வியாழன், டிசம்பர் 29, 2011

ஸாரி மேடம் ( பகுதி 5 )



ஸாரிடீ.

தேவியின் கையை பிடித்துக்கொண்டு மஞ்சு கெஞ்சினால்.

அதெல்லாம் இருக்கட்டும். மேடம் அவனை காதலிக்கறிங்களோ?

அப்படியெல்லாம் கிடையாதே என வெட்கினாள்.

ஏய் ஏய் பொய் சொல்லாதடீ. அவன் என்னை காதலிக்கறான்னு நினைச்சி இன்னைக்கு பூரா அழுதுக்கிட்டு என்னை விரோதியாவே பாத்தயே அதுக்கு காரணம் என்ன ?.

நான் அழுதன்னு யார் சொன்னது.

மறைக்காதடீ. அவனை காதலிக்கறது உண்மை தானே.

ஏய் வாய மூடிக்கிட்டு கிளம்பு டியூஷன் போகனும். டைம்மாகுது.

என்னோட ஸ்கூட்டியில போகலாம் ஒன்னும் அவசரம்மில்ல.

எப்போதலயிருந்து.

12வது வந்தப்பவே. அவன் மேல காதல் வந்துடுச்சிடீ.

சரி, அவன்க்கிட்ட சொல்ல வேண்டியதானே. 
நான் போய் எப்படிடீ சொல்றது.

சினிமா பாக்கறயில்ல. இப்பவெல்லாம் நாம போய் சொன்னாதான். இல்லன்னா பசங்க ஆளை மாத்திக்கிட்டு போய்க்கிட்டே இருப்பானுங்க தெரிஞ்சிக்க.

இவன் அப்படியெல்லாம் பண்ணமாட்டான்.

ஓ……. ஓஹே………

இன்னைக்கே அவன்க்கிட்ட டேரைக்ட்டா சொல்லிடு.

அவன் மனசுல என்ன நினைச்சியிருக்கான்னு தெரியாம எப்படிடீ சொல்றது.

அவனும் உன்னை நிச்சயமா காதலிக்கறான்னு தான் எனக்கு தெரியுது. மதியம் நீ சாப்பிடலன்னு சொன்னதும் அவன் ஒரு மாதிரியாகிட்டான். நான் அவன் மூஞ்சை பாத்தன்.

அவன்க்கு தெரிஞ்சவங்க யார் சாப்பிடலன்னாலும் கஸ்டப்படுவான்.

போடீ இவளே…….. அது வேற இது வேற. நான் சொல்றத கவனமா கேளு. மதியம் நீ சாப்பிடலன்னு அவனுக்கு தெரியும். அத ஞாபகம் வச்சிக்கிட்டு ஊருக்கு பஸ் ஏர்றதுக்கு முன்னாடி உன்னை அவன் ஹோட்டல்க்கு அழைச்சா அவன் நிச்சயமா உன்னை காதலிக்கறான்னு அர்த்தம்.

இல்லன்னா ?

அவன் கூப்பிட்டுவான். என் கணக்கு தப்பாது பாரு என்றவள். சரி வா டைம்மாயிடுச்சி போய்க்கிட்டே பேசலாம்.

தேவி தன்னுடைய ஸ்கூட்டியில் மஞ்சுவையும் அழைத்துக்கொண்டு டியூஷன் கிளம்பினாள்.

அவன் நிச்சயம் கூப்டுவானாடீ

………………..

மறந்து போயிருந்தா…..

……………..

என்னடீ நான் கேட்டுக்கிட்டே வர்றன் பதில் சொல்லாம வர்ற.

இதயே எத்தனை முறை கேட்ப. இன்னும் 1 மணி நேரத்தல தெரிஞ்சிடப்போகுது.

ஹோட்டலுக்கு கூப்பிடறான்னு வச்சிக்க. அங்க போய் எப்படிடீ காதலிக்கறன்னு சொல்றது.

ஓன்னும் தெரியாத பாப்பா நீ. ஒழுங்கா வாடீ. மிஸ் வீடு வந்துடுச்சி. அப்பறம் பேசிக்கலாம் என மஞ்சுவை இழுத்தும் போனாள் தேவி.

டியூஷன் நடக்கும் மொட்டை மாடியில் போய் அமர்ந்தபோது, இங்கிலீஸ் பாடம் எடுக்கும் ரமணி மிஸ் வந்து, தனித்தனியா உட்கார்ந்து இந்த எஸ்ஏவ மனப்பாடம் பண்ணுங்க, நாளைக்கு டெஸ்ட் வைக்கறன் என சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார்.

தேவியும், மஞ்சுவும் ஒரு ஓரமாக போய் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தார்கள்.

கூப்பிடுவானா என மஞ்சுவின் மனம் திக் திக் என அடித்துக்கொள்ள மாரியாத்தாதாயே அவன் இன்னைக்கு என்னை ஹோட்டலுக்கு கூப்பிட்டும் போனா வர்ற பொங்களுக்கு உனக்கு 3 தேங்காய் உடைக்கறன் என மனதுக்குள் வேண்டிக்கொண்டவள். ஐகக்கு எட்டும் தூரத்தில் அமர்ந்திருந்த தேவியை ஸ்….. ஸ்….. என சவுண்ட் விட்டதோடு தேவ் தேவ் என அழைத்தாள்.

திரும்பிய தேவி என்ன என புருவத்தை உயர்த்தி கேட்டாள்.

அவன் கூப்பிடலன்னா என்னடீ பண்றது.

வீட்லப்போய் சாப்டுட்டு படி இல்ல தூங்கு.

என்னடீ இப்படி சொல்ற.

வேற என்ன சொல்ல சொல்ற.

ஓன்னும்மில்ல என்றவாள் வாடிய பூவாய் ஆன தனது முகத்தை திருப்பி புத்தகத்தை பார்க்கலானாள். என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பே மனதில் அதிகமாய் இருந்ததால் மூளை புத்தக எழுத்துக்களை பதியாமல் போனது.

திரும்பவும் ஸ்… ஸ்… என தேவியை அழைத்தாள்.

என்னடீ என்றாள் கேபமாக.

பயமாயிருக்குடீ. என்ன பண்றத்து ?

இரு மிஸ்க்கிட்ட கேட்டு சொல்றன் என புத்தகத்தை மூடீவிட்டு எழுந்தவளை வேணாம்டீ உட்காரு என அவளது சுடியை பிடித்து இழுக்க உதறிவிட்டு மிஸ் மிஸ் என அழைத்தபடியே தேவி உள்ளே போனாள்.

2 நிமிடத்தில் வெளியே வந்த சுந்தரி மிஸ், ஏய் மஞ்சு. வயித்து வலிக்குதுன்னா கிளம்ப வேண்டியதுதானே. ஏன் உட்கார்ந்துயிருக்க. போகும்போது மெடிக்கல்ல மாத்திரை வாங்கி சாப்பிட்டுட்டு போ. தேவி நீயும் கிளம்பு. அவளை அவ ஊர்க்கு போற பஸ்ல ஏத்திவிட்டுட்டு போ என்றார்.

சரிங்க மிஸ் என்ற தேவி, மஞ்சுவிடம் உன் பேக் க தா. நான் எடுத்துக்கறன் என டிராமா நடத்தினாள்.

படிக்கட்டில் இறங்கி வரும்போது, ஏன்டீ இப்படி பொய் சொன்ன?

எல்லாம் உன் தொல்லை தாங்க முடியாம தான் என சொல்லிவிட்டு வெளியே வந்து ஸ்கூட்டியை கிளப்பும்போது தான் தேவி கவனித்தாள். தெரு முனையில் உள்ள பங்க் கடை ஓரமாக நின்றிருந்த ராஜா அவர்களை பார்த்து கை அசைப்பதை.

தொடரும்……….




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக