அக்னி 5 ஏவுகணை மாபெரும் வெற்றி என இந்திய ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதை கேட்டு இந்தியாவில் பெரும்பாலானவர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். தந்போது உருவாக்கப்பட்டுள்ள அக்னி ஐந்து என்கிற ஏவுகனை 5 ஆயிரம் கி.மீ தாண்டிப்போய் குறிப்பிட்ட இடத்தை தாக்கும் திறன் கொண்டது, அதேபோல் கண்டம் விட்டு கண்டம் பாயும் வேகம் கொண்டது இந்த ஏவுகனை என்கிறார்கள்.
கண்டம் விட்டு கண்டம் போய் தாக்குதல் நடத்தும் இந்த ஏவுகனை நமக்கு உலகில் வல்லரசு என்ற பெயரை வேண்டுமானால் வாங்கி தரலாமே ஒழிய இந்திய ஒன்றியத்தில் உள்ள வறுமையை ஒழிக்காது.
எதிரி நாடுகளும், இந்தியாவை சீண்ட நினைக்கும் நாடுகள் வேண்டுமானால் இதனை கண்டு பயப்படலாம். மற்றப்படி இந்த ஏவுகனையால் மக்களுக்கு ஒன்றும் புரியோஜனம்மில்லை. ஆளும் வர்க்க அரசியல்வாதிகளுக்கும், இதன் விஞ்ஞானிகளுக்கும் வேண்டுமானால் பெரும் ‘லாபமா’ இது இருக்கும். காரணம், கணக்கு வழக்கில்லாத பணம் இந்த ஆய்வுக்காக ஒதுக்கப்படுகிறது. மக்கள் மன்றத்துக்கு செலவு கணக்குகள் வருவதேயில்லை. நாட்டின் பாதுகாப்பு சம்மந்தமானது என இதற்கு காரணம் கூறுகிறார்கள்.
பாதுகாப்பு சம்மந்தமானது என்றால் அக்னி ஏவுகனையில் பயன்படுத்தப்படும் டெக்னாலஜி பற்றிய விவரங்களை வெளியிடாமல் இருக்கலாம். செலவுகளை கூட வெளியிட மாட்டேன் என்பது எந்த விதத்தில் நியாயம். மக்களின் வரிப்பணம் தான் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. செயல்பாடோ சர்வாதிகாரமாக உள்ளது. இதற்கு பெயர் ஜனநாயக நாடாம். மக்களின் வரிப்பணத்தை பாதுகாப்பு என்ற பெயரில் கொள்ளையடிக்கிறார்கள்.
போர் வரும்போது மட்டும் தான் இந்த அக்னி ஏவுகனைகளை நாம் பயன்படுத்தப்போகிறோம். அதற்கு பலாயிரம் கோடிகள் செலவு செய்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்.
இதுப்பற்றி கேள்வி கேட்டால் நாட்டின் பாதுகாப்பு மீது உங்களுக்கு அக்கறையில்லையா என எதிர்பாட்டு பாடுகிறார்கள். நாடு பாதுகாப்பாக இருந்தால் போதுமா மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டாமா?.
முருங்கை மரம் பறந்து விரிந்து இருக்கும். அதன் இலைகள், காய்கள் மக்கள் பயன்படுத்தலாம். அந்த மரத்தில் ஏறினாலோ, ஊஞ்சல் விளையாட நினைத்தாலோ ஆபத்து தான். அதேபோல் தான் அக்னி ஏவுகனை. அது இருக்கிறது என்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் அழகாக அதிகாரம் செலுத்தலாம், உலகில் ஜாம்பவானாக வலம் வரலாம். ஆனால் பிறர் சீண்டும் போதுதான் தெரியும் அக்னியெல்லாம் ‘அவுல்’ போல என்பது.
தினமும் கோடிக்கணக்கான மக்கள் ஒரு வேளை உணவு உண்டு உயிர் வாழும் தேசத்தில் அதற்கெல்லாம் முக்கியத்துவம் தராத மீடியாக்கள் அக்னிக்கு அதீத முக்கியத்துவம் தருகின்றன.
தேசம் பாதுகாப்பாக தான் இருக்கிறது. ஆனால் மக்கள் தான் இந்த நாட்டில் பாதுகாப்பாக இல்லை.
உடம்பில் உயிர் இருந்தால்தானே உணவு உண்ண முடியும். பாதுகாப்புக்கு செலவிடுவதையும் வறுமை ஒழிப்பையும் இணைத்துப் பேசுவது முட்டாள்த்தனம். பாதுகாப்பும் முக்கியம், வறுமை ஒழிப்பும் முக்கியம்.
பதிலளிநீக்குவீட்டுக்கு கதவு வேண்டாமா? மனசாட்சி! சுவர் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு கதவும் முக்கியம்....அதை வெச்சு கொள்ளையடிப்பது தவறுதான் என்ன செய்வது....நம்ம நாட்டுக்கு பழகி போச்சு.............
பதிலளிநீக்கு