சனி, டிசம்பர் 31, 2011

வயது வந்தோர்க்கு மட்டும். ( சென்னை 8வது இடம்)



இந்தியா அளவில் வரும் பிரபலமான ஒரு இதழ் ஆண்டுதோறும் செக்ஸ் வாழ்வில் இளைய சமுதாயத்திடம் எந்த அளவில் ‘மாற்றம்’ ஏற்பட்டுள்ளது என பெரு நகரங்களில் வாழும் இளைய சமுதாயத்திடம் கருத்து கணிப்பு நடத்துகிறது. ஆண்டு தோறும் வெளியிடப்படும் இந்த கருத்துகணிப்பை நான் கடந்த 5 ஆண்டுகளாக படித்து வருகிறேன். அதை படிக்கும்போது, வேகவேகமாக இந்திய இளையோர்களின் பார்வை செக்ஸ்சில் மாற்றம்மடைந்து வருகிறது போல இந்த வேகம் சரியா? தவறா? என்பதை நினைக்கும்போது ஒரு முடிவுக்கு வராமல் தடுமாறியிருக்கிறேன்.

சமீபத்தில் நடந்த ஒரு செக்ஸ் வாழ்வு பற்றிய மாநாட்டில் பிரபல செக்ஸாலிஜிஸ்ட்டுகள் பேசும்போது, மேலை நாடுகளில் விற்பனையாகி வந்த செக்ஸ் டாய்ஸ்கள், பொம்மைகள் தற்போது சென்னையில் அதிகளவில் விற்பனையாகின்றன. இதற்க்கு காரணம், ஆண்-பெண் இருவரிடமும் செக்ஸ் லைப்பை சந்தோஷமாக தங்கள் மனம் விரும்பும் வகையில் அமைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அது கிடைக்காத போதும், துணையில்லாத மேல்தட்டு வர்க்க இளம் பெண்கள், இளைஞர்கள் டாய்ஸ்களை அதிகம் நாடுகிறார்கள் என்றுள்ளார்கள். அது வரவேற்க்கதக்கது என்றுள்ளார்கள்.


அடுத்ததாக தற்போது ஒரு ஆய்வு முடிவு வெளிவந்துள்ளது. அதாவது, இணையத்தில் பிரபலமான தேடுபொறியான கூகுல் தளம் மூலம் ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் உள்ள எந்த நகரத்தில் வாழ்பவர்கள் அதிகளவில் செக்ஸ் படங்கள் மற்றும் வீடியோக்களை பார்வையிடுகிறார்கள் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நகரங்கள் வரிசையில் இலங்கை தலைநகர் கொழும்பு முதலிடம். பாகிஸ்தானின் பிரபல நகரான லாகூர் 4வது இடத்தை பிடித்துள்ளது. டாப் 10 இடத்தில் 7 இடத்தை இந்திய நகரங்கள் பிடித்து ‘சாதனை’ புரிந்துள்ளது. இந்திய நகரங்களில் லக்னோ 2 வது இடம், கொல்கத்தா 3வது இடம், டெல்லி 6வது இடம், பெங்களுரூ 7வது இடம், மும்பை 9வது இடம் பிடித்துள்ளது.

இதலயும் தமிழ்நாடு இல்லயா அப்படின்னு ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ அடையாதீர்கள். தமிழகத்தின் சென்னை மாநகரம் இதில் 8வது இடத்தை பிடித்துள்ளது. ( ஏம்ப்பா அடுத்த வருசமாவுது முதல் இடத்தை பிடிக்க முயற்சி செய்யுங்கப்பா ).


இந்தியாவை விட தினம் தினம் நித்திய கண்டத்தில், மத முற்போக்குவாதிகள் வாழும் பாகிஸ்தான் இளையோர்கள் கூட செக்ஸ் விஷயத்தில் முன்னிலையில் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, ஆசிய நாடுகள் பலவற்றில் வாழும் இளையோர்களிடம் செக்ஸ் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதையே இது காட்டுகிறது. காலத்தின் கட்டாயம் இந்த மாற்றம் வந்தே தீரும். ஒரு விவகாரத்தை அடக்கி அடக்கி வைக்கும்போது தான் அதை பார்க்கவேண்டும், அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து வரும். அதைத்தான் இந்திய கலாச்சாரம் செக்ஸை செய்து வருகின்றன.

செக்ஸ் என்பது மனிதனின் உடல்க்கு நிச்சய தேவை. உணவை போன்றது என்று கூட வைத்துக்கொள்ளலாம். உணவு இல்லாமல் குறைந்த காலம் வாழலாம். அதேபோல் தான் குறிப்பிட்ட வயது வந்தபின் செக்ஸ் உறவு இல்லாமல் ஒரு மனிதன் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியாது. ( சுவாமி விவேகானந்தர் கூட நீண்ட நாட்கள் உயிர் வாழததற்க்கு அவரது உடலில் தேங்கிய விந்துவை வெறியேற்றாததே காரணம் என கூறுவோரும் உண்டு).

அப்படியிருக்க, தற்போதைய இளையோர்களின் செக்ஸ் கருத்து பறிமாற்றம் நண்பர்கள் மத்தியிலேயே ரொம்ப ரொம்ப குறைவாகவே இருக்கிறது. ஆண் பிள்ளையாகட்டும், பெண் பிள்ளையாகட்டும் ஒரு வயதுக்கு மேல் அவர்களுக்கான உடல்கூறு சந்தேகங்களை தீர்க்க இதற்க்கு முந்தைய அதாவது நமது பெற்றோர்கள் உதவுவதில்லை, கல்வி சாலையிலும் வாய்ப்பில்லை இதனால் நவ யுக காலத்தில் இளையோர்கள் தவித்து போய்விடுகிறார்கள். இந்நிலையில் உலகத்தை இளையோர்களின் கையில் இணையம் கொண்டு வந்து தருகிறது. அதில் சமூகத்தில் மறைத்து வைப்பதை, அறிந்து கொள்ள நினைத்து தேடத்தொடங்குகிறார்கள். அதைத்தான் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது என்ற கண்ணோட்டத்தில் நாம் பார்க்க வேண்டும். அதனால், முடிந்த அளவு பெற்றோர்கள் மேம்போக்காவாவுது உடல்கூறுகள், உறவுகள் பற்றி தங்களது பிள்ளைகளுக்கு கற்று தர முயல வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்களது வாரிசுகளுக்கு கற்று தர முயல்வார்கள்.

அதேபோல் தற்போதைய கூ+ழலில் நிச்சய தேவை செக்ஸ் கல்வி. மேல்நிலைப்பள்ளி அ கல்லூரியில் பாடம் நிச்சயம் கற்றுதர வேண்டும். இல்லையேல் இளையோர்களின் வாழ்வு இப்படி தேடுபொறியிலேயே சென்று வாழ்வை சீரழித்துவிடும். அரசாங்கம் அதற்க்கு முயற்சி செய்ய வேண்டும்.

வியாழன், டிசம்பர் 29, 2011

ஸாரி மேடம் ( பகுதி 5 )



ஸாரிடீ.

தேவியின் கையை பிடித்துக்கொண்டு மஞ்சு கெஞ்சினால்.

அதெல்லாம் இருக்கட்டும். மேடம் அவனை காதலிக்கறிங்களோ?

அப்படியெல்லாம் கிடையாதே என வெட்கினாள்.

ஏய் ஏய் பொய் சொல்லாதடீ. அவன் என்னை காதலிக்கறான்னு நினைச்சி இன்னைக்கு பூரா அழுதுக்கிட்டு என்னை விரோதியாவே பாத்தயே அதுக்கு காரணம் என்ன ?.

நான் அழுதன்னு யார் சொன்னது.

மறைக்காதடீ. அவனை காதலிக்கறது உண்மை தானே.

ஏய் வாய மூடிக்கிட்டு கிளம்பு டியூஷன் போகனும். டைம்மாகுது.

என்னோட ஸ்கூட்டியில போகலாம் ஒன்னும் அவசரம்மில்ல.

எப்போதலயிருந்து.

12வது வந்தப்பவே. அவன் மேல காதல் வந்துடுச்சிடீ.

சரி, அவன்க்கிட்ட சொல்ல வேண்டியதானே. 
நான் போய் எப்படிடீ சொல்றது.

சினிமா பாக்கறயில்ல. இப்பவெல்லாம் நாம போய் சொன்னாதான். இல்லன்னா பசங்க ஆளை மாத்திக்கிட்டு போய்க்கிட்டே இருப்பானுங்க தெரிஞ்சிக்க.

இவன் அப்படியெல்லாம் பண்ணமாட்டான்.

ஓ……. ஓஹே………

இன்னைக்கே அவன்க்கிட்ட டேரைக்ட்டா சொல்லிடு.

அவன் மனசுல என்ன நினைச்சியிருக்கான்னு தெரியாம எப்படிடீ சொல்றது.

அவனும் உன்னை நிச்சயமா காதலிக்கறான்னு தான் எனக்கு தெரியுது. மதியம் நீ சாப்பிடலன்னு சொன்னதும் அவன் ஒரு மாதிரியாகிட்டான். நான் அவன் மூஞ்சை பாத்தன்.

அவன்க்கு தெரிஞ்சவங்க யார் சாப்பிடலன்னாலும் கஸ்டப்படுவான்.

போடீ இவளே…….. அது வேற இது வேற. நான் சொல்றத கவனமா கேளு. மதியம் நீ சாப்பிடலன்னு அவனுக்கு தெரியும். அத ஞாபகம் வச்சிக்கிட்டு ஊருக்கு பஸ் ஏர்றதுக்கு முன்னாடி உன்னை அவன் ஹோட்டல்க்கு அழைச்சா அவன் நிச்சயமா உன்னை காதலிக்கறான்னு அர்த்தம்.

இல்லன்னா ?

அவன் கூப்பிட்டுவான். என் கணக்கு தப்பாது பாரு என்றவள். சரி வா டைம்மாயிடுச்சி போய்க்கிட்டே பேசலாம்.

தேவி தன்னுடைய ஸ்கூட்டியில் மஞ்சுவையும் அழைத்துக்கொண்டு டியூஷன் கிளம்பினாள்.

அவன் நிச்சயம் கூப்டுவானாடீ

………………..

மறந்து போயிருந்தா…..

……………..

என்னடீ நான் கேட்டுக்கிட்டே வர்றன் பதில் சொல்லாம வர்ற.

இதயே எத்தனை முறை கேட்ப. இன்னும் 1 மணி நேரத்தல தெரிஞ்சிடப்போகுது.

ஹோட்டலுக்கு கூப்பிடறான்னு வச்சிக்க. அங்க போய் எப்படிடீ காதலிக்கறன்னு சொல்றது.

ஓன்னும் தெரியாத பாப்பா நீ. ஒழுங்கா வாடீ. மிஸ் வீடு வந்துடுச்சி. அப்பறம் பேசிக்கலாம் என மஞ்சுவை இழுத்தும் போனாள் தேவி.

டியூஷன் நடக்கும் மொட்டை மாடியில் போய் அமர்ந்தபோது, இங்கிலீஸ் பாடம் எடுக்கும் ரமணி மிஸ் வந்து, தனித்தனியா உட்கார்ந்து இந்த எஸ்ஏவ மனப்பாடம் பண்ணுங்க, நாளைக்கு டெஸ்ட் வைக்கறன் என சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார்.

தேவியும், மஞ்சுவும் ஒரு ஓரமாக போய் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தார்கள்.

கூப்பிடுவானா என மஞ்சுவின் மனம் திக் திக் என அடித்துக்கொள்ள மாரியாத்தாதாயே அவன் இன்னைக்கு என்னை ஹோட்டலுக்கு கூப்பிட்டும் போனா வர்ற பொங்களுக்கு உனக்கு 3 தேங்காய் உடைக்கறன் என மனதுக்குள் வேண்டிக்கொண்டவள். ஐகக்கு எட்டும் தூரத்தில் அமர்ந்திருந்த தேவியை ஸ்….. ஸ்….. என சவுண்ட் விட்டதோடு தேவ் தேவ் என அழைத்தாள்.

திரும்பிய தேவி என்ன என புருவத்தை உயர்த்தி கேட்டாள்.

அவன் கூப்பிடலன்னா என்னடீ பண்றது.

வீட்லப்போய் சாப்டுட்டு படி இல்ல தூங்கு.

என்னடீ இப்படி சொல்ற.

வேற என்ன சொல்ல சொல்ற.

ஓன்னும்மில்ல என்றவாள் வாடிய பூவாய் ஆன தனது முகத்தை திருப்பி புத்தகத்தை பார்க்கலானாள். என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பே மனதில் அதிகமாய் இருந்ததால் மூளை புத்தக எழுத்துக்களை பதியாமல் போனது.

திரும்பவும் ஸ்… ஸ்… என தேவியை அழைத்தாள்.

என்னடீ என்றாள் கேபமாக.

பயமாயிருக்குடீ. என்ன பண்றத்து ?

இரு மிஸ்க்கிட்ட கேட்டு சொல்றன் என புத்தகத்தை மூடீவிட்டு எழுந்தவளை வேணாம்டீ உட்காரு என அவளது சுடியை பிடித்து இழுக்க உதறிவிட்டு மிஸ் மிஸ் என அழைத்தபடியே தேவி உள்ளே போனாள்.

2 நிமிடத்தில் வெளியே வந்த சுந்தரி மிஸ், ஏய் மஞ்சு. வயித்து வலிக்குதுன்னா கிளம்ப வேண்டியதுதானே. ஏன் உட்கார்ந்துயிருக்க. போகும்போது மெடிக்கல்ல மாத்திரை வாங்கி சாப்பிட்டுட்டு போ. தேவி நீயும் கிளம்பு. அவளை அவ ஊர்க்கு போற பஸ்ல ஏத்திவிட்டுட்டு போ என்றார்.

சரிங்க மிஸ் என்ற தேவி, மஞ்சுவிடம் உன் பேக் க தா. நான் எடுத்துக்கறன் என டிராமா நடத்தினாள்.

படிக்கட்டில் இறங்கி வரும்போது, ஏன்டீ இப்படி பொய் சொன்ன?

எல்லாம் உன் தொல்லை தாங்க முடியாம தான் என சொல்லிவிட்டு வெளியே வந்து ஸ்கூட்டியை கிளப்பும்போது தான் தேவி கவனித்தாள். தெரு முனையில் உள்ள பங்க் கடை ஓரமாக நின்றிருந்த ராஜா அவர்களை பார்த்து கை அசைப்பதை.

தொடரும்……….




ஸாரி மேடம் ( பகுதி 4 )



மஞ்சு க்ளாஸ் ரூம்க்குள் நுழையும் போது அவள் அருகில் உட்காரும் அவளது ப்ரண்ட்  தேவி அவளைப்பார்த்து ஹாய் என்றால்

மஞ்சுவோ அவளை முறைத்தபடியே பின்னால் இருந்த பெஞ்ச்சில் போய் உட்கார்ந்தால்.

ஏய் நீ உட்கார்றயிடம் இங்கயிருக்குடீ என தேவி சொல்ல.

முகத்தை உர்ரென வைத்தபடி வேறு பக்கம் திரும்பிக்கொண்டால்.

உள்ளே வந்த நான் தேவியைப்பாத்து மெல்ல ஸ்மையில் செய்தேன். இதைக்கண்டு மஞ்சுவின் முகம் கடுகடுவென மாறியது. 

ஏன் இப்படியிருக்கறா என எண்ணியபடி பசங்களுடன் ஐக்கியமானேன். லஞ்ச் டைமில் வழக்கம்போல் நானும் ஜானும் சாப்பிட்டுவிட்டு வர எதிரே மஞ்சு வந்தால்.

அவளை நிறுத்தி என்னடீ கோபமாயிருக்கற.

என்னை முறைத்துவிட்டு பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டால்.

மஞ்சு பின்னாடியே டிபன்பாக்ஸ்சுடன் வந்த தேவி எங்களை பார்த்துவிட்டு வேகமாக அருகில் வந்தவள். என்னிடம் உங்க ஊர்க்காரி இன்னைக்கு சாப்பிடல சாப்பாட்ட கொட்டிட்டு பாக்ஸ கழுவிட்டு வர்றா. எங்கிட்டயும் காலையில இருந்து பேசல. என்னடீன்னு கேட்டா பதில் சொல்லமாட்டேன்கிறா என்றால்.

என்னடீயாச்சி

மவுனமாக நின்றாள்.

எதுக்கு சாப்பிடல.

ஜானையும், தேவியையும் பார்த்து நீங்க க்ளாஸ்க்கு போங்க நான் இவளை சாப்பிட வச்சி கூட்டி வர்றன் என்றன். அவர்கள் கிளம்ப வாடீ என்றேன்.

எனக்கு பசிக்கல என வற மறுத்தால்.

சாயந்தரம் வரைக்கும் சாப்பிடலன்னா வயிறு வலிக்கும் வாடீ என சொல்லிக்கொண்டுயிருக்கும்போதே எங்களது பீ.டி மாஸ்டர் அவரது அறையில் இருந்து வெளியே வந்தவர் நாங்கள் பேசுவதை கவனித்தார். இருவருமே பயந்து போனோம். ஸ்கூலில் கேள்ஸ்சோடு பாய்ஸ் பேசுவது அவருக்கு பிடிக்காது. கூப்பிட்டு வைத்து அடிப்பார். எங்களை பார்த்தவர் திரும்பவும் அறைக்குள் போனார்.

நான் க்ளாஸ்க்கு போறன் என வேகவேகமாக போனாள் மஞ்சு. நானும் பின்னாடியே போனேன்.

கொஞ்ச நேரத்தில் பெல் அடித்து விட வகுப்பு ஆரம்பமானது.

அக்கவுண்ட்ஸ் சார் வந்து க்ளாஸ் எடுக்க ஆரம்பித்தார். எனக்கோ பீ.டி சார் என்ன பண்ணப்போறாறோ என நெஞ்சி திக் திக் என அடித்துக்கொண்டதோடு பாடத்தில் கவனம் போகவில்லை.

சார் என்ற பையனின் குரல் என் நினைவுகளை கலைத்தது. பாடம் நடத்திக்கொண்டிருந்த அக்கவுண்ட்ஸ் சார் வெளியே நின்ற பையனிடம் என்னப்பா என்றார். வெளியே நின்றிருந்த சின்னப்பையன், ராஜா அண்ணனை பீ.டி மாஸ்டர் வரச்சொன்னாரு சார் என்றான்.

ஏன் பக்கம் திரும்பிய அக்கவுண்ட்ஸ் சார், என்னடா பண்ண என கேட்டவர் போய்ட்டு சீக்கிரம் வா என்றார்.

போகும் போது ஜன்னல் வழியாக பார்த்தேன். மஞ்சு அழும் நிலையில் என்னைப்பார்த்தாள். பி.டி மாஸ்டர் ரூம்மை நோக்கி போனேன்.

மை கம் இன் சார்

ம். உள்ள வா.

கட்டுமஸ்தாக போலிஸ் அதிகாரி போல் சேரில் உட்கார்ந்திருந்தார். அவர் முன் கைகட்டி நின்றேன்.

ஒழுங்கா விளையாடுவியாடா ?.

விளையாடுவன் சார்.

ஸ்கூல் விட்டதும் கிரவுண்ட்க்கு வந்துடு. சூ வச்சியிருக்கியா ?

இல்ல சார்.

நாளைக்கு வாங்கிடனும் ?

சரி சார்.

பொண்ணுங்க கூட நிறைய பேசறபோல ?.

இல்ல சார். அதுவும் நானும் ஒரே ஊர் சார். ஒரே க்ளாஸ்ல படிக்கறோம். மதியம் சாப்பிடல அதான் கேட்டுக்கிட்டுயிருந்தன் சார் என இழுத்தேன்…….. சரி சரி போ.

ரூம்மை விட்டு வெளியே வந்தேன். அப்பாடா தப்பிச்சோம். விளையாட்ல சேர்ந்துட்டா எதயும் கண்டுக்கமாட்டார் போல என எண்ணியபடியே க்ளாஸ்க்கு வந்தேன். வகுப்பு முடிந்திருந்தது. சார் வெளியே வந்தார்.

பாத்துட்டியாடா.

பாத்துட்டன் சார்.

என்னவாம்.

கிரவுண்ட்க்கு வரச்சொன்னார் சார்.

நீயும் ஊரை சுத்தப்போறயா என கேட்டபடி நகர்ந்தார்.

வகுப்புக்குள் வந்தேன்.

மஞ்சு தலையில் கை வைத்தபடி குனிந்து டேபிளை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளை காட்டி என்னாச்சி என் சைகையாலே கேட்டேன்.

உதட்டை பிதுக்கினாள்.

அடுத்து வந்த காமர்ஸ் வகுப்பும் முடிந்ததும் லாங்க் பெல் அடித்தார்கள்.

எல்லோரும் கிளம்பிக்கொண்டிருந்தோம்.

பீ.டி சார் அடிச்சாரா என கிட்டே வந்து கேட்டாள் மஞ்சு.

முகத்தை பார்த்தேன் அழும் நிலையில் இருந்தாள்.

அவர் ஏன் அடிக்கப்போறாரு?

தேவி அவள் இடத்தில் இருந்து எங்களை நோக்கி வந்தாள்.

அவளை பார்த்ததும் நான் கிளம்பறன் என கிளம்பிய மஞ்சுவின் கையை பிடித்து இழுத்த தேவி. இப்ப எதுக்கு நான் வந்ததும் கிளம்பற. காலையில இருந்து எங்கிட்ட ஒரு வார்த்தையும் பேசல. நான் என்னடீ தப்பு பண்ணன் சொல்லிட்டு போடீ என்றாள்.

இவளோ, உங்களுக்குள்ள பேசறதுக்கு ஆயிரம் விஷயம் இருக்கும் நான் எதுக்கு இடையில நந்தி மாதிரி. நான் கிளம்பறன் என்றாள் கோபமாக மஞ்சு.

அவன்க்கிட்ட பேசறதுக்கு எனக்கு என்னயிருக்கு.

அதான் நேத்து சாயந்தரம் சைக்கிள் ஸ்டான்ட்டுக்கு தேடிப்போய் பேசியிருக்கியே. இதல நான் தான் கேனச்சியாயிட்டன் என்றாள் முனகலுடன்.

ஆஹா, ஏதோ வில்லங்கமா நினைக்கறா போல என எண்ணிக்கொண்டு தேவி நீ கிளம்பு. இவ டியூஷன் வருவா அங்க பேசிக்க.

அவ எதுக்கு போகனும் நான் போறன். நீங்க இரண்டு பேரும் ஜாலியா பேசுங்க என்றாள்.

ஏய் லூசா நீ. சாயந்தரம் டியூஷன் போறன்னு சொன்ன இப்ப போகலங்கற. டியூஷன் போவாம எங்க போறா ?

வீட்டுக்கு போறன்.

6 மணிக்கு தான் பஸ்;.

நான் நடந்து போவன்.

சாயந்தரம் டியூஷன்க்கு வர்றியா. எங்கிட்ட சொல்லவேயில்ல என திரும்ப மூக்கை நுழைத்தாள் தேவி.

நீ மட்டும் இவனை காதலிக்கறத எங்க்கிட்ட சொன்னியா?. அவனைத்தானே தேடிப்போய் சொன்ன. 2 மாசத்துக்கு முந்தியே லவ் லட்டர் தந்துயிருக்கான். எங்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியாடீ நீ. காலையில இவன் சொன்னப்ப தான் தெரிஞ்சிக்கிட்டன் என படபடவென பெரித்து தள்ளினாள்.

இதைக்கேட்டு அதிர்ந்து போன தேவி. என்னிடம் கேபமாக அவக்கிட்ட என்னடா சொன்ன. நீ எப்ப லவ் லட்டர் தந்த, நான் எப்ப உன்னை காதலிக்கறன்னு சொன்னன்.

நான் கடுப்புடன், எப்ப இவக்கிட்ட உன்னை காதலிக்கறன்னு சொன்னன்னு நீயே கேளு.

காலையில நீ தானே சொன்ன 2 மாசத்துக்கு முந்தி லட்டர் தந்தன். நேத்து தான் தேவி வந்து ஒ.கேன்னு சொல்லிட்டு போனா, இனிமே ஜாலின்னு சொன்னயே என்றாள் கேபமாக.

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது, தேவியும் சிரித்துவிட்டாள்.

சிரித்த எங்களை கேள்விக்குறியோடு பார்த்தாள்.

போடீ இவளே. பி.டீ சார்க்கிட்ட பேஸ்கட் பால் விளையாட நானும் வர்றன் என்னை டீம்ல சேர்த்துக்கங்கன்னு கேட்டு லட்டர் தந்துயிருக்கான். அத சார் இப்பத்தான் ஓ.கே பண்ணியிருக்காரு. எங்கண்ணன் சுரேஷ்தானே பேஸ்கட்பால் டீம் லீடர். அவன்க்கு முன்கூட்டியே தெரிஞ்சியிருக்கு. அவனை பார்க்க நேத்து பி.டீ சார் ரூம்க்கு போயிருந்தன். அப்ப உள்ள பேசிக்கிட்டுயிருந்தாங்க. ராஜாவ சேர்த்துக்கலாம்ன்னு எங்கண்ணன் சொன்னான். சாரும் ஒ.கே பண்ணாரு. அதைத்தான் நேத்து சைக்கிள் ஸ்டாண்ட்ல உனக்காக காத்திருந்தப்ப சொன்னன். அத அவன் உன்கிட்ட அறைகுறையா சொல்ல நான் அவனை காதலிக்கறதா நினைச்சி என்னை முறைக்கற இது நியாயமாடீ என்றாள் தேவி.

அவன் இதெல்லாம் சொல்லலடீ என்றாள் பிரகாசமான முகத்தோடு.

இவனெல்லாம் ஒரு மனுஷன் இவனைப்போய் நான் லவ் பண்றதாவது என நக்கல் அடித்ததாள்.

ஹலோ ஹலோ நிறுத்து  நீ பெரிய அழகின்னு ஒத்துக்கறன் அதுக்காக என்னை ஓட்டாத சரியா. நான் கிரவுண்ட்க்கு போறன். நீ டியூஷன் போய்ட்டு வா பஸ்ல பேசிப்போம் மஞ்சுவிடம் கூறிவிட்டு கிளம்பினேன்.

தொடரும்…………

செவ்வாய், டிசம்பர் 27, 2011

உணர்வில்லாத பணத்தாசை பிடித்த சினிமா பிசாசுகள்.



பணத்தாசை பிடித்த பிசாசுகள் தமிழகத்தில் வாழும் சினிமா நட்சத்திரங்கள். அதற்க்கு தற்போது வெளிப்படை சாட்சியாகி விட்டார்கள் நடிகை சங்கீதா அவரது கணவர் பாடகர் கிரிஷ், சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிகர் சங்க தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ உட்பட சினிமா துறையினர். 

முதலில் நடிகை சங்கீதா விவகாரத்துக்கு வருவோம். ஈழ துரோகியான இலங்கை அமைச்சர் கருணா, விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகிய பின் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை காட்டிக்கொடுத்ததோடு இராணுவத்துக்கு வழிகாட்டியாக இருந்து போர் காலத்தில் மக்களை கொல்லவும் துணை போனவன். போர் முடிவுக்கு பின் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் சிங்கள அதிபர் இராஜபக்சே அன் கோ வுக்கு எதிராக உணர்வுடன் போராடி வருகின்றனர். அதை நசுக்க சிங்கள அரசு பல குறுக்கு வழிகளை செய்து வருகிறது. அதாவது ஈழத்தமிழர்களிடம் புகுந்து பிரித்தாளுவது, நசுக்குவது. 

தமிழர்கள் சினிமா பைத்தியங்கள் என்பதை உணர்ந்தே போராடும் தமிழர்களை பிரிக்க சினிமா நடிகர்களை பயன்படுத்தும் திட்டத்திற்க்கு வந்தனர். இலங்கையில் உள்ள தமிழர்கள் வாழும் அகதி முகாம்க்கு பலநாட்டு இராஜதந்திரிகள், விசாரணை குழுவினர் பார்வையிட வேண்டும் என கேட்டபோது மறுத்த சிங்கள அரசு, தமிழகத்தில் பிரபலமாக உள்ள கேரளா நடிகை அசினை அழைத்தும் போய் முகாமில் இருந்த மக்களுக்கு ஷோ காட்டியது. அடுத்து திரைப்பட விழா நடத்தியது. சிங்கள விழா ஒன்றுக்கு, பாடகர் மனோ, பாடகர் கிரிஷ் ஆகியோர் மக்களை மகிழ்விக்க பாடல் பாட 50 லட்சத்திற்க்கு மேல் தந்து புக் செய்தது. இதெல்லாம் உலக நாடுகளை ஏமாற்ற இந்தியா தரும் திட்டப்படி இலங்கை செய்யும் சூழ்ச்சி என்ற கண்டனம் எழுந்ததும் பாடகர் மனோ பின் வாங்கினார். அப்போது மனோ மட்டும்மே தவறு செய்துவிட்டேன் இனி செய்யமாட்டேன் என்றார். கிரிஷ் கருத்து கூறவில்லை. 

தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்க்கு சுவிஸர்லாந்தில் புத்தாண்டு விழா நடத்துகிறான் துரோகி கருணா. அதற்க்கு நடிகர் ஜீவா, அவரது நெருங்கிய சினிமா தோழி சங்கீதா, சங்கீதாவின் கணவர் பாடகர் கிரிஷ் ஆகியோர் செல்கின்றனர். இதற்க்காக 1 கோடி ரூபாய் அளவுக்கு இவர்களுக்கு சம்பளம் பேசப்பட்டள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்க்கு கண்டனம் எழுந்ததும், 26ந்தேதி செய்தியாளர்களை சந்தித்த சங்கீதா. இணைய தளத்தில் எழுதியும், போன் செய்தும் போககூடாது என மிரட்டுகிறார்கள். நான் யார் மிரட்டலுக்கும் பயப்படபோவதில்லை. தமிழ் மக்களுக்காகவே போகிறேன் அந்த மக்களுடன் இருப்பது எனக்கு சந்தோஷமாக உள்ளது. அதனாலயே அங்கே போகிறேன் என்றார். அவரது கணவரோ, நான் ஒரு பாடகன். எனக்கு பாட மட்டுமே தெரியும். அரசியல் தெரியாது. நாளை உங்கள் வீட்டில் ஒரு விழா என்றால் வந்து பாடப்போகிறேன். நாங்கள் கலைஞர்கள் எங்களை எதனால் தடுக்க வேண்டும், மிரட்ட வேண்டும் இது தமிழர்களுக்கான விழா என நிருபிக்கிறார்கள் அதனால் போகப்போகிறோம் என்றார் திமிருடன். மீண்டும் பேசிய சங்கீதா, இதுப்பற்றி நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் பேசினேன். நீ எங்கு வேண்டுமானாலும் போங்கள் சங்கத்துக்கு ஆட்சேபனையில்லை எனக்கூறிவிட்டார் என்றார்.

அடுத்து ரஜினி விவகாரம். முல்லை பெரியார் விவகாரம் இரண்டு மாதமாக நடந்துக்கொண்டுயிருக்கிறது. இதைப்பற்றி வாய் திறக்காத ரஜினி மேட்டுக்குடி மக்கள் நடத்தும் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு வாய்ஸ் தருகிறார். தமிழகத்தில் அன்னாஹசாரே அடிப்பொடிகள் உண்ணாவிரதம் இருக்க தனது மண்டபத்தை இலவசமாக தருகிறார். (முதல்ல நீ வாங்கற, சம்பாதிக்கற பணத்துக்கு ஒழுங்கா வரி கட்டுய்யா அப்பறம் ஊழலுக்கு எதிரா குரல் குடுப்ப).

அடுத்து ஆளும்கட்சியின் டிவியான ஜெயா டிவியில் தமிழரான இசைஞானி இளையராஜா மலபார் கோல்ட் நடத்தும் பாட்டு கச்சேரிக்கு ஒப்புக்கொண்டுள்ளார். அடுத்த தமிழக முதல்வர் கனவில் இப்போதே கொடி, இயக்கம் என தொடங்கியுள்ள இளையதளபதி விஜய், ஜாய் ஆலுக்காஸ் விளம்பரத்தில் நடிக்கும் காண்ட்ரக்ட்டை நிறுத்தவில்லை. நடிகர் விக்ரம், மலபார் கோல்ட் பைனான்ஸ் விளம்பரத்தில் நடிப்பதையும் நிறுத்தவில்லை. இப்படி ஒவ்வொரு நடிகர் – நடிகையைப்பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம். 

நடிகர் சங்க தலைவராகவும், தமிழக மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்து எம்.எல்.ஏவாக  உள்ள சரத்குமார் போன்ற அல்பங்கள் தமிழகத்தில் உள்ளவரை பக்கத்து மாநிலத்தவன் ஏமாற்றத்தான் செய்வான். தமிழ்நாட்டு ரசிகர்கள் தான் இவர்களை நட்சத்திரங்களாக்கினார்கள். தமிழக மக்கள் வாரி தந்த பணத்தில் கொழுத்துண்டு வாழும் இவர்கள் தமிழர்களுக்கு துரோகம் செய்வார்கள் அதை வேடிக்கை பார்க்க வேண்டும் என்கிறார்கள். கேட்டால் நாங்கள் கலைஞர்கள், எங்களுக்கு மொழி, எல்லை கிடையாது என்கிறார்கள். 

தென்மாவட்ட மக்களின் உயிர் என்றால் அது பெரியார் அணையில் இருந்து வரும் நீர் தான். அதைக்கொண்டு தான் மக்கள் விவசாயம் செய்கிறார்கள். அதற்க்கு அணைப்போட்டு தடுக்கப்பார்க்கிறது கேரளா. இதனை கண்டித்து தென் மாவட்ட மக்கள் உணர்வுடன் போராடி வருகிறார்கள். சில காவல்துறை உயர் அதிகாரிகள் மக்களின் மண்டைகளை பிளக்கிறார்கள். அப்போதும் போராட்டம் ஓயவில்லை. 

கேரளாவில் அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சினிமா துறையினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துகின்றனர். தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் மக்களிடம் கோடி கோடியாய் சம்பாதிப்பதோடு, தமிழ் ரசிகனின் பணத்தில் உச்சத்திற்க்கு போகும் தமிழக சினிமாத்துறையினர் ஒரு சின்ன கண்டன அறிக்கை கூட விடவில்லை. இயக்குநர் சங்க தலைவர் பாரதிராஜா உட்பட சிலர் மட்டுமே மே 17 இயக்கம் நடத்திய கண்டன கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.


பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கும் இந்த தமிழ் சினிமாக்காரர்களுக்கு தமிழனின் உயிரும், உணர்வும் ஒரு பொருட்டே அல்ல. இவர்களை எதிர்த்தால் ஆதரிக்க மற்றொரு தரப்பில் அரசியல் இயகத்திலும், பெரும் அதிகார வர்க்கத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்ற திமிரும், தமிழன் இளிச்சவாயன் என்ற என்ற எண்ணமும் இருப்பதால் தான் இவர்கள் தமிழர்களுக்கு விரோத சக்திகளுக்கு துணை போகிறார்கள். 

தமிழக மக்களே, முதலில் இந்த சினிமாக்காரர்களை புறக்கணியுங்கள்.  அரசியல்வாதிகளை விட ஆபத்தான பணம் தின்னிகள், உணர்வுகளை மழுங்கடிக்கும் ‘தோல்’வியாபாரிகள் இந்த தமிழ் சினிமாத்துறையினர். 

ஜாக்கிரதை. 

ஸாரி மேடம். ( பகுதி…… 3 )




இரயில் பெட்டியின் வாயில் கதவை திறந்துவைத்துவிட்டு தம்மடித்து முடிக்கும் போது கூபேவில் இருந்து எனது கேங்க் நான் இருக்கும் இடத்திற்க்கு வந்தது. 

விநோத் தான் ஆரம்பித்தான். என்ன மச்சான் யாரு அவுங்க என்றான். 

ஏன்னை அடிக்கறதுயென்ன, தூக்கி போட்டு மிதிக்கற அளவுக்கு அவளுக்கு உரிமையிருக்கு என்றபோது மவுனமாகவே நான் பேசுவதை கேட்டனர். 

என் உயிர் மச்சான் அவ எனக்கூறிய போது புரியாமல் பார்த்தனர். 

10 ஆண்டு பின்னோக்கி போனது என் நினைவுகள். 

எரும மாதிரி தூங்கறத பாரு. விடிஞ்சி ஒரு மணி நேரம் ஆவுது. எழுந்திருக்குதா பாரு என்றவர் சமையல் கட்டை நோக்கி போய் அவனை எழுப்பான்டீ என எங்கப்பா கத்துவது நன்றாக கேட்டது. 

12வது படிக்கறான் விடியகாத்தால எழுந்து ஏதாவது படிக்கறானா பாரு. மத்த பசங்கள பாரு காலையிலயே எழுந்து படிக்குதுங்க இவனும் இருக்கானே என்றவர். படிக்கதான் மாட்டேன்கிறான் கழனிக்காவுது வந்து ஏதாவது வேலை பாத்தானா அதையாவது கத்துக்கலாம். அதயும் செய்யறதில்ல என்றவரிடம், அவன் பாஸ் பண்ணுவான் நீங்க போய் வேலைய பாருங்க என்றார் தாய்க்கான அக்கறையோடு. 

புhஸ் பண்ணி கிழிச்சான் மாடு மேய்க்கதான் லாயக்கு இவன் எனச்சொல்லி விட்டு வெளியே வரும்போது பாயில் இருந்து எழுந்து உட்கார்ந்திருந்தேன். எதுவும் சொல்லாமல் வெளியே போனார். 

பின்னாலயே வந்த அம்மா அவரு கத்தறமாதிரியே தாண்ட நீயும் நடந்துக்கற என்ற அம்மாவிடம். சுடுதண்ணி வை ஸ்கூலுக்கு கிளம்பனும் எனச்சொல்லிவிட்டு எழுந்து பிரஸ்சை எடுத்துக்கொண்டு கொள்ளைப்பக்கம் போய்விட்டேன். திரும்பி வந்து குளித்துவிட்டு சாப்பிட்டு விட்டு சைக்கிளில் புத்தக பையை வைத்துவிட்டு எங்க சேலைப்பட்டியில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள நாயக்கன்பாளையத்துக்கு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தேன். 

ஊர்க்காரர்கள் எல்லாம் கழனி காட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இப்போவே மணி 8 ஆகிவிட்டது. 10 மணிக்குள் போயாகவேண்டுமே என வேகவேகமாக சைக்கிளை மிதித்தேன். 3 கி.மீ தூரம் வந்திருப்பேன். எனக்கு முன்னால் தான் பக்கத்து தெருவை சேர்ந்த மஞ்சு சைக்கிளில் போய்க்கொண்டிருந்தாள். நானும் அவளும் ஒரு க்ளாஸ் தான். அவளைக்காட்டி தான் காலையில் திட்டினார். 

அவளை நெருங்கிய நேரத்தில் ஏண்டீ உனக்கு அறிவில்ல. படிக்கறவ வீட்டுக்குள்ள படி. இல்லன்னா நைட்லயே படிச்சி தொலை. விடியகாலையில எழுந்து படிச்ச கொன்னுடுவன். உன்னப்பாத்துட்டு எங்கப்பன் காலையில எழுந்திருக்கறானா பாரு, படிக்கறானாரு பாருன்னு அந்தாளு தினமும் திட்டறாரு என்றேன். படிக்கச்சொல்லி தானே திட்டறாரு, வாங்கு என்றாள் முகத்தை கோனலாக வைத்தப்படி.  ஆமாம் படிச்சி கலெக்டராவ போறன் பாரு. போடீ படிக்கறதாம் எனச்சொல்லிவிட்டு வேற என்னடீ விசேஷம் என்றேன். 

சின்ன வயதில் இருந்தே அவளிடம் நெருங்கி பழகியதால் வாடி போடீ என்றே அழைப்பதால் அவளும் இதை பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை. ஸ்கூலில் தான் பசங்க என்னடா லவ்ஸ்சா என கிண்டல் அடிப்பார்கள். 

பள்ளிக்குள் நுழைந்ததும் என்ன மச்சான், இன்னைக்கும் உங்காளுக்கூடதானே வந்த என கலாய்க்கும் போதே பின்னாடியே வந்தவள் எல்லோரையும் முறைத்துவிட்டு போய் உட்கார்ந்தாள். இரண்டு வகுப்பு முடிந்து இண்டர்வல் பெல் அடித்தார்கள். போய்விட்டு வந்ததும் இங்கிலிஸ் மிஸ் வரவில்லை என்றதால் அந்த பீரியட் ஜாலி என பேசிக்கொண்டுயிருந்தோம்.

நான் டெஸ்க்கில் படம் வரைந்துக்கொண்டு பக்கத்தில் இருந்த ஆனந்திடம் பேசிக்கொண்டு இருந்தேன். 

பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜான் மெல்ல காதருகே வந்து ஒரு சின்ன சந்தேகம்டா கேட்கட்டா. பாடத்தை தவிர வேற எதல வேண்ணா கேளு. 

பொண்ணுங்க யூஸ் பண்ணுவாங்களே அதுக்கு பேர் என்னடா.

நிறைய யூஸ் பண்றாளுங்க அதல எது ?

அதாண்டா. டிவியில கூட விளம்பரம் பண்றானே.

கோத்தா எல்லாமே தான் டிவியில விளம்பரம் பண்றான். 

பேர் மறந்துட்டன் மச்சான். 

டீவியில விளம்பரம் பண்ணும் பொருட்களை லைனாக அடுக்கினேன். கடைசியாக நாப்கீனா இருக்குமோ என யோசித்தபடியே நாப்கீனா என அவனிடம் கேட்டேன்.

ஆமாண்டா அதேதான். என்ன பேர் சொன்ன.

நாப்கீன்.

யார் வாங்கி வரச்சொன்னா. பக்கத்து வீட்ல ஜெஸி வாங்கி வரச்சொன்னா டா அதான் என இழுத்தான். கொஞ்சம் நேரம் பொருத்து நாப்கீன் தாங்கன்னு கடையில கேட்டா தருவாங்களா?

இல்ல. கம்பெனி பேர் சொல்லனும். 

நல்ல கம்பெனி எது என திருப்பி என்னிடம்மே கேட்டவனை பார்த்து கோபம் வந்தது. நாயே வாங்கியாற சொன்னவங்கக்கிட்டயே கேட்க வேண்டியது தானே என குரலை உயர்த்தினேன். 

சொன்னாங்க. மறுந்துட்டன் மச்சான் என்றவன் சொல்லுடா சொல்லுடா என நச்சரிக்க.

விஸ்பர்டா என சத்தமாகவே சொன்னேன். இதைக்கேட்டு பசங்க சைலண்டா எங்களை பார்க்க, பொண்ணுங்கயெல்லாம் ச்சீ என எங்களை பார்த்து சிரிக்க தொடங்கினார்கள். 

ஜானோ இப்படியாடா கத்தறது என்றான் கிசுகிசுப்பாக. 

கோபமாக அவனை முறைத்தேன். 

யாருக்கு மச்சான் என பசங்க கோரஸாக கத்த, பொண்ணுங்க அதிகமாக சிரிக்க அசிங்கமாக போய்விட்டது. 

மதியம் சாப்பாட்டு நேரம், நானும் ஜானும் பள்ளிக்கு எதிரில் இருந்த பெட்டிக்கடை ஹோட்டலுக்குள் புகுந்து தக்காளி சாதம் வாங்கிவிட்டு உட்கார்ந்தோம். மானம் போச்சிடா இன்னைக்கி என்றவனிடம்.

டேய் வாய மூடு. என்னத்தயோ உலகத்தல இல்லாத்தையா சொன்னன். நிமிஷத்துக்கு பத்து விளம்பரம் போடறான். சுpரிச்சவளுங்க எல்லாம் அதைத்தான் யூஸ் பண்ணுவாளுங்க விடு என பேசியபடியே சாப்பிட்டுவிட்டு மீண்டும் பள்ளிக்குள் வந்து சுற்றிக்கொண்டிருந்தோம். 

சாப்பிட்டுவிட்டு டிபன் பாக்ஸை கழுவிவிட்டு வந்துக்கொண்டிருந்த மஞ்சு, எங்களை பார்த்ததும் நின்றாள். அவள் அருகே போனதும் ஜான் முன் எச்சரிக்கையாக சற்று தள்ளி போய் நின்றான்.

என்னிடம் அறிவிருக்கா என கேட்டாள். 

இல்ல. கொஞ்சம் கடன் தாயேன். 

முறைத்தவள். எதுக்கு அப்படி ஏலம் போட்ட. இந்த நாய் பேர் என்னன்னு கேட்டு டார்ச்சர் பண்ணான். சோல்லும் போது சவுண்ட் அதிகமாயிடுச்சி.

ச்சீ பே என கோபமாக கூறிவிட்டு நகர்ந்தாள். 

மாலை பள்ளி விட்டதும் கிளம்ப தயாரானபோது மஞ்சு வரலயே என காத்திருந்தேன். 

நேரமாகியும் வரவில்லை. சரி முன்னாடி போய்ட்டு இருப்பா என எண்ணியபடி புறப்பட்டு வந்துவிட்டேன். 

மறுநாள் காலை பள்ளிக்கு வரும்போதும் பார்த்தேன் வழியில் ஆள் தட்டுப்படவேயில்லை. சைக்கிள் ஸ்டாண்டில் பார்த்தேன். அவளது சைக்கிளும் இல்லை. 

ஏன் வரல என யோசித்தபடி க்ளாஸ் ரூம்க்கு போனபோது உள்ளே அமர்ந்திருந்தாள். எப்படி வந்தா என போய் உட்கார்ந்து அவள் பக்கம் திரும்பி எங்கடீ நேத்தும் காணோம். இன்னைக்கும் காலையில பாத்தன் காணோம். சைக்கிளும் இல்ல. உங்கப்பன் என்ன சைக்கிளை அடமானம் வச்சி குடிச்சிட்டானா?

முறைத்தவள். இனிமே சாயந்தரத்தல டியூஷன் வர்றததா நேத்தே மிஸ்க்கிட்ட சொல்லிட்டன். டியூஷன் விடும்போது இருட்டிடும் அதனால சைக்கிள விட்டுட்டு பஸ்ல வந்தன். இனிமே பஸ் தான் என்றாள். 

கம்பெனிக்கு ஆள் இல்லாம போச்சே என எண்ணியபடி திரும்பி உட்கார்ந்தேன். 

மறுநாள் காலை நானும் சைக்கிளை வீட்டிலேயே விட்டுவிட்டு பஸ்சில் போக வந்தேன். பஸ் ஸ்டாப்பில் என்னடா ஆச்சி சைக்கிள் என்றார் எதிரில் வந்த அப்பா. 

நீ தான் டிய+ஷன் போன்னு சத்தம் போடறியே அதான் இன்னையிலயிருந்து டியூஷன் போறன். சாயந்தரம் லேட்டாகிடும் அதான் பஸ்ல என்றேன். 

பஸ்ல போக காசுயிருக்க ?

பஸ் பாஸ் இருக்கு எனச்சொல்லிவிட்டு நகர்ந்தேன். 

இப்பவாவுது புத்தி வந்ததே என முனகியபடியே சென்றார். 

உள்ளுரில் இருவரும் பேசிக்கொள்வதில்லை என்பதால் சைலண்டாகவே பஸ்க்காக காத்திருந்தோம். 

பஸ் வந்ததும் ஏறினோம். ஊள்ளே பள்ளிக்கு வரும் பக்கத்து எங்களுடன் படிக்கும் பசங்கள் என்னடா உங்காளு பஸ்ல வருதுன்னதும் நீயும் பஸ்சா என கேட்க. அதெல்லாம் கிடையாது எனச்சொல்லிவிட்டு அவளை பார்த்தேன். 

என்னை பார்த்தபடியிருந்தவள் சடாரென திரும்பிக்கொண்டாள். 

பள்ளிக்கூடம் வந்ததும் எல்லோரும் இறங்கினோம். 

என்னருகே வந்தவள் என்ன சார் திடீர்ன்னு டியூஷன் வர்றதா சொன்னிங்க. படிப்பு மேல என்ன அவ்வளவு அக்கறை. 

நக்கலாக சிரித்தேன். 

எதுக்கு சிரிக்கற

டியூஷன் வர்றன்னு யார் சொன்னது. 

நீ தானே உங்கப்பாக்கிட்ட சொன்ன.

சும்மா சொன்னன். நான் டியூஷன் வரப்போறதில்ல. 

இங்கப்பாரு. எங்கப்பா உங்கிட்ட எப்பவாவுது வந்து டியூஷன் வரானான்னு கேட்பாரு வர்றன்னு சொல்லு. பீஸ் எவ்வளவுன்னு கேட்டா 200 ரூபான்னு சொல்லு. 

நான் பொய் சொல்ல மாட்டான். பெரிய இவ சொல்ல மாட்டா. ஒழுங்கா நான் சொல்றத செய்யல. உங்கிட்ட பேசமாட்டான். 

சைலண்டாக இருந்தவள். 

டியூஷன் வராம சாயந்தரத்தல எங்கப்போவ.

லட்டர் தந்துட்டு 2 மாசம்மா காத்திருந்தன். இப்பத்தான் ஒ.கேயாச்சி. நேத்து உனக்காக காத்திருந்தப்ப தான் உன் ப்ரண்ட் தேவி வந்து சொல்லிட்டு போனா. இனிமே என்ன சாயந்தரத்தல ஜாலி தான் என கண்ணடித்தேன். 

கடுகடுவென முகத்தை வைத்தபடி க்ளாஸ் ரூம்க்குள் போனாள். 

தொடரும்…………


திங்கள், டிசம்பர் 26, 2011

ஸாரி மேடம். ( கதை பகுதி…… 2 )





அப்ப என்னடா பண்ண, எதுக்கு அடிச்சாங்க என குமார் வேகமாக ஆர்வத்துடன் கேட்டான். 

நான் மவுனமாக இருந்ததைப்பார்த்து …….

மச்சான் பிகர் நல்லாயிருக்குன்னு வேற எங்கயாவது கை வச்சிட்டியா என தருண் கேட்டதும் சடாரென முகத்தை திருப்பி கோபமாக அவனை முறைத்தேன். 

முறைக்காத உரசனதுக்கு அடிக்கலன்னா? வேற ஏதாவது தப்பு பண்ணியிருந்தா தானே அடிப்பாங்க. அதனால தான் கேட்டன் என்றான். 

சிறிது நேர தயக்கத்துக்கு பின் நான் அவக்கிட்ட ஸாரி சொன்னதுக்கு அடிச்சாங்க என்றதும்……..

ஏண்டா லூசா நீ. ஸாரி சொன்னதுக்கு போய் யாராவது அடிப்பாங்களா என்றான் இதுவரை மவுனமாகவே இருந்த விநோத். 

அவ அடிப்பாடா என கூறிவிட்டு எழுந்து கதவு பக்கம் வந்து நின்றுக்கொண்டு பாக்கெட்டில் இருந்து கிங்ஸ் எடுத்து பற்ற வைத்தேன். 


கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டு கோப கனலாக இரயில் நிலையத்தை விட்டு குழந்தையுடன் வெளியே வந்தாள் பிரியா. ஒரு டாக்ஸியை அழைத்தவள் ஏலங்கா போகனும் எனக்கூறிவிட்டு டாக்ஸியில் அமர்ந்தாள். எதுக்கும்மா அந்தாளை அடிச்ச. நீ இப்படி கோபப்படமாட்டியே என கேட்டாள் ஒன்றாவது படிக்கும் அவளது ஆறு வயது பெண் சரண்யா. 

கோபப்பட்டனா அவனை கழுத்தை நெறிச்சியிருக்கனும். யார்க்கிட்ட அவன் வேலைய காட்டறான். கூட்டம் கூடுதேன்னு அவனை விட்டுட்டு வந்தன். இல்லன்னா அவனை என நிறுத்தியவள். இந்த பிரியாவப்பத்தி என்ன நினைச்சான் அவன் என பல்லைக்கடித்தால். 

இதுவரை காணாத தனது தாயின் முகத்தில் கோபத்தையும், உக்கிரமான வார்த்தைகளை கேட்டதும் பயந்து போய் அம்மா என அவளது கையை பிடித்துக்கொண்டு மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள். எதுக்கு அம்மா கேபப்படறா என யோசித்தபடியே தூங்கிவிட்டாள். 

அரை மணி நேர டாக்ஸி பயணத்துக்கு பின் மேடம் நீங்க சொன்ன ஏரியா வந்துடுச்சி. எங்க போகனும் மேடம் என டிரைவர் கேட்டதும் வழிச்சொன்னால் ஒரு திருப்பத்தில் ஆழகான ஒரு குட்டி பங்களாவை காட்டி அங்க போ என்றாள். அங்கு வந்து வண்டி நின்றதும் பணத்தை தந்துவிட்டு சரண்யாவை எழுப்பினாள். எழுந்த சரண்யா அம்மாவின் முகத்தை பார்த்தவளுக்கு அம்மா அழுதிருக்கா என்ற எண்ணம் புரிந்தது அவளுக்கு. 

கேட் டை தள்ளிவிட்டு சரண்யாவை ஏறக்குறைய இழுத்துக்கொண்டு சர்ரென வீட்டுக்குள் போனாள். ஏய் வீட்டுக்கு தானே வர்ற என்ன இவ்வளவு வேகம் என கேட்ட மதனிடம் எதுவும் கூறாமல் பெட்ரூமில் போய் அப்படியே குப்புற கட்டிலில் விழுந்தாள். 

ஏய் என்னாச்சி கேட்கறன் எதுவும் சொல்லாம போற என நியூஸ் பேப்பரை மடித்து வைக்கும் போதே சரண்யா ஓடிவந்து தனது டாடியின் மடியில் அமர்ந்தவள் இரயில்வே ஸ்டேஷன்ல ஒருத்தரை அம்மா அடிச்சிட்டாங்க என்றதும். புருவத்தை சுருக்கியபடி ஏன் என கேட்க தெரியாது என உதட்டை பிதுக்கினாள். 

ப்ரியா, சரண்யா சொல்றது உண்மையா? என கேட்டபடியே மதன் பெட்ரூம்மைநோக்கி நடந்தான். அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு சரண்யாவும் கூடவே வந்தாள். கட்டிலில் குப்புற படுத்திருந்தவளின் முதுகை தடவியபடியே யார் அவன் எதுக்கு அவனை அடிச்ச என்னாச்சி என கேட்கும் போதே அவள் மூக்கை உரியும் சத்தத்திலேயே அவள் அழுகிறாள் என அறிந்த மதன் அதிர்ந்து போய் அவள் தோளை பிடித்து திருப்பினான் மதனை பார்த்தபடி ஒருத்தகளித்து படுத்தவள் அழுகையை மட்டும் நிறுத்தவில்லை. சத்தமில்லாமல் அழுதவளின் கண்ணீல் இருந்து வந்த கண்ணீர் கட்டிலில் வட்டம் போட்டுயிருந்தது. 

என்ன நடந்துச்சி என கேட்க முந்திக்கொண்ட சரண்யா, சிட்டி இரயில்வே ஸ்டேஷன்ல வந்து இறங்கி வந்துக்கிட்டுயிருந்தோம். அம்மா திடீர்ன்னு நின்னா அம்மாவை பாத்து ஒரு அங்கிள் ஸாரி சொன்னாங்க. உடனே அடிச்சிட்டாங்க அம்மா என்றாள் மழலை குரலில். 

இதை கேட்டு மேலும் அழுதவள், யார் என்ன நடந்துச்சி என கேட்டான் மதன். கண்ணை லேசாக துடைத்துக்கொண்ட ப்ரியா. ஊர்லயிருந்து வந்து ஸ்டேஷன்ல இறங்கனன். இவ என்னை தூக்கும்மா தூக்கும்மான்னு தொந்தரவு பண்ணா. ஐகல பேக் இருந்ததால இவளை ஒரு கைல புடிச்சிக்கிட்டு இன்னோரு கைல பேக் எடுத்துக்கிட்டு வந்துக்கிட்டுயிருந்தன். அப்பத்தான் என் தோளை யாரோ உரசிட்டு போறதபாத்து கேபமா திரும்பறப்பவே ஒருத்தன் என்னைப்பாத்து ஸாரி மேடம்ன்னான். 

அப்பத்தான் அவன் முகத்தை பார்த்ததும், அவனும் பாத்தான். அவன் தான் உரசிட்டு ஸாரி சொன்னான்னு தெரிஞ்சி கேபமாயிடுச்சி அதான் கேபத்த கட்டுப்படுத்த முடியாம எல்லார் முன்னாடியும் அடிச்சிட்டன் என்றாள். 

கூட்டத்தல உரசிக்கிட்டு போனான் அப்பறம் தான் ஸாரி கேட்டானே அப்பறம் எதுக்கு அடிச்ச என கேட்ட மதனை பார்த்து அவன் உரசனப்ப கோபம்மா தான் இருந்துச்சி. ஆனா அடுத்து செஞ்சது தான் கேபத்த வரச்சிடுச்சி என்றபோது என்ன பண்ணான் என கோபமாக கேட்டான். 

ஸாரி சொன்னான்.

ஏய் என்னை என்ன பைத்தியகாரன்னு நினைச்சியா என்றான் கேபமாக. 

சிறிய மவுனத்துக்கு பின் ராஜாவ பாத்தன் அவனை தான் அடிச்சிட்டன் என ப்ரியா கூறும்போதே உங்க விளையாட்டுக்கு நான் வரல என்ன விடுடீயெம்மா என கூறியபடியே தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டுவிட்டு பெட்ரூம்மை விட்டு ஹால்க்கு வந்தான். 

எதுவும்மே புரியாமல் விழித்தபடி ரூம்லயே நின்றுக்கொண்டிருந்தாள் சரண்யா. 

தொடரும்……


ஞாயிறு, டிசம்பர் 25, 2011

கதை – 1. ஸாரி மேடம்




பெங்களுர்ரூ சிட்டி இரயில் நிலையத்தில் சென்னை செல்லும் மைசூர் டூ சென்னை எக்ஸ்பிரஸை பிடிக்க நண்பர்களுடன் பிளாட்பாரத்தில் கூட்டத்தை விலக்கியபடி வேகவேகமாக சென்றுக்கொண்டிருந்தபோது தான் எதிரில் வந்த யாரோ ஒரு பெண்மணியின் இடது கை மீது எனது வலது கை பலமாக உரசியபடி சென்றதால் அவரிடம் திரும்பி மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற எண்ணத்தில் நின்று அப்பெண்ணின் முகம் பார்க்கும் முன் ஸாரி என்ற வார்த்தை போய் விழுந்தது. 

கையில் குழந்தையுடன் இருந்த அந்த பெண், நம் முகத்தை பார்த்த அந்த விநாடியும் ஸாரி என்ற வார்த்தை அவளின் காதில் விழ 3 விநாடி நேரத்தில் பளார் என கன்னத்தில் அறை விழுந்திருந்தது. பரபரப்பான இரயில் நிலையத்தில் இதை கண்டவர்கள் தங்கள் பணியை மறந்து எதுக்காக அடித்தார் என அதிர்ச்சியுடன் நின்று வேடிக்கை பார்த்தார்கள். 

ஊரில் டேய் என அழைத்தாலே சும்மாவே பந்தாவுக்காக சாமியாடும் என்னை ஒரு பெண் அடித்ததை பார்த்து அதிர்ந்து போன உடனிருந்த நண்பர்கள். ஏய் எதுக்கு அவனை அடிச்ச என எகிற அவள் சைலண்டாகவே முறைத்தபடி நின்றாள். 100 அடி தூரத்தில் லத்தியுடன் சுற்றிக்கொண்டிருந்த போலிஸ்காரர் இதைப்பார்த்துவிட்டு எங்களை நெருங்கி வர தொடங்கினார். 

அடிவாங்கிய நான் அவளிடம் சீறுவேன் என எதிர்பார்ர்த்த நண்பர்கள் சைலண்டாக இருப்பதை கண்டு அவளை திட்ட துவங்கினார்கள். அருகில் வந்த போலிஸ்காரர் என்னம்மாச்சி என கேட்க கேபாபமாக ஒன்னும்மில்ல சார் என சொல்லிவிட்டு என்னை கண்ணில் கோபத்தை வரவைத்து முறைத்துவிட்டு 5 வயது பெண் குழந்தையை கையில் பிடித்தபடி விறு விறுவென நடந்து போனாள். 

தப்பு பண்ணா இப்படித்தான், நல்ல பொண்ணாயிருக்கவே கேஸ் தரல பொழைச்சி போ என பேசிவிட்டு நம்மை விட்டு நகர்ந்தார் போலிஸ்காரர். ஏதோ வில்லங்கமா பண்ணியிருக்கான் அதான் அடிச்சியிருக்கு அந்த பொண்ணு, இப்படி அடிச்சா தான் இவனுங்களுக்கு எல்லாம் புத்தி வரும் என வேடிக்கை பார்த்தவர்கள் முனகியபடி அவசரமாக நகர்ந்தார்கள். 

எங்க்கிட்ட தான் வீரத்த காட்டற ஒரு பொண்ணு பொதுயிடத்தல உன்னை அடிச்சிட்டு போறா வேடிக்கை பார்க்கிறான் பாரு என நண்பர்கள் திட்டியபடியே இரயில் பெட்டியை தேடி ஏறினர். மனதில் ஒருவித விரக்தியோடு இயிலில் ஏறி அமர்ந்திருந்தேன். 

அடிச்ச அவ கைய உடைச்சியிருக்கனும், நம்ம வயசு தான் அவளுக்கு இரயில புடிக்கற அவசரத்தல கூட்டத்தல உரசிக்கிட்டு போறது சகஜம்ன்னு தெரிஞ்சிக்க முடியாதவளா என்ன அவ. பாத்தா படிச்சவ மாதிரியிருக்கறா அதனால தான் அடிக்கற அளவுக்கு திமீர் வந்திருக்கு என நண்பர்கள் விவாதமாக்கினர். அவாள் மீதான வார்த்தை தாக்குதல் அதிகமாக …………

மெல்லிய குரலில் அவுங்க உரசனதுக்கு அடிக்கல என்றதும் எல்லோரும் அதிர்ச்சியுடன் என் பக்கம் திரும்பினர். 

காதல் காற்றில் கரையட்டும்.




நானும் தான் காதலித்தேன். காதல் என்ன கத்தரிக்காயா கேட்டவுடன் கிடைத்துவிட. காலங்கள் தான் என் காதலை உன்னை ஏற்க வைத்தது. காதல் வந்தபின் மனதை மயக்கும் உன் பார்வையென்ன காது குளிரும் பேச்சென்ன. நாம் பேசிய காதல் வார்த்தைகளை அடுக்கியிருந்தால் வானத்தை தொட்டிருக்கும். 

எத்தனை எத்தனை நாட்கள் உன் கை கோர்த்து நடந்திருப்பேன். என் தோள் சாய்ந்து நீ உடன் வரும்போது வானம்மே என் காலடியின் கீழ் இருந்தது. என்னை காணும் போதெல்லாம் நீ ப+வாய் மலர்ந்திருப்பாய்.  உன்னை காணவரவில்லை என்றால் அந்த கோடைகால சூரியனுக்கே அக்னியை கடன் தருவாய். 

உன் பாதங்களில் நான் கோலமிட்டபோது என் முதுகில் வரிப்போட்டவள்; நீ. ஆனால் உன் இதழ்க்கு நான் ஒத்தடம் தந்தபோது காந்தமாய் ஒட்டினாய். 

பிரிவுக்கே பிரியாவிடை தருவோம் என்றாய். எத்தனை வேகமாய் என்னை விட்டு பிரிந்துவிட்டாய். காதல் நினைவுகளை காற்றில் கரைத்துவிடு காலமெல்லாம் அது தென்றலாக வீசட்டும். 

புதன், டிசம்பர் 21, 2011

பணமிருந்தால் எதையும் செய்யலாம்…………


இளம் சாமியார் நித்தியானந்தாவை தமிழகம் மறக்க முடியாது. நான் சன்னியாசி, முற்றும் துறந்தவன் என பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருந்தபோது 2 ஆண்டுக்கு முன் வெளியான வீடியோ அவனது உண்மை சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. பசி கொண்ட புலி புள்ளிமான் மேல் பாய்வதை போன்று பஞ்சுமெத்தையின் மீதிருந்த நடிகை ரஞ்சிதா மீத பாய்ந்தான் நித்தியானந்தா. ஆஹா இவனல்லவே முற்றிலும் துறந்த சன்னியாசி என எண்ண வைத்தது அந்த காட்சிகள்.

அவர் சாமி, எங்களை கடவுளாக்க வந்தவர் அவர் தவறு செய்திருக்கமாட்டார் என்றார்கள் அவரது பக்த சிஷ்யைகள்-சிஷ்யர்கள். முகத்தில் அடித்தார் போல் அந்த வீடியோ பதிவு உண்மை என்று கூறியது மத்தியரசின் தடவியல்துறை. அதுமட்டுமல்ல தவறு நடந்துள்ளது எனக்கூறி கர்நாடகா காவல்துறை அவனை கைது செய்து சிறையில் அடைத்தது.

சிறையை விட்டு ஜாமினில் வெளியே வந்தான் நித்தியானந்தா. எப்போதும் போல் ஆஸ்ரமத்தில் யாகம், பிரசங்கம் என ஆரம்பித்துள்ளான். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்க்கு தான் தான் காரணம், என் சக்தியே காரணம் என வீரபிரதாபம் பேசி வருகிறான். இன்று அவனது பேச்சு எல்லை மீறிப்போய்க்கொண்டுயிருக்கிறது.

பணம்மட்டுமிருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்க்கு இன்று அடையாளமாக திகழ்கிறான் நித்தியானந்தா. வீடியோ பதிவு வெளிவந்த பின் அவனது வருமானம், பக்தர்கள் கூட்டம் முற்றிலும் குறைந்துப்போய் தள்ளாடும் அவன். அவமானப்பட்டு, துகிலுறியப்பட்ட தன் உடம்பை பணம் கொண்டே மறைக்க பார்க்கிறான்.  பணத்தை வாரி இறைத்து தனது விழாக்களுக்கு அழைத்து வரப்பட்டவர்களை தனது பக்தர்கள் என அடையாளம் காட்டுகிறான்.

தமிழக எதிர்கட்சி அரசியல் தலைவருக்கு தருவதை விட அதிகமாக பாதுகாப்பு தந்து விழுந்து விழுந்து அவனை கவனிக்கிறார்கள் காவல்துறையினர். இந்து மதத்தின் காவலன் என தன்னை அழைத்துக்கொள்பவன், சமீபமாக தனது சாதியை சார்ந்தவர்களை அதிகம் நம்பி அவர்களை ஒரு அமைப்பாக திரட்ட முயல்கிறான். நான் தவறே செய்யவில்லை என வீரபிரதாபம் பேசுகிறான்.

பணத்தை கொண்டு சில மீடியா, அரசியல்வாதிகள், ஆளும் கட்சியினரை விலைக்கு வாங்கிய நித்தியானந்தம் நீதிமன்றத்தையும் வாங்க முடியுமா என பார்க்கிறான். அவன் பணத்தை கொண்டு எதையும் வாங்கலாம் மறைக்கலாம். மக்களின் மனதில் உள்ளதை மட்டும் எதைக்கொண்டும் மறைக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது.

திங்கள், டிசம்பர் 19, 2011

இரண்டாவது தேனிலவு முடிந்துள்ளது.




ஒரு குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவது சகஜம். சினிமா நடிகையாக இருந்து எம்.ஜி.ஆரின் படங்களில் நாயகியாக இருந்தவர் படிப்படியாக குடும்பத்தில் பின் வாசல் நாயகியாக வலம் வரத்தொடங்கினார். அப்போது அம்மு எ ஜெயலலிதாவுக்கு சினிமா கேசட் தரும் ஒரு பெண்ணாக 1983ல் சசிகலா அறிமுகமானார். ஆந்த பழக்கம் நட்பாக மாறியது. காலப்போக்கில் ஜெ இருக்கும் இடத்தில் சசிகலா இருப்பார். நிழல் போல் இருந்தார் சசிகலா. அவரில்லாமல் இவர் இருக்கமாட்டார். இவரில்லாமல் அம்மையாரும் இருக்கமாட்டார். 

முதல் முறையாக 1991ல் ஜெயலலிதா முதல்வாரன போது அவரது நட்பு மூலம் மன்னார்குடி வகையறா ஆடிய ஆட்டம். இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது. சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை தத்து பிள்ளையானார். கோலாகல திருமணம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வழக்கு, சிறை என ஜெ தள்ளாடியபோது, தோழிகளுக்குள் மோதல் அதாவது 1997ல் சசிகலா அன் கோ, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட எல்லா இடத்திலிருந்தும் முற்றிலும் நீக்கப்படுவதாக அறிவித்தார் ஜெ. 14 ஆண்டுகள் தேனிலவு இருவருக்குள்ளும் முடிந்தது. 


இனி இவர்களின் நட்பு அவ்வளவு தான் என பேசிவந்த நிலையில், சில வாரங்களில் சசிகலா போயஸ் தோட்டம் வந்தார். இருவரும் மீண்டும் ‘நட்பு’ பாராட்டினார்கள். 2001ல் ஆரியணை ஏறினார் அம்மையார். உயிர் தோழிகள் ஒன்றாகவே வலம் வந்தனர். சசிகலாவின் வீடு எதுவென்றால் அது போயஸ் கார்டன் முகவரி தான். இந்த முறை சுதாகரனை தவிர மற்ற அனைவரும் கார்டன் முதல் கோட்டை வரை அதிகார மையமாக வலம் வந்தனர். 

2006ல் மீண்டும் எதிர்கட்சி வரிசை. தோழிகளுக்குள் பிரிவே கிடையாது. ஒய்வு எடுக்க அம்மையார் குளிர் பிரதேசம் சென்றாலும் உடன் சசிகலா இருப்பார். 2011 ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெ முதல்வராக உள்ளார். ஆட்சியமைத்து 6 மாதங்களுக்கு பிறகு கடந்த சில தினங்களாகவே இருவருக்கும் சண்டை என தகவல்கள் பறந்தன. கணவன் - மனைவிக்குள் வரும் சண்டை வருவது போல் தான் இவர்களது சண்டை. காலை சண்டை வந்தால் மனதை மயக்கும் மாலை நேரத்தில் இவர்கள் சண்டை காணாமல் போய்யிருக்கும் என்பதால் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. சில தினங்களுக்கு முன் பெங்களுர் சிறப்பு நீதிமன்றம் போய்விட்டு வந்த சசிகலா போயஸ் கார்டன் வராமல் அரசு விடுதியில் தங்கிக்கொண்டார். அப்போதும் சாதாரணமாக பார்க்கப்பட்டது. 


கடைசியில் இதே இன்று (19.12.2011) மீண்டும் சசிகலா, நடராஜன், தினகரன், ராவணன், வெங்கடேஷ் உட்பட 14 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இரண்டாவது முறையாக நீக்கப்பட்டுள்ளனர். கட்சியினர் யாரும் அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என அறிக்கை விட்டுள்ளார் ஜெ. 

நீக்கத்துக்கு காரணம், பெங்களுரூவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெ நிச்சயம் தண்டனை பெருவார். சிறை செல்வார். அப்போது நம்மில் யார் முதல்வர் பதவி ஏற்பது என தங்களுக்கு வேண்டப்பட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் சசிகலா, நடராஜன் போன்றோர் என ஜெ ஆதரவு பத்திரிக்கைகள் தகவல் பரப்பி வருகின்றன. 

எப்போதுமே மேலிடத்து தகவல்கள் வெளியே வரும்போது 30 சதவிதம் உண்மையும், 70 சதவிதம் பொய்யும் கலந்திருக்கும். அது தான் இந்த விவகாரத்திலும். காரணம், என்னவோ இதற்க்கு முன்பு வரை ஜெ மட்டுமே கட்சியையும், ஆட்சியையும் நடத்தினார் என்பது போல் உள்ளது. அதிமுகவில் ஒ.செ பதவி முதல் மா.செ பதவி வரை தீர்மானிப்பது சகோதரி தான். அதேபோல், யாருக்கு சீட் தரலாம் என முடிவு செய்வது கார்டனில் பணியாற்றும் சசியின் உறவினர்கள் தான். 

எம்.எல்.ஏ சீட், மா.செ பதவி, அமைச்சர் பதவி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பது சசிகலா தான். பணம் கொடுக்கல், வாங்கல் உட்பட எல்லாவற்றையும் தீர்மானிப்பது இவர்கள் தான். அவர்கள் சொல்வதை தான் இதுவரை ஜெ செய்து வந்தார். அதோடு 83 முதல் இன்றைய தேதி வரை ஜெ வின் அத்தனை விவகாரங்களையும் கவனித்து வந்தது மன்னார்குடி வகையறாக்கள் தான். 


அதிகாரிகள்;, அமைச்சர்கள்;, கட்சிக்காரர்களை வழிநடத்தியது சசிகலா குரூப். ஜெ தன்னுடைய ரத்த உறவுகளை சந்திக்க வேண்டும் என்றாலும் சசிகலா ஒ.கே சொன்னால் தான் சந்திக்க முடியும். ஜெவும் சசி சொல்றத கேளுங்க என அதிகாரிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை உத்தரவிட்டுயிருந்தார். ஆட்சியை நடத்தியவர்களே மன்னார்குடி வகையறாக்கள் தான். அப்படியிருக்க நாற்காலிக்கு ஆசைப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர்களின் பலம் அவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். 

இந்த பிரிவுக்கு பின்னால் ஏதோ ஒரு விவகாரம் ஒளிந்திருக்கிறது. அது பெங்களுரூ சொத்து குவிப்பு வழக்கா அ ஜாத கோளாறா என்பது காலம் நிச்சயம் மக்களுக்கு பதில் சொல்லும். 

ஒரு முக்கிய விஷயம். ஜெ-சசி நண்பர்களாகி 14 ஆண்டுகள் பொருத்து ஜெ-சசி பிரிந்தனர். இது முதல் பிரிவு. பின் இருவரும் சேர்ந்தனர். இரண்டாவது முறை தற்போது பிரிந்துள்ளனர். இந்த இரண்டாவது பிரிவும் 14வது ஆண்டில் நடந்துள்ளது. அதோடு நீக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆஹா என்ன பொருத்தம். 

திங்கள், டிசம்பர் 12, 2011

தமிழனுக்காக வராத ரஜினி வாய்ஸ்.



நடிகர் ரஜினிகாந்த் 62வது பிறந்தநாளை கொண்டாடி முடித்துவிட்டார். நானும் அவரது பிறந்தநாளன்னு ஒரு எதிர்பார்ப்புடன் இருந்தேன். ரஜினி அவர்கள், முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளா காங்கிரஸ் அரசாங்கத்தை எதிர்த்து அறிக்கை விடுவார் என்று. ஆனால் ஒன்றையும் காணோம். (மதுரையில் அவரது ரசிகர் மன்றம் கண்டித்துள்ளது). சினிமா நடிகனிடம் அரசியல் எதிர்பார்க்ககூடாது என நடுநிலையாளர்கள் என்பவர்கள் கூறிக்கொள்ளலாம். 

கேரளாவில் சினிமா உலகம் உள்ளது. முல்லை பெரியார் பிரச்சனை ஆரம்பமானதும் மெழுகு வர்த்தி ஏந்தி தங்களது கண்டனத்தை ஒட்டு மொத்த சினிமா உலகமே திரண்டு வந்து காட்டியுள்ளது. தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் தந்து அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் தமிழர்களில் ஒருவனான நான் தமிழனுக்கு ஆதரவு வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமே. 

தமிழகத்தில் வாழ வந்த கன்னடர் ரஜினி. ரஜினியின் வாலிப வயதில் கன்னட அமைப்பு ஒன்றுடன் சேர்ந்து தமிழகத்திற்க்கு எதிராக போராட்டம் நடத்தியவர் என்ற விவகாரம் வந்த போது தமிழகத்தில் ரஜினி பெரிய நடிகர். முக்கள் அவரை புறக்கணிக்கவில்லை. அவரை தமிழராகவே ஏற்றுக்கொண்டாடி வருகின்றனர். 

இன்று தமிழகமே கொதித்துக்கொண்டுள்ளது. தென்தமிழகத்தின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் கேரளா ‘கை’ வைக்கிறது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது. இதையொல்லாம் அறிந்தும் மவுனசாமியராக உள்ளார் ரஜினி. தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியபோது ஏற்றுக்கொண்ட ரஜினியால் கேரளா அரசியல்வாதிகளை கண்டித்து ஒரு சின்ன அறிக்கை கூட தரமுடியவில்லையே ஏன்?. 

இது ரஜினிக்கு மட்டுமான கேள்வியல்ல. தமிழ் சினிமாத்துறையை பார்த்து கேட்கப்படும் கேள்வி கேட்கறோம். தமிழ் திரையுலகில் தமிழனை மட்டுமல்ல கன்னடர், தெலுங்கர், மலையாளி, பெங்காலி, இந்திக்காரர் என யார் வந்தாலும் அந்த மாநிலத்துடன் எந்த பிரச்சனை இருந்தாலும் பரவாயில்லை இவர்கள் நம்மை நம்பி வந்தவர்கள் என கை தட்டி வரவேற்று கொண்டாடுகிறோம். அப்படி வரவேற்று உங்களை உச்சாணி கொம்பில் உட்கார வைக்கும் எங்க மண்ணுக்கு, எங்கள் மக்களுக்கு என்ன செய்துள்ளீர்கள். சம்பாதிப்பதை கூட கொண்டும் போய் உங்கள் மாநிலத்தில் தான் சொத்து சேர்த்து வைத்துள்ளீர்கள்.  அதைப்பற்றி நாங்கள் இதுவரை கேட்டோமா?.

இன்று எங்களுக்கு ஒரு பிரச்சனை உங்களிடம்மிருந்து ஒரு தார்மீக ஆதரவை எதிர்பார்க்கிறோம். அதைக்கூட செய்ய மனம்மில்லாத நீங்கள் நன்றி கெட்டவர்கள் தானே. கோடி கோடியாய் சம்பாதிக்க தமிழன் வேண்டும், தன் படம் வேறு மாநிலத்தில் கல்லா கட்ட அவர்களின் ஆதரவு வேண்டும் என உங்களை வாழ வைக்கும் தமிழனின் முதுகில் குத்துகிறீர்களே இது நியாயமா?, நீங்கள் செய்வது துரோகமில்லையா?. 


அவர்களை விடுங்கள் நான் தமிழன் என பீற்றிக்கெண்டு நாளைய முதல்வன் நானே என சினிமாவில் வசனம் பேசும், சரத்குமார், விஜய் உட்பட எந்த தமிழகத்தை சேர்ந்த நடிகரிடம்மிருந்தும் தமிழனுக்கு ஆதரவு வரவில்லை என்பது அதைவிட கேவலமாகயிருக்கிறது. 

இந்த நடிகர்கள் அனைவருமே பணப்பொறுக்கிகள் என்பதை இன்று வரை நிருபித்துள்ளார்கள். என்று தமிழன் நடிகனின் பின்னாலும், நடிகையின் பின்னாலும் ஒடுவதை நிறுத்துகிறானோ அன்று தான் தமிழகம் உருப்படும். 

அடிக்கு அடி.


கர்நாடகா அரசியல்வாதிகள் காவேரியையும், ஆந்திரா அரசியல்வாதிகள் பாலாறையம் வைத்து அரசியல் செய்து வந்த நிலையில் நான் மட்டும் சும்மாயிருப்பேனா என களத்தில் இறங்கியுள்ளார்கள் கேரளா அரசியல்வாதிகள். முல்லை பெரியார் அணை என்பது தமிழக எல்லையில் கட்டப்பட்டது. நீர் உருவாகும் இடமும் தமிழகத்தில் தான் உள்ளது. நீர் தேக்கி வைக்கப்படும் பகுதி மட்டுமே கேரள பகுதியில் உள்ளது. அதேபோல் பெரியார் அணை கட்டப்பட்டதும் தமிழக விவசாயிகளுக்காக தான். இந்தியாவை ஆண்ட பிரிட்டீஸ் அரசாங்கத்தின்  பொறியாளரான பென்னிகுக் என்பவர் அரசு பணத்தோடு தனது சொத்தை விற்று அந்த பணத்தை கொண்டு அந்த அணையை கட்டி தந்தார்.

நூற்நாண்டை கடந்த இந்த அணை தான் விரிசல் விழுந்துவிட்டது, உடையபோகிறது, மக்கள் இறக்கபோகிறார்கள் என்ற வதந்தியை 1980க்கு பின் கிளப்பிவிட தொடங்கியது கேரள அரசாங்கம். உச்சநீதிமன்றம் வரை சென்றது தமிழகம். அணை பாதுகாப்பாக உள்ளது. 152 அடி வரை நீர் தேக்கிக்கொள்ளலாம் என அறிவித்தது உச்சநீதிமன்றம். அதை எதையும் கேரளா அரசாங்கம் மதிக்கவில்லை. கேரளா அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஆபத்து ஆபத்து என குதித்து வருகின்றன.

கேரளா எல்லையில் உள்ள தமிழர்களை, தமிழர்களின் கடைகளை அடித்து உடைத்து தீ வைத்தனர். பெண்களிடம் வக்கிரமாக நடந்துகொள்ள முயல பாதிக்கப்பட்டவர்கள் கேரளா காவல்துறையிடம் புகார் தந்தபோது வாங்க மறுத்துள்ளனர்;. இதற்க்கு முன்பு வரை கர்நாடகாகாரனும், ஆந்திராக்காரனும் குட்ட குட்ட குனிந்து கொண்டுயிருந்த தமிழகம் இன்று கேரளாவின் அத்துமீறலால் கொதிக்க தொடங்கிவிட்டது. காரணம், பெரியாறு அணை நீர் தென்மாவட்டங்களுக்கு உயிர். கேரளாவுக்கு அது மின்சாரம் தயாரிக்க மட்டுமே பயன்படப்போகிறது. ஆனால் தமிழகத்தை அழிக்க துணிபவர்களை கண்டு கொதித்து போன தமிழன் நீ அடித்தால் நானும் அடிப்பேன் என புறப்பட்டுவிட்டான். தமிழகத்தில் பல மலையாள கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. கேரளாவுக்கு அனுப்பவேண்டிய அத்தியாவாசிய பொருட்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. உடனே தமிழக அரசு வன்முறை, இந்திய இறையான்மைக்கு ஆபத்து எனச்சொல்லி கைது செய்கிறது.

அவன் அங்கு செய்தால் தியாகம், போராட்டம் நாம் இங்கு செய்தால் வன்முறையாம். என் இன பெண்களை கற்பழிக்க முயலுவான், அடிப்பான், தீ வைப்பான் அதை நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டும். அந்த மாநிலத்தான் இங்கு சொகுசாக வாழ்வான். இது எந்தவூர் நியாயம். அவனுக்கு அவன் மொழியிலேயே பதில் தந்தால் தான் புரிந்துகொள்வான். இதை ஆரம்பித்து வைத்தவர்கள் அவர்கள். அவர்களுக்கு பதில் தருவோம். அவர்களுக்கு மட்டுமல்ல இனி கர்நாடகாகாரனும், ஆந்திராக்காரன் எடுக்கும் அதே ஆயுதத்தை நாமும் எடுப்போம். அப்போது தெரியும் உண்மை நிலை என்னவென்று.


அடிக்கு அடி பிரச்சனையை தீர்க்காது என்பது தெரியும். பேசினால் கேட்டுக்கொள்பவனாக இருந்தால் பேசலாம். கேட்கவே மாட்டேன் என்பவர்களிடம் எதற்காக பேச வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்களோ அதையே நாமும் திருப்பி செய்வோம். அவர்கள் அடித்துக்கொண்டு செத்து மடியட்டும் என காத்திருக்கும் மத்தியரசு நம்மை ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால் அவர்கள் தற்போதைய நிலையை விட அதிகமாக நம்மை புறக்கணிக்கட்டும் நாம் தனித்து செயல்படுவோம், தனிநாடாக உருவெடுப்போம்.

வெள்ளி, டிசம்பர் 02, 2011

காம தேடலில் கண்ணாமூச்சி.


வித்தியாசத்துக்கு பேர்போனவர்கள் மேற்கத்திய நாட்டினர். தொட்டதுக்கெல்லாம் வழக்கு போடுபவர்கள் ஆனால் தொடாததை குத்தம் சொல்லி ஒரு பெண்மணி வழக்கு போட்டுள்ளார். பிரான்ஸ் நைஸ் நகரை சேர்ந்தவர்கள் அத்தம்பதியினர். 1986ல் கல்யாணமாகி 2 குழந்தைகள் பெற்றவர்கள். 2009ஆம் ஆண்டு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து வாங்கிவிட்டார். விவகாரத்து ஆன சிலமாதங்கள் பொருத்து, என் கணவருடன் நான் சேர்ந்து வாழும் போது என் மனநிலையை புரிந்து என்னுடன் அவர் சந்தோஷமாகயில்லை, செக்ஸ் வைத்துக்கொள்ளவில்லை. அதனால் மனஅழுத்தம் ஏற்பட்டுவிட்டது என வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு நடந்தது, பணிச்சூழல், டென்ஷன் போன்றவற்றால் அவருடன் சரியாக தொடர்ந்து செக்ஸ் வைத்துக்கொள்ள முடியவில்லை என்றார் கணவர். இதனை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. கல்யாணத்திற்க்கு பின், தம்பதிகள் மனம் ஒத்துவாழ வேண்டும். கணவன் மனைவி இருவரும் தங்களது உடல் தேவைகளை புரிந்து மற்றவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் தாம்பத்திய உறவு கொள்ளவேண்டியது கடமை என தீர்ப்பளித்ததோடு மனைவியின் தேவையை பூர்த்தி செய்யாத அந்த முன்னால் கணவருக்கு 7 லட்சம் அபராதம் விதித்துள்ளது கோர்ட்.

அதேபோல் இன்னோரு மேற்கத்திய நாடான ஆஸ்த்திரியாவின் வியன்னா நகரில் செக்ஸ்சை கற்று தர உலகின் முதல் கல்வி கூடத்தை யுவாமரியா தாம்சன் என்ற பெண்மணி திறந்துள்ளார். இருபாலருக்குமான இந்த கல்விக்கூடத்தில் பாலியல் பாடத்தில் வெற்றி பெறுவது எப்படி என்பதை கற்று தரப்போகிறார்களாம். இங்கு பாடபுத்தகம் மட்டுமல்லாமல், பிராக்டிக்கல் பாடமும் உண்டு. இங்கு சேர 16வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். வீட்டு பாடமும் உண்டு. ஆனால் வீட்டுக்கு செல்ல முடியாது. இரவிலும் விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என்பதே முக்கியவிதி. பாடத்துக்கு பீஸ் 1.5 லட்சம் தான். எக்ஸாமில் பாலியல் கல்வியை பற்றி சிறப்பாக தேர்வு செய்தால் திறமையானவர் என்ற சான்றிதழ் உண்டு. பள்ளியை தொடங்கிய பெண்மணி, பள்ளியில் சேருபவர்களை பாலியலில் சிறந்த மனிதராக உருவாக்க வேண்டுமே என்பதே தலயாய லட்சியம் என்றுள்ளார். 

முதலில் குறிப்பிட்ட வழக்கை போல ஒரு வழக்கு இந்தியாவில் தொடுத்தால் ஏற்றுக்கொள்வார்களா?, இந்தியாவில் கலவி கல்விக்கூடம் யாராவது தொடங்கினால் என்ன நடக்கும் என யோசித்தபோது மலைப்பாக இருந்தது.

கலவி என்பது இந்தியாவில் தீண்டதகாத வார்த்தையாகி பேசுவதும், எழுதுவதும் மாபெரும் குற்றம். அதிலும் செக்ஸ் பற்றி ஒருபெண் எழுதிவிட்டால் உலகமே அழிந்துவிடும் என்பதை போல் விமர்ச்சிக்கப்படுகிறது. இதனை நேர்மையுடன் நோக்கினால், ஒவ்வொரு மனிதனின் உடலிலும், மனதிலும் காமம் உண்டு. அது இல்லாதவர்கள் ஜடம். காமத்தை இருபாலருமே வயது வித்தியாசமின்றி சிலர், நண்பர்கள் மத்தியில் வெளிப்படையாக பேசுவார்கள். பலர் யாரிடமும் அதைப்பற்றி பேசுவதில்லை. காரணம் மற்றவர்கள் எங்கே தன்னை தப்பாக புரிந்துக்கொள்வார்களோ என்ற பயம்.

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் கள்ளக்காதல் அதிகமானதற்க்கு காரணம், தம்பதிகள் தங்களது காம ஆசையை தங்களுக்குள் பகிர்ந்துக்கொள்வதில்லை. பெரும்பாலான ஆண்கள். துணையின் தேவையை புரிந்துக்கொள்வதில்லை. இயற்கையாகவே ஆண்களை விட பெண்களுக்கு காம உணர்ச்சி அதிகம். அவர்களை திருப்தி செய்ய உறவின்போது கால தாமதமாகும். இதை ஆணாதிக்க மனம் கொண்ட ஆண்கள் புரிந்துக்கொள்வதில்லை. இதனால் 90 சதவித ஆண்கள் தன் ‘தேவை’ நிறைவேறியதும் குறட்டை விட தொடங்கிவிடுகிறான். இது பெண்களை மனரீதியாகவும். உடல் ரீதியாகவும் வேதனை அடைய செய்கின்றன.

அதேபோல் இன்றைய நவீன யுகத்தில் பெண்களும், அடிக்கடி உறவு கொண்டால் உடல் பருத்துவிடும், அழகு கெட்டு விடும், மந்தாரங்கள் பொலிவிழந்துவிடும் என ஆசையுடன் கணவன் நெருங்கிவரும் போது தவிர்த்து விடுகின்றனர். ஆண்களின் காம தேவைகளை பெண்களும் சில நேரங்களில் புரிந்துக்கொள்வதில்லை.

இப்படி சிலர் இருந்தாலும் முன்பே குறிப்பிட்டதை போல, பெரும்பாலான தம்பதிகள் தங்களுக்குள் பஞ்சனை தேவைகள் பற்றி விவாதிப்பதேயில்லை. இதனால் இருவருக்கும், காமத்தில் முழு சுகமும் கிடைக்காமல் விரக்தியில், தன் தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள துணையை தவிர்த்து ரகசிய இணையை தேடுகிறார்கள். மற்றான் தோட்டத்து மல்லிகை மேல் ஆசை பொங்குகிறது. துணையுடன் நிறைவேறாத உள்மன ஆசைகள் மாற்றான் தோட்டத்தில் அடையும்போது விதவிதமாக அனுபவிக்கிறார்கள். தம்பதிகளுக்குள் நெருக்கம் குறைய மற்றொரு காரணம், பணத்தை நோக்கி மனிதன் வேகவேகமாக ஓட தொடங்கியபின் காமம் என்பது 5 நிமிட விவகாரம் என நினைக்க தொடங்கிவிட்டான். இது தற்போது அதிகமாக தொடங்கியுள்ளது. அதைத்தான் அந்த பிரான்ஸ் பெண்மணியின் வழக்கு காட்டுகிறது. இந்தியாவிலும் அதிகமாகத்தான் உள்ளது. வெளியே வருவதில்லை.

காமம் என்பது, தடவுதல், முத்தமிடுதல், உணர்ச்சிகளை தூண்டுதல், உறவுக்கொள்ளுதல், தழுவுதல் என்ற பரிமாணங்களை கொண்டது. அதை படிப்படியாக செய்து உச்சத்தை தம்பதிகள் அடைய வேண்டும் என்பது காம சாஸ்த்திரத்தின் கோட்பாடு. உலகத்துக்கு காம சாஸ்த்திரம் என்ற நூலை தந்த இந்தியாவில் தான் காமம் என்பது தீண்டதகாத வார்த்தையாகியுள்ளது.

அய்யா பிரதமர் மன்மோகன்சிங் அவர்களே, வெளிநாட்டு சில்லரை வியாபார நிறுவனங்கள், நிதிநிறுவனங்கள், வங்கிகள், பல்கலைகழகங்களை மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறீர்கள். அந்த ஆஸ்த்திரேலியா பெண்மணியிடம் பேசி, அந்த கலவி கல்விச்சாலையின் ஒரு கிளையை இந்தியாவில் தொடங்கச்சொல்லுங்கள்……………

புதன், நவம்பர் 30, 2011

செய்தியாளரை மிரட்டி ரவுடிஸம் செய்த பெண் மேயர்.



அட அந்தம்மாவுக்கு தப்பாமல் இருக்கிறார் இந்த மகளிரணி பிரமுகர். உள்ளாட்சி தேர்தலின் போது மேயர் வேட்பாளர்களை ஜெ அறிவித்த பட்டியலில் ஈரோடு மேயர் வேட்பாளர் மல்லிகா என இருந்ததை கண்டு ரரக்களே அதிர்ச்சியாகினர். காரணம், அவர் 1999ல் விபச்சார வழக்கில் காவல்துறையிடம் சிக்கி வழக்கை எதிர்கொண்டவர் என ஆதாரத்தோடு அவரது கட்சியினரே போஸ்டர் அடித்து ஒட்டினர். இது செய்தியாக அப்போதே சர்ச்சையானது. ஈரோடு மா.செம் அமைச்சராக இருந்த ராஜாவின் அராஜகத்தை விட இது பரவாயில்லை என விபாச்சார வழக்கில் சிக்கிய மல்லிகாவை மேயராக்கினார்கள் ஈரோடுவாசிகள். 

இப்போது அதே ஈரோடுவாசிகள் ராஜா பரவாயில்லை என பேச வைத்துவிடுவார் போல் உள்ளது. ஈரோடு மாநகர மேயர் மல்லிகாபரமசிவம். துணை மேயர் பழனிச்சாமி. இருவரும் அதிமுகவினர். இவர்களுக்குள் மாநகராட்சியில் அடிக்கடி தகராறு ஏற்படுவதை சம்பவத்தோடு காலைக்கதீர் நாளிதழ் தொடர்ந்து செய்தியாக வெளியிட்டு வந்துள்ளது. 

இதனால் கோபமான மேயர் மல்லிகா தன் பரிவாரங்களோடு 30ந்தேதி மதியம் ஈரோட்டில் உள்ள காலைக்கதிர் அலுவலகத்திற்க்கு சென்றவர். அலுவலகத்தில் புகுந்து யார்ரா அவன் என்னைப்பத்தி தொடர்ந்து செய்தி எழுதறது என தகராறு செய்ததோடு, என்னடா ஆபிஸ் நடத்தறிங்க, பெரிய இவனுங்களாடா நீங்க என எகிறியதோடு அங்கிருந்த டெலிபோன், கம்யூட்டரை கீழே தள்ளிவிட்டு இனிமே என்னைபத்தி எழுதன உங்களை ஒழிச்சிடுவன் என மிரட்டிவிட்டு நகர, உடன் வந்திருந்த மகளிரணிகள் அசிங்க அர்ச்சனை வேறு நடத்தியுள்ளனர்.  

இந்த மிரட்டலை உடனே ஈரோடு பத்திரிக்கையாளர்கள் கவனத்துக்கு செல்ல அவர்கள் எஸ்.பி பன்னீர்செல்வத்தை சந்தித்து புகார் வாசித்துள்ளனர். அவர் விசாரிக்கறன் போய்ட்டு வாங்க என்றுள்ளார். ஒரு அதிகாரி வந்து விசாரித்துவிட்டும் சென்றுள்ளார். 


இதற்க்கு மேல் காவல்துறையால் என்ன செய்ய முடியும். கை கட்டி வேடிக்கை பார்க்கலாம் இல்லையேல் மேயர் அல்லது உடன் போன மகளிரணி பிரமுகர்களிடம் செய்தி ஒன்றை தர அலுவலகம் சென்றோம். அங்கே அவர்கள் எங்கள் கையை பிடித்து இழுத்து ‘அதுக்கு’ கூப்பிட்டான் என புகார் வாங்கி காலைக்கதிர் ஊழியர்கள் மீது வழக்கு போடுவார்கள். ஏன் என்றால் மிரட்டியது ஆளும்கட்சி. அதுவும் ஜெவின் மகளிரணி, மேயர். அவர் மீது புகார் தந்தால் நடவடிக்கை எடுக்குமா அடிமை சேவகம் செய்யும் காவல்துறை.

இதே காரியத்தை கலைஞர் ஆட்சி காலத்தில் ஏதோ ஒரு முக்கிய பிரமுகர் செய்திருந்தால், ஜெ குதித்திருப்பார். அவரின் ஆதரவாளர்கள் வானத்துக்கும் பூமிக்கும் நடுநிலை என்ற பிம்பத்தை பூசிக்கிட்டு வாய்கிழிய கத்தியிருப்பார்கள். அறிக்கைகள் பறந்திருக்கும். இது ஜெ ஆட்சி காலம் என்பதால் அடக்கமோ அடக்கம். 

மேயர் மல்லிகாவுக்கு பத்திரிக்கை அலுவலகம் சென்று மிரட்டும் அளவுக்கு தெரியம் வரக்காரணம். அவருக்கு அமைச்சர் இராமலிங்கத்தின் அதீத ஆதரவு இருப்பது மட்டுமல்ல. கடந்த காலத்தில், ஆதாரங்களோடு எழுதியதற்க்கே அதிகார போதையில் பத்திரிக்கை ஆசிரியரை பொடா வில் உள்ளே தள்ளியவர் முதல்வர் நாற்காலியில் வீற்றிருக்கும் ஜெ. பத்திரிக்கை அலுவலககத்துக்குள் புகுந்து ஏவலர்களை விட்டு பத்திரிக்கையாளர்களை தாக்க உத்தரவிட்ட ஜெ வின் மகளிரணி பிரமுகர் எப்படியிருப்பார். அவரைப்போலத்தானே. 

ஒருவரைப்பற்றி தவறாக செய்தி வருகிறது என்றால், தவறான செய்தி என கூறி மன்னிப்பு கேட்க சொல்லியிருக்கலாம் அ மறுப்பு போட சொல்லியிருக்கலாம் அ வழக்கு தொடர்ந்துயிருக்கலாம் அ இந்திய பிரஸ் கவுன்சிலில் முறையிட்டுயிருக்கலாம். இவ்வளவு வழிகள் இருக்க ரவுடிப்போல அலுவலகத்துக்குள் புகுந்து மிரட்டுவது என்பது அதிகார போதை. ஒரு பத்திரிக்கை அலுவலகத்துக்குள் புகுந்து செய்தியாளர்களை மிரட்ட ஆண் அரசியல்வாதிகள் கூட தயங்குவார்கள். ஆனால் அதை இந்த பெண் மேயர் தைரியமாக செய்துள்ளார். இதற்காக வேண்டுமானால் பாராட்டலாம். 

செவ்வாய், நவம்பர் 29, 2011

திருந்தாத ‘காவல்’ நாய்கள்.




தமிழக காவல்துறைக்கு பலப்பல சலுகைகள் ஆட்சியமைத்த 6 மாதத்திலேயே முதல்வர் ஜெயலலிதா வாரி வழங்கியுள்ளார். ஆனால் எவ்வளவு சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் மாறமாட்டோம் என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கிறார்கள் காவல்துறையில் உள்ள சில ஓநாய்கள். 

அத்தியூர் விஜயா மானபங்கம், ரீட்டாமேரி கற்பழிப்பு, சிவகாசி ஜெயலட்சுமியிடம் விழுந்த காவல் அதிகாரிகள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் போலிஸாரின் முகத்திரை கிழிக்கப்படுகிறது. தற்போது, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த மண்டபம் கிராமத்தை சேர்ந்த இருளர் சமூகத்தை சேர்ந்த 4 இளம் பெண்கள் திருக்கோவிலூர் போலிஸார் மீது கற்பழிப்பு புகார் ஒன்றினை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் தந்து நீதி கேட்டுள்ளார்கள். 

பிரச்சனை பெருசாகி தலைவர்கள் அறிக்கைகள் விட்டதும், புகார் பதிவானது. தாங்கள் கற்பழிக்கப்பட்டது பற்றியும், அது யார் யார் என அப்பெண்கள் நீதிபதியிடம் வாக்குமூலமாக தந்துள்ளார்கள். உடனே காவல்துறை தலைமை, அந்த காவல்நிலைய ஆய்வாளர் உட்பட 5 காவலர்களை இடைக்கால பணி நீக்கம் செய்துள்ளது. 

அடுத்து…………..?

விசாரணை நடக்கும். நியாயமாக நடக்கும்மா என்பது பெரிய கேள்விக்குறி. காரணம், அரசு துறை ஊழியர்களிடத்தில் ஒரு நோய் உள்ளது. அதாவது நீதித்துறை-காவல்துறை-மருத்துவதுறை-வருவாய்துறை இடையே ஒரு இழை போன்ற நட்புயிருக்கும். இவர்களின் நேசம் கரைபுரண்டோடும். 

காவல்துறையை சார்ந்தவர்க்கு ஒரு பிரச்சனை என்றால் வருவாய்துறையும், மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்க்கு ஒரு சிக்கல் என்றால் காவல்துறையும் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக உதவுவார்கள். அரசு ஊழியர்கள் தங்களுக்குள் விட்டு தரமாட்டார்கள். நீதி வளையும். உண்மை மறைக்கப்படும். இதற்க்கு எத்தனையோ சம்பவங்கள் இங்கு உண்டு. இதை ர்Pட்டாமேரி, விஜயா வழக்கிலேயே காண முடிந்தது. அதையும் மீறித்தான் மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டத்தால் நீதி வென்றது. இருள சமுகத்தை சேர்ந்த பெண்களின் விவகாரத்திலும் வழக்கு, வாய்தா என போனாலும் இதை ஒன்னும்மில்லாமல் ஆக்கத்தான் அரசுதுறை முயலும். 

காவல்துறையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் அந்த காக்கி உடையை மாட்டும் போதே, மனசாட்சியை கழட்டி வீட்டு ஆணியில் தொங்கவிட்டுவிட்டு அதிகார போதை தலைக்கு ஏறிய பின்தான் பணிக்கு வருகிறார்கள். மேலதிகாரி மீதான வெறுப்பை, பணிச்சுமையை திருட்டு வழக்கில் மாட்டும் திருடர்களிடம் காட்டி கோபத்தை தீர்த்துக்கொள்கிறார்கள். இரவில் மனைவியுடன் படுக்கமுடியவில்லை என்பதற்க்காக இப்படி அப்பாவி பெண்களை வேட்டையாடுவது எந்த விதத்தில் நியாயம். 

செக்ஸ் என்பது ஒரு உன்னதமானது. மனிதனுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும், பறக்கும் பறவைகளுக்கும் அந்த மோகம் உண்டு. ஆனால் அது இருமனம் ஒத்து செய்யவேண்டியது. ஊடலின் போது இருவரில் ஒருவருக்கு விருப்பமில்லையென்றாலும் அந்த மோகம் வீணானது. காமத்தை அனுபவிக்கும் போது மனதில் ஒரு புத்துணர்ச்சியிருக்க வேண்டும். வெறி இருக்ககூடாது. காவல்துறையில் இருக்கும் சில கறுப்பாடுகளுக்கு இருப்பது மோகம்மல்ல. வெறி. 

இந்த வெறிநாய்களை விசாரணை என்ற பெயரில் உல்லாசமாக இருப்பதை அனுமதிப்பதை விட மோகம் வந்தால் அனுபவிக்க முடியாத வகையில் ‘அதை’ கட் செய்து விட வேண்டும். அப்போது தான் இதுபோன்ற வெறிநாய்கள் திருந்துவார்கள்.  

திங்கள், நவம்பர் 28, 2011

சினிமாக்காரர்களுக்கு நாவடக்கம் தேவை.




நடிகர் சிவக்குமார், புது இலக்கிய மேடை பேச்சாளர். கம்பன் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும், இலக்கிய நூல்களை பற்றியும் மேடைகளில் அடுக்கு மொழில் பேசும் இந்த நடிகர் தமிழ் பெண்களை மேடைகளில் கிண்டலடித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது தமிழகத்தில் தியாகராஜபாகதவர் என்ற சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்து கொண்ட நடிகர் இருந்தார். அவரின் நடிப்பும், அவரின் குரல் வளம், உடல் பலத்தை பார்த்த கேட்ட தமிழ் பெண்கள் தங்களது கணவன்மார்களிடம் உனக்கு பிள்ளைகளை பெற்றேன், ஆனால் இவர் போன்ற ஒரு ஆளிடம் சென்று பிள்ளைகள் பெற வேண்டும் எனச்சொல்லி அவருடன் படுக்க அனுமதி கேட்டார்களாம்.

அதேபோல், காதல் திருமணம் செய்துக்கொண்டு ஐதராபாத்தில் வாழும் ஒரு தம்பதி, அப்பெண் சுகத்துக்காக தனது கணவனின் நண்பரிடம் சுகம் கண்டால், கணவன் தன் மனைவியின் தோழியுடன் அதாவது தனது நண்பனின் மனைவியுடன் சுகம் கண்டான். இது இருவரும் தெரிந்தும் கண்டுக்கொள்ளமால் தங்களது போக்கில் வாழ்கிறார்கள் இதுதான் இன்றைய காதல் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளாராம்.

ரிட்டையர்டு நடிகரான சிவக்குமார், தனது மூத்த மகன் சூர்யாவுக்கு காதல் திருமணம் செய்து வைத்துள்ளார். அப்போ, அவரின் மகனும் மருமகளும் ஐதராபாத்தில் உள்ள ஜோடிகளைப்போல் தான் நடந்துக்கொள்கிறார்களா?,


அவரது இளைய மகன் நடிகர் கார்த்தியை விட அவரது பெரிய மகன் சிறப்பாக நடிக்கிறார் என்ற பேச்சு உள்ளது. அப்போ கார்த்தியின் மனைவி அவருக்கு பிள்ளை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறா?. என சிவக்குமாரிடம் கேள்வி கேட்கவேண்டும் என்ற எண்ணம் வருகிறது. ஆனால் கேட்க மனம் வரவில்லை. இவர் பேசியதற்க்கு அவர்கள் என்ன செய்வார்கள்.

சிவக்குமார் போன்ற சினிமாக்காரர்களுக்கு முதலில் நாவடக்கம் தேவை. சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் பெண்கள் கற்புடையவர்களாக இருப்பார்கள் என திருமணம் செய்துக்கொள்ளும் ஆண்கள் எதிர்பார்க்ககூடாது. அதாவது தமிழ் பெண்கள் கற்புடன் இல்லையென்றார். மலையாளத்தில் நடிகராக உள்ள ஜெயராமன், என் வீட்டில் வேலை செய்த தமிழ் பெண்மணி கறுத்த எறுமை போல் இருந்தார் என்றார். மைக் கிடைக்கிறது, பேட்டி கேட்கிறார்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் சொல்ல துணிகிறது இவர்களின் நாக்கு.

நீங்கள் நடிகர்கள், பணத்துக்காக பல வித வேடங்களில் வந்து திரையை ஆக்ரமிக்கும் நீங்கள் தமிழ் பெண்களைப்பற்றியும், தமிழ் கலாச்சாரத்தை பற்றியும் கருத்து தெரிவிக்கிறீர்கள். உங்களுக்கு என்ன தகுதியிருக்கிறது எம்மக்களை விமர்சனம் செய்ய. சினிமாக்காரர்கள் உலகம் எப்படிப்பட்டது என்பது உலகறியும். பெண்களை போகப்பொருளாக, உங்களின் காம வெறியை தீர்த்துக்கொள்ளும் இடமாகவும், உடலை பணத்துக்காக விற்க்கும் சினிமா விபச்சாரிகளாகவும் தான் இருக்கிறிர்கள். நீங்கள் எம்மக்களை விமர்சனம் செய்கிறிர்கள்.


தியாகராஜபாகவதர் இறந்தபோது, இதே சிவக்குமார் சினிமாவில் தான் இருந்தார். அந்த ஸ்டார் இறந்தபோது இவர் எங்கு போனார்?. அவர் இறப்புக்கு சினிமாக்காரர்கள் ஒரு கை விரல் அளவுக்கு தான் வந்திருந்தார்கள். அவர் கடைசி காலத்தில் அநாதையாக சாலையில் திரிந்து இறந்தார். இன்று அவரைப்பற்றி பேசும் நீங்கள் அவரது பிறந்த நாளோ, இறந்தநாளோ உங்களுக்கு தெரியுமா?. அவர் வந்து உங்களிடம் சொன்னாரா என்னிடம் வந்து பெண்கள் இப்படி கேட்டார்கள் என்று.

யாராவது ஏதாவது சொன்னால் உடனே வந்து மேடையில் ‘வாந்தி’ எடுப்பது என்பது முட்டாள்தனம். ஒருவர் ஒரு விவகாரத்தை கூறுகிறார்கள் என்றால் அது உண்மையா, பொய்யா என்பதை அறிந்தே பேச வேண்டும் என்பதை சிவக்குமார் இனிமேலாவது கற்றுக்கொண்டால் சரி.


தமிழர்களை கேவலப்படுத்திய சீமான்.


நவம்பர் 27 மாவீரர்கள் நாள் என்பது உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களின் விசேஷ நாள். 2009ம் ஆண்டு வரை உலக தமிழர்கள், நாடுகளின் தலைவர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், உலக நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் எல்லாருமே மாவீரர் தினத்தன்று பிரபாகரன் உரையை கேட்க தவம் கிடப்பார்கள். அந்த உரைக்கு பின் உரையை ஆய்வு செய்யும் பணியும் தொடங்கிவிடும்.
2009க்கு பின் ஈழத்தில் ஆயுதபோராட்டம் ஒரு முடிவுக்கு வந்தபின் பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் என்னவானார்கள் என்பது இன்று வரை ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் 2009க்கு பின் மாவீரர் நாளன்று பிரபாகரனின் தம்பிகள், அவருக்கு நம்பகமானவர்கள் என கூறிக்கொள்ளும் பல ‘தலைவர்கள்’ உரையாற்றவும், அறிக்கை விடவும் தொடங்கியுள்ளார்கள்.
நாம் தமிழர் என்ற அமைப்பை தொடங்கி அதை சட்டமன்ற தேர்தல்க்கு முன் கட்சியாக மாற்றி அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்த அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சீமான், இந்த ஆண்டு(2011) மாவீரர் நாள் உரையை கடலூர் நகரில் ஒரு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றியுள்ளார்.
அங்கு அவர் பேசியதாக மீனகம் இணையதளம் வெளியிட்டுள்ள ஒரு செய்தி, தமிழர்கள் தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சியிலும் உள்ளனர். ஆனால் தமிழர்களுக்காக போராடும் நாம் தமிழர் கட்சியில் இல்லை. நாம் தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் ஒரு நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவர்களாக இருக்க முடியாது என கேவலமாக பேசியுள்ளார்.

ஒருவர் எந்த கட்சியில் இருக்க வேண்டும் என முடிவு செய்வது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம். அதில் யாருமே தலையிட முடியாது. நூன் தமிழர்களுக்காக உழகை;கிறேன், குரல் கொடுக்கிறேன் என்கிற சீமான், அவர் இயக்கிய வாழ்த்துக்கள் படத்தில் மும்பையை சேர்ந்த நடிகர் மாதவனுக்கு ஜோடியாக போட்டது கேரளா நடிகையை, அதன்பின் வந்த தம்பி படத்தில் அதே மாதவனுக்கு சிங்கள நடிகை பூஜாவை ஜோடியாக போட்டார். சீமான் காதலித்து, பலமுறை கர்ப்பத்தை கலைக்க வைத்து கைவிட்ட நடிகை விஜயலட்சுமி கர்நாடகாவில் வாழும் நடிகை. ஏன் தமிழ் நடிகர்கள், நடிகைகள் யாரும் சீமான் கண்ணுக்கு தெரியவில்லையா?.
மற்ற அரசியல் தலைவர்களைப்போலத்தான் சீமானும், அவர்கள் தமிழ்க்காக, தமிழர்களுக்காக ஏதோ ஒன்றை செய்துவிட்டு கொள்ளையடித்தார்கள். சீமான் தனது உணர்ச்சி வார்த்தைகளால் பேசி தமிழ் மக்களை ஏமாற்றினார். சீமான் சோரம் போனதுப்பற்றி பல தகவல்கள் வருகின்றன. சீமான் நம்ப வைத்து கழுத்து அறுத்தவர்கள் யார், யார் என்பது கூறினால் சீமான் தாங்கமாட்டார். அவர் நாம் தமிழர் இயக்கத்தில் சேராதவர்கள், நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவர்களில்லை எனக்கூறியுள்ளார்.
நாக்கு நீளம், வாய் அகலம் என்பதற்காக எதையும் பேசக்கூடாது. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துபவன் தான் தலைவன். முதல்வராக ஜெயலலிதா வந்தால் ஈழம் பிறக்கும் என பிரச்சாரம் செய்த சீமான் ஜெ முதல்வாரன பின், தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் புரட்சிதலைவியை வாழ்த்த வேண்டும் என்றார்.

மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியபோது, ஈழத்தாய் என மேடை போட்டு பாராட்டினார். ஆனால் அவற்றின் இன்றைய நிலை.

அரசியல் தெரியாத, பணம் சம்பாதிக்க இயக்கம் தொடங்கி வாய் கிழிய, இளைஞர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் அளவுக்கு பேசும் சீமான் இனியாவது வார்த்தைகளை அளந்து பேசவேண்டும். இல்லையேல் தமிழர்கள் தக்க பாடம் புகட்டிவிடுவார்கள்.