வெள்ளி, ஏப்ரல் 27, 2012

தண்ணீர் மார்பகங்கள்.
இந்த வாரம் இந்தியா டுடேவில் பிரச்சுரம்மாகியுள்ள சிலிக்கான் மார்பகம் பற்றிய ஒரு கட்டுரையை படித்தபோது சில ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தந்தது. என்னவென்றால், உலகம் மாறியப்பின் அதன் நுகர்வை இந்தியா அதிகமாகவே நுகர தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய ஒன்றியத்தில் கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்ட்டிரா, டெல்லி, ஆந்திரா போன்ற சில மாநிலங்கள் அதிகளவில் விளம்பர மோகத்தில் விழுந்து பன்னாட்டு மோகத்தில் விழுந்துள்ளனர். 

அதாவது 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்கும் பெண்கள் விளம்பர நிறுவனங்கள் ஆசைப்படுவது போல உடல் அமைப்பை சிக்காக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது விதி. ஆதனால் காலப்போக்கில் ‘உலர்ந்து’ போகும் தங்களது மார்பகங்களை ஆப்ரேஷன் மூலம் ‘உலராமல்’ வைத்துக்கொள்கின்றனர். மேற்கத்திய நாடுகளில் சகஜமாக இருந்தது இது. 

1995க்கு பின் இந்த தாக்கம் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது. அதற்கு முன் இந்தியாவில் உள்ள மாடலிங், சினிமாத்துறையில் உள்ள சிலர் வெளிநாடுகளில் போய் தங்களது உலர்ந்த மார்பகங்களை அழகு படுத்திக்கொண்டு வந்தனர். இப்போது இந்தியாவில் இந்த மாற்றம் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறதாம். ஆண்டுக்கு 5 லட்சம் நங்கைகள் இந்த ஆப்ரேஷன் மூலம் தங்களது மார்பகங்களை அழகு படுத்திக்கொள்கிறார்கள் என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 

உடல் அளவு அதாவது ஒல்லியாக உள்ள பெண்களுக்கு ஒரளவும், சதை பிடிப்பாக உள்ள பெண்களுக்கு அதற்கு ஏற்றாற் போல் தான் மார்பகங்கள் இருக்கும். இந்த அளவு பத்தாது என்றும், தனக்கு சிறியதாக இருக்கிறது என்றும், மார்பகத்தை வைத்து தான் ஆண்கள் தங்களை ரசிக்கிறார்கள் என முடிவு செய்து நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க பெண்கள் தங்களது மார்பகங்களை அழகாக்க அதற்கான க்ரீம் மற்றும் ஆப்ரேஷன் மூலம் செம்மை படுத்திக்கொள்கிறார்கள். 

அறுவை சிகிச்சை செய்து பெண்களின் மார்பகத்துக்குள் தண்ணீர் போன்ற சிலிக்கான் போன்ற சவ்வை கொண்டு விருப்பமான அளவுக்கு ஏற்றாற்போல் அந்த சவ்வை உள் மார்பகத்தில் வைத்து தைத்துவிடுகிறார்களாம். ஐதயல் போட்டது தெரியாது. வெளியே இருந்து பார்த்தால் பலுன் போல் ஊதிக்கொண்டு இருக்கும். இதனைக்கொண்டு தான் சில நடிகைகள் மற்றும் மாடலிங் பெண்கள் தங்களை கிக்காக காட்டிக்கொள்கிறார்கள். 

இவர்களுக்கு போட்டியாக இன்றைய மேல்தட்டு இளைஞர்கள் தங்களது உடலை அழகு படுத்திக்கொள்ள தொடங்கியுள்ளார்கள். நங்கைகளுக்கு மார்பு பெரியதாக, சிக்காக காட்ட அறுவை சிகிச்சை என்றால், இளைஞர்க்ள தங்களது மார்பு பகுதியில் உள்ள அதிகப்படியான சதைகளை அகற்ற மருத்துவர்களிடம் வருகிறார்களாம். அதாவது புகைப்படங்களை காட்டி பாடிபில்டர், சிக்ஸ்பேக் போல் உடலை வைத்துக்கொள்ள அறுவை சிகிச்சை செய்துக்கொள்கிறார்களாம். இதில் உலகில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளதாக புள்ளி விவரம் கூறியுள்ளது. 

உடல் பல புதிர்களை கொண்டது. ஒவ்வொருவரின் வேலை, அவர்களது உணவு, உடற்பயிற்சி போன்றவற்றுக்கு ஏற்றாற்போல் தான் உடல் அமையும். அதனை சிகிச்சைகள் மூலம் மாற்றிக்கொள்ள முயல்வது ஆபத்தானது. உடலை நம் விருப்பத்துக்கு மாற்றிக்கொள்ள இயற்கையாகவே பல வழிகள் உள்ளன. உணவு முறையில் கட்டுப்பாடு, வேலைகள் செய்வதன் மூலம் மாற்றமடையும். அப்படியிருக்க இளம் தலைமுறை செயற்கையாக தங்களது உடலை அழகு படுத்திக்கொள்ள நினைப்பது ஆபத்து என்பதை உணர்வார்களா?. 

2 கருத்துகள்:

  1. தண்ணீர் மார்பகம் கண்ணீர் மார்பகமாக ஆகாமல் இருந்தால் சரிதான்.

    பதிலளிநீக்கு