சனி, நவம்பர் 02, 2013

பார்வையாளனை கடித்து குதறிய ஓநாய் ........

மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு தரப்பட்ட அதீத விமர்சனம்மே அந்த படத்தை பார்க்கும் ஆசையை அடக்கிவிட்டது. இன்று  விஜய் டிவியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு படத்தை லாஜிக்கே  இல்லாமல் அறிமுக இயக்குநர்கள் கூட தற்போது எடுப்பதில்லை என்பதே என் கருத்து. 

மிஷ்கின் கல்லறையில் குழந்தைக்கு கதை சொல்லுவது படத்தின் மாஸ்டர் பீஸ் என வர்ணித்திருந்தார்கள். அந்த கதை நன்றாக இருந்ததே தவிர கதை சொல்லப்படும் போது பார்வையாளன் மனதில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அந்த காட்சியில் உணர்ச்சியும்மில்லை. கண் தெரியாமல் நடித்தவர்கள் இயந்திரம் போலவே நடித்தார்கள் என்பதே உண்மை. எந்த இடத்திலும் படத்தோடு ஒன்ற முடியவில்லை. 

படத்தில் இளையராஜாவின் இசையை ஆஹோ ஓஹோ என புகழ்ந்தார்கள். இந்த படத்தில் எதற்காக இப்படியொரு பின்னணி இசை என்பதை படத்தை பார்த்த என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. இளையராஜா மிஷ்கினை பழிவாங்கினாரா? இல்லை இசையை பழிவாங்கினாரா? என்பதை அவருக்கே வெளிச்சம்.

இதே படத்தை வேறு யாராவது எடுத்திருந்தால் துவைத்து தொங்கவிட்டுயிருப்பார்கள் சில விமர்சகர்கள். வேறு சிலர் முகநூலில், பிளாக்கில் எழுதிய விமர்சனம் நிச்சயம் படத்துக்கானதில்லை. அவர்களின் நண்பன் மிஷ்கினுக்கானது என்பதை இப்போது உணரமுடிந்தது. நண்பனுக்காக ஆஹா ஓஹோ என புகழ்ந்துவிட்டார்கள். 

இதை கேட்டு நாம் உலகளாவிய படத்தை எடுத்துவிட்டோம் என நம்பியே என்னவோ மிஷ்கினும் தான் சினிமாவை காக்க வந்த ரட்சகர் போல் பேச தொடங்கிவிட்டார். அவர் மட்டுமல்ல பல இயக்குநர்கள் அப்படித்தான் பேசுகிறார்கள். இதுபோன்ற புகழ்ச்சிக்கு பலியானவர்கள் தான் மணிரத்னம், சேரன், ராம் போன்றவர்கள். சினிமாவை யாரும் காப்பாற்ற தேவையில்லை. சினிமா மூலம் உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள். 


மிஷ்கின் இலக்கியம், சினிமா இரண்டு தளத்தில் இயங்க ஆசைப்படுகிறார். அதில் தப்பில்லை. ஆனால் இரண்டையும் போட்டு குழப்பிக்கொண்டு படம் எடுப்பது தான் தவறு. 

இலக்கியம் என்பது பாமர ரசிகனுக்கு என்றும் புரிந்ததில்லை. இலக்கியவாதிகள் புரியவைப்பதும்மில்லை. புரியாமல் படத்தையும் எடுத்தால் எப்படி சரியாக இருக்கும். சினிமா பார்க்க வரும் ரசிகனுக்கு குழப்பமான இலக்கிய கதை தேவையில்லை. ஜாலியான ரசிக்கும் தன்மையுடைய சினிமாவே தேவை. 

மாற்று சினிமா என பேசி அவன் கழுத்தை அறுக்காமல் இருந்தால் போதுமானது. மாற்று சினிமாவுக்கான களம் தமிழகம் இல்லை என்பதை முதலில் உணர்ந்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் படம் எடுத்தால் ரசிகர்கள் ரசிப்பார்கள். 

மிஷ்கின் சரியாக தான் படத்துக்கு தலைப்பு வைத்திருந்தார். ஓநாயிடம் சிக்கிய ஆட்டுக்குட்டியாகி போயிருப்பார்கள் ரசிகர்கள். 
விஜய் டிவிக்கு நன்றி. (அடிக்கடி விளம்பரம் போட்டு ஓநாயிடம் இருந்து தப்ப வைத்ததற்க்கு)

9 கருத்துகள்:

  1. சரியாக சொல்லியிருக்கிறீர்கள். மிஷ்கின் புராணம் பாடுவது தன்னை வெகுஜன ரசனையிலிருந்து உயரே வைக்கும் ஒரு மலிவான தந்திரம். நீங்கள் குறிப்பிட்டுள்ள அபத்தங்கள் படத்தில் ஏகத்துக்கு உண்டு. சிறுமி எதோ பிக்னிக் போவது போல ஒரு கதை சொல்லுங்க என்று ஒரே வசனம் பேசுவது ,மிஷ்கின் கதை சொல்லும் காட்சி, படத்தில் வருகிற முக்கால்வாசி எல்லோருமே கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு அலைவது, ஆள் அரவமற்ற சென்னை சாலைகள், ஆபரேஷன் செய்யப்பட்டவன் உடனே மாயாவி போல ஓடி எதிரிகளை அடித்து துவம்சம் செய்வது என்று மிஷ்கின் தனக்கு தோன்றியதை படமாக எடுத்திருக்கிறார்.

    "படத்தில் இளையராஜாவின் இசையை ஆஹோ ஓஹோ என புகழ்ந்தார்கள். இந்த படத்தில் எதற்காக இப்படியொரு பின்னணி இசை என்பதை படத்தை பார்த்த என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. இளையராஜா மிஷ்கினை பழிவாங்கினாரா? இல்லை இசையை பழிவாங்கினாரா? என்பதை அவருக்கே வெளிச்சம்."

    இசையைப் பற்றி நீங்கள் குறிப்பிடுள்ளதையே நானும் என் கருத்தாக பலரிடம் சொல்கிறேன். இந்தப் படத்துக்கு இளையராஜா அமைத்த இசை கொஞ்சமும் தொடர்பில்லாதது என்பது என் கருத்து. மேற்கத்திய செவ்வியல் பாணியில் இசை அமைத்தால் அது ஆங்கில பட ரேஞ்சுக்கு அமைந்துவிடும் என்று மிஷ்கின் நம்பியிருக்கலாம். ஆனால் இசையும் படத்தின் காட்சிகளும் ஒன்றுக்கொன்று கோர்வையாக இல்லாமல் இருப்பது வேடிக்கைதான். பலர் புகழும் அளவுக்கு இசை எந்த புது அனுபவத்தையும் தரவில்லை.

    "சினிமாவை யாரும் காப்பாற்ற தேவையில்லை. சினிமா மூலம் உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள். "

    இந்தப் பஞ்சை ரசித்தேன். உண்மையும் கூட. நல்ல பதிவுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. " சினிமாவை யாரும் காப்பாற்ற தேவையில்லை. சினிமா மூலம் உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள். "

    punching lines

    பதிலளிநீக்கு
  3. //சிகனுக்கு குழப்பமான இலக்கிய கதை தேவையில்லை. ஜாலியான ரசிக்கும் தன்மையுடைய சினிமாவே தேவை. //

    எனக்குத் தெரிந்து இது மிக மிகத் தவறான தத்துவம். இந்த தத்துவம் ‘ரசிகர்களிடையே’ பெருவாரியாக இதுவரை இருந்து வந்ததால் தான் தமிழ்ப்படங்கள் இன்னும் தவண்டு கொண்டே இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழமை தருமி அவர்களுக்கு, தமிழ்படங்கள் தவழ்ந்து கொண்டே இருக்கிறது என குறிப்பிட்டுள்ளீர்கள் உண்மை தான் மறுக்கவே முடியாது. அதற்கு காரணம் பாமர மக்கள் இலக்கியத்தை உள்வாங்கும் தன்மையை பெறவில்லை என்பதே எதார்த்தம். சமுதாயத்தில் 2 சதவித மக்கள் இலக்கியத்தை ரசிப்பவர்களாக இருக்கிறார்கள். 2 சதவித மக்களை 50 சதவித மக்களாக உயர்த்திவிட்டு இலக்கிய சினிமா எடுத்தால் அவன் புாிந்துக்கொள்வான். படத்தை தயாாிக்கும் தயாாிப்பாளருக்கு லாபம் கிடைக்கும். அதை உருவாக்காமல் 2 சதவித மக்களுக்காக ஒரு சினிமா எடுத்துவிட்டு 2 சதவித மக்கள் பாராட்டுகிறார்கள் என்பதற்காக மீதியுள்ள மக்கள் படம் பார்க்க முடியாது.

      ஒருவன் பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் ஏாியின் கரை மீதமர்ந்து தெளிவான நீாில் தொியும் அழகான நிலவை ரசித்துக்கொண்டு இருக்கிறான். நிலவை பிாிதிபலிக்கும் நீர் மீது ஒருவன் கல் எறிந்தால் எப்படியிருக்கும் ........... அப்படியிருந்தது படம்.

      கண் தொியாத சிறுமியின் அம்மா குண்டடி பட்டு இறந்துவிடுகிறாள். சிறுமி அம்மாவுக்கு என்னானது என கேட்கிறாள் ?. செத்துட்டாங்க என்கிறான். சிறுமை உடனே நாமும் செத்துடலாம் என கேட்கிறது. இதை விட அபத்தமாக படம் எடுக்க மிஷ்கினால் எப்படி முடிந்தது ?????????????????

      நீக்கு
  4. புரியாமல் படத்தையும் எடுத்தால் எப்படி சரியாக இருக்கும். சினிமா பார்க்க வரும் ரசிகனுக்கு குழப்பமான இலக்கிய கதை தேவையில்லை. ஜாலியான ரசிக்கும் தன்மையுடைய சினிமாவே தேவை..........super

    பதிலளிநீக்கு
  5. When compared with recent tamil films...This film is better...
    Can you say 3 better films from the past 5 months...

    பதிலளிநீக்கு