ஞாயிறு, ஜனவரி 01, 2012

ஸாரி மேடம் ( பகுதி – 6 )



என்னடீ உங்காளு. இங்கயே வந்துட்டான்.

ஏய் விளையாடாத அவன் இன்னேரம் கிரவுண்ட்ல இருப்பான்.

நீ நம்பமாட்டயே. இரு என்றவள் ஸ்கூட்டியை கொண்டும் போய் அவன் அருகே நிறுத்தினாள்.

அவனை கண்ட மஞ்சு ஆனந்த அதிர்ச்சியானாள்.

அவனே, கிரவுண்ட்க்கு போனன். சூ இல்லாம விளையாட முடியல. நீ நாளைக்கி   சூ  போட்டுக்கிட்டு வந்தே விளையாடுன்னிட்டாரு சாரு. அதான் வந்துட்டன். பஸ் ஸ்டான்டுக்கு போலாம்ன்னு பாத்தன். இவ தனியா வருவாளே எப்படி வருவாளோன்னு யோசிச்சி தான் அழைச்சிக்கிட்டே போகலாம்ன்னு இங்க வந்தன். மேல வந்தா அதுக்கே ஒரு மாசத்து பீஸ் தாடான்னு கேட்கும் அந்த பிசாசு. அதனால தான் வரல என்றவன். அது சரி டியூஷன் முடிய இன்னும் நேரம்மிருக்கே அதுக்குள்ள எப்படி வந்தீங்க.

அது வந்து, சாயந்தரத்தல பஸ்ல போறது முதல் நாள்யில்லையா பஸ் சீக்கிரம் போய்ட்டா. அதான் கரெக்ட் டைம் என்னன்னு பாத்துக்க முன்னாடியே போகனும்ன்னா அதான் பர்மிஷன்ல வந்துட்டோம் என்ற தேவி. மஞ்சு பக்கம் திரும்பி அப்பறம் என்னம்மா உங்க ஊர்க்காரன் அழைச்சிம்போக வந்துட்டான். நீ இறங்கி சார்க்கூட போ நான் கிளம்பறன் என்றாள் நக்கலாக.

சிரித்துக்கொண்டே பங்க் கடையில் வைத்திருந்த பேக் கை எடுக்க ராஜா திரும்பி போக

பெஸ்ட் ஆப் லக் டீ என கிசுகிசுப்பாக சொல்லியவள் மஞ்சுவை இறங்கியதும் ராஜா நாளைக்கு பாக்கலாம் என சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டால்.

வா போகலாம் என்ற ராஜா புறப்பட இருவரும் நடக்க தொடங்கினார்கள்.

இன்னைக்கி முழுக்க மேடம் அழுதுயிருப்பீங்க போல.

இல்லயே.

பொய் சொல்லாத.

உன் மூஞ்ச பாத்தாலே தெரியுதே.

அதிருக்கட்டும். நீ பேஸ்கட்பால் விளையாட்டுக்கு லட்டர் தந்தத சொல்லவேயில்ல.

டீம்ல சேர்ந்துட்டா, அடிக்கடி க்ளாஸ் கட்டடிக்கலாம்ன்னு ஸ்கூல் திறந்ததுமே லட்டர் தந்தன். உங்கிட்ட சொல்ல மறந்துட்டன். இப்ப வந்து ஓ.கே சொல்லி சேத்துக்கிட்டாங்க. அதான் காலையில உங்கிட்ட சொன்னன்.

சொன்ன சொறக்காய்க்கு உப்பில்லன்னு என மஞ்சு முனக..

என்னது ?

ஓன்னும்மில்ல என்றவளின் மனமோ, ஹோட்டல்க்கு அழைப்பானா, மாட்டானா என்ற எண்ணமே இதய துடிப்பை விட அதிகமாக ஓடியது.

கூப்பிடனும் சாமீ, கூப்பிடனும் சாமீ என மனதில் கெஞ்சியவள் உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சம் சத்தமாகவே கூப்பிடனும் சாமீ என்றாள்.

சடாரென திரும்பியவன் என்ன கூப்பிடனும் சாமீங்கற என்றான்.

அதிர்ந்து போய் ஓன்னும்மில்லயே என்றாள்.

அவளை ஒரு முறை சந்தேகமாக பார்த்தவன், சரி உள்ள வா போலாம் என்றான். அப்போது தான் கவனித்தாள் அவர்கள் ஒரு ரெஸ்டாரன்ட்டு முன் நிற்பதை.

ஏன் என கேட்டவளிடம்.

நீ மதியமே சாப்பிடல. வீட்டுக்கு போக 6:30 யாகிடும். அதுவரைக்கும் சாப்பிடாமயிருந்தா வயிறும், உடம்பும் என்னத்துக்கு ஆகறது. வா வந்து சாப்பிடு.

இல்ல வேணாம். வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கறன் என்றவளின் மனதில் ஒரே குதுகலம். நிச்சயமா இது காதல்தானா என யோசிக்கும் போதே

வான்னு சொல்றனில்ல என்ற குரலில் திடுக்கிட்டவள்

இல்ல பெரிய ஹோட்டலாயிருக்கு. பில் அதிகமா போடுவான். வேணாம் வா.

அதை நான் பாத்துக்கறன். என கையை பிடித்து உள்ளே இழுத்து சென்றான்.

இரண்டு பேர் அமரும் டேபிளில் அவளை உட்கார வைத்துவிட்டு எதிரில் அமர்ந்தவன். என்ன சாப்பிடற ?.

நீ ?

நான் தான் மதியம்மே சாப்ட்டனே.

நீயும் சாப்பிடறதா இருந்தா சாப்பிடறன்.

இல்ல எனக்கு வேணாம் என்றவன்.

உனக்கு வெஜிடபுள் ரைஸ் சொல்லட்டுமா?

உம்.

ஆர்டர் எடுக்க வந்த பேரரிடம் ஒரு வெஜிடபுள் ரைஸ் என்றான்.

டம்ளரில் தண்ணீர் ஊத்திவிட்டு சர்வர் நகர்ந்ததும்

நான் தேவிய காதலிக்கறன்னு நினைச்சி அழுதயில்ல என திடுதிப்பென்று மஞ்சுவை பார்த்து கேட்டான். தண்ணீர் டம்பளரை எடுத்து வாயில் வைத்தவள் அவன் அப்படி கேட்டதும் தொண்டைக்கு கீழ் குடித்த நீர் இறங்க மறுத்தது.

டம்பளரை கீழே வைத்தவள். சைலண்டாக இருந்தாள்.

கேட்டதுக்கு பதிலே காணோம்.

இல்ல அது வந்து……..

அப்படி கோபப்படற என கேட்கும்போதே சர்வர் வந்து வெஜிடபுள் ரைஸ்சை வைத்தான்.

சரி. சாப்பிடு என்றான். அவள் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருந்தவன் எதுவும் கேட்கவில்லை.

என்ன பதில் சொல்றது இதுக்கு என மனம் தவிக்க, நான் உன்னை காதலிக்கறன்னு சொல்லிடலாமா என அவள் மனம் குழம்ப ஆரம்பித்தது. தெளிவான முடிவுக்கு வரும்முன்பே ரைஸ் காலியாகியிருந்தது.

கை கழுவிவிட்டு வந்து பேக் கை எடுத்தாள்.

என்னயும் இப்படி கை கழுவிவிடமாட்டயில்ல என்றான் சோக குரலில்.

என்ன கேள்வி கேட்கறான் லூசு என எண்ணியவள் வா போகலாம் என்றாள் கோபமாக.

வெளியே வந்தவள் சைலண்டாக நடக்க.

நான் உன்னை காதலிக்கறன் மஞ்சு என்றான் தடாலடியாக.

திரும்பி அவனை உற்று பார்த்தாள்.

எதனால காதலிக்கறன்னு கேட்காத எனக்கு உன்னை புடிச்சியிருக்கு அதான் சொல்லுவன், உனக்கு ஒன்னுன்னா என்னால தாங்கிக்க முடியாது. நீ மதியம் சாப்பிடலன்னதும் எனக்கு எப்படியிருந்தது தெரியுமா என அவளை நேருக்கு நேராக பார்த்து பேசினான்.

அவளின் மனதில் ஏகாந்தமோ ஏகாந்தம். ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் திரும்பி பதில் சொல்லாமல் நடக்கதொடங்கினாள். அவள் பின்னாடி நடந்தவன் நான் சொன்னதுக்கு பதில் சொல்லு.

எதுவும் சொல்லாமலே நடந்தாள்.

புடிக்கலயோ, அவசரப்பட்டுட்டமோ என யோசித்தபடி அவள் பின்னால் நடக்க தொடங்கினான். பஸ் ஸ்டான்டில் காத்திருந்த போதும் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பஸ் வந்ததும் அவள் லேடிஸ் சீட்டில் அமர பின் சீட்டில் அமர்ந்தான். ஊர் அருகே வந்ததும் அவள் இறங்கி போய்க்கொண்டேயிருந்தாள். திரும்பி ஒரு பார்வை கூட பார்க்கவில்லை.

வீட்டுக்கு வந்த ராஜா, எதுவுமே சொல்லலயே. காதலிக்காமலயா தேவிக்கிட்ட கோபப்பட்ட என எண்ணியபடியே படுத்துவிட்டான். அந்த நினைப்பிலேயே தூங்கியும் போய்விட்டான்.

காலையில் எழுந்து கிளம்பியபோது பீ.டி சார் ஷீ வாங்க சொன்னது ஞாபகம் வர, ம்மா ஒரு 300 ரூபாய் தாம்மா.

ஏண்டா ?.

ஒரு சூ வாங்கனும்.
காசுயில்லடா.

இப்ப தர்றியா இல்லையா என கத்தியதும் பதில் பேசாமல் கடுகு டப்பாவில் இருந்து எடுத்து தர வாங்கி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கிளம்பினேன்.

நைட்டும் சாப்பிடல இப்பவும் சாப்பிடாம கிளம்பறேயடா என அம்மா கத்தும்;போதே படியை தாண்டீயிருந்தான்.

பஸ் ஸ்டாப்க்கு போனபோது நான் மட்டுமேயிருந்தேன். டீ கடையில் சிலர் அமர்ந்திருந்தனர். நிழல்குடையில் இருந்த சிமெண்ட் பெஞ்ச்சில் உட்கார்ந்தபோது தான் இன்னைக்கு எக்னாமிக்ஸ் டெஸ்ட்டாச்சே என்ற நினைப்பு வந்தது. இரண்டாவது பிரீயட்டே டெஸ்ட் வைப்பாரே அந்தாளு என யோசித்தபடி புக்கை எடுத்து வைத்து மேய தொடங்கினேன்.

மூளை படி என்றாளும் மனமோ மஞ்சுவை தேடி அடிக்கடி அவள் வருகிறாளா என பார்க்க தொடங்கினேன். தொலைவில் மஞ்சு வருவதை காண்டதும் மனதில் இன்னைக்காவது பதில் சொல்லுவால என்ற ஏக்கம். ஊருக்குள் பொண்ணுங்க்கிட்ட பேசவே மாட்டான், நல்லவன் என்ற இமேஜ் இருந்ததால் ஊருக்குள் மஞ்சுவிடமும் பேசுவதில்லை.

பஸ் ஸ்டாப்பிங்க்கு வந்தவள் நான் கவனிக்கறேனா என பார்த்தாள். பார்க்காதது போல் நான் தலையை குனிந்துக்கொண்டேயிருக்க க்கும் என்றாள் அடித்தொண்டையில்.

அந்த சத்தத்தை கேட்டு யாரது என பார்ப்பது போல் பார்த்தேன். அவள் திரும்பிக்கொண்டால்.

நான் பஸ் வருகிறதா என அடிக்கடி எழுந்து வந்து ரோட்டை பார்ப்பதும் திரும்ப போய் உட்காருவதுமாகயிருந்தேன். இந்தமுறை எழும் முன் அவளை பார்த்தேன். என்னை பார்த்துக்கொண்டிருந்தவள் காண்ணாலயே வரல என்றாள்.

அப்படியே உட்கார்ந்துவிட்டேன். 10 நிமிடம்மிருக்கும் லேசாக கணைத்தால் தலையை தூக்கி பார்த்தேன். கண்ணாலே பஸ் வருது என சைகை காட்டினால். புக்கை பையில் வைத்துபடி எழுந்தேன்.

பார்த்தால் தனியார் பஸ். 9 மணியாகிவிட்டதால் இதில் போனதால் தான் டைம்க்கு போகமுடியும் என்பதாலே சைகை காட்டியிருக்கிறாள் என புரிந்து பஸ் ஏறினேன். பஸ்க்குள் போனபின் தான் தெரிந்தது. டிக்கட் எடுக்க சில்லறை காசுயில்லை என்பது. சரியென 100 ரூபாய் தாளை எடுத்து நீட்டினேன்.

4 ரூபாய்க்கு 100 ரூபாய் தந்தா என்ன அர்த்தம். சில்லறை தா என்றார் கண்டக்டர்.

இல்லண்ணே. கவர்மண்ட் பஸ் வரும்ன்னு பாத்தன் வரல.

அதனால சில்லறை எடுத்து வரலன்னே.

சில்லறை தந்து டிக்கட் எடு இல்லன்னா அடுத்த ஸ்டாபிங்ல இறங்கு எனக்கூறிவிட்டு மற்றவர்களிடம் டிக்கட் வாங்க திரும்பினார்.

கண்டக்டரை முறைத்தேன்.

2 டிக்கட் தாங்க என 10 ரூபாயை நீட்டினாள் மஞ்சு.

இன்னோன்னு யாரும்மா?.

என்னை காட்டினாள்.

என்னை பார்த்த கண்டக்டரை முறைத்தபடியே இருந்தேன். சில்லறை எடுத்து வர துப்பில்ல. என்ன முறைக்கற என்றான்.

கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அவனையே பார்த்தேன்.

அதான் நான் டிக்கட் எடுத்துட்டன்யில்ல. அப்பறம் என்ன பேசறிங்க போங்க என்றாள் கண்டக்டரை பார்த்து.

எதுவும் பேசாமல் டிக்கட் டிக்கட் என முன்பக்கம் போனான்.

நான் இவள் பக்கம் திரும்ப அவள் திரும்பிக்கொண்டாள்.

பஸ்சை விட்டு இறங்கினேன். பின்னால் இறங்கியவள் எதுவும் பேசாமல் என்னை முந்தி நடக்க தொடங்கினால்.

10 நிமிடத்தில் பள்ளிவர பேக் கை வைத்துவிட்டு பிரேயரில் வந்து நின்றோம்.

பிரேயர் முடிந்து உள்ளே போனதும் ஜானிடம் மச்சான், ஒரு 5 ரூபா இருந்தா தா என்றேன்.

ஏண்டா ?

தாடா தர்றன்.

எடுத்து தந்தான். மஞ்சுவின் அருகே போய் ரொம்ப நன்றிங்க. டிக்கட் எடுத்ததுக்கு காசு என்றேன். சைலண்டாக இருக்க டேபிள் மேல் வைத்துவிட்டு திரும்பி வந்து என் இடத்தில் உட்கார்ந்தேன்.

அதுங்கிட்ட எதுக்குடா தர்ற ?

காலையில பஸ்ல வர்றப்ப டிக்;கட் எடுக்க சில்லறையில்ல. அவ தான் எடுத்தா. அதான் தந்துட்டு வந்தன் எனச்சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வாத்தியார் வந்துவிட முதல் வகுப்பே ஆங்கிலம் ஆரம்பமானது.

இரண்டாவது வகுப்பு எல்லோரும் டெஸ்ட்க்கு தயாரானோம். எப்போதும் சரியாக வந்துவிடும் அவர் அன்று வரவில்லை. எக்னாமிக்ஸ் சார் வரல. சத்தம் போடாம ஏதாவது படிங்க என்றார் மணி சார்.

அப்பாடா தப்பிச்சோம் என எல்லோருக்கும் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.

ராஜா என தேவி அழைக்க திரும்பி

இன்னா
எதுக்கு காசு தந்த

உன் ப்ரண்ட் காலையில பஸ்ல டிக்கட் எடுத்தாங்க. அதான் திருப்பி தந்தன்.

இதைக்கேட்ட மஞ்சு, கோபமாக என்னை நோக்கி எதையோ வீசினாள்.

தொடரும்……………….


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக