ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

இந்தியாவில் இராணுவ ஆட்சி சாத்தியமா ?. ஓர் எளிய அலசல்.


சில தினங்களாக இந்தியாவின் பட்டி தொட்டி எங்கும் இராணுவம் ஆட்சியை பிடிக்க முயன்றதாமே என்ற பேச்சுதான் அதிகமாக பேசப்படுகிறது.

இராணுவ தளபதி வி.கே.சிங் – அரசின் மோதல் தான் இவ்வளவு சர்ச்சைக்கும் காரணம். 1951ல் தரைப்படை தளபதி சிங் பிறந்ததாக அவரது பள்ளி சான்றிதழ்களில் உள்ளன. ஆனால் அவர் இராணுவத்தில் சேரும்போது தரப்பட்ட விண்ணப்பத்தில் 1950 என்று குறிப்பிட்டுள்ளார். இது தான் சர்ச்சைக்கு காரணம். உச்சநீதிமன்றம் வரை இரண்டு தரப்புமே சென்றது. பின் திடீரென வழக்கு இரண்டு தரப்பின் ஒத்தொழைப்போடு முடிவுக்கு வந்தது. 1951ஐ கணக்கில் கொண்டு இந்த ஆண்டு மே மாதம் இறுதியில் ஓய்வு பெற மத்தியரசு கூறிவிட அதற்கு சம்மதித்துவிட்டார் சிங்.

இதன்பின் தான் சர்ச்சைகள் ஆரம்பமாகின. எனக்கு ஓய்வு பெற்ற கர்னல் ஒருவர் நேரடியாக என்னிடம் ஆயுத பேரத்துக்கு 14 கோடி லஞ்சம் தருவதாக ஒரு கம்பெனியின் சார்பாக பேசினார். இதனை இராணுவ அமைச்சரிடம் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குண்டை வீசினார் சிங். அடுத்ததாக இராணுவம் போரை சந்திக்கும் நிலையில் இல்லை. வெடிமருந்து சுத்தமாக கையிருப்பில் இல்லை என அடுத்த குண்டை வீசினார். தொடர்ந்து, பிரதமருக்கு சிங் ரகசியமாக எழுதிய கடிதம் லீக்கானது. அது எப்படி என்ற விவாதம் எழுந்தது. ஒருவழியாக புலனாய்வு பிரிவுகள் விசாரிக்கும் என அரசு அறிவித்தது.


இந்த நிலையில் தான் இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், ஜனவரி 16ந்தேதி இரவு, டெல்லியை நோக்கி இராணுவத்தின் மிக முக்கிய பிரிவுகளை இரவு நேரத்தில் அமைச்சகத்துக்கு தகவல் தராமல் தளபதி சிங் நகர்த்தினார். இதனை மோப்பம் பிடித்த ஐ.பி, உடனடியாக அரசுக்கு எச்சரிக்கை மணியடித்தது. இராணுவ அமைச்சர் மூலம் பிரதமர்க்கு தகவல் தந்து, வெளிநாட்டு பயணத்தில் இருந்த இராணுவ செயலாளரை உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டு டெல்லியை நோக்கி வந்த படையை டிராப்பிக்ஜாம் ஏற்படுத்தி தாமதப்படுத்தி இராணுவ செயலாளர் மூலம் பட்டாலியன்களை திரும்ப அதன் இடத்துக்கே அனுப்பி வைக்கப்பட்டது. இது இராணுவம் ஆட்சியை பிடிக்க நடந்த செயல் என செய்தி வெளியாக இந்தியாவே பதட்டம்மடைந்தது.

புதட்டம், பேட்டி, நாடாளமன்றம் முடக்கம் எல்லாம் நடந்து வருகிறது. இதெல்லாம் ஒரு பக்கம்மிருக்கட்டும். முதலில் நம் சட்டத்தை தெளிவாக அறிந்துக்கொள்ள வேண்டும். நாடே முக்கியம். தனி மனிதன் முக்கியமல்ல என்பதாலும், பிற நாடுகளில் இராணுவம் ஆட்சியை பிடிப்பது போன்று நம் நாட்டில் எந்த காலத்திலும் நடக்ககூடாது என்பதால் இராணுவம், எல்லை பாதுகாப்புபடை, காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு ஏஜென்சிகளின் அதிகாரம் உட்பட பலவற்றை பரவலாக்கி ஒவ்வொருவருக்கும் சம்மந்தமில்லாமல் வைக்கப்பட்டுள்ளது.

முதலில் இராணுவத்தை எடுத்துக்கொள்வோம். இந்தியாவின் முப்படைகளுக்கும் தனித்தனி தலைமை தளபதிகள். தனித்தனி அதிகாரங்கள் இந்த மூன்று தளபதிகளும் போர் காலங்களை தவிர மற்ற நேரங்களில் ஒன்றிணைந்து பணியாற்ற முடியாது. அதோடு, இந்த தளபதிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை தவிர்த்து மற்றப்படி தன்னிச்சையாக எந்த ஒரு முடிவுகளும் எடுக்க முடியாது. இராணுவத்துக்கு என்று தனி அமைச்சர் உண்டு, தனி செயலாளர்கள் உண்டு. செயலாளர்களுக்கு ஆலோசனை தரும் ஆலோசகர்கள் உண்டு அவர்களின் உத்தரவு இருந்தால் மட்டுமே இராணுவ தளபதி செயல்பட முடியும். அதேபோல் ஆயுத கொள்முதலும் தலைமை தளபதி என்ற அந்தஸ்த்தை வைத்துக்கொண்டு ஆயுதம் வாங்கவோ, விற்கவோ முடியாது. அமைச்சர் மற்றும் அமைச்சரவை தான் ஆயுதங்களை வாங்கி தரும். அதற்கென தனி குழுவும் உண்டு.

அதோடு, முப்படைகளுக்கெல்லாம் தலைவர் ஜனாதிபதி மட்டுமே. மூன்று படை தளபதிகளுக்கும் உத்தரவு போடும் அதிகாரம் இந்தியாவில் அவரிடம் மட்டுமே உள்ளன. புpரதமரிடம் கூட அந்த அதிகாரம் கிடையாது. ஜனாதிபதி உத்தரவு இருந்தால் மட்டுமே போர் விமானங்கள் பறக்கும், கப்பல் படை கிளம்பும், பீரங்கி படை வெடிக்கும். இல்லையேல் எதுவும் நடக்காது. முப்படைக்கும் உத்தரவு போடும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் அனைத்தும் அமைச்சரவை மற்றும் பாராளமன்றத்திடம் உள்ளன. இவர்களை மீறி ஜனாதிபதியால் சிறு துரும்பை கூட கிள்ளி போட முடியாது. உதாரணத்துக்கு இந்தியாவின் முதல் குடிமகனும், மூப்படை தளபதிகளை கட்டுப்படுத்தும் அதிகாரமும், உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யும் அதிகாரமும், பாராளமன்றத்தை கலைக்கும் அதிகாரமும் கொண்ட ஜனாதிபதிக்கு கார் டிரைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட கிடையாது. கார் டிரைவர் முதல் செயலாளர் வரை பணியாளர்களை நியமிப்பது வரை மத்தியரசு தான். ஆக அவரின் அதிகாரமே கண்காணிக்கப்படுகிறது.

அதற்கடுத்த நிலையில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை என உள்ள பலப்படை பிரிவுகளுக்கும் தனித்தனி இயக்குநர்கள். இவர்களுக்கு வரையறுக்கப்பட்ட தனித்தனி அதிகாரங்கள். இவர்களும் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க முடியாது. மத்தியரசின் உள்துறைக்கு கட்டுப்பட்டவர்கள். அதேபோல் இந்தியாவில் உள்ள பாதுகாப்பு சம்மந்தமான புலனாய்வு துறைகளில் இராணுவ புலனாய்வு அமைப்பு இராணுவ செயலாளருக்கு கட்டுப்பட்டது. ஐ.பி உள்துறைக்கு கட்டுப்பட்டது. ரா பிரதமர்க்கு கட்டுப்பட்டது. இந்த துறைகளுக்குள் வேறு யாரும் மாறி உள் சென்று உத்தரவுகள் போட முடியாது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அதிகாரம் குவிந்திருந்தால் நினைத்ததை செய்ய முடியும். இந்தியா என்றோ இராணுவ ஆட்சி மையமாகியிருக்கும். இப்போது அல்ல எப்போதும்மே இந்தியா இராணுவ ஆட்சியாகாது.


காரணம், இராணுவத்தில் பலப்பல படைப்பிரிவுகள், வீரர்களாக பலப்பல மாநிலத்தை சாhந்தவர்கள் உண்டு. இவர்கள் நாட்டுக்கு விசுவாசமாக இருப்பார்களே தவிர தனி மனிதருக்கு விசுவாசமாக இருக்கமாட்டார்கள். அப்படியே ஒன்றினைந்து இராணுவம் ஆட்சியை பிடிக்க வேண்டுமாயின் முதலில் முப்படை தளபதிகளும் ஒன்றிணைய வேண்டும். பின் தங்களது அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும். அதற்கு சாத்தியமேயில்லை. மூன்று தளபதிகள் அரசின் ஒப்புதல் இல்லாமல் நேரடியாகவே, மறைமுகமாக சந்தித்தாலே அவர்களது பதவி காலி, கைது செய்யப்படுவார்கள். ஆட்சியை பிடிக்க முயலும் தகவல் அரசு அறிந்து ஒரு தளபதியை இடை நீக்கம் செய்தால் அவரை அவரது அலுவலக சிப்பாய் கூட அதன்பின் உள்ளே அனுமதிக்கமாட்டார்.

அடுத்ததாக ஜனாதிபதியின் உத்தரவுயில்லாமல் ஒரு துப்பாக்கி கூட சுடாது. அப்படி ஏதாவது ஒரு ரெஜிமென்ட் நாட்டுக்குள் துப்பாக்கியை திருப்பினால் அந்த ரெஜிமென்டே ‘காணாமல்’ போய்விடும். அதிகாரங்கள் அப்படி பரவலாக்கப்பட்டுள்ளன.

செய்திகளில் குறிப்பிடுவது போல இராணுவ தளபதி படைகளை ஆட்சியை பிடிக்க டெல்லியை நோக்கி அனுப்பி இருந்தால் அது தற்கொலைக்கு சமம். உதாரணத்துக்கு பாராளமன்றத்தை முற்றுகையிட்டு பிரதமர் அமைச்சர்களை அவர் சிறைபிடிக்க முயல்கிறார் என வைத்துக்கொள்வோம். உடனடியாக ஜனாதிபதிக்கு தகவல் அனுப்பி படைகளை திரும்பி செல்லுமாறு கூறுவார்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையெனில், மற்ற தரைப்படை ரெஜிமென்ட்டுகளை கொண்டு முற்றுகையிட்ட ரெஜிமெண்ட்டை தாக்க உத்தரவு தருவார்கள். தரைப்படை முழுவதும் தளபதிக்கு கட்டுப்பட்டு அவர்கள் ஒன்றினைந்தால் கப்பற்படை மற்றும் விமானப்படை வீரர்களை களமிறக்கி தரைப்படை தளபதிகளை கைது செய்யவோ, சுட்டுக்கொல்லவோ ஜனாதிபதி உத்தரவிடலாம். இல்லை முப்படை தளபதிகளும் ஒன்றிணைந்துவிட்டார்கள் என்றால், நாட்டில் மத்தியரசின் கட்டுப்பாட்டில் உள்ள படைகளை கொண்டு இராணுவத்தோடு மோத வைப்பார்கள் இவ்வளவுக்கும் சாத்தியமும்முண்டு.

மற்றொன்றை தெளிவாக தெரிந்துக்கொள்ளுங்கள். மேலே குறிப்பிட்டதை போல ஆட்சியை பிடிக்க எந்த தளபதியாலும் முடியாது. மற்றொன்று, இராணுவத்துக்குள் அதிகார மோதல் உண்டு. அந்த மோதல் தான் இப்படி தளபதியை கொதிக்க வைத்துள்ளது. அதனால் இராணுவ ஆட்சியென்பது இந்தியாவில் சாத்தியமேயில்லை………………..

6 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் எல்லை பாதுகாப்பு படை மிகுந்த விரக்தியில் உள்ளது என்பது தெரியுமா?பங்களாதேஷ் BDR (BANGALADESH RIFILES)அவர்கள் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தியது நினைவுக்கு வருகிறது.கடை நிலை BSF BORDER SECURITY FORCE சிப்பாயின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.செய்தியாளரான நீங்கள் இதைப்பற்றி விசாரிக்கலாமே...

    பதிலளிநீக்கு
  2. நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

    உங்களை இனிமேல்தான் 'வாசி'க்கணும்!!!!!

    மாடரேஷன் இருக்கும்போது வேர்டு வெரிஃபிகேஷன் வேணுமா???:(

    பதிலளிநீக்கு
  3. என்னைப் பொருத்தவரை இப்போது இந்தியாவில் நடைபெறுவது ராணுவ ஆட்சிதான்.
    தமிழனின் உரிமைகள் பறிக்கப் படுகின்றன. தமிழ் இனம் அழிக்கப்படுகிறது.
    இதையெல்லாம் நம்மால் தடுத்து நிறுத்த முடிந்ததா?

    பதிவுக்குசம்பந்தமில்லாமல் கருத்துச் [மனக் கொதிப்பு] சொல்லியிருக்கிறேன்.
    மன்னியுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. தமிழ்மண இவ்வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள் தோழர்

    பதிலளிநீக்கு
  5. ஆய்வுப்பூர்வமாக, தெளிவாக எழுதியுள்ள பதிவு
    வாழ்த்துக்கள்!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு