புதன், ஏப்ரல் 18, 2012

சுகமான சுமைகள் …………. 24.




கோயில்க்கு வெளியே அவளுக்காக காத்திருந்தேன். 6 மணிக்கு வர்றன் என்றவள் வரவில்லை. அவளுங்க சொல்ற நேரத்துக்கு நாம வந்துடனும். ஆனா அவளுங்க வரமாட்டாளுங்க. நாம காத்திருக்கனும். இதே அவளுங்க காத்திருந்தா கத்துவாளுங்க என எண்ணியடியே அவளுக்காக காத்திருந்தேன். 

சொன்ன நேரத்தை விட இருபது நிமிடம் தாமதமாக வந்தவள். சைக்கிளை நிறுத்திவிட்டு அருகே வந்ததும் வாங்க போகலாம் என்றாள். 

அசையாமல் இருப்பதை பார்த்து ஸாரி லேட்டாகிடுச்சி. வாங்க. 

பதிலை சொல்லிட்டு கூப்பிடுங்க வர்றன். 

அய்ய. எதுவும்மே இல்லாம தான் உங்கள கோயிலுக்கு வரச்சொன்னனா என்றதும் 

ஆனந்தமாகி இன்னைக்கி சந்தோஷமான நாள்ங்க. 

சாமிய பாத்துட்டு அப்பறம் பேசிக்கலாம் என நடக்க அவளுடன் நடந்தபோது மனமெல்லாம் சந்தோஷமாக இருந்தது. 

உங்களப்பத்தி அக்கா அடிக்கடி சொல்லும்போது எல்லாம் எனக்கு பொறாமையா இருக்கும். அவ மேல நீங்க எடுத்துக்கற அக்கறையை பாத்து லவ் பண்றிங்களோன்னு கூட நினைச்சன். தேவிக்கிட்ட கேட்டப்ப அதெல்லாம் இல்லன்னு சொன்னா. உங்கள பத்தி சொல்ல சொல்ல உங்கள பாக்கனம்;ன்னு ஆவலா இருந்தன். அக்கா அறிமுகப்படுத்தற அன்னைக்கு நான் உங்கள பாத்தப்ப நம்ம பின்னாடி வந்தவனாச்சேன்னு ஒரே சந்தோஷம். அதான் நீங்க லவ் பண்றன்னு சொன்னதும் சந்தோஷமாகிடுச்சி. இருந்தும் அக்காவுக்கு தெரிஞ்ச என்ன நினைக்குமோன்னு பயந்து தான் பதில் சொல்லல. அன்னைக்கு நைட்டெல்லாம் தூக்கம் வரல தெரியுமா. அவ்ளோ சந்தோஷம் என்றவள் கொஞ்ச நாளைக்கு அக்காக்கிட்ட சொல்லாதிங்க என்றபோது அதிர்ந்து போனேன். 

என்னால அதுங்கிட்ட இரண்டு நாளைக்கு மேல சொல்ல முடியாது. அதுக்கு தெரியாம நான் எதையும் பண்ணதில்ல. 
நான் குடிக்கறத சொன்னதுக்கே இதே பத்து நாளா பேசாம இருக்கறா. இந்த விஷயத்த மறைச்சது தெரிஞ்சது அவ்ளோ தான் அதனால சீக்கிரம் சொல்லிடுவன் என்னை மன்னிச்சிடு. 

சொன்னதை அமைதியாக கேட்டவள். சரி கொஞ்சம் லேட் பண்ணி சொல்லுங்க பாத்துக்கலாம் என்றவள் வாராவாரம் வெள்ளிக்கிழமை இங்க பாப்போம், ஏதாவதுன்னு போன் பண்ணுங்க என்றவள் வெளியே வந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினால். 

மனம் விசில் அடிக்க தொடங்கியது. அன்றைய இரவு விதவிதமான கனவு மனதில் வந்தது. 

மறுநாள், புங்கமரத்து காற்று குளு குளு என வீச நான், ஜான், அகிலன் மூவரும் அமர்ந்திருந்தோம். 

என்னடா உம்முன்னு இருக்க என்னாச்சி அகிலன் ஜான்னிடம் கேட்டான். 

எல்லாம் இந்த நாயாள வந்தது. இரண்டு நாளைக்கு முன்ன கோயிலுக்கு போனோம்மில்ல. அங்க ப்ரியாக்கிட்ட குடிக்க போறன்னு சொல்லியிக்கான். அதல ரெண்டு பேருக்கும் சண்டை வந்து பாதியிலயே வீட்டுக்கு போய்டுச்சி. அது சும்மாயில்லாம தேவிக்கிட்ட போட்டு குடுத்துடுச்சி. அவ என்னடான்னா குடிகாறநாயே என் முகத்தலயே முழிக்காதன்னு காரிதுப்பி துறத்தறா. 

விடறா எல்லாம் சரியாகிடும் என்றான். 

அப்ப இனிமே குடிக்கமாட்டியா?. 

குடிக்கறதா இருந்தா பாக்க வராதுன்னு சொல்றா.

அப்பாடா ஒருத்தன் செலவு மிச்சம். அகிலா சாயந்தரம் நம்ம பசங்கக்கிட்ட சொல்லீடு. லீமா பார்ல பார்ட்டி. 

ஏய் என்னை விட்டு போன செருப்பால அடிப்பன். 

இப்பதான் குடிக்கமாட்டன்னு சொன்ன

குhதலி சொல்றத கேட்கறதா இருந்தா ஒருத்தன் கூட குடிக்க முடியாது. அவுங்க சொல்றத சொல்லுவாங்க. நாம கேட்டுக்கிட்ட மாதிரி நடிக்கனும் என்ற ஜான் அதிருக்கட்டும் எதுக்கு பாhட்டி. 

எதுக்காயிருக்கும் அவுங்க ஆள் லவ்வ ஒத்துக்கிட்டுயிருக்கும் என அகிலன் சொல்ல கைகுடு மச்சான். 

உண்மையாவா ? எப்ப என ஜான் ஆச்சர்யத்துடன் கேட்க. நேத்து நைட் தான். கொஞ்ச நாளைக்கு ப்ரியாக்கிட்ட சொல்ல வேணாம்ன்னிட்டா. 

மச்சான் சூப்பர்டா என சந்தோஷப்பட்டான் ஜான். 

அப்போது, ப்ரியா முறைத்தபடி க்ளாஸ் நோக்கி போனால். என்ன மச்சான் இன்னுமா உங்க சண்டை தீரல. அவ குடிக்கறத விடுங்கறா. நான் வாரத்தல ஒருநாள் மட்டும்தான்னு சொல்றன். கேட்கறமாட்டேன்கிறா. விடு பாத்துக்கலாம். 

அன்று இரவு அதிகமாக குடிச்சதால், ஜலதோஷம் பிடித்துக்கொண்டு இரண்டு நாள் காலேஜ் போகாமல் ரூமிலேயே படுத்திருந்தேன். 

மதியம் யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்க திறந்துபோது, ப்ரியா கலக்கத்தோடு நின்றிருந்தாள். 

வாங்க. என்ன இவ்ளோ தூரம் என்றதும் எதுவும் பேசாமல் கழுத்தில் கை வைத்து பார்த்தவள் உடம்பு அதிகமாக சுட இவ்ளோ சுடுது. ஆஸ்பத்திரிக்கு போனயா என கேட்டாள். 

போய்ட்டு தான் வந்தன். வா உள்ள வந்து உட்காரு என்றதும் உள்ளே வந்து அமர்ந்தவள். எந்த டாக்டர்க்கிட்ட போன, என்ன சொன்னாரு, மாத்திரை சாப்பிட்டயா, சாப்பாடு என்ன சாப்பிடச்சொன்னாரு என வரிசையாக கேள்வி கேட்டபடியே இருந்தாள். 

ஏய் இரு இரு இது சாதாரண ஜொரம் தான். டாக்டர் மாத்திரை தந்துயிருக்காரு. சூடா கஞ்சி சாப்பிடச்சொல்லியிருக்காரு. 

ஏதனால ஜொரம் வந்தது. 

சொன்னா கோபப்படுவியே. 

நீ பேசலங்கறதால இரண்டு நாளா அதிகமா குடிச்சன்னா ஜலதோஷம் புடிச்சி ஜொரம் வந்துடுச்சி என்றதும் முறைத்தால். 

ஏய் முறைக்காதடா என கெஞ்சியதும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனவளிடம் ஆமாம். எனக்கு உடம்பு சரியில்லன்னு யார் சொன்னது. 

அகிலன்.

ஆவன் தான் சொன்னான்யில்ல. உடம்பு சரியில்லாதவனை பாக்க போறமே ஆப்பிள், ஆரஞ்சி வாங்கி போகலாம்ங்கற எண்ணம் வந்துச்சா உனக்கு. 

செருப்பு இரண்டு வாங்கி வந்துயிருக்கனும். ரெண்டு நாளா காலேஜ் வரலயே கேட்டுக்கிட்டு வந்தா உனக்கு இதெல்லாம் வாங்கி வரனுமாக்கும் என்றாள். 

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டுயிருந்தவளை சாப்பிட சொல்ல வேண்டாம் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கறன் என கிளம்பினாள். 

சுhயந்தரம் பசங்க எல்லாம் ரூம்க்கு வந்து பேசிவிட்ட போனான்கள். ஜான் மட்டும் பேசிக்கொண்டு ரூமிலேயே இருந்தான். 

7 மணிக்கு ப்ரியா, கவிதா, தேவி மூவரும் அறைக்கு வந்தனர். ஜானை முறைத்தபடியே அருகில் வந்த தேவி, ஜானை காட்டி இதோட சேந்து நீயும் உருப்படாம போறியா?. 

ஆமாம் இவர் பாவம் பால் கூட குடிக்க தெரியாத பச்ச புள்ள நாங்க கெடுக்கறதுக்கு என ஜான் கடுப்படிக்க ஏதாவது பேசன வாய உடைச்சிடுவன் என்றதுதும் சைலண்டானான். 

தேவியும், கவிதாவும் மாறி மாறி விசாரித்தனர். ப்ரியா கூடையில் வைத்திருந்த பாக்ஸ்சை எடுத்து தந்தாள். கஞ்சி இருக்கு குடி. அகிலனை ஹோட்டல்ல சாப்பிட சொல்லிடு என்றாள். 

அகிலன் ஊருக்கு போயிருக்கான். அதிருக்கட்டும் பழம் வாங்கனா காசு கொடுக்கனும்மேன்னு, கஞ்சிய தந்து ஏமாத்தற. 

அடிவாங்கப்போற என ப்ரியாச்சொல்ல அமைதியாகி கவிதாவை பார்த்தேன். ரொம்ப கவலையாக இருந்தாள். 

கஞ்சியும், மாத்திரையும் சாப்பிட்டபின் கொஞ்சம் தெம்பாக இருந்தது. 

நாளைக்கு காலேஜ் வர்றியா.

இல்ல.

நாளைக்கு சாயந்தரம் வர்றன். உடம்ப பாத்துக்க. முடிஞ்சா காலையில போன் பண்ணு என கிளம்பினால் ப்ரியா. கவிதாவும் வர்றங்க என சுரத்தேயில்லாமல் சொல்லிவிட்டு புறப்படப்படனர். 

தேவி ஒரு நிமிஷம், அவனை நோஸ்கட் பண்ணாத. இப்பவே பையன் நொந்துப்போய்யிருக்கான். மேலும் அவனை நோகடிக்காத. 

முதல்ல அவனை குடிக்கறத விடச்சொல்லு. 

அதெல்லாம் இனிமே குடிக்கமாட்டான். நான் பாத்துக்கறன். 

வேலிக்கு ஓனான் சாட்சியாம் என்ற ப்ரியா வாடீ போலாம் என தேவியை இழுத்துக்கொண்டு போனாள். போகும்போது தேவி ஜானின் கையை பிடித்து கிள்ளிவிட்டு போனால். அதை பாhத்தபோது சிரிப்பு வந்தது. 

மறுநாள் காலை ப்ரியா வீட்டுக்கு போன் செய்தபோது, அவளே போனை எடுத்தாள். பரவாயில்ல. இருந்தும் இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வரலாம்னு இருக்கன். 

வெளியில எங்கயும் சுத்தப்போகாம ரெஸ்ட் எடு. நூன் சாயந்தரம் வர்றன். 

ம் எனச்சொல்லிவிட்டு போனை வைத்தேன். 

ரூம்க்கு வந்தபோது அகிலன் காலேஜ் போயிருந்தான். லைப்ரரியில் இருந்து அகிலன் எடுத்து வந்திருந்த பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு சும்மா புரட்டுக்கொண்டுயிருந்தேன். அப்போது கதவு தட்டப்பட யார் அது எழுந்து திறந்தபோது ஆனந்த அதிர்ச்சி. 

கவிதா வெளியே நின்றிருந்தாள். 

ஏய் நீ எங்க இங்க. 
இப்ப எப்படி இருக்கு உடம்பு.

புரவாயில்ல. 

நீ என்ன காலேஜ் போகாம இங்க வந்திருக்க. ப்ரியாக்கிட்ட போன் பேசனப்பக்கூட அதுக்கூட எதுவும் சொல்லல. 

உன்ன பாக்கபோறன்னு சொன்னா செருப்பால அடிக்கும். யாருக்கும் தெரியாம தான் வந்தன். 

லூசா நீ. யாராவது பாத்துட்டு உங்க வீட்ல சொன்னா அவ்ளோ தான். உங்கக்கா இதுக்கு தான் என் கூட பழகனியான்னு கேட்டு கத்தும். உங்கம்மா எவ்ளோ அசிங்கமா நினைப்பாங்க. 

ஓன்னும் நினைக்கமாட்டாங்க. இரண்டு நாளா உடம்பு சரியில்லயேன்னு மனசு கேட்காம உன்ன பாக்க வந்திருக்கன். நீ எதுக்கு சும்மா கண்டத நினைச்சி பயந்து சாகற. ஓன்னும் ஆகாது. சாயந்தரம் வரைக்கும் இருந்துட்டு 4 மணிக்கா வீட்டுக்கு போய்டுவன். 

உங்கக்கா சாயந்தரம் வர்றன்னியிருக்கு. 

அது 6 மணிக்கு மேல தான் வரும். 

அப்ப எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு தான் வந்துயிருக்க. 

ம் என்றபடியே. மதியம் என்ன சமையல். 

நூன் ஒருத்தன் தானே மெஸ்ல சாப்பிடலாம்னு பாத்தன். அதான் நீ வந்துட்டீயே நீ சமை. இன்னைக்கு உன் சமையலை தான் மாமன் சாப்பிடபோறன். 

என்னது. சும்மா சொன்னன்டா கோவிச்சிக்காத. 

சமைத்தபடியே பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, வீடு, நண்பர்கள் என பேசியபடி சமைத்தால். 

கத்தரிக்காய் காரக்குழம்பு நன்றாக சமைத்திருந்தாள். 

நல்லா சமைக்கறப்பா. 

இப்படியே சமைச்சி போட்டன்னு வச்சிக்க தொப்பை நிச்சயம் என்றதும். 

நிஜமா நல்லாயிருக்கா என வெட்கத்துடன் கேட்டாள். 

உண்மையாதான் நல்லாயிருக்கு என்றதும் அதிகமாக வெட்கப்பட்டாள். 

சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு வந்தவள் நான் உட்கார்ந்திருந்த கட்டிலுக்கு எதிர் கட்டிலில் உட்கார்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். 

கவி என அழைத்ததும் பேசுவதை நிறுத்திவிட்டு என்னவென பார்த்தால். 
என்னோட தனியா இருக்கியே எம்மேல அவ்ளோ நம்பிக்கையா?. 

எல்லாரையும் விட உன்ன அதிகமாவே நம்பறன் என்றாள். 

தேங்க்ஸ். 

எதுக்கு. 

எம்மேல இவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கியே அதுக்கு. 

லூசு என பழிப்பு காட்டா. 

நீ தூங்கு என என் அருகில் இருந்த பொன்னியின் செல்வன் நாவலை எடுத்துக்கொண்டு படிக்க தொடங்கினால். ஆவளை பார்த்துக்கொண்டேயிருந்த நான் எப்போது தூங்கினேன் என தெரியவில்லை. 

மாம்ஸ் மாம்ஸ் என்ற குரல் கேட்டு எழுந்த போது கவிதா தான் அருகே நின்றிருந்தாள். 

யாரு. 

நான்தாம்பா எழுப்பனன். 

என்ன சொல்லி எழுப்பன. 

ச்சீ போ என்றவள் டைம்மாகிடுச்சி கிளம்பறன் என பேக்கை எடுத்துக்கொண்டு புன்னகைத்தபடியே ஓடினால்.

தொடரும்...............

1 கருத்து:

  1. சுவையாக எழுதுகிறீர்கள்.
    தொடர்கதையென்றால்...........
    கதை முடிவில் ‘சஸ்பென்ஸ்’ வைத்தால், அடுத்து வரும் கதைக்காக வாசகர்கள் காத்துக் கிடப்பார்கள்.
    மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு