வியாழன், ஜூன் 16, 2011

குப்புற விழும் கோலிவுட்.


தமிழகத்தில் ஆட்சி மாறும் போது எல்லாம் உச்ச நடிகர் முதல் சுண்டக்காய் நடிகர்-நடிகையர் வரை அப்படியே ஆளும் கட்சியினரின் கால்களில் உடனடியாக குப்புற விழுந்து விடுகிறார்கள். அதற்க்கு முன் ஆளும் கட்சியாக இருந்தவர்களை அதற்க்கு பின் திரும்பி கூட பார்ப்பதில்லை. உச்ச நடிகர் முதல் புதியதாக அறிமுகமாகவும் நடிகர்கள் வரை எல்லோரும் ஆட்சியாளர்களுக்கு ஏற்ப பல்டியடிக்கிறார்கள். இதற்க்கு இயக்குநரோ, கேமராமேனோ அவர்களுக்கு தேவைப்படுவதில்லை. அவர்களாகவே செய்கிறார்கள்.

2011 சட்டமன்ற தேர்தல்;க்கு முன்பு வரை, ரஜினி, கமல் முதல் எல்லா மெஜாரிட்டியான நடிகர், நடிகையர் பாராட்டு விழா நடத்துவது, விருது தருவது, யார் சிறப்பாக பேசினார்கள் என பட்டிமன்றம் வைக்கும் அளவுக்கு அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். வாக்குபதிவின் போது, இரட்டை இலைக்கு வாக்கு செலுத்திவிட்டு மறுநாளே அதற்க்கு எதிர்ப்பான உதயகூ+ரியன் கருணாநிதியுடன் அமர்ந்து படம் பார்த்தார் உச்சநட்சத்திரம். காரணம், அவரே திரும்ப ஆட்சிக்கு வந்துவிட்டாள் என்ற பயம்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். ஒடிப்போய் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் விஜய். அவராவது பரவாயில்லை. தேர்தல்க்கு முன்பே அதிமுக ஆதரவாளராகி போனவர். உலக நாயகன் கமல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, வாரம் நான்கு முறை சந்தித்தவர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சில தினங்களிலேயே குடும்பத்தோடு போய் தற்போதைய முதல்வரிடம் ஆசி பெற்றார். ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற போது ரஜினி மருத்துவமனையில் இருந்தார். சிங்கப்பூரில் அவர் கண்விழித்து பேச தொடங்கிய உடனே ஜெயலலிதாவுக்கு போன் செய்து வாழ்த்து பெற்றார். இப்படி பலப்பல நடிகர்கள் ஆட்சி மாற்றம் வந்தவுடனே குப்புற கவிழ்கிறார்கள். இது ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் போதும் காணும்நிலை தான். இந்த முறை ஜெட் வேகத்தில் இந்த மாற்றம் நடந்தது.

ஏன், எதனால் இந்த நிலை?.

சம்பாதிப்பதை காப்பாற்றிக்கொள்ள, தங்களது தொழில்களை காப்பாற்றிக்கொள்ள, ஆளும் கட்சி ஆதரவாளர் என்ற பிம்பத்தை காட்டி பஞ்சாயத்து செய்ய, தங்களது இல்லீகல் தொழில்களை தடையின்றி செய்ய, வாங்கும் கறுப்பு பணத்தை பதுக்க……….. இப்படி பல வழிகளுக்காக தங்களை சினிமா நட்சத்திரங்கள் ஆளும் கட்சியாக யார் வருகிறார்களே அவர்களது காலில் விழுகின்றனர். தங்களை காப்பாற்றிக்கொள்கின்றனர்.



இவர்கள் நடிக்கிறார்கள் என்பது ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் நன்கு தெரியும். நடிகர்கள் நடிக்கத்தான் செய்வார்கள் என மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அரசியல்வாதிகள் ஆளுக்கொரு சேனல் வைத்திருப்பதாலும், படம் தயாரிப்பதாலும் ஆட்சி பொறுப்புக்கு வரும்போது சினிமா உலகம் காலில் விழும் போது கை கொடுக்கின்றனர். இப்போதும் அதுதான் நடந்தது. ஆனால் இந்த முறை ஜெயலலிதா, இவர்களை நாம் எட்டி உதைத்து போ என்றாலும் போகமாட்டார்கள். அதனால் இவர்கள் வழிக்கு நாம் போககூடாது என முடிவு செய்ததாலோ என்னவோ, பாராட்டு விழா எடுக்க ஆசைப்படுகிறோம் என கோலிவுட் வைத்த ஜாங்கிரியை வேண்டாம் என ஒதுக்கிவிட்டார். இதை கண்டு கோலிவுட் அதிர்ந்து நின்றாலும் ஜெவின் மனம் குளிரும்படியான வேலைகளை செய்ய தொடங்கிவிட்டனர். எப்படியும் அவரை பாராட்டு மேடையில் ஏற்ற தயாராகின்றனர்.

கோலிவுட்டின் நாடகம் ஆரம்பமாகிவிட்டது.

4 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை சகோ.

    பதிலளிநீக்கு
  2. எதுன்னு சொன்னிங்கன்னா நன்றாகயிருக்கும் அசோக்குமார்.

    பதிலளிநீக்கு
  3. edhu iyalbu than.allbavar arajagam thangadhapodhu edhu nadakkum.
    idhu kuppura vizhuvathalla.(it is natural.when the atrocites exceeds
    those affected always show their displeasure-redgiant,sun.,cloudnine
    pictures)

    பதிலளிநீக்கு