செவ்வாய், ஏப்ரல் 10, 2012

புகழ்ச்சி மேடையாகி போன சட்டமன்றம்.




சட்டமன்றம் என்பது மக்கள் பிரதிநிதிகள் அமர்ந்து மக்களின் பிரச்சனைகளை, மாநில வளர்ச்சி, தொழில் வளர்ச்சி பற்றி பேசும்மிடம். எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் தங்களது தொகுதி குறைகளை ஆளும்கட்சியிடம் பட்டியலிட்டு அதனை நிவர்த்தி செய்ய கோருவதும், முடியும் முடியாது எனக்கூறும் இடமாகவும், ஆளும்கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் இடமே சட்டமன்றம். 

ஆனால் தமிழக சட்டமன்றம் அதற்கு எதிர்மாறாக இருக்கிறது. மாநிலத்தின் ஒரு முக்கிய விவகாரத்தை கையில் எடுத்து அதைப்பற்றி விவாதம் செய்வது, உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்பது என்பதெல்லாம் சுத்தமாக இல்லை. திமுக ஆட்சியில் ஒரளவுக்காவது சபாநாயகர்கள் நடுநிலமையோடு இருந்தார்கள். மாற்று கட்சியினருக்கு வாய்ப்பு தந்தார்கள். குறைகளை காதுகொடுத்தாவது கேட்டார்கள். உதாரணமாக விவசாயதுறை பிரச்சனை என்றால் அதற்கு அந்த துறை அமைச்சர் எழுந்து பதில் சொன்னார். 

தற்போதைய அதிமுக ஆட்சியிலோ, அமைச்சர்கள் ஒ.பி, செங்கோட்டையன், முனுசாமி போன்ற ஒரு சிலர் தான் எதிர்கட்சிகளின் கேள்வி பதில் சொல்வதை விட்டுவிட்டு குட்டையை குழப்புகிறார்கள். இதுக்கு தனியா டிரைனிங் எடுக்கறாங்க போல. கேள்விக்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு எதிர்கட்சிகளை குறை சொல்வதையே பொழுது போக்காக கொண்டுள்ளார்கள். 

தலை சரியாக இருந்தால் தானே வால்கள் சரியாக இருக்கும். முதல்வராக உள்ள ஜெவே ஒரு கருத்தை உள்வாங்கி அதைப்பற்றி விவாதம் செய்ய தயங்குகிறார். யாராவது கேள்வி கேட்டாலோ, தவறாக பேசுகிறார் என்றாலே ஏன் கடந்த ஆட்சியில் நீங்கள் பேசவில்லையா என கேட்கிறார். முதல்வர் பேச்சில், அமைச்சர்கள் பேச்சில் தவறு ஏதாவது இருந்து எதிர்கட்சிகள் குறிப்பிட்டால், அவர்களை குண்டு கட்டாக தூக்கி வந்து வெளியே வீச கண் ஜாடை காட்டுகிறார் அதை சபாநாயகர் செய்கிறார். இதுவா சட்டமன்றம். 

தன் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு வரக்கூடாது என்பதற்காக எதை பேசினாலும் 110வது விதியின் கீழ் பேசிவிடுகிறார் முதல்வர். நான் நினைப்பதே நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவது முட்டாள் தனமானது. 

கடந்த ஆட்சியில் திமுக தலைவர் கலைஞரை ஆஹா ஓஹோ என புகழ்ச்சி சத்தம் இடைவேளைகளில் கேட்டது. தற்போது முழு நேரமும் அம்மா அம்மா என்ற வார்த்தையே கேட்டது. தமிழக குழந்தைகள் ஒட்டுமொத்தமாக தங்கள் வாழ்நாளில் அம்மா என அழைத்ததை ஒரே நாளில் ஒரு அமைச்சர் கூறிவிடுகிறார். 

மக்களுக்கான விவாதமும் நடைபெறாத புகழ்ச்சி மேடையாகவே இருக்கிறது சட்டமன்றம். பேசாமல் சட்டமன்ற நிகழ்சிகள் என்பதற்கு பதில் அம்மாவிற்க்கு பாராட்டு விழா என வைத்துவிடுங்களேன். 

3 கருத்துகள்:

  1. உண்மை! உண்மை! உண்மை!தவிர வேறில்லை!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப சரியா சொன்னீங்க. இது குறித்து நானும் என் வலைப்பூவில் குமுறியுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  3. கருணாநிதி என்ற நபர் முதல்வராக இருந்தபோது இதை எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு