புதன், ஜனவரி 16, 2013

புகைப்படத்தின் வளர்ச்சியும் - வரலாறும்.

போட்டோகிராபி.

போட்டோகிராபி என்ற சொல் கிரேக்க மொழியில் இருந்து உருவானது. போட்டோ என்பது கிரேக்க மொழியில் ஒளி என பொருளாகும். அதோடு கிராபி என்ற சொல்லுக்கு வரைதல் என்பது பொருளாகும். இந்த இரு சொல்லும் இணைந்தே ஒளியில் வரைதல் என அர்த்தம் கொள்ளப்பட்டது. கிரேக்க சொல்லான இதுவே உலகம் முழுவதும் போட்டோகிராபி என அழைக்கப்படுகிறது.

முதல் புகைப்பட கேமரா - உலகின் முதல் ஒளிப்பட கலைஞர். 

லூயிஸ் டாக்குரே. பிரான்ஸ் நாட்டை சேர்ந்தயிவர் தான் போட்டோ கேமராவை கண்டறிந்தவர். 1787 நவம்பர் 18ந்தேதி பிறந்தார். தனது 63வது வயதில் இறந்தார். இவர் இயல்பில் ஒரு சிறந்த ஓவியர். ஓவிய பள்ளியும் நடத்தி வந்தார். நாடக மேடைகளின் துணிகளுக்கு ஓவியங்கள் வரைந்து தந்துவந்தார். அவர் ஒளி மூலம் வரைந்த ஓவியங்களை காப்பி எடுக்க விரும்பி ஆய்வு செய்ய தொடங்கினார். அவரைப்போலவே, நைஸ் ஃபோர் நிப்ஸ் என்பவரும் இதே ஆய்வில் ஈடுபட்டுயிருந்தார். 

முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கேமராவை டாக்குரே வகை கேமராக்கள் கண்டுபிடித்தவரின் பெயரை கொண்டே அழைத்தனர். அதே பெயரில் பதிவும் செய்யப்பட்டது.
டாக்குரே


170 ஆண்டுகளுக்கு பின் ஒரு டாக்குரே கேமரா வடக்கு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரத்தால் செய்யப்பட்ட இந்த கேமரா இன்னும் இயங்கும் நிலையில் உள்ளதாம். இதை ஒரு ஏல நிறுவம் ஏலம் விட்டுள்ளது. 47 கோடிக்கு இந்த கேமரா விலை போய்வுள்ளது. இந்த கேமரா தான் தற்போது விலை அதிகம்முள்ள கேமராவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெகட்டிவ் கேமரா.

ஜார்ஜ் ஈஸ்ட்மென் என்பவர் தான் நெகட்டிவ் கேமராவை கண்டறிந்தார். 1854ல் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் யூட்டிக்கா என்னும் ஊரில் பிறந்தவர். 1885ல் கேமராவில் நெகட்டிவ் மூலம் படம் எடுக்கும் முறையை கண்டறிந்தார். 1888ல் அது விற்பனைக்கு வந்தது. 1892ல் அவருக்கு பிடித்தமான கே என்ற எழுத்தில் கோடக் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதன் மூலம் நெகட்டிவ் கேமராக்களை விற்பனை செய்ய தொடங்கினார். இவரை கவுரவிக்கும் விதமாக அமெரிக்க அரசாங்கம் தபால் தலை வெளியிட்டு கவுரவப்படுத்தியது. இவரின் கோடாக் நிறுவனம் தான் முதன் முதலில் டிஜிட்டல் கேமராவை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.
ஜார்ஜ் ஈஸ்ட்மென்


உலகின் முதல் புகைப்படம்.

உலகின் முதல் புகைப்படம் ஒரு சிறுவன் ஒரு குதிரையை அழைத்து செல்வது போன்ற புகைப்படம்மது. 1825ல் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தை ஏலம் மூலம் பிரெஞ்ச் நாட்டில் விற்கப்பட்டது. 4 லட்சத்து 50 ஆயிரம் யூரோக்கு விற்பனையானது அந்தப்படம்.

ஆகஸ்ட் 19 உலக ஒளிப்பட தினம்.

1839 ஆகஸ்ட் 19ந்தேதி முதல் அங்கீகரிக்கப்பட்ட வணிக போட்டோ எடுக்கப்பட்டது. அந்த நாளே போட்டோகிராபர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட கலைஞர்.


ஹோமை வியாரவாலா. 1913ல் குஜராத் மாநிலம் வதோராவில் பிறந்தவர். முதல் பத்திரிக்கை பெண் புகைப்பட கலைஞரும் இவரே. சைக்களில் தான் இவரது பயணம். 1939 முதல் 1970 வரை இந்திய, உலக வரலாற்றில் இடம்பெற்ற பல புகைப்படங்களை எடுத்த பெருமைக்குரியவர். நீண்ட காலம் இவரை கவுரவிக்காமல் இருந்தது மத்தியரசு.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் முயற்சியால் 2010ல் பத்ம விபூஷன் விருதை அப்போதைய ஜனாதிபதி பிரதீபாபட்டேலிடம் பெற்றார்.
இந்தியாவின் முதல் புகைப்பட கலைஞர்


ரகுராய்.

சிறந்த புகைப்பட நிபுணர். 1984ல் போபால் விஷவாயுவால் மக்கள் பாதிக்கப்பட்டுவர்கள், இறந்தவர்களை இவர் எடுத்த படங்கள் பிரபலம். மண்ணில் புதையுண்டு தலை மட்டும் தெரிந்த ஒரு குழந்தையை இவர் எடுத்த படம் உலகத்தை அதிரவைத்தது. இவரது புகைப்படங்கள் பல மேலை நாடுகளில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. பல பிரபலமான இதழ்களில் இவரது கட்டுரைகள், புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

1992ல் இந்த இந்தியரை அமெரிக்க அரசு சிறந்த புகைப்பட கலைஞர் என கவுரவித்துள்ளது. 1971ல் பத்மஸ்ரீ விருதை பெற்றார்.

பன்ளாஸ்.


பிளாஸ் கண்டு பிடிப்பதற்க்கு முன்பு மாக்னிசியம் பவுடரை கொட்டி அதை பற்றி வைப்பார்கள். பற்ற வைத்த சில நொடிகள் வரை அதன் வெளிச்சம் பிரகாசமாக இருக்கும் அந்த வெளிச்சத்தில் தான் ஆரம்பகாலத்தில் புகைப்படம் எடுத்தார்கள். அது தான் கேமராவின் ப்ளாஸ்சாக இருந்தது. அதனை பன்ளாஸ் என அழைப்பார்கள்.

அரசவை புகைப்பட கலைஞர் - லாலா ராஜா தீன்தயாள்.


1844ல் இந்தியாவில் பிறந்தவர். சிறந்த ஓவியர். மேற்கத்திய நாடுகளில் போட்டோகிராபி இடம் பெற்றதும் அதை கற்க மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் சென்று கற்றுக்கொண்டு வந்தார்.

ஐதராபத்தின் ஆறாம் நிஜாமான மீர் மஹபூப் அலி பாஷா அரசின் அரசு புகைப்படக்காரராக இருந்தார். 1880களிலேயே இந்தூர், மும்பை, செகந்திராபாத் போன்ற இடங்களில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருந்தவர். வெளிநாட்டு ஒளி கலைஞர்களை விட சிறந்த புகைப்படங்களை எடுத்தவர்.

இந்தியாவில் புகைப்பட கலைஞர் ஒருவருக்கு தபால் தலை வெளியிடப்பட்டது என்றால் அது இவருக்கு மட்டும் தான். 125வது ஆண்டு விழாவில் அது வெளியிடப்பட்டது.

கின்னஸ்சில் இடம்பிடித்த போட்டோகிராபர்.

நியூயார்க் நகரில் வசிக்கும் பிரபல புகைப்பட கலைஞர் ஜோசன் கூப், 300 பிளாஸ்களை மின்ன வைத்து தனது கேமரா மூலம் ஒரே ஒரு புகைப்படத்தை எடுத்தள்ளார். இது சாதனை என புகழ்ந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

ஓலிம்பிக் போட்டிகளை படம்மெடுக்கும் தமிழர்.


ஓலிம்பிக் விளையாட்டு போட்டிகளை போட்டோ எடுக்க ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒருவரை தேர்வு செய்து போட்டி நடக்கும் இடத்துக்கு மத்தியரசு அனுப்பி வைக்கும். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த சுகுமார் என்ற புகைப்பட கலைஞர் இலண்டன் சென்று புகைப்படங்களை எடுத்துள்ளார். இவர் இதற்கு முன்பு சீனாவில் நடந்த போதும் சென்றுள்ளார்.

1 கருத்து:

  1. I don't know why you claim that it is your camera and your picture.

    http://commons.wikimedia.org/wiki/File:Fr%C3%BChe_franz%C3%B6sische_Fachkamera_f%C3%BCr_das_Kollodiumverfahren_%28ca._1878%29.jpg

    As you can see, this is my camera and my picture. I made it and I do have the copyright!

    When you want to use my picture from Wikimedia Commons, at least write the source and the name of the author of the picture!

    These are the rules - in your country as well as all over the world!
    Thank you

    Frank Gosebruch

    பதிலளிநீக்கு