ஸ்பெக்ட்ராம் விவகாரத்தை மீடியாக்கள் அலசியது போல மத்தியரசின் நிலக்கரி ஊழல், கச்சா எண்ணெய் ஊழல், 4ஜீ ஊழல் போன்றவற்றை அலசமறுக்கின்றன. அது ஏன் என்பது தான் தெரியவில்லை. குறிப்பிட்ட ஊழல்கள் 2ஜியை விட பெரியது. அதாவது நிலக்கரி இறக்குமதியில் 10 லட்சம் கோடி, இஸ்ரோவில் 2 லட்சம் கோடி, இயற்கை எரிவாயு கண்டறிதலில் 4லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக மத்திய தணிக்கை துறை கூறியுள்ளது.
ஆனால் இவைகளைப்பற்றி எந்த மீடியாவும் வாய் திறக்க மறுக்கின்றன. ஏன் 2ஜீ ஊழல் ஊழல் என ஊழலுக்கு எதிர்ப்பாக உண்ணாவிரதம், போராட்டம் என களம்மிறங்கி கூப்பாடு போட்ட அன்னாஹசாரே, பாபாராம்தேவ், பிரசாந்த்பூசன், கிரன்பேடி போன்றவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை.
நிலக்கரி ஊழல்.
2004 முதல் 2009 வரை நாட்டில் நிலக்கரி சுரங்கங்கள் தோண்டும் பணிக்கு 100 நிறுவனங்களுக்கு 155 சுரங்கங்கள் விடப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு ஏல முறையில் இல்லாமல் விரும்பியபடி தரப்பட்டுள்ளன. இதனால் 10லட்சத்து 36 அயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாராளமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்சனையாகியுள்ளது.
இயற்கை எரிவாயு
கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப்படுக்கையில் இயற்கை எரிவாயு வயல்களை கண்டறியவும், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனம் எடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதற்கான செலவுகளை அரசாங்கம் செய்யும். கண்டுபிடிக்கப்பட்டப்பின் அதை வெளியே எடுத்து சுத்திகரித்து விற்கப்படும் போது லாபத்தில் பங்கு இதுதான் ஒப்பந்தம்.
ஆற்றுப்படுக்கையில் எரிவாயு கண்டறிய முயன்ற ரிலையன்ஸ் பலயிடங்களில் இல்லை என்றும், சிலயிடங்களில் குறைந்த அளவே உள்ளது என பதில் சொன்னது. அதோடு, இதற்கான பணிச்செலவில் ஓப்பந்தத்தில் குறிப்பிட்ட தொகையை விட மூன்று மடங்கு அதிகமாக செலவுகளை குறிப்பிட்டு ‘பில்’ தந்து நிதியினை பெற்றுள்ளது.
இதைத்தான் தவறு என சி.ஏ.ஜீ அறிக்கை தப்பு நடந்துள்ளது என சுட்டிக்காட்டுகிறது. ஆரசின் பொதுத்துறை நிறுவனம் எண்ணெய் வயல்களை கண்டறியும் நுட்பமும் வசதியும் அதனிடத்தில் உண்டு. தூர நாடுகளுக்கு சென்றும் அரசின் நிறுவனங்கள் செய்கின்றன. அப்படியிருக்க தனியார் விட்டதால் தான் சமார் 4 லட்சம் கோடி இழப்பு என்கிறது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் நடத்திய ஊழல்.
இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் தோன்றி விண்ணில் ராக்கெட் ஏவப்பட்டது என எப்போதாவது தகவல்கள் தருவார்கள். அதன்பின் அந்த ராக்கெட் பற்றியோ, செயற்கைகோள் பற்றியோ பொதுமக்களுக்கு தகவல்கள் தரப்படமாட்டாது. அதேபோன்று தான் அதற்கான கணக்குகளும். ஏவ்வளவு செலவு செய்து இந்த ராக்கெட்டையும், செயற்கைகோளையும் உருவாக்கினிhகள் என கேட்டால் சுட்டுப்போட்டாலும் அரசு பதில் தராது. அப்படிப்பட்ட நிறுவன விஞ்ஞானிகள், நாட்டின் விசுவாசிகள் என வாணிக்கப்டுபவர்கள் ஸ்பெக்ராம் ஒதுக்கீட்டில் தனியார் நிறுவனத்துக்கு மிக குறைந்த விலைக்கு தந்து 2லட்சம் கோடிக்கு ஊழல் செய்துள்ளார்கள். இத்தனைக்கும் இந்த துரை பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள துறை.
இப்படி கோடிகளில் கொள்ளையடிக்கப்பட்ட தகவல்கள் 2ஜி விவகாரத்துக்கு பின் வெளியே வந்துள்ளது. இவைகள் எல்லாமே 2ஜியை விட அதிகமான ஊழல்கள். ஆனால் இதுப்பற்றி மீடியாக்களும் பேச மறுக்கின்றன. நாங்கள் நேர்மையாளர்கள் என வேஷம் போடும் மத்திய புலனாய்வுத்துறையும் கண்டுக்கொள்ளவேயில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பார்வைக்கு இவைகள் போகவேயில்லை போல.
ஊழல் யார் செய்தாலும் தவறுதானே. ஆப்படியிருக்க ராசா விவகாரத்தில் நோண்டி நுங்குயெடுத்தவர்கள் இதில் ஏன் கவனம் செலுத்த மறுக்கின்றன.
அதற்கு காரணம் என் சிறு மூளைக்கு எட்டியவரையில், ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் ராசா தலித் என்ற குற்றச்சாட்டு என்பது ஒரு புறமிருக்கட்டும். ராசா இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ், ஏர்டெல் போன்ற பெரும் முதலாளிகளுக்கு அடங்கி போகவில்லை. அவர்கள் தங்களது பண, அதிகார, வடஇந்திய செல்வாக்கை வைத்து அதை பூதாகரமாக்கினர்.
ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் சிலர் சொன்ன பொய்களை வெளிச்சம் போட்ட மீடியாக்கள், நீதிமன்றத்தில் வாதத்தின் போது அவை சுக்கு நூறாக உடைகின்றன. இதனை கணாமல் வாய், காது, கண் ஆகியவற்றை மூடிக்கொண்டன. மீடியாக்கள் எழுதிய தீர்ப்பை தற்போது நீதிமன்றம் எழுதிவிடும் நிலையில் உள்ளது.
மிகப்பெரிய ஊழல் என வர்ணித்தவர்கள் அதை விட அதிகமான ஊழல்கள் நடந்துள்ளன என அதே மத்திய தணிக்கை குழுதான் பட்டியல் போட்டு அறிக்கை தந்துள்ளது. ஆனால் அதுப்பற்றி பேச மறுக்க காரணம், அதே வடஇந்திய லாபி தான். அந்த ஊழல்களை கிளறினால் சிக்குவது ராசா போன்றவர்கள் அல்ல. பெரும் முதலாளிகள், அவர்களின் வட இந்திய அதிகார அரசியல்வாதிகள் அதனால் அடக்கி வாசிக்கின்றன.
இதற்கு மத்தியில் திராவிட பெரியாரிய தளத்தில் உள்ள தமிழகத்தில் திமுக என்ற பலம் பொருந்திய கட்சியை அரசியலை விட்டு அகற்ற காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற ஒன்றிய பெரும் கட்சிகள் இதை கருவியாக பயன்படுத்தி விளையாடின.
அடுத்ததாக ஊழல்க்கு நாங்கள் எதிர்ப்பாளர்கள் என கொடி பிடித்து, கோஷம்போட்டு, டான்ஸ் ஆடியவர்கள் நியாயவாதிகள் என்றால் இந்த ஊழல்களுக்கும் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும். இருக்கவில்லை காரணம், இவர்கள் பின்னால் இருந்து இவர்களை இயக்குவது காவிகளும், மீடியா மன்னர்களும், பெரும் பெரும் பண முதலாளிகளும் தான். அதனால் தான் தற்போது அவர்கள் பற்றி புகார் வந்ததும் கவிழ்ந்து படுத்துக்கொண்டார்கள்.
வடஇந்தியனாக, பூணுல் போட்டவனாக, தேசிய கட்சியை சார்ந்தவனாக, பெரும் முதலாளிகளின் ஆதரவு பெற்றவனாக இருந்தால் இந்தியாவை விலைக்கு விற்றுவிட்டு கூட வந்துவிடலாம் அது பெரிய விவகாரமேயில்லை என்பதை தான் இந்த மறைக்கப்பட்ட ஊழல்கள் காட்டுகின்றன.
indhiyaavil naamum appadi iruppom anbare
பதிலளிநீக்குநியாயமான கேள்வி !! இப்படி ஒரு ஊழல் நடந்தது கூட எத்தனை பேருக்கு தெரிந்தது ?
பதிலளிநீக்குதுரும்மை தூணாக்குவதும் தூணைத் துரும்பாக்குவது
பதிலளிநீக்குமாக விளையாடும் தேசியக் கட்சிகளின் வஞ்சைனையை இனியாவது தமிழகம் உணருமா?
ஏக இந்தியா என்பது வடவரின் ஏகபோக இந்தியா என்பது தானே பொருள்?
சா இராமாநுசம்
Correctely Said
பதிலளிநீக்குwhere did "poonal" come in this
பதிலளிநீக்கு-surya