வியாழன், ஏப்ரல் 19, 2012

கழகத்தில் கலகம். தீராத மோதல்.


மீண்டும் உச்சத்துக்கு வந்துள்ளது திமுகவின் தலைவர் அழகிரி - ஸ்டாலின் மோதல். கட்சியில் யாருக்கு அதிக அதிகாரம் என்பதை காட்ட முயற்சி செய்கிறார்கள். இதில் மாட்டிக்கொண்டு முழிப்பது தொண்டர்கள் தான்.

கலைஞரின் மகனாக இல்லாவிட்டால் திமுக எப்போதே ஸ்டாலின் கைக்கு போயிருக்கும். காரணம், கட்சிக்காக அவ்வளவு உழைத்துள்ளார். இன்றும் கட்சி பணியாக தினமும் நூற்றுக்கணக்கான கி.மீ சுற்றி வருகிறார். கட்சியினருடன் பழகுகிறார், கட்சி பணிகளை தொய்வில்லாமல் நடத்துகிறார். முடிவுகளை உடனுக்குடன் எடுக்கிறார். கட்சியின் மேல்மட்ட முக்கிய தலைவர்களுக்கு உரிய மரியாதையை தருகிறார். கட்சியின் மீதான விமர்சனங்களை ஒதுக்கி தள்ள முயல்கிறார், கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச முயல்கிறார். தகுதியானவர்களை பொறுப்புக்கு வரவைக்க வேண்டும் என முயல்கிறார். எதிர்கட்சியான பின் ஆளும்கட்சி நடத்தும் அராஜகங்களை கண்டு கொதிக்கிறார். கட்சியின் முக்கியஸ்தர்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

ஜெ தமிழக முதல்வரானதும், தன்மேல் எந்த வழக்கும் வரக்கூடாது என்பதற்காக தன் குடும்பத்தையே வெளிநாட்டில் இருக்க வைத்தவர் அழகிரி. ஸ்டாலின் வருவது வரட்டும்மென அவர் மீது போடப்பட்ட வீடு அபகரிப்பு என்ற வழக்கை எதிர்கொண்டு தவறு நடக்கவில்லை என நிருபித்துள்ளார். இதுதான் ஒரு கட்சி தலைவருக்கு அழகு. ஓடி ஒளிவதல்ல என்பதை காட்டினார்.

ஸ்டாலின் உழைத்தார் பதவிகள் அவரை தேடி வந்தது. பதவியை தேடி அவர் செல்லவில்லை. கழகத்தில் அவரின் உழைப்பு வேறு ஒருவர் செய்திருந்தால் அவர் இன்னேறம் முதல்வராக உருவாகியிருப்பார். தலைவர் வழி விடட்டும் என்று காத்துள்ளார் தனயன். ஸ்டாலின் சில அவமானங்களை சந்தித்துவிட்டு தான் இந்த பதவிக்கே வந்துள்ளார். ஸ்டாலின் துணை முதல்வரானபோது சோக்காளி சோ தெளிவாக சென்னார். ஸ்டாலின்க்கு கிடைத்த பதவி மிகவும் தாமதமானது என்று. எதிர் தரப்பாக இருந்தாலும் உண்மையை சொன்னார்.

ஸ்டாலின் செயல்பாடுகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது அவரின் உடன்பிறந்த சகோதரர் அழகிரி தான். மதுரை கட்சியினரிடம் மட்டுமே பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு கட்சியை நிர்வகிக்க தொடங்கியவர். கடந்த ஐந்தாண்டில் அவருடன் இருந்த சர்ச்சைக்குரியவர்களுக்கு பதவிகள் வாங்கி தந்தார். இறுதியில் கட்சியில் இல்லாத தென்மண்டல அமைப்பு செயலாளர் என்ற பதவியை உருவாக்க வைத்து அந்த பதவியில் ஜம்மென்று வாங்கி உட்கார்ந்;துக்கொண்டு ஸ்டாலினால் ஒதுக்கப்பட்ட பாரம்பரிய கட்சியினரை, வயதானவர்களை தன்னுடன் வைத்துக்கொண்டு கழகத்தில் கலகத்தை உருவாக்க தொடங்கியுள்ளார். கழகத்துக்கு துரோகம் செய்த தயாநிதிமாறனை நம்பி பணியாற்ற தொடங்கியுள்ளார்.

மதுரையை விட்டு வெளியே வந்தால் அழகிரிக்கு மரியாதை செய்யக்கூட ஆள்யில்லை. அப்படிப்பட்டவர் கழகத்தின் அடுத்த தலைவராக வேண்டும்மென ஆசைப்படுகிறார். ஜனநாயக இயக்கத்தில் யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்கு ஆசைப்படலாம். ஆனால் அதற்கான தகுதியிருக்கறா என்பதை முதலில் தங்களுக்கு தாங்களே தனது மனதை கேட்டுக்கொள்ள வேண்டும்.

அழகிரி, கனிமொழி போன்றவர்களால் தான் வாரிசு கழகம் என்ற அவப்பெயர் திமுகமேல் அதிகமாக விழுகிறது. ஸ்டாலின்க்கு கிடைக்கும் மரியாதை, புகழை கண்டு மயங்கி போய் தங்களுக்கும் பதவி வேண்டும்மென துடித்து எம்.பி, மந்திரி பதவியென வாங்கி அமர்ந்தனர். இப்போது வாரிசு வாரிசு என ஏலனம் செய்ய தொடங்கிவிட்டார்கள் கழகத்தை துற்றுவோர்.

கலைஞர் தீவிரமான முடிவு எடுக்க வேண்டிய சமயம். அதாவது அவர் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி ஸ்டாலினை அதில் அமர வைக்க வேண்டும். அழகிரிக்கான கடிவளாம் போடவேண்டும். கனிமொழிக்கு இனி பதவிகள் இல்லை என கூற வேண்டும். தயாநிதியை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் அப்போது தான் கழகம் வளரும். இல்லையேல் மிகப்பெரிய உள்கட்சி பிரச்சனையை கழகம் சந்திக்கும்.

7 கருத்துகள்:

 1. கலைஞர் ஆல் தி மு க வை வெறுத்து தற்போது ஸ்டாலினால் ஈர்க்க பட்டவன் நான். உங்கள் கருத்தை கட்சிக்கு அப்பாற்பட்ட ஒரு common man ஆக வரவேற்கிறேன் !!!

  பதிலளிநீக்கு
 2. இந்த மோதல் கட்சிக்கு நல்லதல்ல , ஆனால் மக்களுக்கு நல்லது .

  பதிலளிநீக்கு
 3. hw abt grand sons.....r they not yet ready?stalin's father made him leader....!there were so many leaders more talented than stalin...but they r not sons of the leader.

  பதிலளிநீக்கு
 4. கலைஞருக்கு பிறகு தி.மு.க மிகப்பெரிய பிளவை சந்திக்கும் என்றே தெரிகிறது...

  பதிலளிநீக்கு
 5. இசுடாலின் தலைவராக முடியாததற்கு காரணம் அவரின் அப்பாவின் குடும்ப பாசம் தான். அவர் திமுகவின் தலைவராக இருந்து இருந்தால் இசுடாலினை தலைவராக்கி இருப்பார். குடும்ப பாசம் மட்டுமே உள்ள அப்பாவாக இருப்பதால் முடியவில்லை. அப்பா என்ற முறையிலே தான் இசுடாலின் தலைவராவதற்கு தடையாக இருந்தவர்களை நீக்கினார் என்பது வேறு. வயதான காலத்தில் அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த மனத் துன்பம் கொடுமையானது. தன் வினை தன்னைச் சுடும்.

  பதிலளிநீக்கு
 6. ravikumarApr 19, 2012 04:22 AM
  Vaiko suppose to be the next leader of DMK not Stalin


  well said

  பதிலளிநீக்கு