ... எதுக்கும் எம். ஜி . ஆர் , வை கோ , நாவலர் வரலாறு,
    ... அப்படியே கொஞ்சம் 2G வரலாறு , ஈழ தமிழர் வரலாறு , அப்புறம் நம்பி ஒட்டு போட்ட நம்பளோட வரலாறு எல்லாம் படிங்க

    பதிலளிநீக்கு
  2. தோழர் இளையராஜாவுக்கு உண்மை தான் தூங்கறதுக்கு முன்னாடி எழுதனது இந்த கட்டுரை.

    என்னது நீங்க முதல்ல நடுநிலையான எம்.ஜி.ஆர், வை.கோ வரலாறுகள படிங்க உண்மையில் யார் யாருக்கு துரோகம் செய்தாங்கன்னு தொியும்.

    அதோடு 2ஜி ஊழல் மாதிாி எல்லா ஆட்சி காலத்தலயும் ஊழல் நடந்திருக்கு அதுக்கு பேர் துரோகம்மில்ல. அதோட ஈழ தமிழர் விவகாரத்தல அவர்களுக்கு உண்மையில் உழைத்தது திமுக தான். அதில் லாபம் அடைய பார்த்தவர்கள் இன்று நல்லவர்களாக வேடம் தாித்துயிருப்பவர்கள். காங்கிரஸ்சை முதுகில் சுமந்ததன் பவாத்தை இன்று திமுக சுமக்கிறது. இதில் காங்கிரஸ் தான் துரோகம் செய்த கட்சி. அந்த பாவத்தை ஏற்றுக்கொண்டது மட்டுமே திமுகவின் பணி. நீங்கள் நடுநிலையான புத்தகங்கள் படிக்க வேண்டும்மென்றால் வாருங்கள் தருகிறேன் படியுங்கள். இன்றைய காலகட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு கருத்து தொிவிக்காதீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லாவியாழன், மே 26, 2011

    ஈழ தமிழர் விவகாரத்தல,

    காங்கிரஸ்சை முதுகில் சுமந்த தன் பாவத்தை இன்று திமுக சுமக்கிறது. இதில் காங்கிரஸ் தான் துரோகம் செய்த கட்சி. அந்த பாவத்தை ஏற்றுக்கொண்டது மட்டுமே திமுகவின் பணி.

    In 1970's, Indira Gandhi told, Either Alliance or Opposition, DMK & Karunanaithi is 100% on it.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லாவெள்ளி, மே 27, 2011

    என்ன தான் சொன்னாலும் தயாநிதி மாறன் தன் அமைச்சர் பணியில் ஓரளவு நன்றாக செயல்படுகிறார் என்பதை மறுக்க முடியாது..
    ஜவுளித்துறை முன்னேற தன்னால் முடிந்த அளவு பாடுபடுகிறார்!!

    முதலில் ராசா நல்லவர் குற்றமற்றவர் என்று சொல்லிவிட்டு தற்போது அனைத்தும் ராசாவின் தவறு என்று மாற்றி மாற்றி சொல்வது எதற்கு??
    கருணாநிதி நல்லவர் என்று ஒட்டுமொத்தமாக எப்படி சொல்ல முடியும்???
    அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்

    பதிலளிநீக்கு