செவ்வாய், ஏப்ரல் 17, 2012

ஜெவின் சிறு பிள்ளை விளையாட்டு.


நீ அன்னைக்கு என் கூட விளையாட வரலயில்ல. அதல உனக்கு முட்டாய் தரமாட்டன் போ என ஐந்து வயது பிள்ளைகள் தெருவில் விளையாடும் போது தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளும். ஆதற்கு தெரியாது இதெல்லாம் ஒரு விவகாரம் என்று ஏன் எனில் அவைகள் குழந்தைகள்.

குழந்தைகளை விட மோசமாக நடந்துக்கொள்கிறார் தமிழக முதல்வராகவுள்ள ஜெ. சட்டமன்ற வளாகத்தில் அனைத்து கட்சியினருக்கும் அறைகள் ஒதுக்கப்படும். ஆப்படித்தான் சட்டமன்ற எதிர்கட்சியான விஜயகாந்த் கட்சிக்கும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் விஜயகாந்த் கட்சிக்கு சட்டமன்றத்தில் இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

விஜயகாந்த்க்கு ஒதுக்கப்பட்ட அறையின் அகலத்தை குறைத்து அதில் பாதியை காங்கிரஸ் கட்சிக்கான அறையாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு. விஜயகாந்த் சஸ்பென்ட் செய்யப்பட்டு சட்டசபைக்கு வராத 10 நாள் இடைவெளியில் அறை ‘குறுக்கல்’ பணியை செய்து முடித்துள்ளனர்.

ஆறை குறைப்பை தாமதமாக கண்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் இப்பிரச்சனையை கிளப்பியுள்ளனர். சபாநாயகர் ஜெயக்குமார், அறையை ஒதுக்குவது, மாற்றுவது என்பது சபாநாயகரோட தனிப்பட்ட உரிமை. அதை கேள்வி கேட்க கூடாது என தன் அதிகாரத்தை கூற, இதற்காகவே காத்திருந்த பணிவு புகழ் நிதியமைச்சர் ஒ.பி.எஸ், உங்களுக்கு என்ன சட்டமன்றம் பட்டாவா போட்டு தந்துயிருக்கு என கேட்டுள்ளார்.

சட்டமன்றமும், தலைமை செயலகமும் அதிமுகவுக்கு மட்டுமா பட்டா போட்டு தந்துள்ளது. அவையெல்லாம் மக்கள் சொத்து. மக்கள் வரிப்பணத்தில் தான் இந்த நாடே இயங்குகிறது என்பதை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்க்கு தெரியவாய்ப்பில்லை.

தேமுதிகவினர் பத்து பேர் கூட நிற்க முடியாத அறையாக எங்கள் கட்சி தலைவரும், எதிர்கட்சி தலைவரின் அறையை குறைத்துள்ளார்கள். இதனால் எங்கள் கட்சிக்கு தந்த அறையை எடுத்துக்கொள்ளுங்கள் என கடிதம் தந்துள்ளோம் என்றார் விஜயகாந்த் கட்சி எம்.எல்.ஏ சந்திரகுமார்.


தன்னை எதிர்த்து கேள்வி கேட்கிறாறே, மிரட்டுகிறாறே என்ற வெறுப்பில் எதிர்கட்சி தலைவரின் அறையின் அளவை குறைத்தும், சஸ்பென்ட் காலம் முடிந்தும் எதிர்கட்சி தலைவருக்கான காரை தராமல் வெறுப்பை காட்டியுள்ளார். இது ஓரு காரணம். இதில் உள்ள மற்றொரு விவகாரம், காங்கிரஸ் அரசுடன் ஜெ நெருங்கி செல்கிறார். 
 
மற்றொரு காரணம், விஸ்தாரமான அறைகளை ஒதுக்க முடியாத அளவுக்கு சட்டமன்றத்தில் இடநெருக்கடி. இதனை 10 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த ஜெ, தனியாக சட்டமன்றம் கட்ட முயன்றார். கல்வி நிலையத்துக்கான இடத்தில் அமைவதை அப்போதே பலர் எதிர்த்தனர். இதனால் அத்திட்டம் முடங்கியது. அடுத்து வந்த திமுக ஆட்சியில் புதிய சட்டமன்றம் கட்டப்பட்டது. அது கட்டி முடிந்து திறப்பு விழா நடைபெற்று புதிய சட்டமன்றம் இயங்கியது.

எல்லா கட்சிகளுக்குமான டிஜிட்டல் முறையிலான, புதிய டெக்னாலஜிகள் அமைக்கப்பட்ட  அறைகள், பறந்த நெருக்கடியில்லாத சட்டசபை என இருந்தது. ஆனால் அதை பொறுத்துக்கொள்ள முடியாத தீய எண்ணம் கொண்ட ஜெ, நான் முதல்வரானால் என் கால் அடிக்கூட அதில்படாது என அறிவித்தார். அதன்படி சட்டமன்ற தேர்தலுக்கு பின் புதிய சட்டமன்றத்திற்க்கு போகாமல் பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே சட்டமன்றம், தலைமை செயலகத்தை மாற்றினார்.


பெரும் செலவில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம், சட்டமன்ற வளாகத்தை மருத்துவமனையாக்க போகிறேன் என்றார் ஜெ. இதனை அப்போது நடுநிலை என காட்டிக்கொண்டவர்கள், அதிமுகவின் ஜால்ரா பத்திரிக்கைகள் புதிய சட்டமன்றம் சரியில்லை, ஊழல், மழை வந்தால் ஒழுகுது என ஒன்னுமேயில்லாத விவகாரத்தை ஊதி, ஊதி புகைகிளப்பின. இப்போது, சட்டமன்றத்தில் இடநெருக்கடியால் தவிக்கின்றனர். கட்சிகளுக்கு அறைகள் ஒதுக்ககூட முடியாமல் தவிக்கிறது. இதுதான் அதிமுக ஆட்சியின் அவலம்.

என்றுமே நியாயமாக யோசிக்கும் தன்மையில்லாதவராக ஆணவம், கர்வம், திமிர் கொண்டவராகவே ஜெ மிளிர்கிறார்.

2 கருத்துகள்:

  1. பெரும் செலவில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம்,.......இதில் கருணாநிதி கும்பல் அடித்த கொள்ளை எவ்வளவு?

    புதிய தலைமைச் செயலகம் தமிழனுக்கு பெயர் சொல்லுவதாக இல்லை. உண்மையில் அந்த கட்டிடத்தை இடிக்கவேண்டும். கருணாநிதி என்ற நபர் தமிழரா? வெட்கக்கேடு...!

    பதிலளிநீக்கு